Category: பொது

 • இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் Creative Commons உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது

  இன்று முதல் இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன். இதன் மூலம், இந்த வலைப்பதிவின் உள்ளடக்கத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். திருத்தி மேம்படுத்தலாம். விற்கலாம். முழுக்கட்டுரையாக இன்னொரு தளத்தில் இடலாம். அச்சிட்டோ, ஒலிப்பதிவாகவோ, EPUB, PDF, MOBI போன்ற வடிவங்களிலோ பகிரலாம் இவற்றைச் செய்ய என்னுடைய முன் ஒப்புதல் தேவையில்லை. ஆனால், அவ்வாறு பயன்படுத்தும் போது, நீங்கள் வெளியிடும் உள்ளடக்கமும் மேற்கண்ட அனைத்து உரிமங்களையும் அதனைப்…

 • இத்தளத்தைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு…

  சில நண்பர்கள் அன்றாடம் தளத்தை எட்டிப் பார்ப்பதாகவும் ஏன் புதிய இடுகைகள் இல்லை என்றும் கேட்கிறார்கள். இவ்வலைப்பதிவைப் படிக்க அன்றாடம் வரத் தேவை இல்லை. தளத்தின் வல மேல் முனையில் உள்ள “கூகுள் ரீடரில் படியுங்கள்” என்ற தொடுப்பை அழுத்தி http://reader.google.com தளத்தின் மூலம் படிக்கலாம். இந்த கூகுள் ரீடரின் add subscription பெட்டியில் உங்கள் விருப்பத் தளங்களின் முகவரிகளைச் சேர்த்துக் கொண்டால் அனைத்துத் தளங்களையும் ஒரே இடத்தில் இருந்து படிக்கலாம். மாற்றாக, புதிய கட்டுரைகளை உங்கள்…

 • பிற தளங்களில் எழுதியவை..

  இந்தத் தனிப்பதிவு போக, அப்பப்ப பிற தளங்களில், கூட்டுப் பதிவுகளில், நண்பர்களின் பதிவுகளில் எழுதுவதும் ஒலி உரையாடல்களில் பங்குபெறுவதும் உண்டு. அவற்றில் சிலவற்றை ஒரு குறிப்புக்காக இங்கு தொகுத்து வைக்கிறேன். அண்மைய இடுகைகள் தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள் தமிழாக்கத் தொனி குறித்த உங்கள் கருத்து தேவை ஆன்மிகப் பதிவுகளால் தமிழ் இணையத்துக்கு நன்மை உண்டா? பதிவர் சுதந்திரமும் போலித்தனமும் தமிழ்99 – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தமிழ் வலைப்பதிவுலகம் 2 நிமிடத்தில் செய்த திரட்டி…

 • வணிக நிறுவனங்களுக்குத் தன்னார்வ உழைப்பைத் தருவது சரியா?

  ஆர்க்குட் தமிழாக்கத்துக்கு ஆலோசனைகள் வழங்கலாம் என்று தமிழ் விக்சனரி குழுமத்தில் ஒரு மடல் இட்டிருந்தேன். அதை ஒட்டி எனக்கும் மு. மயூரனுக்கும் நடந்த பயனுள்ள உரையாடலை ஒரு குறிப்புக்காகப் பதிந்து வைக்கிறேன். நான்: ஆர்க்குட் தளம் தமிழ் இடைமுகப்புடன் தற்போது கிடைக்கிறது. அது குறித்த தமிழாக்க உரையாடல்கள் இங்கு நிகழ்கின்றன. உங்கள் ஆலோசனைகளையும் தரலாம். மு.மயூரன்: இது கூகிள் சம்பளம் கொடுத்து செய்தெடுத்திருக்கவேண்டிய பணி. ஏதோ ஒரு மூடிய கம்பனிக்காக நாம் எமது உழைப்பை வீணடிக்கத்தேவையில்லை. ஆர்குட்டை…

 • Raaga.comல் விளம்பரங்கள் இல்லாமல் பாட்டு கேட்கலாம்

  Firefox பயனர்கள் ராகா தளத்தில் விளம்பரங்கள் இல்லாமல் பாட்டு கேட்கலாம். முதலில் Greasmonkey நீட்சியை நிறுவி Firefoxஐ மீளத் திறங்கள். அடுத்து Raagaadskipperuser என்ற நிரலை நிறுவிக் கொள்ளுங்கள். விளம்பரங்களை நிறுத்துவதுடன் பின்வரும் குறுக்கு விசைகளும் கிடைக்கும். z – முந்தைய பாட்டு x -பாடு c -பொறு v -நிறுத்து b – அடுத்த பாட்டு Up அம்பு – ஒலியளவைக் கூட்டு Down Arrow – ஒலியளவைக் குறை நிரலை உருவாக்கிய சரவணனுக்கும் Firefoxக்கும்…

 • உயிர்ப் பேணியலுகை – 1

  எங்க ஊர் அம்மாபட்டில உள்ள அபத்தா, அப்பச்சிகளுக்கும் புரியிற மாதிரி நான் மேற்படிப்பு படிக்கணும்னா, பல் doctor, மனுச doctor, மாட்டு doctor, வீடு கட்டுற engineer, current விடுற engineerனு ஒரு சில படிப்புகள் தான் இருக்கு 😉 ஆனா, நான் எடுத்த படிப்புக்கள் எல்லாம் Industrial Biotechnology, Industrial Ecology, Sustainability-னு படிச்சவங்களுக்கே விளக்க வேண்டியதா இருக்கு. நான் என்ன படிக்கிறேன்னு பிறருக்கு சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள விரும்பும் அக்கா, தங்கைக்காகவும் bore அடித்தால்…

 • தமிழ் சொல்லிசைப் பாடல்கள்

  முன்பு இசையமைப்பாளர் ஆதித்யன் ஏகப்பட்ட remix பாட்டுக்கள் போடுவார். இப்ப எல்லா தமிழ் இசையமைப்பாளர்களும் remixல் புகுந்து விட்டார்கள். ஆனால், remix தவிர புதுசாகவும் சொல்லிசைப் (rap music) பாடல்கள் நிறைய வருகின்றன. மலேசியக் கலைஞர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இதில் முன்னிலையில் இருப்பது போல் தெரிகிறது. ரசிக்கவும் வைக்கிறது. சில சமயம் தமிழ்நாட்டில் எழுதப்படுவதை விட நல்ல பாடல் வரிகளும் வந்து விழுகின்றன. அண்மையில் ரசித்த பாடல்கள் – – Rise of the…