Posts tagged as:

வலைப்பதிவுத் திரட்டிகள்

தமிழ்த் திரட்டித் தளங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதில் கூகுள் ரீடரையும் நாமே உருவாக்கும் opml கோப்புகளையும் அறிமுகப்படுத்தினாலே நாளடைவில் திரட்டிகள் உதவியின்றி பதிவர்களால் இயங்க முடியும்.

{ 3 comments }

இது மாதிரி நேரங்களில் தான் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளின் தேவை புலப்படுகிறது. தமிழ்ப் பதிவுகளைப் படிக்காவிட்டால் கையும் காலும் ஓடாதவர்கள், நிலைமை சீராகும் வரை (அதுக்கு அப்புறமும் தான் :) ) தமிழ்ப் பதிவுகள், மாற்று! தளங்களை அணுகலாம். அல்லது, Bloglines, Google Reader, NetVibes மூலம் நீங்களே உங்கள் திரட்டியை உருவாக்கிக் கொள்வது நலம்.

{ 10 comments }

மாற்று! தளத்தைப் பார்வையிட்ட நண்பர்கள் பலரும் கேட்ட கேள்வி, இத்தளம் எப்படி ஒரு மாற்றாக விளங்கும் என்பது தான். திரட்டிகள் என்ற அளவில் தமிழ்மணம், தேன்கூடு, TamilBlogs தளங்கள் இருப்பதும் பரிந்துரைத் தளங்களாக கில்லி, DesiPundit போன்ற தளங்கள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேம்போக்காகப் பார்க்கையில், மாற்று! இன்னுமொரு தமிழ்த் தளமாகத் தெரியலாம் என்றாலும், இதன் தோற்றம், செயல்பாடு, நிர்வாகம், ஒருங்கிணைப்பு, தள வடிவமைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் உண்டு.
வாசகருக்கான நன்மைகள்
* முழுக்கத் தமிழ் உள்ளடக்கம் உள்ள இடுகைகள் மட்டுமே [...]

{ 7 comments }

தமிழ் வலைப்பதிவுகளை வாசிக்க தற்போது கூகுள் திரட்டி பயன்படுத்துகிறேன். இதனால் வந்த நன்மைகள்:
1. பிடிக்காத, தலைவலி தரும் வலைப்பதிவுகளை நாம் விரும்பாவிட்டாலும் பார்த்துத் தொலைக்க வேண்டியதில்லை. அவற்றை நீக்கச் சொல்லி யாருக்கும் எழுதிக் காத்துக் கொண்டிருக்கத் தேவை இல்லை.பிடித்த பதிவுகளை மட்டும் தான் சேர்த்துக் கொள்ளப்போகிறோம் என்பதால் பிடிக்காத பதிவுகளை நீக்கும் வேலை இல்லை.
2. எவ்வளவு நாள் ஆனாலும் நம் விருப்ப வலைப்பதிவுகளைத் தவற விடாமல் எளிமையாகப் படிக்கலாம்.
3. பின்னூட்டக் கயமையில் ஏமாந்து மொக்கைப் பதிவுகளைப் படிக்க [...]

{ 2 comments }