ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்?

May 21st, 2008 · 14 Comments · இணையம்

எட்டு கோடித் தமிழர் இருக்கிற போது ஏன் இந்த ஒற்றைப் படை நிலை?

முதலில் ஒன்றை அறிவோம். இந்தக் குறைவான எண்ணிக்கை தமிழ் இணையத் திட்டங்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், சமூகத்தில் நிகழ்வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சி, தன்னார்வல, இலாபநோக்கற்ற திட்டங்களுக்கும் கூடப் பங்களிப்பு குறைவே. ஆக, நிகழ் உலகத்தில் பங்களிப்புக் குறைவுக்கு காரணமாக இருக்கும் பணமின்மை, நேரமின்மை, மனமின்மை, திறனின்மை போன்ற அத்தனைக் காரணங்களும் இணையத்துக்கும் பொருந்தும்.

[Read more →]

Tags:······

தனித்தமிழ் விசைப்பலகைகள்

May 19th, 2008 · 12 Comments · தமிழ்

ஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன்.

[Read more →]

Tags:·············

இந்தி மொழிக் கல்வி

May 6th, 2008 · 17 Comments · தமிழ்

இந்தி ஒரு தேசிய மொழி இல்லை. இந்தியாவுக்குத் தேசிய மொழி என்று ஏதும் இல்லை. ஒருவர் இந்தி கற்று தான் இந்தியன் என்று நிரூபிக்க வேண்டுமா? ஒழுங்காக வரிகள் கட்டி, சட்டத்தை மதித்து நடந்தால் போதாதா? தமிழ்நாட்டில் இருந்து இந்தி தெரியாத இளைஞர்கள் இந்தியப் படைகளில் சேர்ந்து நாட்டுக்குப் பங்களிப்பதில்லையா?

[Read more →]

Tags:·······

குருவி - திரை விமர்சனம்

May 1st, 2008 · 37 Comments · திரை

கில்லியில் இருந்த கால்வாசி வேகம். பொழுதுபோக்கு கூட இந்தப் படத்தில் இல்லை. இடைவேளையிலேயே எல்லாரும் நெளிய ஆரம்பித்து கைக்கடிகாரம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். படம் முடிந்த பிறகு “என்னடா காக்கா, குருவின்னு படம் எடுக்கிறீங்க” என்று யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்.

[Read more →]

Tags:········

கூகுள் X கூகுல்

April 25th, 2008 · 3 Comments · தமிழ்

ஆங்கில L ஐத் தமிழில் எழுதும் போது ல.ள எழுத்துகளில் எதை எங்கு பயன்படுத்துவது என்பதற்கு சு.சீனிவாசன் வழிகாட்டுகிறார்.
a, e, i, o, u அடுத்து வரும் L க்கு லகரமும் பிற இடங்களில் ளகரமும் பயன்படுத்த வேண்டும்.
அப்படி என்றால். கூகுள் சரி. கூகுல் தவறு
பி.கு - சீனிவாசனின் சில பரிந்துரைகளுடன் வேறுபடுகிறேன். எனவே, லகர, ளகரப் பயன்பாடு குறித்த உசாத்துணைக்கு மட்டுமே அவரது கட்டுரையை மேற்கோளாகக் காட்டுகிறேன் என்பதை நினைவில் [...]

[Read more →]

Tags:·····

புதிய தனித்தள வேர்ட்பிரெஸ் பயனர்களுக்கான குறிப்புகள்

April 25th, 2008 · 6 Comments · wordpress

1. Filezilla போன்ற ftp செயலி மூலமாக உங்கள் /blog அடைவில் வலச் சொடுக்கி file attributes பாருங்கள். அதில் read, write, execute என்ற 3×3 தெரிவுகளையும் தேர்ந்தெடுத்து recurse into subdirectories என்பதையும் குறியுங்கள்.
இந்த ஏற்பாடு வலைத்தளத்தில் இருந்து உங்கள் வழங்கியில் மாற்றங்களைச் செய்வதற்கான அனுமதியைத் தரும். இவ்வாறு செய்வது design-theme editor, plugins-plugin editor போன்றவற்றில் இருந்து வலையூடாக தேவையான வார்ப்புரு, நீட்சி மாற்றங்களைச் செய்ய, நீட்சிகளை இற்றைப்படுத்த உதவும்.
2. நிரந்தரத் தொடுப்பை [...]

[Read more →]

Tags:···

வட்டார வழக்குத் தமிழ்

April 24th, 2008 · 6 Comments · தமிழ்

தலைமுறை மாற்றம், நகர்ப்புறம் நோக்கிய இடப்பெயர்வுகள், கல்வியறிவு, செயற்கைத் தமிழைத் திணிக்கும் ஊடக வளர்ச்சி எல்லாம் சேர்ந்து தன் சிறு வயதில் வளர்ந்த ஊரில் பேசிய தமிழை மதிப்புக் குறைவாக எண்ண வைக்கும் போக்கு பெருகுவது கவலைப்பட வைக்கிறது :( இந்தத் தாழ்வு மனப்பான்மை படிப்படியாக எண்ணற்ற நல்ல தமிழ்ச் சொற்கள் புழங்குவதை குறைத்து வழக்கொழியச் செய்கின்றது.

[Read more →]

Tags:······

ஊக்கமுடைமை - திருக்குறள் உரை

April 21st, 2008 · 1 Comment · திருக்குறள்

ஊக்கமுடைமை - திருக்குறள் உரை
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று. 591
ஒருத்தனுக்குப் பணம், திறமைன்னு எத்தனை தான் இருந்தாலும், ஊக்கம் இல்லைன்னா ஒன்னுமே இல்லாத மாதிரி தான்.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். 592
மனசுல இருக்க ஊக்கம் தான் சொத்து. பணம், காசு, பொருளுன்னு சேர்க்கிற சொத்து எல்லாம் நிலைக்காமப் போயிடும்.
ஊக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். 593
ஊக்கம் இருக்கவங்க, ஒரு வேளை தங்கள் சொத்தை இழந்தாலும், “ஐயோ போச்சே”ன்னு கலங்க [...]

[Read more →]

Tags:······

வினைத்திட்பம் - திருக்குறள் உரை

April 21st, 2008 · No Comments · திருக்குறள்

வினைத்திட்பம் - திருக்குறள் உரை
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. 661
நம்ம மனசு எவ்வளவு உறுதியா இருக்கோ, அவ்வளவு தான் நாம செய்யுற செயலும் உறுதியா இருக்கும். மன உறுதி தவிர்த்த மிச்ச எல்லாம் சும்மா.
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662
சிக்கல் வர்றதுக்கு முன்னாடியே அதைத் தவிர்க்கணும்; அதையும் மீறி சிக்கல் வந்தா மனசு தளராம இருக்கணும். செய்யுற செயல உறுதியா செய்யத் தெரிஞ்சவங்க எல்லாம் இந்த இரண்டு வழியைத் தான் பின்பற்றுறாங்க.
கடைக்கொட்கச் [...]

[Read more →]

Tags:········

செய்ந்நன்றி அறிதல் - திருக்குறள் உரை

April 17th, 2008 · No Comments · திருக்குறள்

செய்ந்நன்றி அறிதல் - திருக்குறள் உரை.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 101
நாம ஒருத்தருக்கு ஒரு உதவியும் செஞ்சிருக்காதப்ப, அவர் நமக்கு ஒரு உதவி செய்யுறாருன்னா, அதுக்கு பதிலா இந்த உலகத்தையும் வானத்தையும் கொடுத்தா கூட ஈடு ஆகாது.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 102
என்ன உதவிங்கிறத விட அது எப்ப கிடைக்கிறதுங்கிறது தான் முக்கியம். அதனால சரியான சமயத்தில கிடைக்கிற உதவி இந்த உலகத்தை விட பெரிசு.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் [...]

[Read more →]

Tags:··