Category: கவிதை
-
குட்டிம்மா
—
in கவிதைமுடிதிருத்தும் அண்ணன் ஆச்சரியப்பட்டு இருக்க வேண்டும். குட்டிம்மா பதுவிசாய்ப் போவாள். எட்டிப் பிடித்து, இருக்கையில் அமர்ந்து கொள்வாள். அவர் கேட்பார் “ஷாலினி cutting வெட்டட்டா” இவள் சொல்வாள்: ‘ம், அப்படியே shavingம்’ முடிதிருத்தும் அண்ணன் ஆச்சரியப்பட்டுத்தான் போவார். குட்டிம்மா என்றால் குறும்பு. “அண்ணா… Monkey அண்ணா” கூவிக்கொண்டே வருவாள் குட்டிம்மா. பின், என் காதுக்கு மட்டும் சொல்வாள் “Monkey ன்னா கொரங்கு ! ஒனக்குத் தெரியாதா?” குட்டிம்மாவை கண்டா அடிடா ராமா பல்டி ! குட்டிம்மா முன்…
-
இதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள்… (கவிதை)
—
in கவிதைஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு கட்டில். அப்புறம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி அடைந்து கிடக்கும் என் அறையில், இன்னும் எதை வாங்கி வைத்தாலும் கேட்கப் போவதில்லை. சாப்பிட்டாயா என்று. — பட உதவி: LynGi பட உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் – வணிகமல்லா, மேற்படிப் பயன்பாடு – 2.0
-
தனிமையின் பெயர்
—
in கவிதைஉறக்கம் வரா ஆம்சுடர்டாம் இரவு 11.30 மணி. ஏதோ பேசித்தீர்க்க விழையும் மனம். — பெல்சியம், செருமனி, லக்சம்பர்க், பிரான்சு.. ”இத எல்லாம் நாங்க TVல தான் பார்க்கணும்..நீ நேர்லயே பார்க்கிற..” – அப்பா. “எந்த TVயும் உங்கள காட்டுதில்லையே..” – நான். — சின்ன வயசுல உலகம் பார்ப்பது சாதனையாம். பறவை கூட தான் நாடு விட்டு நாடு போகிறது. சாதனையா என்ன? பிழைப்பு ! — பார்க்க, பேச வலைப்படக் கருவியும் தொலைபேசியும் உண்டு.…