விழித்துக் கொண்டே இருக்கிறேன்,
கனவுகளில் நீ வரும்போது,
உறங்கிவிடக்கூடாது என்பதற்காக.
—
உன்னை
நல்ல குடும்பத்துப் பெண் என நினைத்திருந்தேன்.
எப்படி அனுமதிக்கின்றனர் உன் பெற்றோர்?
இப்படி இருட்டிய பின்னும்
கனவில் வர?
—
கும்மிருட்டு நிரம்ப பயம் எனக்கு.
உன் படுக்கையறை விளக்கை அணைக்காதே.
வருவதாய் இருக்கிறேன் இன்றிரவு,
உன் கனவில்.
—
உன் ஒன்றுவிட்ட சித்தப்பனுக்கெல்லாம்
பயந்து பயந்து
உன்னை சந்தித்தது போதும்.
கொஞ்சமாவது உறங்கிப் பழகு.
கனவில் வருகிறேன்.
Comments
8 responses to “பழைய Paper கவிதைகள் – கனவு !”
good one Ravi
நன்றி நெல்லை காந்த்
முதல் கவிதை அழகா இருக்கு.
கணிமை, விக்கி, வேர்ட்பிரஸ் கூட அப்பப்போ கவிதையும் எழுதுங்க! 😉
அருட்பெருங்கோ – நிறைய பேர் கவிதை எழுதிச் சொல்லிக் கேட்டாங்க..ஆனா, ஏனோ ஒரு பெண்ணையும் காதலிக்காம காதல் கவிதை எழுத வர மாட்டேங்குது 🙁 அப்புறம், என் எல்லா காதல் கவிதைகளையும் படிச்சுப் பார்த்து பாராட்டியதற்கு நன்றி 🙂
“விழித்துக் கொண்டே இருக்கிறேன்,
கனவுகளில் நீ வரும்போது,
உறங்கிவிடக்கூடாது என்பதற்காக. ”
இவ்வரிகளை எல்லா காதலர்களும் சொல்வது உண்மை.
அருமையாக இருக்கிறது
good&nice
i am very happy. she is true
very nice…