Tag: இணையத்தளம்
-
தொடுப்புகள் – 8 பெப்ரவரி 2008
—
in இணையம்பல ஆங்கிலப் பதிவுகளில் Links for this week, Links for today என்று தொடுப்பு கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். தொடுப்புப் பதிவுகள் என்று பதிவு வகையே இருக்கிறது. நாளைக்குப் பல பக்கங்களை பயர்பாக்ஸ் உலாவியில் சேர்த்து வைக்கிறேன். எல்லாவற்றையும் Del.icio.us போன்ற தளங்களில் ஏற்றிப் பகிர பொறுமையும் தேவையும் இருப்பதில்லை. எனவே, எனக்குப் பயன்பட்ட சுவையான, பயனுள்ள தகவல்களைத் தரும் தொடுப்புகளை அவ்வப்போது இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
-
தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடநூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன
—
in தமிழ்ஏப்ரல் 2007ல் இணையத்தமிழ் உள்ளடக்க உருவாக்கத்துக்கு தமிழக அரசு செய்ய வேண்டியது குறித்து எழுதி இருந்தேன். அதை யாரும் பார்த்தார்களா தெரியாது 🙂 நேற்று கூட இதன் தேவை குறித்து தமிழ் விக்கிபீடியாவில் உரையாடினோம். நேற்று இரவே, தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் pdf வடிவில் இணையத்தில் கிடைக்கத் தொடங்கி இருப்பதை கண்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் 1 முதல் 12 வகுப்பு வரைக்குமான பாடநூல்கள் தமிழ், ஆங்கிலம் இரு வழியிலும்…
-
தமிழ் செய்தித் தளங்கள்
கூகுள் செய்திகளின் இந்திப் பதிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் பிற இந்திய மொழிப் பதிப்புகளும் வரும் என்கிறார்கள். இந்தியில் ஒருங்குறி அல்லாத பிற எழுத்துருக்களில் அமைந்திருந்த தளங்களின் தகவல்களையும் ஒருங்குறிக்கு மாற்றி வெளியிடும் பொறுப்பை கூகுளே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தினமலர், தினகரன், விகடன் போன்ற தளங்கள் ஒருங்குறியில் செய்தி வெளியிடுவதற்கான அறிகுறிகளை காணாதிருக்கையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்தபட்சம் செய்தியோடைகளையாவது வழங்க இது போன்ற முன்னணி செய்தித் தளங்கள் முன்வரவேண்டும். தற்போது MSN தமிழ், Yahoo தமிழ்,…
-
கணினிக்குப் புதியவர்களுக்கு தெரியாத தளங்கள், மென்பொருள்கள்
1. உலாவி – சிறந்த உலாவல் அனுபவம், பாதுகாப்பு, பயன்பாட்டு எளிமை ஆகியவற்றுக்கு Firefox உலாவி பயன்படுத்துங்கள். 2. Office மென்பொருள் – Open Office பயன்படுத்திப் பார்த்தவர்கள் எதற்கு MS officeஐ போய் வாங்க / திருட வேண்டும் என்று நினைக்கலாம். 3. ஊடக இயக்கி – VLC media player . குப்பை என்று ஒரு கோப்பு நீட்சி கொடுத்தாலும் வாசித்துக் காட்டி விடும் அற்புத ஊடக இயக்கி. 4. குரல் அரட்டை – skype . குரல்…