புதுமையான தமிழ்ப் பெயர்கள் போட்டி

இற்றை:போட்டிக் காலம் முடிந்தது. சூன் 7 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். தொடர்ந்தும் புதிய பெயர்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். அவை peyar.in தளத்தில் தொகுத்து வைக்கப்படும். நன்றி.

குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது குறைந்து வருகிறது. யாரும் தமிழில் பெயர் வைக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டுவது இல்லை என்றாலும், தமிழ்ப் பெயர்கள் என்றாலே பழமையானவை, பாமரத்தனமானவை என்ற பிழையான பொதுக் கருத்து நிலவுகிறது. தமிழில் பெயர் வைக்கிறோம் என்று நினைப்பவர்கள் கூட பிறமொழி மூலம் உள்ள பெயர்களை வைத்து விடுகிறார்கள். எனவே, தமிழ்ப் பெயர்களைச் சூட்டும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், பின்வரும் போட்டியை அறிவிக்கிறோம்.

குழந்தைகளுக்குச் சூட்டுவதற்கு புதுமையான தமிழ்ப் பெயர்கள் தேவை.

மொத்தப் பரிசு: இந்திய ரூபாய் 1000/- அல்லது அதற்கு ஈடான புத்தகங்கள்.

போட்டி நடைபெறும் காலம்: ஏப்ரல் 20, 2013 முதல் மே 20, 2013 வரை.

பெயர்களை எப்படித் தெரிவிப்பது?: கீழே உள்ள மறுமொழிப் பெட்டியில் தெரிவியுங்கள்.

விதிகள்:

* பெயர்கள் / பெயரின் மூலச் சொற்கள் தூய தமிழாக இருக்க வேண்டும். இலக்கியங்கள் / அகரமுதலிகளில் இருந்து மேற்கோள் தர முடிந்தால் கூடுதல் புள்ளிகள்.

* பெயர்கள் புதுமையாக இருக்க வேண்டும்.

* கிரந்த எழுத்துகள் உள்ள பெயர்கள், வட மொழியா பிற மொழியா தமிழ் மொழியா என்று குழப்பும் மூலச் சொற்களை உடைய பெயர்களைப் போட்டியில் சேர்க்க இயலாது.

* ஒருவர் எத்தனைப் பெயர்களை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். ஒரே பெயரை ஒன்றுக்கு மேற்பட்டவர் பரிந்துரைத்திருந்தால், முதலில் பரிந்துரைத்தவர் மட்டுமே போட்டிக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்.

* சிறந்த பெயர்கள் நடுவர் குழு மூலமாகவும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.

* விதிகளுக்குப் பொருந்தாத பெயர்கள் உடனுக்குடன் நீக்கப்படும். போட்டி விதிகளுக்கு உட்பட்டு வரும் அனைத்துப் பெயர்களும் peyar.in தளத்தில் சேர்க்கப்படும்.

பி. கு. – பரிசுத் தொகை / புத்தகங்களை அளிக்க புரவலர்கள் வரவேற்கப்படுகிறார்கள் 🙂


Comments

182 responses to “புதுமையான தமிழ்ப் பெயர்கள் போட்டி”

  1. ஆண் பெயர்கள்:
    முல்லை வழுதி
    இளம்பரிதி
    இனியன்
    தமிழினியன்
    அதியமான்
    அறிவொளி
    இளமாறன்

    பெண்பால் பெயர்கள்:
    தேன்மொழி
    சுடர்விழி
    அன்புக்கரசி
    இளம்பிறை
    பொற்கொடி

    இதெல்லாம் எங்க குடும்பத்தில் இருக்க பெயர்கள் மட்டுமே.

    நாளைக்கு பெரிய பெயர் பட்டியலோடு வரேன் 🙂

    1. மு.செல்வக்குமர் Avatar
      மு.செல்வக்குமர்

      ஒரு நல்ல பெயர் தேடினேன் ஆனால் உங்கள் பக்கம் வந்தது அதிலும் நல்ல தமிழ்ப் பெயர் கிடைக்கவில்லை வருத்தமாக உள்ளது. விரைவாக நல்ல முறையில் உங்களுடைய பக்கத்தை புதிப்பிக்கவும்.

      1. ரவிசங்கர் Avatar
        ரவிசங்கர்

        விரைவில் புதுப்பிக்கிறோம். நன்றி.

        1. jegatheesan Avatar
          jegatheesan

          கு என்ற எழத்தில்தமிழ் ெபண் குழந்தை பெயர் வேண்டும்

          1. குடியரசி
            குடியரசு
            குணக்கடல்
            குணக்கொண்டல்
            குணநங்கை
            குணமணி
            குணமதி
            குணமாலை
            குணவழகு
            குமரி
            குமரிக்கலை
            குமரிக்கொடி
            குமரிக்கோமகள்
            குமரிச்செல்வம்
            குமரிச்செல்வி
            குமரித்தமிழ்
            குமரித்தென்றல்
            குமரிப்பண்
            குமரிமணி
            குமரிமதி
            குமரியரசி
            குமரியிசை
            குயில்
            குயிலி
            குயின்மொழி
            குவளை
            குழலி
            குறள்கொடி
            குறள்செல்வி
            குறள்தென்றல்
            குறள்நெறி
            குறள்நேயம்
            குறள்மணி
            குறள்மதி
            குறள்மொழி
            குறள்வாழி
            குறளமுதம்
            குறளமுது
            குறளரசி
            குறளன்பு
            குறிஞ்சி
            குறிஞ்சிக்கொடி
            குறிஞ்சிச்செல்வி
            குறிஞ்சித்தமிழ்
            குறிஞ்சித்தேவி
            குறிஞ்சிநங்கை
            குறிஞ்சிப்பண்
            குறிஞ்சிமகள்
            குறிஞ்சிமங்கை
            குறிஞ்சிமணி
            குறிஞ்சிமதி
            குறிஞ்சிமலர்
            குறிஞ்சிமாலை
            குறிஞ்சிமுரசு
            குறிஞ்சியழகி

        2. அண்ணாமலை Avatar
          அண்ணாமலை

          வணக்கம் தோழரே 🙂
          எனது நண்பரின் மகனுக்கு “ச”, “சா” வில் தொடங்கும் அழகான தமிழ் பெயர்களை வழங்குங்கள். உங்கள் தளத்தில் சில பெயர்களை தான் பார்க்க முடிந்தது. அனைவரின் உதவியையும் எதிர்பார்க்கிறேன்.
          -நன்றி 🙂

          1. சங்குமணி
            சங்குமாலை
            சங்கொலி
            சங்குவண்ணன்
            சந்தனமகிழ்நன்
            சமநெறியன்
            சமன்நெஞ்சன்

            சாத்தன்
            சாத்தப்பன்
            சாத்தையன்
            சாதனைக்கோ
            சாதனைச்செல்வன்
            சாதனைமணி
            சாதனைமதி

        3. சந்துரு Avatar
          சந்துரு

          பெண் குழந்தைக்கு
          யாழ்முகில் வெண்பா
          என்ற பெயரை வைக்கலாமா??

    2. தேவி Avatar
      தேவி

      ரு,ரே,ரோ வில் துவங்கும் நல்ல தமிழ் பெயர்கள் கூறுங்கள்

    3. பொடாரசாமி Avatar
      பொடாரசாமி

      என் மகனுக்கும் பெயர் தேடி இங்கு வந்திருக்கிறேன் .உதவுங்கள் தோழர்களே

      1. பொடாரசாமி Avatar
        பொடாரசாமி

        மிகவும் அருமையான வளை பதிவு.நான் எனது மகனுக்கு தீரன், விசாகன். மகிழன், அமிழ்தன், போன்ற பெயர்களை பரிசீலித்து வருகிறேன். இவை அனைத்தும் தமிழ் பெயர்கள் என்றே நம்புகிறேன். பெயரின் அர்த்தங்கள் மற்றும் கருத்து ?

        REPLY

        1. பொடாரசாமி Avatar
          பொடாரசாமி

          காெஞ்சம் விரவைில் நன்பர்களே தயஙுகூர்ந்து.

        2.  Avatar
          Anonymous

          விசாகன் தூய தமிழ்ப் பெயர் இல்லை

    4. ஒரு நல்ல பெயர் மே ட டு டி வாிசையில் பெண் குழந்தை பெயா்
      தேடினேன் ஆனால் உங்கள் பக்கம் வந்தது அதிலும் நல்ல தமிழ்ப் பெயர் கிடைக்கவில்லை வருத்தமாக உள்ளது. விரைவாக நல்ல முறையில் உங்களுடைய பக்கத்தை புதிப்பிக்கவும்.

    5.  Avatar
      Anonymous

      please suggest a name starting with the letter kaa

    6. கர்ணன.வே Avatar
      கர்ணன.வே

      வணக்கம் நம்பரே !!!!!
      தனக்கு நல்லத் தமிழ் பெண் குழந்தைப் பெயர் வேண்டும்..ஆகையால் தாங்களால் தங்களுக்கு உதவ முடிமா???

  2. senthilnathan Avatar
    senthilnathan

    அதீதன் –எனது மகனுக்கு சூட்டலாம் என்று இருக்கிறேன்

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      வாழ்த்துகள், செந்தில்நாதன். அதிகம் என்பது தமிழா வட மொழியா என குழப்பம் உண்டு. சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

      1. senthilnathan Avatar
        senthilnathan

        இதன் வேர் அதிகம் அல்ல அதீதம் என்ற சொல் தான். அது மிகவும் வலிமையானவன், தீரன் என்பன, பொருள் வழங்கல் :அண்ணன் பழமைபேசி அதனால் எனக்கு சந்தேகம் வரவில்லை . மேலும் சங்கீதா என்ற பெயர் வடமொழியான சங்கீத் என்பதில் இருந்துதான் தோன்றியது தமிழில் இசை என்பதுதான் சரி..

        1. senthilnathan Avatar
          senthilnathan

          நவிலன், பரிதிக்குமரன் இது எனது நட்பு, உறவு வட்டத்தில் வைக்கப்பட்ட பெயர்

          1. Jagadish Avatar
            Jagadish

            Hello Senthilnathan,

            நவிலன் என்ற பெயரின் அர்த்தம் சொல்ல முடியுமா

      2. senthilnathan Avatar
        senthilnathan

        அதிகத்தின் வடமொழிச் சொல் “ஜாஸ்தி”

      3. செ.இரா.செல்வக்குமார் Avatar
        செ.இரா.செல்வக்குமார்

        அதிகம் தமிழ்ச்சொல் என்பது உண்மை எனினும் குழப்பம் உண்டு என்பதும் உண்மை. அதிகம் தமிழ் என்றாலும் அதீதன் என்னும் சொல் கட்டாயம் தமிழ் அன்று.

        1. senthilnathan Avatar
          senthilnathan

          அதீதன் –வேர் சொல் பற்றிக் கூற முடியுமா? இதை இரண்டு ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மெலிஞ்சி முத்தன் மற்றும் அருண்மொழி வர்மன் இருவரும் தங்களது மகனுக்கு சூட்டி இருக்கிறார்கள் மனுஷ்ய புத்திரன் அதீதத்தின் ருசி என்று கவிதை வெளியிட்டிருக்கிறார்

      4. Aravindan govindassamy Avatar
        Aravindan govindassamy

        அதிகம் என்பது தமிழச்சொல்லே, அதீதன் என்ற சொல் தமிழன்று. அகிலன் என்பது தமிழ்ச் சொல் அல்ல. குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வேண்டி என்னிடம் என் நண்பர்களும், உறவினர்களும் வருவர்கள். தமிழில் மொழி முதல் வராத எழுத்துகளில் பெயர் வைக்கச் சொல்லுவர்கள். இந்த எழுத்துக்களில் தமிழ்ப் பெயர்கள் வராது என்று கூறினால் முகம் சுருங்கிவிடும், நமக்கு ஒன்றும் தெரியவில்லை என்றுகூட எண்ணிவிடுவர்கள். சோதிடர்களும், குறிப்பாக பார்பனர்களும் திட்டமிட்டே வட மொழிப் பெயர்களை , பெற்றோர்களின் சோதிட நம்பிக்கையைப் பயன்படுத்தி வைக்கச் செய்துவிடுகின்றனர். இல்லாவிட்டால் போலி நாகரிக உணர்வால், பொருள் புரிகின்றதோ இல்லையோ நடிகர் நடிகைகளின் பெயரை வைத்துவிடுகின்றனர். இவ்வாறாக தமிழர்களின் முகவரி அவர்களின் பெயர்களில்கூட இல்லை. செம்பரிதி, புன்னகை, ஒளியன், செம்மொழி, தென்மொழி, கதிரவன், வெண்ணிலா, மலர்க்கொடி, செம்மல், அருட்செல்வன், தமிழருவி, தத்தை, அறிவழகி, கவின், மின்னல், பிறைநுதல், அருள்மொழி, நெடுமாறன், செங்குட்டுவன். இளவேனில், தெள்ளியன். அறிவன், செங்கோ, அமிழ்தன் போன்ற பெயர்களை வைக்கலாம்.

        1. senthilnathan Avatar
          senthilnathan

          அதீதன் –வேர் சொல் பற்றிக் கூற முடியுமா? இதை இரண்டு எழுத்தாளர்கள் தங்களது மகனுக்கு சூட்டி இருக்கிறார்கள் மனுஷ்ய புத்திரன் அதீதத்தின் ருசி என்று கவிதை வெளியிட்டிருக்கிறார்

          1. தமிழ்ச்செல்வன். Avatar
            தமிழ்ச்செல்வன்.

            அதீதம்- கடந்தது,மேற்பட்டது.
            அதீதர்- ஞானியர்.

      5. ஆறுமுகசாமி Avatar
        ஆறுமுகசாமி

        ஆகன். அதீதன். ஏறன்

    2. கர்ணன Avatar
      கர்ணன

      ஒ நண்பரே !!!! அருமையான பெயர் தாரளமாக வை…. எவன் வீட்டு சொத்து….

  3. குறும்பன் Avatar
    குறும்பன்

    முகிலன், அகிலன், கபிலன், அன்பன், மாறன், மாலன், இன்பன், பாலன், இனியன், வளவன், குமரன், அறிவன், அன்பு, வேலன், பாரி, செந்தூரன், இலக்கியன், கொங்குவேல், பெருங்கோ, வேல்மாறன். இன்னும் வரும்..
    பரிசை வாங்காம விடமாட்டோமில்ல.

  4. Sangeetha Avatar
    Sangeetha

    ஏரன்
    மயிலோன்

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      @சங்கீதா – ஏரன் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிறிய, எளிய, பொருள் வாய்ந்த பெயர். இதைப் போன்ற பெயர்களைத் தான் எதிர்பார்க்கிறேன்.

      1. செ.இரா.செல்வக்குமார் Avatar
        செ.இரா.செல்வக்குமார்

        ஏரன், ஏறன் இரண்டுமே நான் பரிந்துரைக்கும் சொல். ஏறன் என்பது சிவனுக்கும் வழங்கும் பெயர். ஆங்கிலத்திலும் பிற பல ஐரோப்பிய மொழிகளிலும் Leo என்று கூறுவார்களே அதே பொருள் தரும். காளை வாகனன் என்றும் பொருள் தரும். ஏர் என்றால் அழகு (பல நிலைகளில் பொருளாழம் மிக்கச் சொல்). ஏரன் என்பது அழகன், ஒழுக்கன், எழிலன், சீரன் என மிகப்பல பொருள்கள் சுட்டும் அழகான பெயர். இன்னொருவரும் ஏரன் என நினைத்தது குறித்து மகிழ்ச்சி 🙂

        1. வேந்தன் அரசு Avatar
          வேந்தன் அரசு

          ஏரன் = பரசு ராமன்

  5. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    @தமிழினியன் அடேங்கப்பா.. உங்களுக்கு “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” விருது வழங்குகிறேன் 🙂

    @குறும்பன், தமிழினியன் – நல்ல பெயர்கள். இது போன்று நிறைய peyar.in தளத்தில் உள்ளன. ஆனால், பிரச்சினை என்னவென்றால் இது போன்ற பெயர்கள் “பழைய” பெயர்களாகப் பார்க்கப்படுகின்றன 🙁 கடைசியில் பொருளே இல்லாத ஏதோ ஒரு மொழிப் பெயரை வைக்கிறார்கள். அதனால் தான் இந்தப் போட்டியே.. இயன்றளவு கேள்விப்படாத பெயராக இருக்க வேண்டும். ஆனால், தமிழ் வேர்ச்சொற்களைக் கொண்டிருக்க வேண்டும்.

  6. நல்ல முயற்சி ரவி, வாழ்த்துகள் 🙂

    மேற்குறிப்பிட்ட சில பெயர்களைத் தவிர்த்து என்னாலான சில “புது”ப் (!!!!) பெயர்கள்.

    அகரன், இயல், திகழ்
    இனியாள், இமையாள், இலக்கணா, இலக்கியா, கயல், சாரல், தென்றல், பூங்கதிர், பொன்னிலா, மென்கா, வெண்பா.

    ஆனால், வேற்று மொழிப் பெயர்களை மட்டுமே புதுமைகளாகக் கருதும் (இதுல இந்த நியூமராலஜி இம்சைங்க வேற) நம் மக்களுக்கு புதுமை என்றால் வேறு வகையில் பெயர்கள் வேண்டும்.

    எ.கா: பெர்லினி (பெர்லின்ல பொறந்தாங்களாம் !!!)..

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      நன்றி, பதி.

      சோதிடர் சொல் கேட்பது, அகர வரிசை பார்ப்பது, எண் இராசி பார்ப்பது என்றெல்லாம் கிளம்பினால் தமிழ்ப் பெயரை வைப்பதை மறந்து விட வேண்டியது தான். சொல்லி வைத்தாற் போல் எல்லா சோதிடர்களும் கிரந்த எழுத்துகளைப் பரிந்துரைக்கிறார்கள். இல்லாவிட்டாலும், அந்த ஒலிகள் வந்தால் தான் நவீனம் என்பது போல் ஒரு அடிமைத்தனம் பரவிக் கிடக்கிறது.

      பெர்லினில் பிறந்தால் பெர்லினியா.. என்ன கொடுமை சரவணா? ஆனால், கபிலன் வைரமுத்து அவரது மூதாதையர் ஊரின் நினைவாக மகளுக்கு மெட்டூரி என்று பெயர் வைத்திருக்கிறார். பாராட்ட வேண்டிய விசயம். வைகை அணை கட்டும் போது இந்த ஊர் மூழ்கிப் போனதாம்.

      தமிழில் வைத்தால் புதுமை இல்லை என்று சொல்ல முடியாது. அன்றாடம் கேட்கும் ஒரு சொல்லை என் மகளுக்குப் பெயராக வைத்திருக்கிறேன். இப்படியும் பெயர் வைக்கலாமா என்று வியக்கிறார்கள் 🙂 peyar.in உருவாக்கிய நண்பர் கார்த்திக்கும் மகளுக்கு நல்லதொரு தமிழ்ப் பெயர் வைத்திருக்கிறார். அகரமுதலியில் பொருள் உண்டு. திருக்குறளிலும் வரும் சொல். ஆனால், 99.9 % யாரும் யோசிக்காத பெயர் 🙂 அதனால் தான் கேள்விப்படாத நல்ல தமிழ்ப் பெயர்களாகத் தேடிக்கொண்டிருக்கிறோம் 🙂

    2.  Avatar
      Anonymous

      அகரன்
      ithatgu enna artham? thayavu seithu solungal.

      1. ரவிசங்கர் Avatar
        ரவிசங்கர்

        அகர முதல எழுத்தெல்லாம் என்பது போல் எல்லாவற்றுக்கும் தொடக்கமாகவோ தலைவனாகவோ உள்ளவன் எனப் பொருள் கொள்ளலாம்.

  7. என் மகன் பெயர் – நன்மாறன் பொகுட்டெழினி.

    நன்மாறன் உங்க வெப்சைட்டில் இருக்கு, பொகுட்டெழினி இல்லை. #போட்டிக்கு இல்லை

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      பொகுட்டெழினி பற்றி இப்ப தான் விக்கிப்பீடியாவில் படித்துத் தெரிந்து கொண்டேன். நிச்சயம் “புதுமையான” பெயர் தான் 🙂

    2. சந்தோஸ் Avatar
      சந்தோஸ்

      பொகுட்டெழினி அதியமான் மகன் பெயர்

  8. Elavarasan Avatar
    Elavarasan

    எனது மகனின் பெயர் நாவேந்தன்.
    மகளின் பெயர் யாழரசி

  9. பெயர் ரொம்ப சுருக்கமாவும் இருக்கனும்(ஆங்கிலத்துல எழுதும் போது கூட), அழகாவும் இருக்கனும்ன்றதுதான் என் கொள்கை. என்னை மாதிரி நாலு கிலோமீட்டருக்கு பேர் வைச்சுகிட்டு தொல்லைதான். அதே போல, ‘ழ’ வந்துச்சுன்னா இப்போதைக்கு இருக்க சூழல்ல நம்ம பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது பலரும் கடிச்சுக் குதறிடுவாங்க, ஆனா ழ இல்லாம ஒரு பெயர் அழகாவே இருக்காதே… http://thamiziniyan.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/

    எயினி – பாலை நிலத்தைச் சேர்ந்த பெண் என்று பொருள். “நான் மதுரைக்காரன்டா”ன்ற மாதிரி, நாங்க எல்லாம் கோவக்காரப்பொண்ணுங்க, எப்பவும் சூடாத்தான் இருப்போம்னு சொல்லிக்கலாம்.

    இளவெயினி – நற்றினைல ஒரு பாடலை இவங்க எழுதியிருக்காங்க. பேய்மகள் இளவெயினி அப்படின்னு இன்னொரு புலவரும் இருக்காங்க, http://ta.wikipedia.org/s/pfh

    எழினி – எயினி சொல்லும்போதே எழினியைச் சொல்லி ஆகனும். பலபேர் இந்தப் பேரோட இருந்திருக்காங்க http://ta.wikipedia.org/s/11vx

    எழிலி – மேகம்.
    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்’தெழிலி’
    தான்நல்கா தாகி விடின். (குறள் 17)

    வெண்ணி – நந்தியாவட்டைன்னு நாம இப்போ சொல்ற பூவோட சங்ககாலப் பெயர். இந்தப் பேரைவிட வெண்ணியே நல்லா இருக்கும் போது ஏன் இப்படி பெயர் மாறிடுச்சுன்னு தெரியலை 🙁
    சங்கப் புலவர்களோட பெயர்களில் இந்த வெண்ணி முன்னொட்டா வந்திருக்கு வெண்ணிக் குயத்தியார்.

    எழுகதிர், எழுஞாயிறு – இந்தப் பெயர்கள்ல தனித்தமிழ் மாத இதழ்கள் வந்துகிட்டிருந்தது.

    செம்பியன்- http://ta.wikipedia.org/s/a7z

    எழில், கதிர், சுடர், மதி, பரிதி, கீரன், சொற்கோ,

    1. //செம்பியன்// மிக அருமை. வெளிநாட்டவர் ‘Champion’ என்று பெயரை மாற்றி அழைப்பார்கள். 😉

  10. ஆதவன் Avatar
    ஆதவன்

    தமிழ் இன்பன்
    அகரமுதலன்
    அறிவுக்கரசன்
    தேன்தென்றல்

  11. கா. சேது Avatar
    கா. சேது

    ஓங்கிலரசி, மென்மலர், பொன்னெழில், தேனாயிழை, விஞ்சினி

    எச்சரிக்கை : இன்னும் வரும் 😉

    பரிசு எனக்கு வழங்கப்பட்டால் தமிழ் விக்கிப்பீடியா அறக்கட்டளைக்கு சேர்க்கவும்! 😉

  12. கஜேந்திரன் Avatar
    கஜேந்திரன்

    பெண் பெயர்கள்:
    வெண்பனி
    வான்மழை
    பனித்துளி
    ஆர்கலி
    ஆதிரை
    தமிழிசை
    யாழிசை
    குழலிசை
    யாழ்மொழி
    தேன்துளி
    மழைத்துளி
    வளையொலி
    கைவளை
    தேன் மழை
    இசைமொழி
    ஏந்திழை
    மிழலை
    மழலை மொழி
    கார்த்திகைப் பெண்ணாள்
    கார்குழல்
    பூங்குழல்
    மலரிதழ்
    மௌவல்
    ஆம்பல்
    மகிழிசை
    தேன்தமிழ்

    1.  Avatar
      Anonymous

      super

  13. கஜேந்திரன் Avatar
    கஜேந்திரன்

    தமிழ் மழை
    பைந்தமிழ்
    பனி மலர்
    மெல்லிசை
    பொற்றொடி
    வான்முகில்
    மேதினி
    குழல்வாய்மொழி
    குழல் மொழி
    பூந்தென்றல்
    பைந்தொடி
    கண் மணி
    பொன் மணி

  14. அதிஷா Avatar
    அதிஷா

    நெறியான்,
    அகரன்
    வண்ணக்கிளிமொழியாள்

  15. இப்போதான் ஒரு பையனுக்கு பேர் வைக்க,

    தென்னன்
    இனிகோ
    தீரன்
    தேவநேயன்

    இப்படி நெறைய பேர் யோசிச்சு கடைசியா திருத்தமிழ் அப்படின்னு வச்சிருக்கோம்.

  16. Shiva Avatar
    Shiva

    பைந்தமிழரசி
    பண்பொழியாள்
    கோமகன்

    1. saravanan Avatar
      saravanan

      கோவேந்தன் பெயரின் அர்த்தம் என்ன

      1. ரவிசங்கர் Avatar
        ரவிசங்கர்

        கோ என்றாலும் வேந்தன் என்றாலும் அரசன் என்று தான் பொருள். கோவேந்தன் என்பதை அரசர்களுக்கு அரசன் (பேரரசன்) என்று கொள்ளலாம்.

  17. ‘எறுழ்வலி’யில் எழுதும் கதைகளில் வரும் கதைமாந்தர்களுக்கு தூய தமிழ்ப் பெயர் சூடுவதை வழக்கமாக வைத்துள்ளேன். அவற்றிலிருந்தும் மேலும் இனி வரப்போகும் கதைமாந்தர்களுக்கு சூடப் போகும் பெயர்களும் இவை. 🙂

    ஆண்கள்:

    நித்திலன், வியன், களஞ்சியன் (விக்கிப்பீடியா துணை :)), இலக்கியன், மலரவன், செழியன், வினையூக்கன் (சுருக்கமா ‘வினை’ன்னு கூப்பிடலாம், ஒரு தமிழ்க் கதைநாயகன் கூட இந்தப் பேரு வச்சிருக்காரு ;)), பகலவன், நன்னெறி (பள்ளில ‘நன்னாரி’ன்னு பட்டப்பெயர் வைப்பாங்க :)), மதி (இது தமிழில் ஒரு ஆழமான சொல். பல பொருள்கள் உண்டு.), தீர்வன் (சிக்கல் நிறைய இருக்கு, ஒரு தீர்வு வேணும். :)), வளவன், நலன் (இது வேற ‘ல’ – Health), பண்பன், துணிவன், பற்று, தெளிவன் (நிறைய ‘வன்’ன ‘வி’ன்னு மாத்திட்டா பொண்ணு பேரு வந்துரும்!)

    பெண்கள்:

    வெண்பா, யாழினி, குழலி, மங்கை, (வெண்)மதி, புன்னகை ( பொன் நகைய விட, புன்னகை தான் சிறந்தது! :)), கோதை, இறைவி (இறையன்பு உள்ள அன்பர்களுக்கு), மழலை

    இப்போதைக்கு இது போதும். 🙂

    1. தியாகராசன் Avatar
      தியாகராசன்

      பரிசுத்தொகை மொத்தமும் உங்களுக்குத்தான் வரும் போலயே ?? 😀

  18. அணிமலர்
    நன்ஞானம்
    வால்முத்து – வெண்மையான முத்து
    வான்கரும்பு-சிறந்த கரும்பு – சிறந்த கரும்பு போன்ற சுவையுடைய-
    மாமணி, மாமணியன்
    தேங்குழலி

  19. JANARTH Avatar
    JANARTH

    INSUVAI, CHITHIRAN, VENPANI, PANITHULI, OARI, KANCHAN, MALAR, KAVINMOZHI, KOMAN, POOVAALI, VANGI, SENKATHIR, VALAVAN, SALAIYA, CHUDAR

  20. கலியுகன் Avatar
    கலியுகன்

    எனது மருமகனின் பெயர் “புகழாழன்”.

  21. கார்த்திகேயன் பாண்டியன் Avatar
    கார்த்திகேயன் பாண்டியன்

    கோ

  22. நிமலன் , நேற்று தன் மகனுக்கு பெயர் வைத்த நண்பன்

    http://paasurangal.blogspot.in/2009/06/1.html

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      நிமலன் என்ற பெயர் தமிழ் வேர்ச்சொல்லைக் கொண்டது இல்லைன்னு நினைக்கிறேன். பரிந்துரைக்கு நன்றிங்க.

      1.  Avatar
        Anonymous

        நிமலன் – திருவாசகத்தில் சிவனைக் குறிப்பிடுவது

        நி+ மலன் = கழிவு இல்லாதவன்

        திருவாசகத்தின் தொடக்கத்திலே வரும்

      2. நிமலன் தமிழ் பெயர் தான்
        கடவுளை குறிக்கும்.
        சில இடங்களில் முருகன் என்ற பொருளும் பெரும்.

        In kanda sashti kavasam

        Nishtaiyum Kaikoodum
        NIMALAR Arul Kanthar Sashti Kavacham Thanai

        Amarar Idar Theera Amaram Purintha
        Kumaranadi Nenjeh Kuri

        மாணிக்கவாசகர் – திருவாசகம் – சிவபுராணம் – 15

        “ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
        தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி
        நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
        மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
        சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
        ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி”

        Sivaprakasam, Verse 15:

        சிவப்பிரகாசம் – 15

        ‘ஈங்கு இது என்றது கடந்த இயல்பி னாலும்
        ஈறுமுதல் நடு ஒன்றம் இலாமை யாலும்
        ஓங்கிவளர் ஞானமயன் ஆத லானும்
        உண்மைபிறர்க்கு அறிவரிய ஒருமை யானும்
        தாங்கு அரிய வெறுப்பினொடு விருப்பும் எல்லாம்
        சார்வு அரிய தனிமுதல்வன் ஆதலாலும்
        நீங்கல் அரும் உயிர்க்கு உயிராய் நிற்ற லாலும்
        நிறுத்திடுவன் நினைந்த உரு நிமலன் தானே.’ 15
        Kandha puranam, Urpaththi kandam,Thirukkailasa padalam, Verse 14:

        ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம், உற்பத்தி காண்டம், திருக்கைலாசப் படலம் – 14

        “படியெ லாமுண்டும் ஏனமாய்த் தாங்கியும் பண்டோர்
        அடியி னாலகப் படுத்தியு மிடந்துமுற் றருளும்
        நெடிய மாயனு முலகிறு மெல்லையில் நிமலன்
        வடிவ மேயெனக் காணுதற் கரியதவ் வரையே. ” …… 14

    2. கர்ணன.வே Avatar
      கர்ணன.வே

      அருமைத் தோழரே !!!!!

  23. திரு – சுருக்கமாவும், மரியாதையாவும் இருக்கும் ஆனா, பெரியாளா வளர்ந்த பிறகு திரு.திருன்னு அச்சடிச்சு கலாய்ச்சுடுவாங்க.

    திரையன் – சங்ககாலத் தமிழ் அரசர்கள் பலபேர் இந்தப் பேர்ல இருந்திருக்காங்க, http://ta.wikipedia.org/s/1dj0

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      // பெரியாளா வளர்ந்த பிறகு திரு.திருன்னு அச்சடிச்சு கலாய்ச்சுடுவாங்க.// எந்தப் பெயரையும் கிண்டல் செய்ய வாய்ப்பிருக்கிங்கறதால அதைப் பத்தி பெரிசா அலட்டிக்க வேண்டாம்னு நினைக்கிறேன். திரு மிகவும் நல்ல பெயர்.

  24. இளமல்லன்
    யாழ்நிலா
    தமிழ்குமரன்
    தேன்கனி
    மன்னவர்மன்னன்
    பூந்தேன்குழலி
    பூந்தமிழ்

  25. Venkatesh Prabhu Avatar
    Venkatesh Prabhu

    இனியநிலா (இனியா என்றும் நிலா என்றும் அழைக்கலாம்)

  26. Tenkasi Subramanian Avatar
    Tenkasi Subramanian

    விஜய் டிவி நீயா நானா கோபிநாத்தின் பெண் பெயர் வெண்பா.

    மேலும் பொழில் என்றால் மழைக்காடுகள் என்று பொருள்படும். அதனால் பொழிலரசன்(சி), பொழில் வேந்தன் போன்ற பெயர்களை வைக்கலாம்.

    கேட்டால் இனிய சொற்களை பொழிவதால் இப்பெயர் என்று சொல்லிக்கொள்ளவாது செய்யலாம்.

  27. அட, ஒரு போட்டி என வந்துவிட்டால் எத்தனை அருமையான பெயர்கள் வந்து குவிந்துள்ளன! எனக்குப்பிடித்த கவின், வெண்பா போன்ற பெயர்களை ஏற்கனவே போட்டுட்டாங்க. இனி கொஞ்சம் ஆழமாத் துழாவனும்.

  28. இரவி, இப்போதைக்குச் சில ஆண்கள் பெயர்கள் இடுகின்றேன்:
    1) ஏறன் (ஏறு என்றால் அரிமா அல்லது காளை. எறுழ் என்றால் வலிமை. வல்லோன் என்றுபொருள்)
    2) நீரன் (நீர்மை என்றால் ஒழுக்கம், தூய்மை, சிறந்த குணம்)
    3)சீரன் (சீர், சீர்மை என்றாலும் ஒழுக்கம், அழகு, நேர்த்தி)
    4)ஆரன் (ஆர் என்றால் நிறைவு, உயர்வு, திரட்சி..)
    5)ஓரன் (ஓர்மை என்றால் சிந்தனை, நினைத்தல், குவியத்துடன் நினைத்தல்)
    6)ஈரன் (ஈரம் உடையவன், அருளாழன் compassionate person )
    7)நலன் (நலம் மிகுந்தவன்; எல்லா வகை நலனும் உடையவன்)
    8)குலன் (நல்லோர் குலத்தவன், குலவு என்றால் சேர்ந்திரு என்றும் பொருள், குமுகத்தோடு சேர்ந்திருப்பவன்)
    9)மீனன் (அடிப்படை உயிராகக் கருதும் ஒன்று, பாண்டியன் சின்னம், மீன் என்றால் விண்மீன் என்றும் பொருள், எனவே விண்மீனன் என்றும் பொருள்)
    10) மீகன் (மீகம் என்றால் யாவற்றையும் மீறிய உயர்ச்சி மிக்கது என்று பொருள். தேவாரத்தில் தமிழ்நூலின் மீகம் அறிவார் (தமிழ் நூற்களில் தனி மேன்மையை உணர்வார்) என்று ஆண்டிருக்கின்றார் திருஞான சம்பந்தர்)
    11)நல்லன்
    12)அளியன் (அளி = அன்பு, அருள்)
    13) பகவன் (திருக்குறலில் வரும் ஆதி பகவன். சங்க இலக்கியத்தில் முக்கோல் பகவர் என்று வரும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும் பகவர் என்னும் சொல்லாட்சி உண்டு. பகவன் என்றால் ஒளிபொருந்தியவன், ஒளியூட்டியவன் என்று பொருள்; பகல் என்பது ஒரு நாளைப் பகுத்த ஒரு பகுதி என்றும், ஒளிப்பகுதி என்றும் பொருள். பகட்டு என்றால் பளபளக்க வெளிச்சமாக இருத்தல்; பகவன் என்பதற்கு பெண்பால் பகவதி, பெருமைப்பெயரும் பன்மையும் பகவர். இது ப’கவான் என்னும் சொல்லுடன் தொடர்புடையதன்று. )
    14) வள்ளியன் (வள்ளியம் என்னும் செருக்கு என்றார் திருவள்ளுவர். வள்ளியம் பெருஞ்செல்வம். வள்ளியன் = கொடையாளன், பெருஞ்செல்வமுடையோன்; வள்ளிசு என்றால் முழுவதும், முழுமையாக, நேர்த்தி என்றும் பொருள்)
    15) வென்றி (வெற்றி என்பதன் மற்றொரு வடிவம்)
    16)ஆகேறன் (ஆகேறு என்றால் கொன்றை மலர்ச்சரம், கொன்றை வேந்தன் என்னும் பொருள்)
    17) ஆணன் (வலிமை மிக்கவன், ஆண்மை மிக்கவன், ஆணேறு)
    18)மேலன்
    19) ஆகன் (வெற்றியுடன் எதையும் முடிக்கும் திண்திறலோன்)
    20) ஆடலன் (ஆடல் வல்லான்)
    21) இசையன்
    22)ஆர்த்தன் (பெரியோன்; ஆர்தல் நிறைதல், ஆர்த்தல் = கட்டுதல்)
    23) அருக்கன் ( வெங்கதிரவன்; அருக்கன் என்றால் சுக்கு என்றும் பொருள்)
    24)அருகன் (இது சமண மத முனிவர் என்றும் பொருள் தரும், ஆனால் தமிழில் பக்குவம் மிக்கவன், நண்பன் என்றும் பொருள் தரும்)
    25)வேழன் (யானை போல் வலிமை மிக்கவன்; பிழையாக வேலன் என்றாலும் பொருள் தரும்)
    26) சென்னி (chenni கூர்ந்த சிந்தனையாளன், சோழர்களில் பெயர்களுள் ஒன்று, சிறப்பு என்றும் பொருள், மேல் உச்சி என்று பொருள், தலை என்றும் பொருள். இதனைக் கொண்டு முன்னொட்டுகளோடு பல சொற்கள் ஆக்கலாம். நற்சென்னி, வல்+சென்னி வற்சென்னி, இன்சென்னி, பெண்பால் பெயராய் பூச்சென்னி, மலர்ச்சென்னி….)
    27) சே (சே என்றால் சிவப்பு, அழகு, செம்மையானது, செழிப்பானது, புதுமையானது)
    28)சேகன்
    29)சேடன் (சேடு = அழகு)
    30)சேட்டன் (முத்தோன்)
    31)சேம்பன் (செம்மையானவன், நல்லவன்; சேம்பு = சிவப்பு)
    32)சேரன், சேறன் (வல்லின றகரத்துடன் வரும் சேறன் என்றால் செம்மையாய் நடப்பவன், இனிமையானவன் என்று பொருள்; சேறு என்றால் தேன், இனிமை தித்திப்பு, தேன்பாகு என்றெல்லாமும் பொருள். இன்புக்குக்குழைக்குச் சேறு என்று பொருள்)
    33)செழி (செழிப்பு, செழுமை)
    34)தண்ணன் (குளுர்ச்சியானவன்,)
    35)தெள்ளன் (தெளிவானவன், அறிவானவன். தெள்ளியர் என்றால் அறிவுடையோர் தெள்ளுதல் ஏன்றால் கொழித்தல், ஆராய்தல், தெள்ளுதமிழ் = செந்தமிழ், தெள்ளிமை =அறிவு, தெளிவு)
    36) தென்னன் (தென் என்றால் தெற்கு என்று மட்டும் பொருள் இல்லை, அழகு, இசை இனிமை என்றும் பொருள்!!)
    37) தெண்ணன் (தெண் = தெளிவு; தெட்பம் = தெளிவு)
    38 ஒட்பன் (ஒளிபொருந்தியவன்; ஒட்பம் = அறிவு, அழகு, நன்மை
    39) ஒள்ளோன் (ஒள் = ஒளி)
    40) ஓசன் (குரு, ஆசிரியன்)
    41)ஓகன் (உயர்ந்தவன்; ஓக்கம் என்றால் உயர்ச்சி, பெருமை, எழுச்சி என்று பொருள்; ஓகை என்றால் உவகை அல்லது மகிழ்ச்சி. ஓகை என்றும் பெயர் வைக்கலாம், ஓகையன் என்றும் சொல்லலாம்)
    42)ஓதியன் (அறிவுடையவன், செறிவான ஞானம் உடையவன்)
    43) ஓர்பன் (ஓர்பு = ஆராய்ச்சி அறிந்தெடுத்தல், ஓர்ச்சி = ஆராய்ச்சி)
    44) ஓரி (வில் வித்தையில் சிறந்த ஓர் அரசன்; பேரரசன்; அறிவாளி)
    45) கடலன் (கடல் போல் அறிவாளி, கடற்கோ)
    46)கணி (கணிப்பவன், சிறந்த அறிவாளி; முதுகந்தண்டு என்றும் பொருள் கணுக்கணுவாய் இருப்பதால், ஆனால் இங்கு அடிப்படையானவன் என்று பொருள்)
    47) சான்றோன்
    48) தகை அல்லது தகையன் (தகை = அன்பு அழகு பொருத்தம், தகுதி, நன்மை. பெருந்தகை என்றால் பெருமை மிக்க ஒள்ளியர் என்று பொருள்)
    49) நன்னன், நன்கோ, நற்கோ, நல்லோன்
    50) நள்ளன் (நள் = நடு, நட்பு. நள்ளன் நண்பன் -அதாவது அன்பு உடையவன். நள்ளலர் என்றால் பகைவர் அன்பு இல்லாதவர்.; நள்ளுதல் நட்பு கொள்ளுதல்)

    1. பெண்கள் பெயர்கள் சில:

      1)அல்லி
      2) மிளிர்
      3) திகழ் (திகழி)
      4) மகிழ் (மகிழி)
      5) மீகி ( (மீகம் என்றால் யாவற்றையும் மீறிய உயர்ச்சி மிக்கது என்று பொருள். தேவாரத்தில் தமிழ்நூலின் மீகம் அறிவார் (தமிழ் நூற்களின் தனி மேன்மையை உணர்வார்) என்று ஆண்டிருக்கின்றார் திருஞான சம்பந்தர்)
      6) சிவணி (சிவணுதல் என்றால் கூடுதல் , சேர்ந்து வாழ்ந்து சிறப்பிப்பவள் என்று பொருள். அறிவு சேர்ப்பவள், அறிவோடு சேர்பவள், நற்பொருள் கூட்டுபவள், நற்பொருளோடு சேர்பவள்)
      7) தெளி, தெளிர் (ஒளி, ஒளிவிடுதல், அறிவு, உறுதியான அறிவு)
      8) தென்னி (அழகி, இனியவள்)
      9) பொன்னி (இது பழைய பெயர் என்றாலும் வழக்கிழந்து வரும் பெயர்)
      10) ஒள்ளி (ஒள் = ஒளி; அழகானவள்)
      11) ஐயை (தலைவி)
      12) ஒன்னி (அழகும் நட்பினிமையும் பொருந்தியவள்; ஒன்னார் = பகைவர்)
      13) கல்லி (பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு; ஆங்கிலத்தில் precocious என்பார்களே அதற்கு நேர் ஈடான சொல்)
      14) அளி (அன்பானவள்)
      15) களி (மகிழ்ச்சியானவள்)
      16) எழில்
      17) கேண்மி (அன்பானவள். கேள் = அன்பு, கேளிர் = அன்பால் சுற்றமாய் அமைந்தவர்கள் நண்பர்களும் உறவினர்களும்; கேள்வன் = காதலன், அன்பன். கேள் > கேண் > கேண்மை)
      18) செவ்வி (சிறந்தவள்)
      19) நவ்வி (அழகு, இளமை, பெண்மான்)
      20) நவ்வீ (நல்ல வீ; வீ என்பது முழுவதும் மலர்ந்த பூ)
      21) நளி (தேன் தேன் போன்றவள், குளிர், குளுர்ச்சியானவள்; நளி என்றால் பெருமை என்றும் பொருள் எனவே பெருமையானவள்)
      22) நன்னி (நல்லவள், சிறந்தவள்)
      23) நல்லி (நல்லவள்)
      24) முகை
      25) முன்னி (சிந்திப்பில் சிறந்தவள், முதல் பெண்மகவுக்கு வைக்கத் தக்க சொல்லும் ஆம்,
      26) முருகி (அழகி)
      27) எழில், எழிலி
      28) இசை
      29) ஏழிசை
      30) நேரி (பேரழகு, பெரும் அறிவு, கற்புக்கரசி (நேர்= கற்பு), உண்மையள், தகுதி மிக்கவள்)
      31) நே (நே = அன்பு; நேயம் என்பது இதில் இருந்து வந்த சொல்)
      32) நேயெழில்
      33)நேயளி (இப்படி நே என்பதை வைத்து ஒரு 50+ சொற்கள் ஆக்கலாம்; நேயகி (நாயககி என்பது போல், அகத்தே நேயம் கொண்டவள் நேயகி)
      34) பரவை (திருமகள், சுந்தரரின் மனைவியின் பெயர்; கடல் = கடல் போன்ற அழகு அறிவு, வலிமை என்று பொருள்)
      35) புரவி (புரவி என்றால் குதிரை என்று பொருள், ஆனால் விரைந்தாற்றுவோர், காப்பவர் என்றும் பொருள்.)
      36) புரீஇயள் (புரிவு = அன்பு; புரீஇ (அளபெடை) என்பது விரும்பி, அன்பு செய்து என்று பொருள்)
      37) புதினி (புதியவள், புது நோக்குடையவள், புதுப்பூ, நவீன் என்னும் ஆண் பெயர் போல் பெண்பால் தமிழ்ப்பெயர்0
      38) பூவல் (சிவப்பு, செவ்வழகி)
      39) பொழினி (பொழில் = சோலை, பூந்தோட்டம், பெருமை)
      40) மதிரை (குபேரனின் மகளின் பெயர், மதி போல் அழகானவள்0
      41) மன்னி (சிந்திக்கும் தலைவி)
      42) மாசிலி (தூயவள்; மாசிலி என்பது கடவுளின் பெயர்களுள் ஒன்று)
      43) நன்மாரி (செல்வம் தரும் நல்ல மழைபோன்றவள்)
      44) மீளி (காப்பாற்றுப்வள், மிகுதிறம் கொன்டவள்0
      45) மீனி (மீன் போன்ற கண்ணுடையவள்)
      46) சேகி (ஆற்றலுடைய பெண்; சேகன் = ஆற்றலுடைய ஆண்)
      47) சேணி (சேண் என்றால் உயர்வு, சேணி என்றால் உயர்ந்த அறிவு கொன்டவர்கள் என்று பொருள். அறிவுசீவி என்னும் பொருள்; சேணி=ஏணி. இது வடமொழிச்சொல் என்னும் கருத்தும் உண்டு. ஆனால் சே = உயர்வு, செம்மை என்னும் தமிழ்வழிப் பொருள் கொண்ட தூய தமிழ்ச்சொல்லே)
      48) தண்ணளி (குளிர்ச்சியான அன்பு பொருந்தியவள்; கடவுளுக்கும் கூறும் பெயர்; அருள்)
      49) நயமி (நுண்ணழகுடையவள், நுண்ணறிவு உடையவள்)
      50) புகழி (புகழ் மிக்கவள்)
      51) புகலி (புகழ் மிக்கவள்; புகல், புகலுதல் என்றால் சொல்லுதல், மகிழ்தல். இது புகழ பெற உதவுவதால், புகல் என்பது நற்புகழுக்கும் ஆகும். புகலி என்றால் புகழி என்றும் பொருள்)

    2. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      எண்ணற்ற பெயர்களைத் தந்து திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். பொருள் விளக்கம் மிகச் சிறப்பு. நன்றி.

  29. தமிழ்ப்பெயர்ப் பட்டியல் நிறைய உள்ளன. அவ்வாறு முன்னரே வந்தவற்றைத் தொகுத்து வெளியிட்டு, அத் தொகுப்பில் இல்லாப் புதுப் பெயர்களைத் தெரிவிக்க வேண்டிப் பரிசு அளிப்பதும் புதிய பெயர்களைத் தொகுப்பதுமே சிறந்த முறையாகும். பிறர் கூறிய பெயரை ஒருவர் கூற, அதனை அறியாத போட்டி நடுவர்கள் அவர்தான் சொன்னார் எனக் கருதித் தவறாகப் பரிசு வழங்கும் வாய்ப்பு இதனால் நிற்கும். புதிய பெயர்கள் பெருகும் வாய்ப்பு மலரும். அவ்வாறு அறிவித்தால் நானும் புதிய பெயர்கள் பலவற்றைத் தெரிவிக்கின்றேன். (என் மக்கள் பெயர் ஈழமலர், ஈழக்கதிர் ஆகியனவும் புதிய பெயர்களே. ஈழ மலர் என்னும் பெயரை வேறொரு பட்டியலில் சேர்த்துள்ளேன்.) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      ஐயா. எங்களுக்குக் கிட்டிய பெயர்களை peyar.in தளத்தில் தொகுத்துள்ளோம். உண்மையிலேயே ஒரு புதுமையான பெயரை இங்கு போட்டியில் கலந்து கொள்பவர் தான் கண்டுபிடித்தாரா, அது உண்மையிலேயே புதிய பெயர் தானா என்று உறுதி செய்வது இயலாத ஒன்று. இப்போட்டியின் நோக்கம் புதுமையான தமிழ்ப் பெயர்கள் பற்றிய விழிப்புணர்வைக் கூட்டுவதும் அத்தகைய பெயர்களைப் பகிர்ந்து கொள்வதுமே. நன்றி.

      1.  Avatar
        Anonymous

        en maganukku oru nalla thamil peyar vaikka aasai padukiren…
        3 masam kalithum oru nalla peyar kedaikala..

        Thamil iniyan enakku romba pudichirukku..

        Aanal yarukkum viruppam illai.

        Tamil, thigal illatha oru nall peyar vendum.. Tha, the, thu (ellam kuril)..

        Nandi.. 🙂

  30. Aadhan subramanian

    En magan peyar

  31. குமணன் , சகரன் , சகாரன் ,நிருதி ,சிபி,அதியன்,சித்திரன்,மகிழன்,மகிழ்வேந்தன்,வளன்,கூடலன்,கூடலினி,வானுவன்,நானிலன், நந்நிலா,நேசன்,நல்லான்,நன்னன்,அணியன்,நனியன் ,பாவாணன்,வானன்,தென்றன்,சேந்தன்,வண்ணன்.

  32. முகநூலிலும் இட்டுள்ளேன்.

    நே என்றால் அன்பு. நேயம் என்றால் அன்புடைமை. மாந்த நேயம் என்றால் மாந்தரிடம் அன்புகொண்டிருத்தல். நேயர் என்றால் அன்புடையவர், விரும்புபவர். எனவே நே என்னும் எளிய ஓரெழுத்து ஒருமொழி என்னும் சொல்லைக் கொண்டு சில குழந்தைகள் பெயர்களைப் பரிதுரைத்திருக்கின்றேன். இன்னும் பல சொற்கள் ஆக்கலாம். இப்போதைக்கு இவை.

    1) நே ( = அன்பு)
    2) நேயன், நேயள்
    3) நேயாழி (ஆழி = பெருங்கடல்)
    4) நேவாழி (நே = அன்பு; வாழி = வாழ்பவர்)
    5) நேயகன் நேயகி (அன்பு அகத்தே கொன்டவர்)
    6) நேயினியன் நேயினி
    7) நேயுள்
    8) நேயெழில், நேயெழிலி
    9) நேயேந்தி (அன்பு ஏந்தி)
    10) நேயை (அன்புடையவர்)
    11) நேயொளி, நேயொள்ளி
    12) நேயோசன் (ஓசன் = ஆசிரியன், சிந்தனையாளன்)
    13) நேயழகன், நேயழகி
    14) நேயரசன், நேயரசி
    15) நேவாள் (வாள் = ஒளி, ஒளிபொருந்தியவர்)
    16) நேவள்ளி
    17) நேயளி (அளி = அன்பு)
    18) நேமலர்
    19) நேயலர் (அலர், பூவின் ஒரு படிநிலை)
    20) நேமகிழ்
    21) நேயறன் (அறன்)
    22) நேயாயன் (ஆய்தல் = நுணுகி அறிதல்)
    23) நேயாரி (ஆரி = அழகு, மேன்மை, சோழன்)
    24) நேயாரன் (ஆர் = நிறைந்திருத்தல்)
    25) நேயிசை (அன்பு இசை)
    26) நேயின்பு, நேயின்பன், நேயின்பி (இன்பு = இன்பம்)
    27) நேயிழை (பெண்பாற் பெயர்)
    28) நேயிறை, நேயிறைவி (அன்புக் கடவுள்)
    29) நேயீரி, நேயீரன் (ஈரி = அருள் உள்ளம், மனக் கனிவு
    கொண்டவன்/கொண்டவள்)
    30) நேயுயிர்
    31) நேயுரு (அன்பே வடிவானவன்/ள்)
    32) நேயுளன், நேயுளி
    33) நேயேரன் (ஏர் = அழகு)
    34) நேயேறன் (ஏறன் = சிவன்; ஏறு = மிகுதி, உயரம்)
    35) நேயொப்பன், நேயொப்பி (அன்புக்கு நேர் ஈடானவர்)
    36) நேயோர்மன் (ஓர்மன் = மனத்திண்மை உடையவன்)
    37) நேரோர்பன் (ஓர்பு = ஆராய்ந்துணரும் திறன்)
    38) நேகடல்
    39) நேகண் (அன்புக்கண்)
    40) நேவிழி
    41) நேகலி, நேகலியன் (கலி = அன்பு, மனவெழுச்சி, மகிழ்ச்சி)
    42) நேகலை
    43) நேமிளிர் (மிளிர் = ஒளி, பெருமை)
    44) நேமிசை (மிசை = உஅர்ச்சி, மேன்மை, முன்னிடம்)
    45) நேவான் (வான் = வானம்)
    46) நேமலிர் (மலிர் = நீரூற்று)
    47) நேமலி (அன்பு மிக்கவன்/ள்)
    48) நேமிகன் (மிகன் = பெருமை மிக்கவன், மேலானவன்)
    49) நேமின் (மின் = ஒளி, பெண், மகள்)
    50) நேமுகிழ்
    51) நேயாழ் (அன்பு யாழ்)
    52) நேவயன் (வயன் = திறமையானவன்; வயவாள் = வெற்றிவாள்)
    53) நேநுதல் (அன்பு மொழியாளர், அன்பு உள்ளத்தினர்; நுதல் = நெற்றி,
    சொல்லுதல்)
    54) நேநுவல் (அன்பு மொழியாளர்; நுவல்தல் = சொல்லுதல்)

    செல்வா
    மே 29, 2013 (தி.ஆண்டு 2044)

    1.  Avatar
      Anonymous

      ரு , ரே, ரோ , த உள்ளிட்ட எழுத்துக்களில் ஏதேனும் பெண் குழந்தைக்கான பெயர்கள் ??

  33. ரவி,

    ”நட்சத்திரா” என்பது தமிழ்ப் பெயரா?

  34. சே என்ற எழுத்தில் தமிழ் பெயர்கள் தேவை

  35. R.Subramanian Avatar
    R.Subramanian

    <>

    Great Site, whatever you have mentioned was exactly my thoughts…….. the false notion that stylish, fancy, lovely names are only found in Hindi / Sanskrit….. with due respect to Sanskrit a language I respect very much, I strongly believe Tamil has a larger pool of good names that can cater to any requirement. Vivasayi la MGR paadura maathiri

    “enna valam illai intha thamizh mozhiyil
    en kaiyai entha vendum ayal mozhiyil”

    While looking to name our God-gifted girl baby who is just a month old, from the help of some kind souls at http://www.mayyam.com/talk/showthread.php?10422-தேவை-ஒரு-இனிய-தமிழ்-பெயர்/page3 ,came up with these nice sounding names

    1. அருணிதா which is constructed from Arul + Nee + thaa
    2. தூவிதா or தூவிகா – Constructed from தூவி which would mean wings + thaa
    3. நிரல்யா – which would mean perfect or orderly
    4. விகிர்தா – Lord Shiva’s name or in general addressing a GOD (found in some saiva literature)

    In general my thought was if you add a suffix like -tha -ya – ka -cha to a tamil word, or modify a word innovately like instead of Pudhumai sounds old but Pudhuma sounds fresh (in my opinion) without damaging the actual word or spoil the original meaning then that name would be a much fancier name. Please correct me if I am wrong

  36. reader Avatar
    reader

    சங்க இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்ட பெயர்கள்

    http://puretamilbabynames.wordpress.com/

  37. pushpalatha Avatar
    pushpalatha

    en magan peyar tamizh poompozhil

  38. லி லோ லே லஎன்ற எழுத்தில் தமிழ் பெயர்கள் தேவை

    1.  Avatar
      Anonymous

      லே ஏலுத்திபெயர்தேவைஉதஉங்கள்

  39. நவிலன் என்ற பெயரின் அர்த்தம் என்ன?

    என் மகனுக்கு பெயரிட ஆவலாக இருக்கிறேன், தயவு செய்து பகிரவும்…

    அதே போல் நிமலன் மற்றும் நிகேதன் தமிழ் பெயர்களா? இதனுடைய அர்த்தம் தெரிந்தாலும் பகிரவும்…

    -செந்தில்

  40. சமரன் Avatar
    சமரன்

    என் மகளுக்கும் பெயர் தேடி இங்கு வந்திருக்கிறேன் .உதவுங்கள் தோழர்களே

  41. பிரகாசன் Avatar
    பிரகாசன்

    என் தந்தையின் நண்பர், தனது பேத்திக்கு அழகிய பெயர் வைத்திருக்கிறார். மிகவும் புதிய பெயராக எனக்குப்பட்டது.

    செம்புலரி

  42. shanmugam s Avatar
    shanmugam s

    migavum arumaiyana pani thodarungal

    1. ரசித்தா பெயர் வைக்கலாமா?பொன்

  43. Ethazh narumugai

  44. இதழ்

  45. மிகவும் அருமையான வளை பதிவு.நான் எனது மகனுக்கு அதியன், ஆதிலன், அகநிலவன், இலமுகிலன், அகமுகிலன் போன்ற பெயர்களை பரிசீலித்து வருகிறேன். இவை அனைத்தும் தமிழ் பெயர்கள் என்றே நம்புகிறேன். தங்கள் கருத்து ?

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      ஆதிலன் தமிழா தெரியவில்லை. இளமுகிலன் என்று எழுதுவது சரியாக இருக்கும். இலமுகிலன் என்பது பிழை.

  46. யநேக – என்பதன் பொருள்? இது தமிழ் பெயர?

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      யநேக – தமிழ் பெயராக இருக்க வாய்ப்பில்லை. பொருள் தெரியவில்லை.

      1. மேகா பெயர் பெண் குழந்தைக்கு அழகாக உள்ளது. ஆண் குழந்தைக்கு மேகன் என பெயர் வைக்கலாமா? தமிழ் அர்த்தம் ?

  47. என் மூத்த மகளுக்கு கௌசிகா என்ற வைத்துள்ளேன் .. கௌசிகம் – ஒரு பண் பெயர், ஆந்தைக்கு தமிழில் கொசிகம் என்ற பெயரும் உண்டு , விருதுநகரில் ஓடிய ஆறு கௌசிகாறு

    இப்பொழுது இரண்டாவது பெண்ணுக்கு பெயர் பரிசீலனையில் உள்ளேன்:

    இணைய தளத்தில் தேடிய பொது கிடைத்த சில புறநாநூறு தமிழ் சொற்கள் – அர்த்தங்கள் – பெயர் வைக்க யோசித்துள்ளேன் :

    நேமி – கடல் , ஆட்சி சக்கரம் .
    கனலி – கதிரவன்
    மிகல் – வெற்றி -> மிகல்யா / மிகன்யா

    என்னை கவர்ந்த ஆண் குழந்தை பெயர் :

    குருசில் = குரிசில் = அரசன்
    கிள்ளி
    இளஞ்சேரல்
    நேமிநாதன்
    சென்னி

    1.  Avatar
      Anonymous

      தகை = பெருமை, மேம்பாடு
      குருசில் = குரிசில் = அரசன்
      நளி = செறிதல்
      நளி = செறிதல்
      மிகல் = வெற்றி
      நேமி = கடல்
      பௌவம் = கடல்
      சாலல் = மிகுதியாதல், மேன்மையுடைத்தாதல்
      திறல் = வெற்றி, வலிமை
      வயம் = வலிமை
      கனலி = கதிரவன்
      விழுமியோர் = சிறந்தோர்.
      வியன் = பரந்த
      ஐ = அழகு
      நவியம் = கோடரி
      வயின் = இடம்
      கா = பூந்தோட்டம்
      நனி = மிகவும்
      அலரி = மலர் (பூவிற்குப் பொதுப் பெயர்);
      விழு = சிறந்த
      மரை = தாமரை
      எயில் = அரண்
      கயம் = வற்றாத குளம்
      கவின் = அழகிய
      நேமி = ஆட்சிச் சக்கரம்

  48. tamilan Avatar
    tamilan

    அனலிக்கா – அனலி என்றால் கதிரவன். கா என்றால் சோலை. (சூரியனிடத்திலிருந்துத் தோன்றிய சோலைவனத்தைப் போன்றவள் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்) பெண் குழந்தைகளுக்கு பொருந்தக் கூடிய பெயர்.

    மேகா / பொருள் : மே+ கா = மேகா… (மே-அழகிய , கா- சோலை) அழகிய சோலையைப் போன்றவள் (பெண் குழந்தைகளுக்கு)…

    மிகன் / பொருள் : பெருமை மிக்கவன் (ஆண் குழந்தைகளுக்கு)

    விண்கா / பொருள் : விண்ணில் தோன்றியச் சோலையைப் போன்றவள் (பெண் குழந்தைகளுக்கு

    அவிரோள் / பொருள் : பேரோளியானவள் (அவிர் + ஓள்) (அவிர் என்றால் ஒளி, ஓள் என்றால் பெண் பாலைக் குறிக்கும் (பெண் குழந்தைகளுக்கு).

    கயலோன் / பொருள் : கயல் என்றால் கடல்; ஓன் ஆண் பாலை குறிக்கும்/ கயல்+ஓன் = கயலோன்

    1. I’m happy to see “மேகா” with beautiful meaning described, just wanted to know the source of explanation of meaning as it is not published in peyar.in too.

      After a huge discussion, made my family to agree for a Tamil Name and ended with this name. Can you guys help me even though post is very old.

      Sorry for typing in English… 🙁

      1. Thanks, I did my analysis with old references that I’d taken some years back and found meaning of the name “மேகா” which is slightly coping with what is mentioned by “Tamilan”.

        மே – மேன்மை, மேல்
        கா – சோலை, காத்தல்

        You can refer my blog that I posted this morning after qhick analysis.
        Link: http://logeshscribbles.blogspot.in/2016/02/tamil-characters-and-its-characteristics.html

  49. tamilan Avatar
    tamilan

    அவிரோன் :- (அவிர் + ஓன்) பேரோளி பொருந்தியவன்..
    அவிரோள்:- (அவிர் + ஓள்) பேரோளி பொருந்தியவள்…
    ஆழினி : ஆழி என்றால் கடல்; இனிய கடல் பரப்பின் தலைவி (பெண் குழந்தைகளுக்கு
    இதழினி :- பூவின் இதழைப் போன்று இனிமையானவள் ( பெண் குழந்தைகளுக்கு)
    கயலோன் :- கடற்பரப்பின் தலைவன் ; மீன் கொடி பொறித்தவன் (பாண்டியன்) (ஆண் குழந்தைகளுக்கு)
    கனிலா :- கனி + நிலா = கனிலா ,கணியில் ஆனா நிலவுப் போன்றவள் (பெண் குழந்தைகளுக்கு)
    எழினி :- அழகானவர் (ஆண் / பெண் குழந்தைகளுக்கு)
    எயில் :- மழையை சுமந்து வரும் மேகத்தைப் போன்றவள் (பெண் குழந்தைகளுக்கு)
    யாழீ :- யாழை ஏந்திருப்பவள் (பெண் குழைந்தைகளுக்கு)

  50. Selvakumar Avatar
    Selvakumar

    நகுல‌ன்

  51. Jagadish Avatar
    Jagadish

    முதலில் இந்த இணைய தளத்தை வழி நடத்தி செல்லும் நண்பருக்கு என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்கள்,

    என் மகனுக்கு தமிழில் பெயர் சூட்ட சில பெயர்களின் அர்த்தம் தேவை…உதவிக்கு நன்றி

    நவிலன்
    ஆரன்
    நளன்
    அதியன்

  52. இறுதியில் பரிசு பெற்ற பெயர்(கள்) எது ?

  53. ‘கவின் மதி’ என்று வைக்கலாமா?

  54. Rajasekar Avatar
    Rajasekar

    இனியரிதன் என்று பெயர் வைக்கலாமா?
    (ஐயனா ரிதன்) ஐயனாரிதனார் சைவ சமயத்தைச் சார்ந்தவர் ஆவார். புறப்பொருள் வெண்பாமாலைக்கு இவர் எழுதியுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இரண்டு……http://www.tamilvu.org/courses/degree/d021/d0213/html/d0213113.htm

  55. பூபதி Avatar
    பூபதி

    என் மகளுக்கு எழில் வெண்பா அல்லது முகில் வெண்பா என்று பெயர் வைக்கலாம் என்று உள்ளேன் .

    இப்ப பெயர்களை பற்றி கருத்தை தெரிவிக்கவும் !

  56. சுந்தர் Avatar
    சுந்தர்

    எனது மகளுக்கு பெயர் வைக்க வேண்டும்

    புதிய பெயராக இருக்க வேண்டும்.

    இராகவி தமிழ் பெயரா?

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      இராகவி தமிழ் பெயர் இல்லை.

  57. murugan Avatar
    murugan

    சி என்ற எழுத்தில் பெயர் வேண்டும் உதவுங்கள்

  58. சுரேஷ்கணேசன் Avatar
    சுரேஷ்கணேசன்

    இந்த இணைய தளத்தை வழி நடத்தி செல்லும் தோழருக்கு என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்கள்,

    ” கி, கு, கெ, கொ வரிசையில் ” ஆண் குழந்தைக்கு அழகிய தமிழில் பெயர் வைக்க வேண்டும் அப் பெயர் புதுமையானதாகவும் இருக்க வேண்டும்.

    பெயரை தங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்.

    நன்றி..

  59.  Avatar
    Anonymous

    எனக்கு ‘மோ’ வில் பெயர் வேண்டும். உதவுங்கள்

  60. Sankar Avatar
    Sankar

    அன்பிற்குரிய நண்பர்களே ,என் மகனுக்கு ” ந அல்லது ப “வரிசையில் பெயர்களை கூறுங்கள் இது நட்சத்திரப்படி
    அல்லது
    சோழர்களின் பெயரை வைப்பதில் எனக்கு மிகவும் விருப்பம்
    அல்லது
    குலதெய்வத்தின் பெயரில் ஆரம்பிப்பது போலவும் இருக்கலாம்
    நான் ஒரு பெயரை தேர்ந்தெடுத்துள்ளேன் “வீர சேம்பிய சோழ வேந்தன் ”
    உங்களது அபிமானத்தை கூறுங்கள் ….

  61.  Avatar
    Anonymous

    Please name meaning parppathu eppad

  62. ரகுபதி Avatar
    ரகுபதி

    எங்கள் வீட்டுச் செல்லக் குட்டிக்கு “தீந்தமிழன்” எனப் பெயர் வைக்க முடிவு செய்துள்ளேன்..இப் பெயரைப்பற்றிய தங்களது கருத்துக்களை கூறுங்கள் நண்பர்களே..

  63. தமிழ்மதி Avatar
    தமிழ்மதி

    மேக்னா தமிழ்பெயரா

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      மேக்னா தமிழ்ப் பெயர் இல்லை.

  64. தமிழ்மதி Avatar
    தமிழ்மதி

    பகத் தமிழ் பெயரா? வடமொழி பெயரா?

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      பகத் என்பது தமிழ்ப் பெயர் இல்லை. பகத் சிங்கு நினைவாக பெயர் வைப்பது என்றால் வைக்கலாம்.

  65. கணேஷ் Avatar
    கணேஷ்

    நதியா என்ற பெயரின் அர்த்தம் மற்றும் விளக்கம் .
    ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

  66. நயன் Avatar
    நயன்

    http://www.peyar.in/ தளத்தில், எழுத்துக்களின் எண்ணிக்கையை கொண்டும் பெயர்களை தேடக்கூடியதாக அமைக்க முடியுமா? பெயர்களை தேட இலகுவாக இருக்கும். நன்றி

  67. Harikrishnan Avatar
    Harikrishnan

    என் பெண் குழந்தைக்கு பு என்ற எழுத்தில் துவங்கும் பெயர்களை கூறவும்

  68. குறலினியன், குறலினியா, குறட்சேரன் , குறட்சேரா பெயர்களின் பொருள் விளக்கி உதவுங்கள் நண்பர்களே.

  69. குமார்ராஜ் Avatar
    குமார்ராஜ்

    என் மகளுக்கு தமிழில் பெயர் சூட்ட சில பெயர்களின் + அர்த்தம் தேவை. எழுது: ச,து
    உதவிக்கு நன்றி தோழர்களே

  70. pakkiya Raj Avatar
    pakkiya Raj

    எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.. இரட்டை குழந்தைகளுக்கான பொருள் புதிந்த இலக்கிய பெயர்கள் தேவை… உதவுங்கள் நண்பர்களே…

  71.  Avatar
    Anonymous

    முதலில் இந்த இணைய தளத்தை வழி நடத்தி செல்லும் நண்பருக்கு என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்கள்,

    அதியன் என்ற பெயரின் அர்த்தம் என்ன?

    என் மகனுக்கு பெயரிட ஆவலாக இருக்கிறேன், தயவு செய்து பகிரவும்…

  72. Manimekalai Avatar
    Manimekalai

    முதலில் இந்த இணைய தளத்தை வழி நடத்தி செல்லும் நண்பருக்கு என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்கள்,

    அதியன் என்ற பெயரின் அர்த்தம் என்ன?

    என் மகனுக்கு பெயரிட ஆவலாக இருக்கிறேன், தயவு செய்து பகிரவும்…

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      அதியன் என்றால் மேலானவன், உயர்ந்தவன் என்று பொருள். தேவாரத்தில் இச்சொல் இடம் பெற்றுள்ளது. பார்க்க – https://ta.wiktionary.org/s/49dx

  73. A.Pavalakurinji Avatar
    A.Pavalakurinji

    மகிழினி

  74. அன்பழகன் Avatar
    அன்பழகன்

    என் மகனுக்கு பெயர் தேடி இங்கு வந்திருக்கிறேன் .உதவுங்கள் தோழர்களே….. என் முதல் மகனின் பெயர் செவ்வியன். கீழ்கண்ட பெயர்கள் பரிசீலனையில் உள்ளது, சுத்தமான தமிழ் பெயர்கள் தேவை…..

    செம்பரிதி
    இளம்பரிதி
    பரிதிக்குமரன்
    செம்பியன்

  75. ஹரி Avatar
    ஹரி

    இலக்கியா தமிழ் பெயர் தானே ?

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      ஆம். இலக்கியா என்பது தமிழ்ப் பெயர் தான்.

  76. ராஜேந்திர பிரபாகர் Avatar
    ராஜேந்திர பிரபாகர்

    பிரபாகரன் எனது பெயர் இதற்கு அர்த்தம் தெரியுமா?

  77. senthil kumar Avatar
    senthil kumar

    என் மகனுக்கு இனியவன் பெயர் சுட்டாலும் என்று நினைக்கிறோன்.இனியவன் என்றால் அர்த்தம் என்ன.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      இனியவன் என்றால் இனிமை நிறைந்தவன், பழகுவதற்கு இனியவன் என்று பொருள் வரும்.

  78. வீரமணிகண்டன் Avatar
    வீரமணிகண்டன்

    என் தொழில் நிறுவனத்திற்கு பெயர் வைக்க வேண்டும்.
    plastic பொருள் தயாரிப்புக்காக…பெயர் பரிந்துரைக்கவும்….

  79. சுதாகரன் Avatar
    சுதாகரன்

    த, து, ச வரிகளில் ஆண் பிள்ளைக்குரிய பெயர் 1 அல்லது 6 ம் நம்பரில் வேண்டும் தெரிந்தவர்கள் தரவும்

  80. வணக்கம். என் மகனுக்கு தமிழ் பெயர் வைக்க விரும்புகிறன். சா, க, கு எழுத்துக்கள் வருமாறு பெயர்கள் தரவும். நன்றி

  81. valparaivasanth Avatar
    valparaivasanth

    விதுல்

  82. அதிஷா அர்த்தம் சொல்ல முடியுமா

  83. என் மகள்லுக்கு ப பி பு பூ ப் வறுசையிலா நல்ல தமிழ் பெயர் சொல்லுங்க

  84.  Avatar
    Anonymous

    வணக்கம் நண்பர்களே எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளான் ஜாதக முறைப்படி க கீ கு கே என வைக்க சொன்னார்கள் ஆனால் எனக்கு உடன்பாடு இல்லை ஆதலால் என் மகனுக்கு திருவள்ளுவன் என பெயர் சூட்ட உள்ளேன் உங்களின் கருத்தை கூறவும் தோழர்களே நன்றி.

  85. KALIMUTHU S Avatar
    KALIMUTHU S

    என் மகனுக்கு நிமலன் என்று பெயர் வைத்துள்ளேன், அதன் பொருள் கூறுக…

  86. laksith chaves Avatar
    laksith chaves

    லக்சித் என்பது தமிழ் பெயரா? அதன் பொருள் யாது?

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      லக்சித் என்பது தமிழ்ப் பெயர் இல்லை.

  87. எங்கலுக்கு ப பி எழுத்தில் பெண்குழந்தை பெயர்கள்குறுங்கள்

  88. கண்ணன் Avatar
    கண்ணன்

    தமிழினியன், தமிழமுதன் ,

  89. yuvaraj Avatar
    yuvaraj

    யே.யோ.ப.பி.பு.யூ என்ற எழுத்தில் ஆண் குழந்தையின் தமிழ் பெயர்கள் தேவை

  90.  Avatar
    Anonymous

    என் மகளுக்கு
    க, கா, கி, கே, கோ வரிசையில் செந்தமிழ் பெயர்கள்

  91. anandh Avatar
    anandh

    pls. suggest unique tamil name for my son

  92. செந்தில் குமார் Avatar
    செந்தில் குமார்

    ம மி மு மே மோ இதுதில் 5ந்தில் இருக்கவும் ஆன் குழந்தை பெயர் வேண்டும்

  93. பாவேந்தன் Avatar
    பாவேந்தன்

    ச எழுத்தில் தொடங்கும் தமிழ் பெண் பெயர் தேவை …

  94. குமாரகிருஷ்ணன் Avatar
    குமாரகிருஷ்ணன்

    என் மகளுக்கு புதுமையான தூய தமிழ் பெயர் அ, க, கு, கே, கோ என்ற எழுத்தில் அரம்பிக்கும் பெயர்கள் தேடி இத்தளத்திற்கு வந்திருக்கிறேன் உதவுங்கள் நண்பர்களே..
    நான் தேர்வு செய்த பெயர்கள்
    1. குறள் வெண்பா
    2. கவின்மலர்
    இந்த இரண்டும் மனநிறைவு அளிக்கவில்லை. இதைவிட நல்ல தமிழ் பெயர்கள் தேடுகிறேன்

  95. ர,ரி, பே, போ- ஆகிய எழுத்துக்களை கொண்ட ஆண் தமிழ் பெயர்கள் பகிரவும்

  96. குமாரகிருஷ்ணன் Avatar
    குமாரகிருஷ்ணன்

    கனித்ரா என்பது தமிழ் பெயரா? அதன் பொருள் என்ன

  97. thukil inbha

  98. suresh Avatar
    suresh

    வ வி நல்ல அர்த்தமுள்ள பெயர்கள் ஆண்

  99. பிரதீபன் Avatar
    பிரதீபன்

    முதல்வன், தூயவன், ஓங்காரன், பிரணவன், சாத்விகன், சாகித்யன் , விப்ரதன்.
    மன்னிக்கவும் இவற்றில் அத்தனையும் தமிழ் பெயர் தானா என்று தெரியாது. இவை என் குடும்பத்தில் உள்ள மற்றும் என் நண்பர்களின் பெயர்கள்.

  100. Alagan mugesh Avatar
    Alagan mugesh

    ல லா லி லீ லு லூ என்ற பெண் குழந்தை பெயர் வேண்டும் தமிழ் பெயர்

  101. kalviselvan Avatar
    kalviselvan

    வென்பா இதற்கு அடுத்து ச எழுத்தில் பெயர் வேண்டும் உதவி செய்யுங்கள்

  102. தீபா Avatar
    தீபா

    நல்ல முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என் மகனுக்கு “க”(அ) “சா” வரிசையில் தொடங்கும் புதுமையான தமிழ் பெயர்களை பரிந்துரைக்குமாறு வேண்டுகிறேன்

  103. மிகவும் அருமை

  104. Sangeetha Avatar
    Sangeetha

    ம, மி, மு, மெ ஆரம்பிக்கும் அழகிய பெண் பெயர்கள் செல்லவும்

  105. Dhravidan Avatar
    Dhravidan

    அய்யா,

    தாங்களின் தமிழ் பற்றினை கண்டால் எனக்கு மெய் சிலிர்க்கிறது.

    எனது மகனுக்கு பெயர் தேடி தங்கள் வசம் வந்துள்ளேன் . நேரம் இருந்தால் உதவுங்கள்

    -திராவிடன்-

  106. அருண் சான்றோன் Avatar
    அருண் சான்றோன்

    நான் சில பெயர்களைப் பரிந்துரைக்கிறேன்

    சான்றோன்(றாள்)
    கார்குழலி
    பைந்தமிழ் நாடன்(டி)

  107. அருண் சான்றோன் Avatar
    அருண் சான்றோன்

    குழவன்(வி)
    வளநாடன்
    நெஞ்சிற்கினியான் (ள்)
    இன்சொல் மொழியன்

  108. அருண் சான்றோன் Avatar
    அருண் சான்றோன்

    மிளிர் கண்ணன்
    பொழில்க் குமரன்
    கூவிடைச் செம்பன்
    கண்கவர்க் கதம்பன்
    என்புனல் அமுதன்
    ஆருயிர்க் கள்வன்
    வாகை கொண்ட வர்மன்
    பூஞ்சோலை

  109. சுதாகர் Avatar
    சுதாகர்

    எனது மகனுக்கு ‘தவன்’ என்று பெயர் வைத்துள்ளேன்.. ஒரு தமிழ் வலை தளத்தில் அதன் பொருள் தலைவன் என்று இருந்ததைப் பார்த்து.. யாரேனும் இதனை உறுதி செய்ய இயலுமா?

  110. தமிழ் மதி Avatar
    தமிழ் மதி

    அதீதன் தமிழ் பெயரில்லையா திருமூலர் பாடலில் வருகிறது

  111. தனஞ்செழியன் Avatar
    தனஞ்செழியன்

    பரிதி என்ற பெயருக்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா

  112. Muthu subha Avatar
    Muthu subha

    எனக்கு 17/6/16 ல் பெண் குழந்தை பிறந்துள்ளது அவளுக்கு தி,தீ பெயர் வைக்க வேண்டும் அதனால் நாங்கள் தியா என்ற பெயர் வைக்கவுள்ளோம். தியா என்ற பெயர் தமிழ் பெயரா?? என. சொல்லவும்

  113. தினேஷ் பாபு Avatar
    தினேஷ் பாபு

    வணக்கம். “கயல் மகிழி” என்று எனது மகளுக்கு பெயர் சூட்ட ஆசை. அதற்கு சரியான அர்த்தம் கூறவும். நன்றி.

  114. கவின் தமிழ் பெயரா….தமிழ் பெயர் என்றால் கவின் என்று பெயருடன் சேர்த்து வ௫ம் தமிழ் பெயர்களை கூறவும்

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      கவின் தமிழ்ப் பெயர் தான்.