மக்கள் தொலைக்காட்சிக்கும் பிற தமிழ் தொலைக்காட்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் சில மேலே உள்ள படத்தில் புலப்படுகின்றன:
நிகழ்ச்சிக்கான பெயர்கள் போடும்போது
1. கிரந்த எழுத்துக்களைக் காணோம்.
2. இராசா என்று இலக்கணப்படி எழுதுகிறார்கள். ராசா என்று எழுதுவதில்லை.
3. அனைவரின் பெயர்களுக்கான தலை எழுத்துக்களும் தமிழிலேயே இருக்கின்றன. கா. குமார் என்று எழுதுகிறார்கள். K. குமார், கே. குமார் என்று எழுதுவதில்லை.
4. Post production போன்ற பொறுப்புகளைக் கூட பின் தயாரிப்பு என்றே எழுதுகிறார்கள். ஆங்கிலத்தை மருந்துக்கு கூட எங்கும் காண இயலவில்லை.
Comments
11 responses to “மக்கள் தொலைக்காட்சி”
ஒற்றுமையை சொல்றீங்களா? வேற்றுமையை சொல்றீங்களா?
சினிமாவை விமர்சனம் செய்தவர்கள், புதிதாய் துப்பாக்கி கலாச்சாரத்தை திணிக்கறார்கள். அரசாங்க, போலீஸ் காரர்களை சுடுகிறவனெல்லாம் சமூகத்திற்கு நல்லவர்கள் போன்று சித்தரிப்பது போன்றுள்ளது.
மாஹிர், நான் நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தைப் பத்திச் சொல்லலை. மக்கள் தொலைக்காட்சியின் எந்த நிகழ்ச்சியை வச்சும் உள்ள வேறுபாடுகளையே கேட்டேன். இடுகைக்கான குறிச்சொற்களைப் பார்த்தீங்கன்னா துப்பு கிடைக்கும் 🙂
1. சார், ஐயா
2. ஹாய், வணக்கம்
3. தாங்க்ஸ் போ கோலிங்க, அழைப்புக்கு நன்றி
இந்தமாதிரி வித்தியாசம் காணலாம்.. எனக்குத் தெரிந்த்து இது ஒன்றுதான்.
மயூ, நீங்க சொல்வது பொதுவான வேறுபாடுகள். ஆனா, இந்த நிகழ்படத்தைப் போட்டு கேக்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு.
(பேசாம நானே வேறுபாடுகளைச் சொல்லிடலாமோ 🙁 )
நானே விடையைச் சொல்லிட்டேன் 🙁
நானும் இந்த தொலைக்காட்சியைப் பார்த்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சியை மிகவும் அழகாக வடிவமைத்திருப்பதால் அதன் எழுத்தோட்டங்களை கவனிக்கத் தவறிவிட்டேன்.
//மக்கள் தொலைக்காட்சி போன்ற வெகுமக்களின் ஊடகங்களின் வரவு நல்ல தமிழ் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று//
மகிழ்ச்சி மட்டுமல்ல தமிழின் வளர்ச்சிக்கும் முன்மாதிரியாக இருக்கும். (காலத்தின் கட்டாயத் தேவையுமாகும்)
நன்றி
//அரசாங்க, போலீஸ் காரர்களை சுடுகிறவனெல்லாம் சமூகத்திற்கு நல்லவர்கள் போன்று சித்தரிப்பது போன்றுள்ளது.//
“காவல் துறை” என்பது மக்களையும், மக்களுக்கான அரச சட்டங்களையும் மதித்து மக்களை காக்கும் ஒரு துறையாகும்.
மக்களை காப்பதற்கான அரச சட்டங்களுக்கே மதிப்பளித்து, அந்தச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே “வேலியே பயிரை மேய்வதுப் போன்று” பாலியல் பலவந்த கொடுமைகளையும், மனிதவுரிமை மீறல்களையும் (நிகழ்ச்சியில் காட்டப்படுகின்றது) புரியும் போது அந்த அப்பாவி மக்கள் யாரிடம் முறையிடுவார்கள். அந்தச் சட்டங்களை, அந்த காவல் துறையையை எப்படி மதிக்கக்கூடியதாக இருக்கும்?
இவ்வாரான சூழ்நிலையில் அவர்கள் மனநிலை எவ்வாரானதாக இருக்கும்?
வன்முறையை ஒழித்து மக்களை காப்பாற்ற வேண்டியவர்களே வன்முறையின் வடிவமாகும் போதே, வன்முறைக்கு எதிரான வன்முறை தோன்றுகின்றது.
இவ்வாரான வன்முறைகள் ஒரு நாட்டின் தோன்றுமானால் அந்த நாடே அதற்கு முழு பொருப்பளிக்க வேண்டும். சட்டத்திட்டங்களில் இருக்கும் ஓட்டைகள் கலைந்தெரியப்படவேண்டும். சட்டங்களை மீறும் அரச அதிகாரிகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் உருவாக்கப் பட்டு (பெயரளவில் மட்டுமல்லாமல்) நடைமுறை செயல் வடிவம் கொடுக்கப்படவேண்டும். மக்கள் பாதுக்காப்புக்கு உத்தரவாதமளிக்கப்படவேண்டும்.
அவ்வாரான சட்ட ஒழுங்குகள் பேனப்படாத நாட்டில் அரச அதிகாரிகளாக இருந்துக்கொண்டு வன்முறைகளில் ஈடுபடுபவர்களை “நல்லவர்கள்” என்று சொல்லவும் முடியாது. வன்முறைக்கு எதிரான வன்முறையாளர்களை கெட்டவர்கள் என்றும் கூறமுடியாது.
அருண், விரிவான கருத்துக்களுக்கு நன்றி
🙂
I LOVE MAKKAL TV
thanks to makkal tv