தமிங்கில ஊர்கள்

தற்போது ஊர்ப் பெயர்களின் ஆங்கில முன்னொட்டை இட்டு எழுதும் வழக்கம் பெருகி வருகிறது. எடுத்துக்காட்டுக்கு, மேலூர் அருகில் இருக்கும் அம்மாப்பட்டி முன்பு மே. அம்மாப்பட்டி. இப்பொழுது M. அம்மாப்பட்டி. தமிழ்நாட்டில் தமிழ் பெயரில் உள்ள ஊருக்கு எதற்கு ஆங்கில முன்னொட்டு? ஏன் இந்தப் போக்கு? இட நெருக்கடியில் பெயர் எழுத வேண்டிய பேருந்து அறிவிப்புப் பலகைகள், கடித முகவரிகள், மற்ற இடங்களில் சுருக்கி எழுத வேண்டிய தேவையின் காரணமாகப் பெயரைச் சுருக்குகிறார்கள். ஆட்களின் பெயர்ச்சுருக்கங்களை எழுதும் போது [...]

ஞ்ஜ

ஞ்ஜ என்று எழுதுவது தேவையற்ற கிரந்தச் சேர்ப்பு மட்டுமல்ல. உச்சரிக்கவே முடியாத எழுத்துப் பிழையும் கூட.

.in தளப் பெயர்கள் 250 ரூபாய்க்கு விற்பனை

.in தளப் பெயர்களை 250 இந்திய ரூபாய்க்கு விற்கிறேன். டிசம்பர் 31, 2011 வரை.

வலையிடம் விற்பனை – 2 GB @ 750 INR ஆண்டுக் கட்டணம்

ஆண்டுக்கு 750 INR செலவில் 2 GB வலையிடம் கிடைக்கிறது. மேல் விவரங்களுக்கு Milk Host வழங்கும் Web hosting பார்க்கவும்.

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி: தமிழ், தமிழர் தொடர்பான ஒளிப்படங்கள், ஒலி / ஒளிப்பதிவுகள் மூலம் 850 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசுகளை வெல்லுங்கள்.

கூகுள் தானியங்கித் தமிழாக்கக் கருவி

பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும் தானியக்கமாய் மொழிபெயர்க்கும் கருவி ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. தமிழ்க் கணிமையைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதில் ஐயம் இல்லை. அதிலும் ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளுக்கு மட்டுமல்லாமால் பல மொழிகளுக்கும் இடையே இரு வழியாக மொழிபெயர்க்கலாம் என்பது சிறப்பு. செருமன், நெதர்லாந்து மொழிகளைச் சோதித்துப் பார்த்தேன். கூடவே தமிழ்ச் சொற்களை உச்சரித்துக் காட்டும் கருவி, தமிழ் உரையை உரோம எழுத்துகளில் எழுதிக் காட்டும் [...]

பெண் பார்க்கப் போவது எப்படி?

திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போவது எப்படி? 1. பெண் பார்க்கச் செல்லும் முன்னரே பெண்ணின் அப்பா / அண்ணன் போன்றோரிடம் தொலைப்பேசி மூலம் சுருக்கமாக பேசி ஒரு அறிமுகம் பெற்றுக் கொள்ளுங்கள். வரும் நேரம், வழி ஆகியவற்றை ஒப்புக்குக் கேட்கலாம். இதனால் முன் பின் அறியாமல் போய் விழிப்பதைத் தவிர்க்கலாம். பெண்ணிடமே முன்கூட்டிப் பேசி விட முடியுமானால் இன்னும் அருமை. பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து இதைக் கேட்டுப் பார்க்கலாமா என முடிவு [...]

பொள்ளாச்சி நசன்

பொள்ளாச்சி நசன். தமிழம் வலைத்தளத்தில் பல அரிய தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து வருகிறார். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தமிழக அரசு கல்விக் கொள்கை வகுக்கும் அமைப்புகளில் பல பொறுப்புகள் வகித்து உள்ளார். இயல்பாகவே, புத்தக ஆர்வம் உள்ளவர் நூலகம் திட்ட கோபியின் தூண்டுதலால் தம்மிடம் இருந்த தமிழ் நூல்களை மின்னூலாக்கும் முயற்சியில் இறங்கினார். இவரின் முயற்சியைப் பார்த்து உலகின் பல பகுதிகளில் உள்ளோரும் தங்களிடம் உள்ள பழைய நூல்களை மின்னூலாக்கத் தருகிறார்கள். [...]

தமிழ் மோதிரம்

சென்னை. புகழ் பெற்ற நகைக் கடை ஒன்று. பெயர் பொறித்து ஒரு மோதிரம் வாங்கலாம் எனச் சென்று இருந்தோம். முன்கூட்டியே சில குறிப்பிட்ட வடிவங்களில் பெயர் எழுதி வைத்திருந்த மாதிரிகளைக் காட்டினார்கள். ஒன்றில் கூட தமிழ் எழுத்தில்லை. “தமிழ்ல பேரு எழுதித் தருவீங்களா?” “இல்லீங்க. தமிழ்ல செய்ய முடியாது”. “ஓ.. சரி, எந்தக் கடைல தமிழ்ல எழுதித் தருவாங்கன்னு சொல்லுங்க. அங்க போறோம்.” “இல்லீங்க.. இப்பல்லாம் தமிழ்ல வர்றது இல்லீங்க. தமிழ்ல design பண்ணுறதுல சிக்கல் இருக்குங்க” [...]

புதிய paper கவிதைகள் – தேவதை

கேட்டது வரம். கிடைத்தது தேவதை. – இருக்கிற தேவதைக்காக இல்லாத சாமிகளையும் கும்பிடலாம். – தேவதையைக் காணவில்லை. கண்டுபிடிக்க வருவோருக்குத் தக்க தண்டனை வழங்கப்படும். – என்ன கேட்பது? ஏதாவது வரம் கேளேன் என்று உருகும் தேவதையிடம். – பி. கு: மார்கழிக் கோலம் போட தேவதை வருகிறாள்… அவளுக்குக் காத்திருந்தது போலவே அவளுக்கான கவிதைகளுக்காகவும் காத்திருக்கிறேன்…