கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி

கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி குறித்த சில தமிழ் வலைப்பதிவு இடுகைகள்:

தமிழ் வளர்ப்பு – அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும் – இலவசக் கொத்தனார்

மேற்கண்ட இடுகைக்கு வந்த தக்க எதிர்வினைகள்:

காதுல பூ – வவ்வால்

பள்ளிகளில் தமிழ் படிக்காதவர்கள் வெறும் 2% தானா? – புருனோ

இந்த இடுகைகள், மறுமொழிகளில் பிடித்த கருத்துகள்:

* “எதையும் கட்டாயப்படுத்தக்கூடாது. மாணவர் விருப்பத்துக்கு விட வேண்டும்” என்ற சல்லிக்கு எதிராக நவீன் சொன்னது:

* “இப்படி கட்டாயப்படுத்துவது மக்களாட்சியா” என்ற கேள்விக்கு இராமனாதன் சொன்னது.

இந்த விசயம் குறித்த என் சிந்தனைகள்:

தமிழே எழுதப் படிக்கத் தெரியாமல் நல்ல தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி பயின்று தமிழ்நாட்டிலேயே வேலைக்கு அமர்பவர்கள் எப்படி தமிழ் பேசும் பாமர மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியும்? (இந்த முக்கியமான பிரச்சினையை வவ்வால் சுட்டி இருந்தார்). ஏற்கனவே ஆங்கில மயமாகி வரும் அரசு, தனியார் துறைகளை தங்கள் வசதிக்காக முழுக்க ஆங்கில மயமாக்குவார்கள். “மனித உரிமை” என்ற பெயரில் தமிழைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கும் தமிழர்களே, தமிழ் முழுக்க அரசு மொழியாவதற்கு பெருந்தடையாக இருப்பார்கள்.

ஆங்கிலப் பாடத்தில் பயிற்சி பெறாத ஒரே காரணத்தால் பள்ளியில் தேர்ச்சி அடையாமல் படிப்பைப் பாதியில் எத்தனை மாணவர்கள் கைவிடுகிறார்கள்? இவர்களின் விருப்பத்தை எல்லாம் கேட்டிருந்தால் முதலில் ஆங்கிலப் பாடத்தைத் தான் வேண்டாம் என்றிருப்பார்கள். தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை இவர்கள் விருப்பம் அறியாமல், அவர்களுக்குத் தேவை இல்லாமல் திணிப்பதை விடவா தாய்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்குவது பெரிய குற்றம்?

தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியினருக்கும் வெளியே போக வர, பேச தமிழ் தேவை என்ற அடிப்படையில் தமிழ் கற்பிப்பது தவறு இல்லை. கட்டாயத் தமிழ்க் கல்வித் திட்டத்துக்கு எந்த மாணவரும் முணுமுணுப்பதாகத் தெரியவில்லை. பெற்றோர்கள் தான் குதிக்கிறார்கள். ஏன்?

தாய்மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கலாமா என்று உரையாடிக் கொண்டிருக்கும் உலகின் ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்.

வேறு என்ன சொல்ல?


Comments

11 responses to “கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி”

  1. //ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்//

    இல்லை, கன்னடத்தில இந்த மாதிரி பிரச்சினை ஆரம்பிச்சு ரொம்ப வருஷம் ஆச்சு.

  2. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    இளா, ஒரு பேச்சுக்கு உணர்ச்சி நிறையச் சொன்னேன்னு வைச்சுக்குங்களேன் 🙂 ஏற்கனவே கர்நாடகம், மராட்டியத்தில் கட்டாய உள்ளூர் மொழிக் கல்வி வந்திடுச்சு தானே?

  3. //‘பத்தாவது வரை தமிழ் படிப்பது கட்டாயம்’ என உத்தரவு வந்ததிலிருந்து இம்மாதிரியான அபத்தக்குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது ‘தனிமனித விருப்பம்’ என்ற பெயரில்.//

    இதே உத்தரவு இருக்கும் கர்நாடகத்திலோ, ம்காராஷ்டிரத்திலோ யாரும் ஏன் தனி மனித உரிமை பற்றி பேச வில்லை. அங்கும் நடப்பது மக்களாட்சிதானே.

    பேரூந்து பெயர் பலகை கூட படிக்க முடியாதவர் (எனது பதிவில் ஒரு கதை இருக்கிறது http://payanangal.blogspot.com/2008/03/2.html) எப்படி மக்கள் மருத்துவராக முடியும்

    //இவர்களின் விருப்பத்தை எல்லாம் கேட்டிருந்தால் முதலில் ஆங்கிலப் பாடத்தைத் தான் வேண்டாம் என்றிருப்பார்கள். தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை இவர்கள் விருப்பம் அறியாமல், அவர்களுக்குத் தேவை இல்லாமல் திணிப்பதை விடவா தாய்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்குவது பெரிய குற்றம்?//

    சிக்ஸர் !!!

  4. பொதுவாக எந்த ஒரு நாட்டிலும், அவர்களது தாய்மொழி கட்டாய பாடமாக இருப்பதுதான் வழமை. அது அவசியமும் கூட. அது தேவையே இல்லை என்பது ஏன் என்பது புரியவில்லை.

    பொதுவாக மக்களிடம் நேரடி தொடர்பு கொண்டிருக்கும் தொழில்சார் வேலைகளுக்கு அது அவசியமும்கூட.

  5. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    புருனோ, உங்கள் நண்பரின் கதையே முன்பே படித்துவிட்டேன். எல்லாருக்கும் அது போல் ஒரு நண்பர் இருக்கிறார். சிரிப்பதா நோவதா என்று தெரியவில்லை. ம்ம்..

  6. //எல்லாருக்கும் அது போல் ஒரு நண்பர் இருக்கிறார். சிரிப்பதா நோவதா என்று தெரியவில்லை. ம்ம்..//

    கண்டிப்பாக நோக வேண்டிய விஷயம் தான் இது 🙂 🙂

  7. நவீன் Avatar
    நவீன்

    தனிமனித விருப்பம் – கட்டாயப்படுத்தல் என்ற ஓர் அடிப்படை புள்ளியில் நான் மறுமொழி இட்டிருந்தேன். அதை விரிவாகவும், மேலும் சிலகோணங்களையும் காட்டுகிறது உங்களின் இந்த பதிவு.
    நன்றிகளும் வாழ்த்துகளும் !

  8. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    புருனோ – நோக வேண்டிய விசயம்னு நீங்க happy smiley போடுற மாதிரி தான் சிரிப்பதா நோகுறதான்னு கேட்டேன் 🙂

    நன்றி நவீன். இது குறித்த கருத்துக்களிலேயே உங்கள் கருத்து நச்சுன்னு இருந்துச்சு. நீங்க வலைப்பதிவில் எழுதுவதுண்டா?

  9. நவீன் Avatar
    நவீன்

    இல்லை ரவிசங்கர். பதிவுகள் படிப்பதில் பெரும் ஆர்வமுண்டு. இப்போதைக்கு பின்னூட்டங்கள் தான் எழுதமுடிகிறது 🙂

  10. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நவீன் – விரிவா எழுதுற மறுமொழிகளையே ஒரு பதிவில் போட்டு வைச்சிடுங்க 🙂 ஒரே விசயம் நிறைய பதிவுகள்ல பேசப்படும்போது தொடுப்பு கொடுக்க உதவுமே…

  11. ARIVUMANI, PORTUGAL Avatar
    ARIVUMANI, PORTUGAL

    //தாய்மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கலாமா என்று உரையாடிக் கொண்டிருக்கும் உலகின் ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்.//

    மிக சரி !! வெட்கம் !! வெட்கம்!!

    நான் போர்த்துகல் நாட்ல முதுகலை படிக்கிறேன். நான் டென்மார்க் ல இருந்தபவும் சரி , இப்ப போக போற ஜெர்மனிளையும், நான் கட்டாயம் அந்தந்த மொழிகளை படித்தே அக வேண்டும். அது அவங்க தாய் மொழி யா இருந்தாலும் நான் படித்து தான் ஆக வேண்டும். இங்க இந்த கட்டாயத்தின் பெயர் பற்று , நாகரீகம், நடைமுறை .. ஆனா நம்ப ஊருல சொன்னா மொழி வெறி , தனி விருப்பம்.. நல்லதுக்கெல்லாம் இவன்கள முன் மாதிரியா எடுத்துக் மாட்டாங்க நம்ம ஆளுக .. ஒண்ணும் தெரியாத மூன்று வயசு குழந்தை, அதுக்கு தனி விருப்பமாம்.. …

    எல்லாம் ஒரு மார்கம்மா தான் திரியரானுகையா ….