உன்னை எறும்பு கடிக்கும் தருணங்களில்,
சிரித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து
காரணம் கேட்பாய்.
மக்குப் பெண்ணே!
உனக்கே தெரிய வேண்டாமா?
You are so sweet!
—
எடுத்துக் காண்பிக்கும்
ஒவ்வொரு புகைப்படத்திலும்
உன் தோழிகள் பெயரைச் சொல்லும்
வெட்டி வேலையை விட்டு விடு.
நேரிலோ புகைப்படத்திலோ
நான்
உன்னை மட்டுமே பார்க்கிறேன்.
—
ஒரே பிள்ளையான உன்னை
ஒழுங்காகக் கூட வளர்க்காமல்
என்ன முறித்தனர் உன் பெற்றோர்?
பெண் வளர்க்கச் சொன்னால்
தேவதையை வளர்த்திருக்கிறார்கள் !
—
“என்னை மறந்துவிடு.
இனி பேசாதே.
இது நடக்காது.
பிரிவது தான் நல்லது..”
இன்னும் ஆயிரம் பொய் கூட சொல்.
ஓர் உண்மை சொல்கிறேன்.
“காதலித்துக் கொண்டே இருப்பேன்”.
—
Excuse me
வரலாமா
போர்வைக்குள்.
—
சொல்வது கேள்.
“முத்தம்” !
—
Comments
3 responses to “பழைய Paper கவிதைகள் – இனி !”
ஏங்க இதெல்லாம் உஙளுக்கே ஓவரா தெரியலையா?
இப்படியா? உயிரை உருக்கி எழுதறது. என்னத்தை பாராட்டறது? இன்னும் கவிதைகளோட பாதிப்புல இருந்தே மீளலையே.
நன்றி நந்தா
/சொல்வது கேள்.
“முத்தம்” !/
என்ன சொல்ல? நச்!