தமிழ்நாட்டில் இணையச் சேவைகள்

தமிழ்நாட்டில் இணைய வழிச் சேவைகள் எந்த அளவு உள்ளன? அன்றாட வாழ்க்கையை இலகுவாக்க இணையத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்? சில நாட்களாகத் துருவிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் தாமதம் தான்.

* பேருந்துச் சீட்டு வாங்க Red Bus
* இரயில் சீட்டு வாங்க
* புத்தகம் வாங்க Flipkart , NHM
* கோவையில் திரைப்படம் பார்க்க http://www.thecentralcinemas.com/ . இணையப் பார்வையாளர்களுக்கு என்றே காட்சி நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பு வரை மூன்று வரிசை இடங்களை ஒதுக்கி வைக்கிறார்கள். இது தெரியாமல் நிறைய நாள் சீட்டு கிடைக்காமல் திரும்ப வந்ததும், கள்ளச்சீட்டு வாங்கியதும் உண்டு 🙁
* Vodafone புதுப்பிப்பு
* Sun DTH புதுப்பிப்பு, Dish TV புதுப்பிப்பு
* ICICI இணைய வங்கி.

இன்னும் சில சேவைகள் வந்தால் நன்றாக இருக்கும்:

* மளிகைப் பொருள் விற்பனை. பீட்சா மாதிரி ஒரு மணி நேரத்துக்குள் வீட்டுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால், சீக்கிரம் என் அக்கா மகனாவது வளர்ந்து முக்குக் கடைக்குப் போய் வரப் பழக வேண்டும்.
* NetFlix மாதிரி DVD வாடகை, புத்தக வாடகைச் சேவைகள். உருப்படிக்கு 25 ரூபாய் வைக்கலாம்.
* மின் கட்டணம் போன்ற அனைத்து அரசு கட்டணங்களும் இணையத்தில் செலுத்தும் வசதி.
* அனைத்துத் திரையரங்குகளுக்கான சீட்டுகளையும் ஒரே இடத்தில் பதியும் வசதி. Red Bus போல.

சென்னையில் மின் கட்டணம் செலுத்தல், வாடகை DVD பெறுதல் போன்ற வசதிகள் இருந்தாலும் அனைத்து ஊர்களுக்கும் வர வேண்டும்.

நீங்கள் பயன்படுத்திப் பார்த்து நன்றாக உள்ள இணையச் சேவைகளைத் தெரிவிக்கலாமே?


Comments

7 responses to “தமிழ்நாட்டில் இணையச் சேவைகள்”

  1. //* மின் கட்டணம் போன்ற அனைத்து அரசு கட்டணங்களும் இணையத்தில் செலுத்தும் வசதி.//

    வந்து கொண்டிருக்கிறது
    அனைத்து கட்டணங்கள்
    மற்றும் அனைத்து அரசு அலுவலங்களுக்கான விண்னப்பங்கள் அனைத்து ஒரே இடம் citizen service centres

    http://www.thehindu.com/2008/03/18/stories/2008031859351000.htm

    1. //விண்னப்பங்கள் அனைத்து ஒரே இடம் citizen service centres

      எனக்கு தெரிந்து பெரும்பாலும் அரசு தளங்களில் ”read” மட்டும் தான் பண்ண முடியும், “write” பண்ணும் வசதிகள் இல்லை.

      அதாவது, விண்ணப்பங்கள் போன்றவற்றை download பண்ண முடியும். ஆனால், ஆன்லைன்ல அப்ளை பண்ணும் வசதிகள் இருப்பதில்லை. பாதி கிணறு..

  2. சங்கர் கணேஷ் Avatar
    சங்கர் கணேஷ்

    Bookmyshow.com

  3. Saravanan Avatar
    Saravanan

    Have you tried Ticketnew.com, sells tickets for lot of theaters in chennai.

  4. //சீக்கிரம் என் அக்கா மகனாவது வளர்ந்து முக்குக் கடைக்குப் போய் வரப் பழக வேண்டும்.

    LOL 🙂

  5.  Avatar
    Anonymous

    bsnl online payment..EB online payment..ticketnew.com (for most of the theatres in chennai)..You can get EC in online.. Tamilnadum munnerudu boss…

  6. Mahendran Avatar
    Mahendran

    hi, U shud post an update on dis. Wud b useful. Anyways i like ur posts. Well done!