Tag: தமிழ்

  • பேச்சுத் தமிழ்

    நேத்து கல்லூரி நண்பன் ஒருத்தன் கிட்ட பேசினேன். என்னோட பதிவுகளைப் படிச்சு பிடிச்சுப் போய், “ரவிசங்கர், இனி நாம் தூய தமிழிலேயே பேசுவோம், சரியா?” அப்படின்னு சொல்லி கொஞ்ச நேரம் “தூய” தமிழில் பேசப் பார்த்தான். அதைத் “தூய” தமிழ்னு சொல்லுறத விட உரைநடைத் தமிழ் / மேடைப் பேச்சுத் தமிழ் / மேடை நாடகத் தமிழ் / பழங்காலத் திரைப்படத் தமிழ் – னு சொல்லலாம். அவன் கிட்ட நான் பகிர்ந்துகிட்ட கருத்துக்களும் அதுக்கு அப்புறம்…

  • பெயர்ச்சொல் தமிழாக்கம்

    நாட்டுப் பெயர்கள் தவிர, ஊர்ப்பெயர்கள், மொழிகளின் பெயர்கள் என்று பல இடுகுறிப் பெயர்களும் கூட உள்ளூர் ஒலிப்பு, பேசப்படும் மொழியின் இலக்கணம் ஆகியவற்றுக்கு ஏற்ப இசைந்தும் திரிந்தும் ஒலிப்பது இயல்பே. இதில் நகைக்கவும் கண்டிக்கவும் ஒன்றும் இல்லை. முன்னை விட உலகின் பல பகுதிகளிலும் தமிழர்கள் பரவி வாழும் இந்த வேளையில் அந்தந்த உள்ளூர் வழக்கங்களை நேரடியாகத் தமிழுக்குக் கொணர்வதே தமிழை வளப்படுத்தவும் அவ்வூர் வழக்கங்களைச் சிறப்பிக்கவும் உதவும். நேரடியாக அந்தந்த மொழியினருடன் தொடர்பு கொள்ள இயலும்…

  • தமிழ்க் கொலை

    இணையம் தமிழை வளர்க்கிறது என்ற மகிழ்ச்சி ஒரு புறம். ஆனால், அதே வேளை தமிழில் எழுதுவது குறித்த குறைந்தபட்ச அறிவு, பயிற்சி, பொறுப்பு இல்லாதவர்கள் தமிழைக் கழுத்தை அறுக்காத குறையாக குதறிக் கொலை செய்யும் கொடுமை இன்னொரு புறம். இப்படி இணையத்தில் அடிக்கடி காணப்படும் தமிழ்க் கொலைகளை இந்த இடுகையில் ஆவணப்படுத்தி வைக்க விரும்புகிறேன்.

  • தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்துவது எப்படி?

    தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்த தமிழ் வலைப்பதிவுகளில் இருந்தோ அவற்றைத் திரட்டிக் காட்டும் தளங்களில் இருந்தோ தான் தொடங்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே? உண்மையில், தமிழ் இணையத்தில் தமிழ் வலைப்பதிவுகள், அவற்றின் வாசகர்கள் ஒரு சிறு பகுதி தான். வலைப்பதிவுகளைப் பற்றி அறியாமல் இயங்குவோரும், அறிந்தும் ஒன்றாமல் இயங்குவோரும் பலர். எனவே, தமிழ் வலைப்பதிவுகளின் நிலையை எண்ணி, தமிழ் இணையம் குறித்த அறிமுகத்தைத் தள்ளிப் போட வேண்டாம்.

  • உனக்கு English தெரியாதா?

    ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தலாம். ஒரே…

  • தமிழ் செய்திகள்

    தமிழ்நாட்டில் தமிழின் நிலை, தமிழ் வளர்ச்சி குறித்த செய்திகளுக்கான தொடுப்புகளை இங்கு சேகரித்து வைக்க நினைக்கிறேன்.

  • தமிழ்க் கணிமை

    கணினியில் நம் மொழியில் எழுதவும் படிக்கவும் இயல்வது ஒரு அடிப்படை விசயமல்லவா? இதையே இத்தனை பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோமே? இதுவா தமிழ்க்கணிமை என்று சாருவிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், இது விசயத்தில் அவரது பார்வையும் சொற்களும் நம்பிக்கை அளித்தன. அப்படி என்ன சொன்னார்?

  • கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் !

    தட்டச்சு என்பது ஒரு மனப்பழக்கம். இந்த கூகுள் தமிழ் எழுதியில் எழுதிப் பழகி விட்டால், பிற எழுதிகளைப் பயன்படுத்த உங்களுக்கு கை வராது. ஆர்க்குட், ப்ளாகர் தவிர்த்த பிற தளங்களில் தமிழில் எழுதுவது உங்களுக்குச் சிரமமாகும். அதன் விளைவாக, கூகுள் தமிழ் எழுதி பக்கத்தை நாடத் தொடங்குவீர்கள். நேரடியாக எல்லா தளங்களிலும் இலகுவாகத் தமிழில் எழுதுவதை விடுத்து வீணே கூகுள் தமிழில் எழுதியில் இருந்து வெட்டி ஒட்டத் தொடங்குவீர்கள். இதனால், கூடுதல் கூகுள் சார்பு நிலையை அடைவீர்கள்.…

  • ஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது?

    ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் ஏன் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம்…

  • ஏன் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது?

    Video என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சலனப்படம், அசைபடம், நிகழ்படம், காணொளி, விழியம், ஒளியம் என்று எண்ணற்ற சொற்கள் தமிழ் இணையத்தில் புழங்கி வருகின்றன. இப்படிப் பட்ட சொற்களைப் பயன்படுத்தாது ஏன் வீடியோ என்பதையே தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று மயூரன் தமிழ் விக்சனரி குழுமத்தில் கேட்டிருந்தார். ஆங்கிலச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனைக்கு ஆதரவாக இருப்பவை: 1. இவை மக்கள் வாழ்வில் ஏற்கனவே புழங்கும் சொற்கள் என்பதால் மக்களால் எளிதாகப் புரிந்து கொள்ளப்படும்.…