நெதர்லாந்தில் சிவாஜி

2005 பாதியில் ஐரோப்பா வந்தது முதல் இது வரை திரையரங்குக்குப் போய் தமிழ்ப் படம் பார்த்தது இல்லை. முன்சனை விட்டு வரும்போது தான் அங்க தமிழ்ப் படம் போடுவாங்கங்கிறது தெரியும். நெதர்லாந்தில், ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத் போல பெரிய நடிகர்கள் படம் மட்டும் ஒரு காட்சி காட்டுவாங்கன்னு கேள்விப்பட்டு இருந்தோம். லைடன்ல இருந்து 30 நிமிட ரயில் பயண தூரத்தில் இருக்கும் பீவர்வைக்கில் சிவாஜி இன்னிக்கு ஒரு காட்சி போட்டு இருந்தாங்க. நெதர்லாந்து முழுக்க மொத்தம் கிட்டத்தட்ட 10 காட்சிகள். ஒரு நாளைக்கு இல்ல. எல்லா இடங்களிலும் வெவ்வேறு நாட்களில் போடுற எல்லா காட்சிகளையும் சேர்த்து 10 காட்சிகள் தான். சனி, ஞாயிறுகளில் மட்டும் திரையிடுகிறார்கள். நாடு மொத்தத்துக்கும் இரண்டு படப்பெட்டிகள் வாங்கி மாற்றி மாற்றி ஓட்டுகிறார்கள். ஒரு நுழைவுச் சீட்டு விலை 20 ஐரோ. நாங்க பார்த்த திரையரங்கில் 200 இருக்கைகள். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், ஈழத் தமிழர்கள், இந்தியத்தமிழர்கள்-அவர்களின் அண்டை மாநில நண்பர்கள் என்று அரங்கு நிறைந்து இருந்தது.

படம் பார்க்கும்போது மூனு மணிநேரம் ஓடுனது தெரில. ஆனா, வெளிய வந்து யோசிச்சா மனசில தாக்கம் உண்டு பண்ணுற மாதிரி ஒன்னும் இல்ல. இந்தியன், முதல்வன் மாதிரி கதையின் தீவிரத்தை உணர வைக்கிற, படம் பார்க்கிறவரைக் கதையுடன் ஒன்ற வைக்கிற ஷங்கரையும் காணோம். ரஜினியின் பாட்சா, படையப்பா, அண்ணாமலை போல திரும்பப் பார்க்கப் போனால் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் காட்சிகளையும் காணோம். கூடுதலாவே hype பண்ணி விட்டுருக்காங்கன்னு நினைக்கிறேன். ஒரு பாட்டுக்கு 2 கோடி செலவுன்னு வைச்சாலும் மிச்ச காசு எல்லாம் எங்க போச்சுன்னு தெரில. சண்டைக் காட்சிகள்ல ஒரு பரபரப்பும் இல்லை. நினைச்சு நினைச்சு சிரிக்க வைக்கிற நகைச்சுவையும் இல்லை. சாலமன் பாப்பையா பண்ணுறது மட்டமான நகைச்சுவை. வீணா ஒரு வில்லன்.

மொட்டை ரஜினி நல்லா இருக்கார். காசு சுண்டுற, பபுள் கம் தூக்கிப் போடுற ஸ்டைல் நல்லா இருக்கு. ஷ்ரியா அழகா இருக்கார். முகம் சுளிக்க வைக்காத, அழகுணர்ச்சி கூடிய கவர்ச்சி காட்டி இருக்காங்க.

ஒரு முறை திரையங்கில் பொழுதுபோக்குகாகப் பார்க்கலாம். ஷங்கர் இயக்கி (?) இருக்கும் ரஜினி படம். பாபா, சந்திரமுகிக்கு இது பரவால. வேற ஒன்னும் பெரிசா சொல்லுறதுக்கு இல்லை.

தமிழ்ல பேர் வைச்சா வரி விலக்குங்கிற அரசு கொள்கையிலயே உடன்பாடு இல்லாதப்ப சிவாஜி – The Bossஐத் தமிழ்ப் பெயராக்கி முழு வரி விலக்கு தருவது பகல் கொள்ளை மாதிரி தான் இருக்கு. நகைக் கடைல இருந்து சாலையோரத்துல இருக்கும் உணவகம் வரைக்கும் தமிழ்ல தான் பேர் இருக்கு. தமிழ்ல பேர் வைச்ச காரணத்துக்காக எல்லாத்துக்கும் வரி விலக்கு தந்தா அப்புறம் அரசுக்கு வரி எங்க இருந்து வரும்? தமிழ்நாட்டுல தமிழ்ல பேர் வைக்க காசு கொடுத்தா தான் நடக்கும்ங்கிறது அரசின் கையாலகாதனத்தையும் அந்தச் சலுகையைப் பெறுகிற தமிழனின் அல்பத்தனத்தையும் தான் காட்டுது. கடைக்கோடி தமிழன் எல்லாம் சாலை வரி, வீட்டு வரின்னு உழலும்போது கோடிகள்ல புரளுகிற திரைப்பட முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் வரி விலக்கு எதுக்கு?


Comments

10 responses to “நெதர்லாந்தில் சிவாஜி”

  1. //தமிழ்ல பேர் வைச்சா வரி விலக்குங்கிற அரசு கொள்கையிலயே உடன்பாடு இல்லாதப்ப சிவாஜி – The Bossஐத் தமிழ்ப் பெயராக்கி முழு வரி விலக்கு தருவது பகல் கொள்ளை மாதிரி தான் இருக்கு. நகைக் கடைல இருந்து சாலையோரத்துல இருக்கும் உணவகம் வரைக்கும் தமிழ்ல தான் பேர் இருக்கு. தமிழ்ல பேர் வைச்ச காரணத்துக்காக எல்லாத்துக்கும் வரி விலக்கு தந்தா அப்புறம் அரசுக்கு வரி எங்க இருந்து வரும்? தமிழ்நாட்டுல தமிழ்ல பேர் வைக்க காசு கொடுத்தா தான் நடக்கும்ங்கிறது அரசின் கையாலகாதனத்தையும் அந்தச் சலுகையைப் பெறுகிற தமிழனின் அல்பத்தனத்தையும் தான் காட்டுது. கடைக்கோடி தமிழன் எல்லாம் சாலை வரி, வீட்டு வரின்னு உழலும்போது கோடிகள்ல புரளுகிற திரைப்பட முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் வரி விலக்கு எதுக்கு?//

    உண்மை.. சூடு சொணை இல்லாதது இந்த சினிமாக்கூட்டம். அறிவுரையெல்ல்லாம் நமக்குதான் . சிவாஜி’ என்பதே த்மிழ்பெயர் இல்லைதான். லூசுததனமான் ஒரு சட்டம், அந்த சட்டம்கூட கண்டபடி மாறும். என்னத்த சொல்ல

  2. து.சாரங்கன் Avatar
    து.சாரங்கன்

    //கடைக்கோடி தமிழன் எல்லாம் சாலை வரி, வீட்டு வரின்னு உழலும்போது கோடிகள்ல புரளுகிற திரைப்பட முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் வரி விலக்கு எதுக்கு?//
    Note this point. your honour 🙂

  3. வரிவிலக்குன்னா விற்பனை வரியா இல்லை கேளிக்கை வரியா? இரண்டாவது மட்டும்னா எனக்கு ஆட்சேபனையில்லை. திரை அரங்குகளில் வாங்கும் சீட்டுக்கு வரி உண்டுன்னுதான் நினைக்கிறேன்.

  4. பாலாஜி – கேளிக்கை வரி விலக்கு என்பது உறுதி. முதல்ல அதுக்கேற்ப திரையரங்கச் சீட்டு வரியைக் குறைக்காம இருந்தாங்க. இப்ப குறைச்சிருந்தாலும், நடைமுறைல விலை அதிகமா விச்சு விற்பது போலத் தான் இருக்கு

  5. கணேஷ் Avatar
    கணேஷ்

    நன்றாக சொன்னீர்கள். இவர்கள் ஒவ்வொரு பாடலுக்கும்செலவழிக்கும் தொகையை பார்க்கும் போது வரிவிலக்கு(ஒரு நிமிடத்ிற்காக எத்தனையோ லட்சம் செலவு செய்த சங்கருக்கு) ஒரு பொருட்டே இல்லை. இவர்கள் அதை பற்றி கவலை படவே இல்லை,அரசே முன்வந்து தந்திருக்கிறது வரிவிலக்கு,என் சிவாஜிக்கு மட்டும் விதிவிலக்கு?
    எல்லாம் மக்கள் வரி பணம்

  6. ஹய்யோ ரவிசங்கர், நெஜமாவே படம் நல்லா இல்லயா….உன் commentry யை நம்ப மாட்டேன். hey thanks for visiting my blog .என்ன personsl comment சொல்லவே இல்ல. I am expecting it man.

  7. கௌசல்யா, கண்டிப்பா படம் பார்க்கலாம். 3 மணி நேரம் போறது தெரியாது. நல்ல timepass.ஆனா, பாட்சா, படையப்பா மாதிரி நினைவில வைச்சுக்கிற மாதிரி இருக்காது

  8. சில நண்பர்கள் நன்று நன்று என்றும் சிலர் பரவாயில்லை என்றும் சொல்கின்றார்கள்….

    இன்னமும் பார்க்கவில்லை இந்த வாரக் கடைசியில் பார்கும் எண்ணம் உள்ளது…!!! 🙂

  9. 4 நாட்களுக்கு முன்தான் இங்கு பெங்களூரில் படத்தை பார்த்தேன். 3 மணிநேரம் போவதே தெரியவில்லை தான். ஆனால் ஏற்றுக்கொள்ளவே முடியாதபடி ரஜினி செத்துப்பிழைக்கும் காட்சி இருந்தது. இவ்வளவு செலவு செய்து எழுத்துவிட்டு கதையில் இந்த ஓட்டை இல்லாமல் செய்திருக்கலாம்.

    மேலும் சாலமன் பாப்பைய்யா மகள்களாக இரண்டு கருப்பு பெண்களை காட்டி (சகிக்க முடியாதபடி கமெடி என்ற பெயரில்) கிண்டல் அடிக்காமல் இருந்திருக்கலாம்.

    மற்றபடி படம் ரசிக்கும்படி இருந்தது

  10. […] வாசிக்க, நெதர்லாந்தில் சிவாஜி திரைப்படம் பார