தமிழில் உரைத்துணை

dotSUB தளம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் உரைத்துணை வழங்கும் நுட்பத்தை இலகுவாக்கி இருக்கிறது. சோதனைக்காக, நான் தமிழில் உரைத்துணை சேர்த்துப் பார்த்த நிகழ்படம் ஒன்று..

ஒரு விக்கி தளத்தைத் தொகுப்பது போல் இந்தத் தளத்தில் உரைத் துணையைச் சேர்ப்பதும் மிக இலகுவாக இருக்கிறது. தற்போது இந்தத் தளத்தில் முறையான காப்புரிமம், பொது உரிமம் உள்ள படைப்புகளைத் தான் சேர்க்க முடியும் போல் இருக்கிறது. ஆனால், இந்த நுட்பம் Youtube போன்ற தளங்களுக்கு வரும் எனில் எண்ணற்றை பிற மொழி திரைப்படங்கள், ஆவணப் படங்களுக்குத் தமிழில் உரைத்துணை வழங்க முடியலாம்.


Comments

10 responses to “தமிழில் உரைத்துணை”

  1. Thanks for blogging about dotsub. You are exactly the reason we created the technology, and we want scores of other languages to understand this as well and blog about it so one day soon, the entire world can easily communicate with each other without language as a barrier.

    Thank you again.

    Michael L. Smolens
    Founder & CEO
    dotSUB llc – Any Film Any Language
    360 East 72nd St. #C3104
    New York, NY 10021 USA
    [email protected] – email
    1-917-742-0158 – tel
    1-646-403-9944 – fax
    mlsmolens – Skype
    http://dotSUB.com – website

  2. உரைத்துணை – Subtitle. சரிதானே ?

    தல,
    நீங்கள் ஏன் ஒரு கலைச்சொல் அகராதி போடக்கூடாது ?

    நன்றி.

  3. கூமுட்டை – அவ்வப்போது இது போன்ற சொற்களை தமிழ் விக்சனரி தளத்தில் சேர்த்து வருகிறேன்.

    Michael Smolens – dotSUB is a great technology and has lots of potential. kudos for coming up with it. if you can make this technology available for external sites too, it will be very nice

  4. துணையெழுத்து என்றல்லவா நினைத்திருந்தேன்

  5. துணை உரை, துணை வாசகம் போன்ற பரிந்துரைகள் தமிழ் விக்சனரி குழுமத்தில் வந்தது. வாய்க்கால்-கால்வாய் மாதிரி மாற்றிப் போட்டு உரைத் துணை என்று வந்தது எனக்குப் பிடித்தது. துணை உரை என்றால் ஏற்கனவே முதன்மையாக இன்னொரு அச்சிட்ட உரை இருப்பது போல் எனக்குத் தோன்றியதால், மொழி புரியாமல் பார்ப்பவர்களுக்கு உரையாக வரும் துணை என்று பொருளில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினேன்..

  6. தல,
    தமிழ் விக்சனரி ஓகே தாங்க. ஆனா உங்க பதிவுக்கு கீழேயே கலைச்சொல் விளக்கம் போட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.

    நன்றி.

  7. கூமுட்டை, ஒரு காரணத்தோட தான் இடுகையின் முடிவிலயோ அடைப்புக் குறிக்குள்ளயோ ஆங்கிலத்தில் தராமல் தவிர்த்தேன். அது என்ன காரணம்னு விளக்க பெரிசா தனி இடுகையே தேவைப்படுது 🙂 விரைவில் எழுதுகிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

  8. இலங்கைத் தொலைக்காட்சிகளில் உபதலைப்பு என்று அழைக்கப்படுகின்றது. நான் இந்த வீடியோவை இயக்கிய போது தமழி பெட்டி பெட்டியாக வருகின்றதே !

  9. ravidreams Avatar
    ravidreams

    உப – தமிழ்ச் சொல் இல்லை. உபதலைப்பு என்னும் literal தமிழாக்கத்திலும் உடன்பாடு இல்லை.

    நான் முதலில் இந்த வசதியைச் சோதித்த போது தமிழ் நல்லாவே தெரிஞ்சது. பொட்டி வருவதை இன்னைக்குத் தான் பார்க்கிறேன் 🙁 என்னுடையது உபுண்டு,FF2. விண்டோசிலும் முயன்று பார்த்து விட்டு அந்தத் தளத்தில் தெரிவிக்கலாம்.

  10. Now I can see the letters from campus machines!