விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுங்கள். புத்தகங்களை வெல்லுங்கள் !

என்னிடம் உள்ள சில புத்தகங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இவற்றில் ஏதாவது ஒன்று உங்களுக்கு வேண்டுமா? அந்த நூல் குறித்தோ அந்த நூலின் பேசு பொருள்கள் குறித்தோ தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை எழுதி விட்டு, இந்த இடுகையின் மறுமொழிப் பெட்டியில் குறிப்பிடுங்கள். கட்டுரை எழுத உதவி தேவையெனில் இங்கு கேளுங்குள். மின்மடல் மூலம் உங்களைத் தொடர்பு கொண்டு, உங்கள் முகவரிக்குப் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.

புத்தகங்களின் பட்டியல்:

1. தேடு – கூகுளின் வெற்றிக் கதை. நா. சொக்கன், கிழக்கு பதிப்பகம்.

2. தாமரை பூத்த தடாகம். சு. தியடோர் பாசுக்கரன், உயிர்மை பதிப்பகம். (2 படிகள்)

3. இப்போது அவை இங்கு வருவது இல்லை. கிருசுணன் ரஞ்சனா, உயிர்மை பதிப்பகம்.

4. பாம்பு என்றால்?. ச. முகமது அலி, இயற்கை வரலாறு அறக்கட்டளை.

5. கூழாங்கற்கள் பாடுகின்றன. எசு. இராமகிருசுணன், உயிர்மை பதிப்பகம்.

6. பெண் ஏன் அடிமையானாள்?. தந்தை பெரியார், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு.

7. அர்த்தமுள்ள இந்துமதம். பாகங்கள் 1, 2, 3, 5, 6, 7, 8. கண்ணதாசன், வானதி பதிப்பகம். (அனைத்துப் பாகங்களையும் சேர்த்துப் பெற ஏழு கட்டுரைகள் எழுத வேண்டும்.)

8. The Alchemist. Paulo Coelho, Harpercollins Publishers India.

9. The Google Story. David A. Vise, Pan Books.

10. Go Kiss the World – Life lessons for the young professional. Subroto Bagchi, Penguin portfolio.

11. Chetan Bhagat Novel collection from Rupa. Co publishers: five point someone, Revolution 2020, 2 States, one night @ the call center. (அனைத்தையும் சேர்த்துப் பெற நான்கு கட்டுரைகள் எழுத வேண்டும்)

விதிகள்:

* கட்டுரை 10 கிலோ பைட்டுக்கு குறையாமல் இருக்க வேண்டும். நீங்கள் எழுத விரும்பும் தலைப்பில் ஏற்கனவே கட்டுரை இருந்தால், அதனை விரிவாக்குங்கள். பரிசுக்கு ஏற்ற தரமான கட்டுரையா என்று பார்க்கப்படும். எடுத்துக்காட்டுக்கு, சில நல்ல கட்டுரைகளை இங்கு காணலாம்.

* அனைத்து நாட்டவரும் போட்டியில் பங்கேற்கலாம். ஆனால், புத்தகங்களை இந்தியா அல்லது இலங்கையில் உள்ள உங்கள் முகவரிக்கோ உங்கள் நண்பர்களின் முகவரிக்கோ மட்டுமே அனுப்பி வைக்க இயலும். இலங்கை முகவரிக்கு நூல் வந்து சேர சற்று தாமதம் ஆகலாம்.

* நிறைய பேர் பங்கேற்க வேண்டும் என்பதால் ஒருவருக்கு ஆகக்கூடி இரண்டு புத்தகங்கள் மட்டுமே. முந்துவோருக்கு முன்னுரிமை. எனினும், தொடர்ந்தும் விக்கிப்பீடியாவில் எழுதுவீர்கள் தானே? 🙂

* ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பவர்கள் இப்போட்டியில் பங்கேற்க ஒரு நூலுக்கு இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டும் 🙂 புதியவர்கள் ஒன்று எழுதினால் போதும்.

இந்த முயற்சி வெற்றி பெற்றால் இன்னும் சில நூல்களைப் பகிர்ந்து கொள்ள முயல்வேன். இன்னும் சிலரும் இது போல் தங்கள் சேகரிப்புகளைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் நன்றாக இருக்கும்.


Comments

4 responses to “விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுங்கள். புத்தகங்களை வெல்லுங்கள் !”

  1. சிபிச்சக்கரவர்த்தி Avatar
    சிபிச்சக்கரவர்த்தி

    சரி இரவி, ஆனால் இந்த புத்தகங்களை ஏற்கனவே படித்தவர் தானே இதைப் பற்றி எழுத முடியும். ஏற்கனவே படித்தவர் ஏன் இந்த புத்தகங்களை கேட்கப் போகிறார்! கட்டுரைத் தலைப்பை பொதுவாக வைத்தால் நன்றாக இருக்கும்.

  2. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    Alchemist போன்ற புகழ்பெற்ற நூல்களை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து தமிழாக்க முடியும். இதற்கு நூலைப் படித்திருக்க வேண்டும் என்றில்லை. மற்ற நூல்களைப் பொருத்தவரை, பாம்பு, கூகுள், பெண் அடிமைத்தனம், இந்து சமயம் என்று அவற்றின் பேசு பொருள் குறித்து ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுதினால் போதும். தலைப்பை ரொம்பவும் பொதுவாக வைத்தால் யாருக்குத் தருவது என்று குழப்பம் வரலாம். இப்போது உள்ள ஏற்பாட்டின் படி, குறிப்பிட்ட நூல் அல்லது துறையின் மேல் ஆர்வம் உள்ளவருக்கு மட்டும் நூல் கிடைக்கும். அதனால், கூடுதல் பயன் கிடைக்கும் என்று நினைத்தேன்.

  3. தி ஆல்கெமிஸ்ட் கட்டுரை ஏற்கனவே உள்ளது. மேம்படுத்த முயற்சிக்கிறேன்.

  4. சிபிச்சக்கரவர்த்தி Avatar
    சிபிச்சக்கரவர்த்தி

    ஆனாலும் இது ரொம்ப அநியாயம்!! ஒரு கட்டுரை எழுதுகிறவருக்கு ஒரு பத்தகமே பரிசா?!
    (எனக்குப் பிரச்சனையில்லை. நான் சென்னையில் தான் இருக்கேன். புத்தகத்தை அனுப்பி வைக்கத் தேவையிருக்காது. பேருந்திலேயே வந்து வாங்கிச் செல்வேன். ஹி. ஹி. ஹி… ;))