WordPress தமிழாக்கத்தில் உதவ தன்னார்வலர்கள் தேவை. விவரங்களுக்கு,
http://groups.google.co.in/group/tamil_wordpress_translation/
பார்க்கவும். நன்றி.
தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு
WordPress தமிழாக்கத்தில் உதவ தன்னார்வலர்கள் தேவை. விவரங்களுக்கு,
http://groups.google.co.in/group/tamil_wordpress_translation/
பார்க்கவும். நன்றி.
1. Filezilla போன்ற ftp செயலி மூலமாக உங்கள் /blog அடைவில் வலச் சொடுக்கி file attributes பாருங்கள். அதில் read, write, execute என்ற 3×3 தெரிவுகளையும் தேர்ந்தெடுத்து recurse into subdirectories என்பதையும் குறியுங்கள்.
இந்த ஏற்பாடு வலைத்தளத்தில் இருந்து உங்கள் வழங்கியில் மாற்றங்களைச் செய்வதற்கான அனுமதியைத் தரும். இவ்வாறு செய்வது design-theme editor, plugins-plugin editor போன்றவற்றில் இருந்து வலையூடாக மாற்றங்கள் செய்ய உதவும்.
2. நிரந்தரத் தொடுப்பை மாற்றுங்கள்.
settings-permalink போய் custom என்ற பெட்டியில் /%postname%/ என்று கொடுத்து சேமித்தால் உங்கள் முகவரி தானாக மாற்றப்பட்டு விடும். இந்த மாற்றத்தைச் செய்ய .htaccess கோப்பில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும். முந்திய அடியில் சொன்னது போல் நாம் file attribute மாற்றங்கள் செய்திருந்தால் வேர்ட்பிரெஸே இந்த மாற்றத்தைச் செய்து விடும்.
3. பொதுவாக, வேர்ட்பிரெஸ்ஸில் ஒரு சிக்கல் என்றால் எல்லா நீட்சிகளையும் முடக்கி விட்டு இயல்பிருப்பு வார்ப்புருவுக்கு மாற வேண்டும். பிறகு ஒவ்வொரு நீட்சியாகப் போட்டுப் பார்த்து எதில் கோளாறோ அதைச் சரி செய்த பிறகு வேண்டிய வார்ப்புருவுக்கு மாறலாம். http://wordpress.org/extend/themes/ முகவரியில் கிடைக்கும் வார்ப்புருக்கள் பிரச்சினையின்றியும் வேர்டுபிரெசின் அனைத்து வசதிகளையும் தருவதாகவும் இருக்கலாம்.
4. வேர்ட்பிரெஸ் தரவுத் தளம் உங்கள் /blog அடைவுக்குள் இல்லை. தனியே இன்னொரு இடத்தில் இருக்கிறது. எனவே, பிரச்சினைகளைச் சரி செய்வதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் வேர்ட்பிரசை மீள நிறுவிப் பார்க்கலாம். மீள நிறுவும் முன் உங்கள் wp-content அடைவையும், wp-config கோப்பையும் படி எடுக்க மறவாதீர்கள்.
5. MistyLook வார்ப்புருவில் தமிழ்ப் பதிப்பும் இருக்கிறது. MistyLook பதிவிறக்கப் பக்கத்தில் இருந்து Tamil translation file என்னும் zip கோப்பைப் பெற்று பிரித்து எடுத்தால் ta_TA.mo என்று இருக்கும். அதை உங்கள் வழங்கியில் உள்ள mistylook அடைவுக்குள் போடுங்கள். பிறகு, பதிவின் wp-config கோப்பில்
define (‘WPLANG’, ”);
என்ற வரியை
define (‘WPLANG’, ‘ta_TA.mo’);
என்று மாற்றவும். அவ்வளவு தான்.
விவரங்களுக்கு
http://wprocks.com/wordpress-tips/how-to-use-an-internationalized-theme-for-wordpress/
இந்தத் தமிழாக்கத்தை வேண்டியவாறு எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இதைச் செய்ய http://www.poedit.net/download.php செயலியைத் தரவிறக்க வேண்டும். பிறகு, உங்கள் mistylook அடைவில் உள்ள POT கோப்பைத் திறந்து தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். உங்களிடம் உள்ள mo கோப்புக்குத் தகுந்த தமிழாக்கங்கள் POT கோப்பில் இருக்காது. இதற்கான மூலத் தமிழ் POT கோப்பு என்னிடம் இருக்கிறது. யாருக்கும் வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன்.
6. அருட்பெருங்கோ புதிய தமிழ்மணம் கருவிப்பட்டை நீட்சி செய்திருக்கிறார். இது தமிழ்மணம் கருவிப்பட்டையைப் பக்கத்தின் இறுதியில் சேர்க்கும். எனவே, பக்கத்தின் தரவிறக்க வேகத்தைப் பாதிக்காமல் இருக்கும்.
தமிழ்மண நீட்சி /images அடைவுக்குள் ஒரு குரங்குத் தலை படம் இருக்கும். அதை நீக்கி உங்கள் படத்தை default.png என்ற பெயரில் பதிவேற்றுங்கள். நீங்கள் தமிழ்மணத்தில் இடுகைகளை அளிக்கும் போது இந்தப் படத்தைக் காட்டும்.
7. settings-discussion போய் before a comment appears என்பதில் முதல் தெரிவை நீக்கி மற்ற இரண்டையும் தேர்வு செய்யுங்கள். இப்படிச் செய்வதன் மூலம், ஏற்கனவே மறுமொழி இட்டவர்களின் மறுமொழிகளை மட்டுறுத்தத் தேவை இருக்காது. உங்கள் நண்பர்களின் மறுமொழிகள் உடனுக்குடன் வெளியாக உதவும்.
பயனுள்ள தொடுப்புகள்:
* WordPress.org உதவி மன்றம். – உங்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு இங்கு ஏற்கனவே பதில் இருக்கும்.
* WordPress.org ஆவணங்கள் – வேர்ட்பிரெஸ் நிரலில் மாற்றங்கள் செய்வது குறித்த வழிகாட்டி.
* How to install a self-hosted WordPress blog?
* Blogger to WordPress converts – Beginner questions
* தமிழ் வேர்ட்பிரெஸ் பயனர்கள் குழுமம்
* வேர்ட்பிரெஸ் பதிவுகளில் ஜிலேபி எழுத்துப் பிரச்சினையை நீக்குவது எப்படி?
* வேர்ட்பிரெஸ் குறித்த சின்னச் சின்ன ஐயங்களைக் கேட்டுத் தெளிய http://ravidreams.net/forum ஐப் பயன்படுத்த வரவேற்கிறேன்.
உங்கள் வேர்ட்பிரஸ் நிறுவலை இற்றைப்படுத்துவது எப்படி?
WordPress 2.7:
Tools–>Upgrade
WordPress 2.7க்கு முந்திய பதிப்புகள்:
எச்சரிக்கை: இது சோம்பேறிகளுக்கான குறுக்கு வழி 😉 . என் எல்லா பதிவுகளையும் இப்படியே இற்றைப்படுத்தினேன். ஒரு பிரச்சினையுமில்லை. தயங்குவோர் வேர்ட்பிரெஸ் வழிகாட்டியில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றலாம்.
1. http://wordpress.org/latest.zip இல் இருந்து வேர்ட்பிரெஸ் மென்பொருளைத் தரவிறக்கி wordpress அடைவைப் பிரித்தெடுங்கள்.
2. உங்கள் கணினியில் உள்ள wordpress அடைவுக்குள் உள்ள wp-contents அடைவை நீக்கி விடுங்கள். இது மிகவும் முக்கியம். கவனிக்க – நீங்கள் தரவிறக்கிக் கணினியில் வைத்திருக்கும் அடைவில் உள்ள wp-contentsஐ நீக்க வேண்டும். வழங்கியில் உள்ள wp-contentsஐ அல்ல.
3. இப்போது wordpress அடைவுக்குள் மீதம் உள்ள கோப்புகள், அடைவுகளை மொத்தமாகத் தெரிவு செய்து Filezilla கொண்டு உங்கள் வழங்கியில் வலைப்பதிவு வைத்திருக்கும் அடைவுக்குள் பதிவேற்றுங்கள். கவனிக்க – wordpress அடைவுக்குள் இருக்கும் கோப்புகளை select all செய்து வழங்கியுள் உள்ள அடைவுக்குள் போகுமாறு பதிவேற்றுங்கள். மொத்த அடைவையே அப்படியே பதிவேற்றினால் வழங்கியில் உள்ள wp-content கோப்புகளை அழித்து விடும்.
4. /wp-admin/upgrade.php செல்லுங்கள். உங்கள் தரவுத்தளத்தைப் புதுப்பிக்கச் சொல்லி கேட்கும். அதற்கு ஒப்புதல் தந்தவுடன் உங்கள் வேர்ட்பிரெஸ் இற்றைப்படுத்தப்பட்டிருக்கும்.
***
புதிய பயனர்களுக்கான குறிப்புகள்:
வேர்ட்பிரெஸ் நிறுவுவது எப்படி?
பார்க்க – இது குறித்த விரிவான என் ஆங்கில வலைப்பதிவு இடுகை – How to install a self-hosted WordPress blog?
சுருக்கமான குறிப்புகள்:
* உங்கள் தளத்தில் /cpanel என்ற முகவரியில் control panel வசதி இருக்கிறதா? ஆம் என்றால், உங்களுக்கான குறிப்புகள்:
Control Panelன் கடைசியில் Fantastico deluxe என்று இருக்கும். அதைச் சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில் இடப்பக்கப்பட்டையில் blogs என்பதன் கீழ் WordPress இருக்கும். அதைச் சொடுக்கி New installation என்பதைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் கேட்கப்படும் சிறு விவரங்களை நிரப்பி ஒரு நிமிடத்தில் வேர்ட்பிரெஸ் நிறுவிக்கொள்ளலாம்.
* Control Panel இல்லாதவர்களுக்காக குறிப்புகள்:
– உங்கள் வழங்கிக் கணக்கில் புதிய MySQL தரவுத்தளங்களை உருவாக்குவதற்கான பக்கத்தில் புதிய தரவுத் தளம் ஒன்றை உருவாக்குங்கள். தரவுத் தளப் பெயர், பயனர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள்.
– http://wordpress.org/latest.zip இல் இருந்து வேர்ட்பிரெஸ் மென்பொருளைத் தரவிறக்கி wordpress அடைவைப் பிரித்தெடுங்கள்.
– wp-config-sample.php என்ற கோப்பைத் திறந்து அங்கு உங்கள் தரவுத் தள விவரங்களை நிரப்பி அந்தக் கோப்பை wp-config.php என்ற பெயரில் சேமித்துக் கொள்ளுங்கள்.
– wordpress அடைவுக்குள் உள்ள கோப்புகள், அடைவுகளை மொத்தமாகத் தெரிவு செய்து Filezilla கொண்டு உங்கள் வழங்கியில் வலைப்பதிவு வைத்திருக்கும் அடைவுக்குள் பதிவேற்றுங்கள்.
– /wp-admin/install.php சென்று அங்கு கேட்கப்படும் சிறு விவரங்களை நிரப்பி 5 நிமிடத்துக்கள் உங்கள் பதிவை நிறுவிக் கொள்ளலாம்.
டிசம்பர் 2007ல் வேர்ட்பிரெஸ் தமிழாக்கத்துக்கான ஒரு பெருமெடுப்பிலான அழைப்பு விடுத்த ஒரு சில நாள்களிலேயே 3000க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கினோம். அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்
டிசம்பர் 2007ல் வேர்ட்பிரெசு தமிழாக்கத்துக்கான ஒரு பெருமெடுப்பிலான அழைப்பு விடுத்த ஒரு சில நாள்களிலேயே 3000க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கினோம். அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்:
1. வலை அடிப்படை தமிழாக்கம்
வலையில் தமிழாக்குவது பலருக்கும் இலகுவாக இருக்கிறது. po கோப்புகளை இறக்குவது, அதற்கான செயலிகளை நிறுவுவது என்பது பலரையும் மிரள வைக்கலாம். இந்த வலை அடிப்படைச் செயற்பாடில் அனைவரின் பங்களிப்புகளும் பதிவு செய்யப்படுவதும் வெளிப்படைத் தன்மை இருப்பதும் முக்கிய விசயங்கள்.
2. தமிழாக்கத் தளத்தின் எளிமை
நான் பார்த்த வரை மொழிபெயர்ப்புத் தளங்களில் http://translate.wordpress.com சிறப்பாக இருக்கிறது. கூகுள் மொழிபெயர்ப்புத் தளம் சுத்த சொதப்பல். உபுண்டுவுக்கு உதவும் Launch pad குழப்பமாக இருந்தது. இந்த முயற்சிகளில் இருந்து விலகிக் கொண்டதற்கு இந்தச் சொதப்பல் தளங்கள் ஒரு முக்கிய காரணம்.
3. Relaxed, native, community approach
தலைவர் என்று எவரும் இல்லாமல் எல்லாரையும் அரவணைத்துச் செயற்பட வேண்டும். தவறாகத் தமிழாக்கி விடுவோம் என்று பயந்தே பலர் பங்களிக்காமல் இருக்கலாம். அவர்களையும் ஊக்குவித்துப் பிழைகளைக் கண்டிக்காமல் கவனித்துத் திருத்த வேண்டும். சரத்தின் பொருளையும் சூழலையும் புரிந்து நம் பண்பாட்டுக்கு ஏற்ப எழுத ஊக்குவிக்க வேண்டும்.
4. தளம் முதலில் வெளிவரும் போதே தமிழ்ப்பதிப்பு கொண்டிருப்பது நன்று
தமிழ் விக்கிப்பீடியா எனக்கு அறிமுகமானது முதலே அதில் தமிழ் இடைமுகப்பைத் தான் கண்டு வருகிறேன். அதனால் அது மிக இயல்பாகவும் உறுத்தல் இன்றியும் இருக்கிறது. ஆனால், வேர்ட்பிரெசில் ஆங்கில இடைமுகப்புக்குப் பழகியவர்களுக்குத் திடீரென்று தமிழ் இடைமுகப்புக்குப் பழக்கப்படுத்திக் கொள்ள சிரமமாக இருக்கிறது. எனவே, ஒரு பன்மொழித் தளத்தை அறிமுகப்படுத்துகையில் எவ்வளவு விரைவாகத் தமிழாக்க முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து விட வேண்டும்.
5. தளத்தின் பயனர்களே தமிழாக்க வேண்டும்
வேர்ட்பிரெசு பயன்படுத்தாத சிலரும் தமிழார்வத்தின் காரணமாக கலந்து கொண்டார்கள். இதனால், இச்சரங்களின் பயன்பாட்டை உணராமல் சில பிழையான தமிழாக்கங்கள் நேர்ந்தன. எனவே, தமிழார்வத்தின் பேரால் ஏதாவது ஒரு தளத்தைத் தமிழாக்க முனையும் முன், இயன்றவரை அத்தளத்தைப் பயன்படுத்திப் பழகிக் கொள்வது நல்லது.
6. தமிழாக்குவதை விட தமிழிலேயே ஆக்குவது சிறந்தது
என்ன தான் சிறப்பாகத் தமிழாக்கினாலும் நிரலாக்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பிற மொழிச் சரங்களை இயல்பாகத் தமிழாக்குவது சிரமமாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, வேர்ட்பிரெசு தமிழாக்கத்தில் on, by போன்ற சொற்களை எல்லாம் தனித்தனியே மொழிபெயர்க்கச் சொல்லி இருந்தார்கள். இவற்றை ஒன்று அப்படியே on, by என்று மொழிபெயர்க்காமல் விட வேண்டும். அல்லது, அன்று / மேல், ஆல் போன்று மொழிபெயர்க்க வேண்டும். இரண்டுமே சொதப்பல் தான். எல்லா இடங்களிலும், ஆங்கிலத்தில் நிரல் எழுதுவோர் பிற மொழிகளில் இலக்கண நெளிவு சுளிவுகளை உணர்ந்து நிரல் எழுதுவார்கள் என்று எதிர்ப்பார்க்க இயலாது.
இதற்கு என்ன தான் தீர்வு?
காலத்துக்கும், பிற மொழியினர் உருவாக்கிய செயலிகளைத் தமிழாக்கிக் கொண்டு மட்டும் இராமல், தமிழரே உலகத் தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கவும் அவற்றில் நேரடியாகத் தமிழ் மொழிக்கான சரங்களை எழுதவும், கூடவே அதை ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து சந்தைப்படுத்த முனைவதும் தான் ஒரே தீர்வாக இருக்கும்.
நான் பயன்படுத்தும் வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள் பட்டியல்
நான் பயன்படுத்தும் வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள்:
1. Akismet – எரிதத் தடுப்புக்கு.
2. Subscribe to Comments – வாசகர்கள் தங்கள் விருப்ப இடுகைகளின் மறுமொழிகளை மின்மடலில் பெற்றுக் கொள்ள.
3. Automattic stats – WordPress.comல் கிடைப்பது போலே நம் தனித்தளத்தில் நிறுவப்பட்ட WordPressக்கும் அருமையான புள்ளிவிவரங்கள் பெற.
4. All in one SEO pack, Google (XML) sitemaps generator – தேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்ற.
5. WordPress dashboard editor – கட்டுப்பாட்டகத்தில் உள்ள தேவையற்ற தகவல்களை நீக்க, புதிய வசதிகளைச் சேர்த்துக் கொள்ள.
6. Exec-PHP – இடுகைப்பக்கங்களில் PHP கட்டளைகளை எழுத.
7. Smart archives – தொகுப்புப் பக்கங்களை உருவாக்க.
8. Simple Tags – குறிச்சொல் மேலாண்மை.
9. Page links to – பக்கங்களை வேறு தளங்களுக்கு வழிமாற்ற.