Tag: தமிழ்

  • Mummy

    பக்கத்து வீட்டு அக்கா பையன் Mummyனு கூப்பிடுறத பார்த்து எரிச்சலா இருந்திச்சு. “அக்கா, தமிழ் அது இதும்பீங்க. பேர் எல்லாம் கூட இனியன்னு தமிழ்ல வைச்சீங்க. இப்ப ஏன் Mummyன்னு கூப்பிடப் பழக்கினீங்க?” “இல்லப்பா, சுதீசு சொல்றதைப் பார்த்து இவனும் பழகிட்டான்.” சுதீசு முதல் பையன். தத்துப் பிள்ளை. அக்காவின் நாத்தனாரும் அவர் கணவரும் தற்கொலை செஞ்சுக்கிட்டதால, இவங்க எடுத்து வளர்க்கிறாங்க. “சரி, சுதீசும் அம்மான்னு கூப்பிடுறது?” “அம்மான்னு சொன்னா அவங்க அம்மா நினைவு வந்து அழ…

  • தமிழில் சடங்குகள்

    திருமணம், புதுமனை புகுவிழா போன்ற வீட்டுச் சடங்குகள், கோயில் விழாக்களை முழுக்கத் தமிழ்ப்பண்கள் மட்டும் பாடி நடத்தித் தருவோர் குறித்த தரவுத் தளம் ஒன்றை உருவாக்க விரும்புகிறோம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் பற்றி மறுமொழிகளில் குறிப்பிட்டு உதவுங்கள். கீழ்க்காணும் இருவரை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். சென்னை ந. ஒளியரசு. 16/25, குளக்கரைத் தெரு. சைதாப் பேட்டை செல்பேசி: +9198403 23811 — சிவத்திரு. சத்யவேல் முருகனார் செல்பேசி: +919444042770 தொலைப்பேசி: +914422442915 — திவாகரன், ஒளிதரு கயிலை, வளசரவாக்கம், செல்பேசி: 9840856050 —…

  • தமிழர் பெயர்கள்

    05.12.2008 தினமலர் கோவை பதிப்பில் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற குழந்தைகள் பெயர்கள்: ஹிர்த்திக் ராஜ், பிரசன்னவர்மா, ராகுல், சம்யுக்தா, கிருத்திகாவர்ஷா, நவீன்கோபி, தாரிகா, ஹரிகிருஷ்ணன், யோகேஷ்குமார், கார்த்திகா, விஜயபாரதி, தருண், நவீன், ஹிரன்விகாஷ், சர்வேஸ்,ஸ்ரீஇமி, கார்த்திகா, நித்திலன், ரித்விக், மதன், கவுதம், வினுதர்ஷினி, முகிலா, பரத்ராம், சுமையா, பிரநீஷ், பிரகாஷ், ரஞ்சித், அமிர்வர்சினி, ரணீட்டா, உமயாள்தர்சினி, அகிலேஷ், சுவேதா, வசுந்தரா, சுபஸ்ரீ, கீர்த்தனா, ரித்திக், யோகேஸ்வரி, விகாஸ், கவின், முஹமதுஷைத், தனகவுரி, கார்த்திகாதேவி, பிரணதி, தனுஷா,…

  • ஆனந்த விகடனும் தமிங்கிலமும்

    செப்டம்பர் 17, 2008 இதழில் ஆனந்த விகடன் எழுதிய சரோசா திரைப்பட விமர்சனத்தை NHM Lister கொண்டு ஆய்ந்ததில், தனித்துவமான மொத்த சொற்கள்: 346 தனித்துவமான மொத்த ஆங்கிலச் சொற்கள்: 69 ஆங்கிலக் கலப்பு விழுக்காடு: 19.94% (ஐந்தில் ஒரு சொல்!) கலந்துள்ள சொற்கள்: Underplay, out, acting, action, english, innings, editing, episode, over, factory, group, climx, commitment, colorful, comedy, comedian, good night, cool, chemical, successful, car, cinema,…

  • ஆன்

    counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம். இத்தகையை சொற்களுக்கு -இ விகுதி உதவலாம். சுருக்கமாகவும் மேற்கண்ட குறைகள் இல்லாமலும் இருக்கும். எ.கா: Counter – எண்ணி, Washer – துவைப்பி, கழுவி.

  • கிரந்தம்

    பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.

  • தலை எழுத்து

    ஒவ்வொருவர் அறியாமை, அரசியல், கொள்கைக்கு ஏற்பவும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதிகாரப்பூர்வம் என்று ஒன்று தெளிவாக வரையறுக்கப்படுவதில்லை. அத்தகைய அதிகாரம் ஒன்று இருந்தாலும் நம்முடைய கொள்கைகளைப் புறந்தள்ளி அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

  • tamil X thamil X thamiz X thamizh X tamiz X tamizh

    தமிழ்123.com , தமிழ்abc.com , தமிழ்அனக்கோண்டா.me என்றெல்லாம் தளப் பெயர் வைப்பவர்கள் தமிழை thamiz, thamil, tamizh, thamizh, tamiz என்றெல்லாம் விதம் விதமாக எழுதாமல் tamil என்றே எழுதுவது நலம். * tamil என்று எழுதுவது சுருக்கமாக, நினைவு வைக்க இலகுவாக, குழப்பமின்றி இருக்கிறது. தளங்களுக்குப் பெயரிடுவதில் இது முக்கியம். * தளப் பெயரை எழுத்தில் பார்க்காதவர்கள் தன்னிச்சையாக tamil என்று தொடங்கும் முகவரிக்கே செல்வர். அத்தளம் செயல்பாட்டில் இல்லாவிட்டால் வெற்றுப் பக்கத்தைப் பார்ப்பார்கள். உங்கள்…

  • தனித்தமிழ் விசைப்பலகைகள்

    ஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன்.

  • கூகுள் X கூகுல்

    ஆங்கில L ஐத் தமிழில் எழுதும் போது ல.ள எழுத்துகளில் எதை எங்கு பயன்படுத்துவது என்பதற்கு சு.சீனிவாசன் வழிகாட்டுகிறார். a, e, i, o, u அடுத்து வரும் L க்கு லகரமும் பிற இடங்களில் ளகரமும் பயன்படுத்த வேண்டும். அப்படி என்றால். கூகுள் சரி. கூகுல் தவறு 🙂 பி.கு – சீனிவாசனின் சில பரிந்துரைகளுடன் வேறுபடுகிறேன். எனவே, லகர, ளகரப் பயன்பாடு குறித்த உசாத்துணைக்கு மட்டுமே அவரது கட்டுரையை மேற்கோளாகக் காட்டுகிறேன் என்பதை நினைவில்…