From the category archives:

இணையம்

ஆண்டுக்கு 10 US Dollar செலவில் 1 GB வலையிடம் கிடைக்கிறது. மேல் விவரங்களுக்கு Milk Host வழங்கும் Web hosting பார்க்கவும்.

{ 0 comments }

OpenDNS

July 29, 2009

in இணையம்

என்னுடைய BSNL இணைய இணைப்பின் மூலம் தளங்களைத் திறப்பது மெதுவாக இருந்தது. சில வேளை பெரிய தளங்கள் மட்டும் வரும். பல சின்ன, புதிய தளங்கள் திறக்காமல், “Cannot found” பிழை வரும். இது நச்சுநிரல் வேலையோ என்று எண்ணி விண்டோசைத் தூக்கி விட்டு உபுண்டுவை மட்டும் மீள நிறுவினேன். பிரச்சினை தீரவில்லை. அப்போது தான் நண்பர் logic, “இது இணையச் சேவை வழங்கும் நிறுவனத்தின் தளப் பெயர் வழங்கியில் உள்ள குறைபாடாக இருக்கலாம். OpenDNS முயன்று [...]

{ 2 comments }

பார்க்க: Tamil Baby Names Websites
**
நண்பர் கார்த்திக், தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம் ஒன்று உருவாக்கி உள்ளார். விரைவில் இன்னும் ஆயிரக்கணக்கான பெயர்களைச் சேர்ப்போம். உங்களுக்குத் தெரிந்த பெயர்களை இந்தப் படிவத்தில் தரலாம். நேரடியாகவும் Google Spreadsheetல் பெயர்களை உள்ளிடலாம். 
தற்போதைய தளம் ஒரு முன்னோட்டப் பதிப்பு மட்டுமே. அறியப்பட்ட வழுக்கள்:
* IE 6 உடன் தகராறு.
* Google chromeல் விருப்பப் புள்ளி அடிப்படையிலான வரிசைப்படுத்தல் சரி இல்லை.
* தற்போது தரவுத்தளத்தில் உள்ள தமிழல்லா பெயர்களை நீக்க வேண்டும்.

{ 26 comments }

விக்கிப்பீடியாவில் பங்களிப்பது, பயன்படுத்துவது, தமிழ் இணையம், கணினியில் தமிழ், வலைப்பதிவுகள் குறித்த உதவி வேண்டுமா? (0091) 99431 68304 அழையுங்கள்.

{ 3 comments }

Google Adsense

January 26, 2009

in இணையம்

கூகுள் ஆட்சென்சு மூலம் விளம்பரங்கள் தந்ததில் இது வரை கற்றவை:
* கூகுள் தமிழ் வலைப்பதிவுளுக்கு விளம்பரம் தருவதில்லை. ஒரு ஆங்கில வலைப்பதிவைக் காட்டி ஒப்புதல் வாங்கி, அதே ஆட்சென்சு நிரலைத் தமிழ் வலைப்பதிவிலும் இட்டு விளம்பரங்கள் காட்டலாம்.
* வலைப்பதிவு முழுக்க தமிழ்ச் சொற்களே இருந்தால் பொருத்தமான விளம்பரங்கள் வருவதில்லை. இடுகையின் பெயர், முகவரி, குறிச்சொற்கள், உள்ளடக்கத்தில் பொருத்தமான ஆங்கிலச் சொற்களைத் தந்தால் விளம்பரங்களின் தரம் கூடுகிறது.
* தளப் பெயர் ரொம்ப முக்கியம். என் தளப் பெயரில் dreams [...]

{ 14 comments }

சனவரி 18, 2009 அன்று சென்னையில் கிருபாவின் அலுவலகத்தில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி வகுப்பு நடந்தது.
நிகழ்ச்சி பற்றி விக்கி பயனர்களின் கருத்துகள்
மா. சிவக்குமாரின் கருத்து
* வடபழனி பகுதி உள்ளூர் அச்சு இதழில் வெளிவந்த செய்தியைப் பார்த்தே பலர் வந்திருந்தார்கள். அடுத்தடுத்த வலைப்பதிவு, விக்கி, இணையப் பட்டறைகளுக்கும் அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலம் கூடுதலாக விளம்பரப்படுத்த வேண்டும்.
* கிருபா, விடுமுறை நாளில் மூடிக் கிடக்கும் தன்னுடைய அலுவலக இடம், கணினிகளையே இதற்குப் பயன்படுத்தினார். இது போல் தமிழ், [...]

{ 0 comments }

1. தமிழில் கூகுள் செய்திகள் – தினத்தந்தி, மாலைமலர் போன்ற ஒருங்குறியில் இல்லாத தமிழ்த் தளங்களில் இருந்தும் செய்திகளைத் திரட்டித் தானியக்கமாகத் தொகுத்துத் தருகிறது. சில புதிய தமிழ்ச் செய்தித் தளங்களும் தென்படுகின்றன.
2. RSS Meme – வலையில் யார் எதை விரும்பிப் படித்துப் பகிர்கிறார்கள் என்று அறியலாம். இத்தளத்தின் This Week பகுதியில் உண்மையிலேயே நல்ல தொடுப்புகளைக் கண்டு கொள்ளலாம்.
3. Down For Everyone or Just me – ஏதாவது தளம் படுத்துவிட்டால் உங்களுக்கு [...]

{ 9 comments }

தமிழ்123.com , தமிழ்abc.com , தமிழ்அனக்கோண்டா.me என்றெல்லாம் தளப் பெயர் வைப்பவர்கள் தமிழை thamiz, thamil, tamizh, thamizh, tamiz என்றெல்லாம் விதம் விதமாக எழுதாமல் tamil என்றே எழுதுவது நலம்.
* tamil என்று எழுதுவது சுருக்கமாக, நினைவு வைக்க இலகுவாக, குழப்பமின்றி இருக்கிறது. தளங்களுக்குப் பெயரிடுவதில் இது முக்கியம்.
* தளப் பெயரை எழுத்தில் பார்க்காதவர்கள் தன்னிச்சையாக tamil என்று தொடங்கும் முகவரிக்கே செல்வர். அத்தளம் செயல்பாட்டில் இல்லாவிட்டால் வெற்றுப் பக்கத்தைப் பார்ப்பார்கள். உங்கள் தளம் பிரபலமானால், [...]

{ 3 comments }

எட்டு கோடித் தமிழர் இருக்கிற போது ஏன் இந்த ஒற்றைப் படை நிலை?

முதலில் ஒன்றை அறிவோம். இந்தக் குறைவான எண்ணிக்கை தமிழ் இணையத் திட்டங்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், சமூகத்தில் நிகழ்வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சி, தன்னார்வல, இலாபநோக்கற்ற திட்டங்களுக்கும் கூடப் பங்களிப்பு குறைவே. ஆக, நிகழ் உலகத்தில் பங்களிப்புக் குறைவுக்கு காரணமாக இருக்கும் பணமின்மை, நேரமின்மை, மனமின்மை, திறனின்மை போன்ற அத்தனைக் காரணங்களும் இணையத்துக்கும் பொருந்தும்.

{ 15 comments }

தமிழ் இணையத்தில் மட்டுமல்லாது பொதுவாகவே மன்றங்கள் பக்கம் நான் எட்டிப் பார்ப்பது இல்லை. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லாத மன்ற இடைமுகப்புகள்.
வேர்ட்பிரெஸ் நிறுவனத்தில் இருந்து வரும் bbPress மென்பொருள் மன்றங்களில் உரையாடுவதை எளிதாக்குகிறது.
இதன் பயன்கள்:
* எளிமையான இடைமுகப்பு
* எளிமையான பயனர் கணக்கு உருவாக்கம். 10 நொடிகள் கூட ஆகாது.
* உரையாடல் தலைப்புகளைக் குறிச்சொற்கள் கொண்டு தொகுக்கலாம்.
* ஒவ்வொரு உரையாடல் தலைப்புக்கும் தனித்தனி ஓடை வசதி. எனவே மன்றத்துக்கு வராமலே உங்கள் விருப்ப உரையாடல்களை [...]

{ 10 comments }