தனித்தமிழ் விசைப்பலகைகள்

ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்ற கிரந்தம் உள்ளிட்ட தமிழ் அல்லாத பிற எழுத்துகள் நீங்கிய எழுத்து முறையைத் தனித்தமிழ் எனலாம்.

ஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன். (இதைச் செய்ய NHM Writer Developer Kit உதவியது. இதன் மூலம் இந்த xml கோப்புகளைத் தொகுப்பது, புதிதாக உருவாக்குவது இலகுவாக இருக்கிறது. விரைவில் இதைப் பொதுப் பயன்பாடுக்கு வெளியிடுவார்கள்)

இவற்றை http://ravidreams.net/files/thani-tamil-keyboards.rar என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.


Comments

13 responses to “தனித்தமிழ் விசைப்பலகைகள்”

  1. //“ஐயா, அம்மா, என் மொழியிலும் அதை எழுத நான் பயன்படுத்தும் மென்பொருளிலும் கிரந்தம் இல்லை” என்று சொல்வது இலகுவான விடையாக இருக்கும்//

    மிகச் சரியாக சொன்னீர்கள்….
    நானும் முயற்சித்து பார்க்க போகிறேன்.

  2. Question not related to the post. Why the feed is not showing the later posts? Still Kuruvi appears as the first post. Intentional?

  3. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நன்றி நிமல்.
    Balaji – நான் ஒன்னும் செய்யல. ஏன் ஓடை இற்றைப்படுத்தப்படலைன்னு புரியல 🙁 igoogle ல் வருது. ஆனா, கூகுள் ரீடர், பிளாக்லைன்சில் வர மாட்டேங்குது

  4. S. Krishnamoorthy Avatar
    S. Krishnamoorthy

    Dear Sir,
    Hatred is a disease. Whether it is directed towards a man, woman, language, culture or God.
    Many wise Tamils are still under the deep obsession of treating Grantha letters as Sanskrit letters.
    Why do you hate Grantha letters? What rig have you go to Gerald Bush as “Cherald puch” in Tamil? In what way, Tamil is going to be affected by inducting or continuing to retain the Grantha letters?
    Sorry, I could not find my NHM Writer in my PC to write this in Tamil.
    Please think dispassionately and shed your hatred. You will shine.
    Regards

  5. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    Krishnamoorthy – உங்கள் கேள்விகள் குறித்து விரைவில் அடுத்து சில இடுகைகள் எழுதுகிறேன். அவற்றைப் படித்த பின்பு, கிரந்தம் தவிர்த்தலுக்கும் வெறுப்புணர்வுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று புரிந்து கொள்ளலாம். நன்றி.

  6. மதிப்புமிகு ரவிசங்கர் அவர்களே,

    கணித்தமிழ் உலகில் அளப்பரிய பணிகளைச் செய்து வருகின்ற தங்களை பெரிது மதிக்கின்றேன். தங்களின் பணிகளைக் கண்டு பல வேளைகளில் வியந்துள்ளேன். மற்ற மொழிகளுக்கு நிகராக கணினி இணைய அரியணையில் தமிழையும் அமரவைக்க பெரும் பாடாற்றி வருகின்ற தங்களையும் தங்களைப் போன்ற கணித்தமிழ் முன்னோடிகளையும் மனதார பாராட்டுகிறேன்.

    தங்களின் மறுமொழி கண்டதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய வலைப்பதிவு தொடர்பில் தாங்கள் காணுகின்ற குறைபாடுகளையும், வலைப்பதிவை மேம்படுத்தும் வழிகளையும் எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன்.

  7. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நற்குணன் – தமிழிணையம் குறித்து ஆர்வம் உள்ள அளவுக்கு ஏதும் சாதித்து இருப்பதாக நினைக்கவில்லை. எனினும், உங்கள் அன்பான சொற்களைக் கண்டதில் மகிழ்ச்சி. நன்றி.

  8. அன்பு இரவிக்கு வாழ்த்துகள்.
    தனித்தமிழ் விசைப்பலகையில் தமிழ் எண்கள் இல்லையே!
    ஏனைய இந்திய மொழிகளெல்லாம் தம் மொழிக்குறிய
    எண்களை பயன்பாட்டில் கொண்டுள்ளப்போது தமிழைச் செவ்வியல்மொழி என மைய அரசு ஏற்றுக்கொண்ட பின் இவ்விசைப் பலகையில் தமிழ் எண்கள் விடுப்பட்டதேனோ?
    அதையும் விசைப் பலகையில் இருக்கச் செய்துவிட்டால் அது நிச்சயம் புழக்கத்திற்கு வந்துவிடும்.இ-கலப்பை இன்னும் பல எழுத்துருக்களில் தமிழ் இலக்கங்கள் இல்லாத்து குறையே.
    இதனைத் திருத்தியமைத்தால் நலம்.
    இவண்
    ஆம்புர் பெ.மணியரசன்
    செருமனி

  9. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    NHM writer, e-kalappai என்று பலரறி மென்பொருட்களிலும் தமிழ் எண்கள் இல்லை என்றே நினைக்கிறேன். இது குறித்து தொடர்புடைய நண்பர்களிடம் எடுத்துச் சொல்கிறேன். இந்தத் தனித்தமிழ் விசைப்பலகையிலும் அதைச் சேர்க்கப் பார்க்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

  10. நண்பர் ரவி,
    கைத்தொபேசிகளில் எழுத உதவும் தமிழ் செயலி எதுவும் இருக்கிறதா?
    விவரம் அறிய ஆவலாக இருக்கிறேன்.

  11. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    முரசு நிறுவனம் வெளியிட்ட செல்லினம் மென்பொருள் மலேசியா, சிங்கையில் பயன்பாட்டில் இருக்கிறது.

    http://murasu.com/mobile/

    வேறு பரவலான மென்பொருள்கள் ஏதும் தெரியவில்லை.

    நோக்கியாவின் ஒரு சில வகை கைப்பேசிகளில் அவர்களே தமிழில் எழுதுவதற்கான தெரிவுகள் தந்துள்ளார்கள்.

  12. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    ஆம்பூர் மணியரசன்,

    NHM writer phonetic, tamil99 முறைகளில் தமிழ் எண்களை எழுத இயலும். 1~ என்று எழுதினால் அதற்கு இணையான தமிழ் எண்ணான க வரும். அதே போல் 2~ 3~ போன்று எழுதிப் பாருங்கள். இந்தத் தனித்தமிழ் விசைப்பலகையிலும் இது செயற்படும்.

  13. Shanmugham Avatar
    Shanmugham

    Vanakkam Ravi..
    Instead of avoiding Krandha letters, Why dont we design new letters ,that could be replaced for the said Krandha ,based on Tamil alphabet?. Wouldn’t it be inconvenient to pronounce foreign names in Tamil if we avoid those letters?. So please try to design new letters or alter some letters that could be used to represent some phonetics that are foreign..