பட்டிமன்றம் நடத்துவது எப்படி?

பெண் பேச்சாளர்களுக்கு பட்டுப்புடவை, மினுக்கும் அணிகலன்கள் தேவை இல்லை. ஒத்திகை பார்த்த அசட்டுக் கும்மிச் சிரிப்புகள், குட்டிக் கதைகள் தேவை இல்லை. திரைப்படப் பாட்டு தேவை இல்லை. கண்ணீர் சிந்த வைக்கும் அழுகாட்சிக் கதைகள், அடித்தொண்டையில் கத்தும் பாசாங்குப் பேச்சு தேவை இல்லை.

இப்படியும் அமைதியாக, ஆரவாரம் இன்றி பட்டிமன்றம் நடத்தலாம். மக்களின் வாழ்க்கையைப் பேசலாம். சமூகச் சூழல் தான் எப்படி எல்லாம் ஊடகப் போக்கை மாற்றுகிறது?

பி.கு: சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, விசு கவனத்துக்கு.


Comments

2 responses to “பட்டிமன்றம் நடத்துவது எப்படி?”

  1. jayalakshmi Avatar
    jayalakshmi

    மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். ஒப்பனை தான் பர்பவர்களை கவரும் என்று ஒரு தவறான கருத்து நிலவுக்திறது.
    இல்லை நாம் அலங்காரங்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கும் மனிதர்கள் என்றே தோன்றுகிறது.

  2. வணக்கம் நான் ஒரு பட்டிமன்ற நடுவர் என் வயது 19 இளைய தலைமுறைக்கான பட்டிமண்டங்களை நடத்தி வருகிறேன் என் மனத்தில் உதயமான எண்ணமும் இது தான் ஆனால் இதை இன்றைய ரசிகர் வட்டம் ஏற்க மறுக்கிறதே அது தான் என் கவலை அவர்களுக்கு எதார்த்த பேச்சில் ரசனை இல்லையே வார்த்தை அடுக்கள், சினிமா வசனம், குத்து பாட்டு, நடிகை பெயர் இதை சொன்னால் தானே கேட்கின்றனர் தயவு செய்து மக்களின் ரசிப்பு திறன் மாறவேண்டும் என்பதே என் அவா
    அன்புடன்
    சிதம்பரம் இலக்கியப்பித்தன்