தமிழ்மணம், தேன்கூடு, கில்லி செயலிழப்பு !

இன்று சொல்லி வைத்தாற்போல் தமிழ்மணம், கில்லி, தேன்கூடு ஆகிய மூன்று தளங்களும் செயல் இழந்து உள்ளன !! இது மாதிரி நேரங்களில் தான் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளின் தேவை புலப்படுகிறது. தமிழ்ப் பதிவுகளைப் படிக்காவிட்டால் கையும் காலும் ஓடாதவர்கள், நிலைமை சீராகும் வரை (அதுக்கு அப்புறமும் தான் 🙂 ) தமிழ்ப் பதிவுகள், மாற்று! தளங்களை அணுகலாம். அல்லது, Bloglines, Google Reader, NetVibes மூலம் நீங்களே உங்கள் திரட்டியை உருவாக்கிக் கொள்வது நலம்.

ஆனால், இதில் என்ன பிரச்சினை என்றால், அண்மைக்காலங்களில் தமிழ்மண வடிவமைப்புச் சீரமைப்பு, வழங்கி இடம்பெயர்ப்பு காரணமாக அவ்வப்போது தமிழ்மணம் செயலிழக்க நேரிடுவதால், அது செயல் இழக்கும்போது அதனோடு இணைக்கப்பட்ட 2000+ தமிழ் வலைப்பதிவுகளும் செயல் இழக்கின்றன அல்லது மிகவும் மெதுவாகத் திறக்கின்றன. இதனால் தமிழ்மணத்தைப் பார்க்க இயலாமல் போவதோடு நம் சொந்தப் பதிவுகள், நண்பர்கள் பதிவுகள், தகவல் தேடி செல்லும் பதிவுகள் என்று அனைத்தையும் அணுக முடியாத நிலை உள்ளது. ஒரு தளம் தான் இணைப்பு தரும் தளங்களையும் சேர்த்து முடக்குவது முற்றிலும் ஏற்க இயலாத ஒன்று. தமிழ்மண வழங்கியில் இருந்து நிரல்களைப் பெறுமாறு இப்பதிவுகள் அமைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். தமிழ்மண நிரல்களை அவர்கள் வழங்கியில் இருந்து பெறாமல் தங்கள் வலைப்பதிவிலேயே சேமித்துக் கொள்ளும் வகையில் இருந்தால் இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கலாம். இது குறித்து தமிழ்மணத்துக்கு எழுதி உள்ளேன். விரைவில் சரி செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

பலரும் [email protected] என்ற முகவரிக்கு மடல் இட்டால், இந்தப் பிரச்சினையை முன்னுரிமை கொடுத்து சரி செய்ய தமிழ்மணம் முன்வரலாம்.


Comments

10 responses to “தமிழ்மணம், தேன்கூடு, கில்லி செயலிழப்பு !”

 1. தமிழ்மணம் சரியாகும் வரை, என் பதிவில் அதன் கருவிப்பட்டி நிரலியைத் தூக்கிட்டேன் 🙂 .. பொன்ஸ் பக்கங்கள் நல்லா வருது.

  ஆனா, தமிழ்மணம் இல்லை என்பதால், யாருமே பதிவிடாமல் இருப்பது தான் இப்போ பிரச்சனை :((

 2. து.சாரங்கன் Avatar
  து.சாரங்கன்

  Technically this won’t be possible. If you want to display stats, votes, etc. you would need to connect to Thamzihmanam anyway. If you looked at the script tags that is added to your blogs, you will realise that this is not a static script (i.e. in a xyz.js file), but rather it is generated on the fly using PHP depending on the parameters in the URL.

  பி.கு. மன்னிக்கவும், தமிழில் இதேல்லாம் எழுதுற அளவுக்கு இன்னும் என் தமிழறிவு வளரவில்லை 🙁

 3. து.சாரங்கன் Avatar
  து.சாரங்கன்

  ஒரு விதத்தில் இதுவும் நல்லதுதான். தமிழ் வலைஞர்கள் ஒரே திரட்டிகளை (நம் மாற்று உட்பட) சார்ந்திராமல், தாங்களே Google Reader, Yahoo Pipes போன்றவற்றைக் கொண்டு தாம் விரும்பும் பதிவுகளை படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

 4. சாரங்கன் – digg, technorati மாதிரி முழு நிரலையும் நிச்சயமா மாத்தி எழுத முடியும் அல்லவா? இந்த வாக்கு வசதி Diggல இருக்கு தான? எப்படி இருந்தாலும் ஒரு தளம் தன்னோட இணைத்திருக்கிற அத்தனைத் தளங்களையும் முடக்குவது ஏற்றுக் கொள்ள முடியாதது. பதிவுக்கு உதவத் தான் திரட்டி. அது பதிவை, பதிவர்களை முடக்குவதா நிச்சயம் இருக்கக் கூடாது. நிச்சயம் இந்த நிரல் முறையை கூடிய விரைவில் மாற்ற வேண்டும்.

  தவிர, பொன்ஸ் சொன்ன மாதிரி ஒரே திரட்டியைச் சார்ந்து இருக்கனால நம் பதிவு வாசிப்பு, எழுதுதல் எல்லாமே முடங்கிப் போகுது.. வாழ்க்கை, சூழலியல் எல்லாத்திலயும் இதுக்குத் தான் பல்வகைமை (Diversity), சார்பின்மை வேணுங்கிறாங்க 🙂

  தன்விருப்பத் திரட்டி தான் நிரந்தரத் தீர்வு. புதுசா பதிவு படிக்க வர்றவங்களுக்கு உதவத் தான் எந்தப் பொதுத் திரட்டியுமே.

  பொன்ஸ் – நீங்க சொன்ன கருவிப்பட்டை நீக்கக் குறிப்ப, பதிவர் உதவிப் பக்கத்திலேயே கூட இடலாம். பலருக்கும் தங்கள் தளம் ஏன் திறக்க வில்லை என்பதே புரியாமல் இருக்கும்.

 5. தமிழ்மணம் சீராக ரொம்ப நேரமாச்சுன்னா, கருவிப்பட்டையைத் தூக்குறது ஒரு தற்காலிகத் தீர்வு. பொன்ஸ் – கருவிப்பட்டைய சேர்க்க கருவி எழுதின மாதிரி நீக்க ஒரு கருவி எழுத முடியுமா 🙂 இல்லை, தமிழ்மண நிரலை ஒதுக்கி விட்டு பதிவுகளை பார்க்கிற மாதிரி ஒரு firefox நீட்சி சாத்தியமா?

  இப்ப வாக்கு அளிக்க, வகைப்படுத்த, பூங்காவுக்கு அனுப்ப, பின்னூட்ட நிலவரம், சூடான இடுகை நிலவரம் காட்டத்தான் தமிழ்மணம் கருவிப் பட்டை பயன்படுதுன்னு நினைக்கிறேன். இதை எல்லாம் வேண்டாதவர்கள் ( அப்படி யாராச்சும் இருக்காங்களா 🙂 !) குறைந்தபட்சம் தமிழ்மண முகப்பில் இருந்த வகைப்படுத்த மட்டுமாவது செய்வது போல் இருந்தால் நன்றாக இருக்கும்.

  //வோர்ட்பிரெஸ்.காமுக்கு வாங்க… சந்தோஷமா இருங்க 🙂 //

  இதை மறுமொழிகிறேன். கூடவே எல்லா கட்டற்ற திட்டங்களுக்கும் இங்கு இலவச விளம்பரங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் 😉

 6. நேற்று திரட்டி குறித்து எழுதினீங்க… இன்னிக்கு இந்த மாதிரி ஆயிடுச்சு 🙂

  —தமிழ்மணம் சரியாகும் வரை, என் பதிவில் அதன் கருவிப்பட்டி நிரலியைத் தூக்கிட்டேன்—

  இதெல்லாம் நடக்கிற காரியமா? காலை எழுந்தவுடன் வார்ப்புருவில் இருக்கும் எல்லா நிரலியும் வேலை செய்யுதா என்று ஆராய்ந்து, அதற்கேற்ப வேண்டியவற்றை சேர்த்து/கழற்றி, மாற்றிப் போட்டுக் கொண்டிருப்பதற்கே எல்லா நேரமும் அர்ப்பணிக்கப்பட்டுவிடும்.

  அப்புறம், இந்தப் பணியை தானியங்கியாக செய்ய இன்னொருவர் நிரலி எழுதி, அதையும் உங்கள் டெம்பிளேட்டில் இணைக்க சொல்ல… 😉

  வோர்ட்பிரெஸ்.காமுக்கு வாங்க… சந்தோஷமா இருங்க 😀

 7. பொன்ஸ் Avatar
  பொன்ஸ்

  //குறைந்தபட்சம் தமிழ்மண முகப்பில் இருந்த வகைப்படுத்த மட்டுமாவது செய்வது போல் இருந்தால் நன்றாக இருக்கும்//
  இருக்கே இப்பவும்…

  பூங்காவுக்கு அனுப்ப இல்லை- பூங்காவுக்கு வேண்டாம் என்று சொல்ல.. default is other way..

  தமிழ்மண கருவிப்பட்டி நீக்கும் tool பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.. ஏற்கனவே பலர் இந்த கருவிப்பட்டி இடும் கருவியைப் பயன்படுத்தி ஒருமுறைக்கு மேல் இட்டுவிட்டிருக்கிறார்கள்! அதனால், நம்ம bug fix செய்ததுக்கு அப்புறமும் பிரச்சனை வருது. பார்க்கலாம்..

 8. பொன்ஸ், நீங்க சொன்னது சரி. முகப்பில் இருந்தே இடுகைகளை அளித்து வகைப்படுத்த இயல்கிறது. தவறான முறையில் சோதனை செய்து விட்டேன். அப்ப கருவிப்பட்டை இல்லாட்டி, வாக்கு நிலவரம், அண்மைய பின்னூட்டங்கள், சூடான இடுகைகள் மட்டும் வராதுன்னு நினைக்கிறேன். இல்லை, சூடான இடுகைகளை தமிழ்மணத்தில் இருந்து செல்லும் சொடுக்குகளைக் கொண்டு கணிக்கிடுகிறார்களா? இதை யாராவது தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

 9. நான் தமிழ்மணத்தில் பதிந்த பதிவுகளைfirefox இல் noscript நீட்சியை பயன்படுத்தி தமிழ்மண ஸ்க்ரிப்டை தடுத்ததும் வேகமாக இறக்கிக் கொள்ள முடிந்தது.

 10. மணியன் – சே, இந்த சின்ன விசயத்த மறந்துட்டு கருவிப்பட்டை நீக்கக் கருவி, நீட்சின்னு பயங்கரமா யோசிச்சுட்டு இருந்துட்டேங்க 🙂

  பொன்ஸ் – இந்தத் தகவலை பதிவர் உதவிப் பக்கத்தில் இட முடியுமா?