ஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு கட்டில்.
அப்புறம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி
அடைந்து கிடக்கும் என் அறையில்,
இன்னும் எதை வாங்கி வைத்தாலும் கேட்கப் போவதில்லை.
சாப்பிட்டாயா என்று.
—
பட உதவி: LynGi
பட உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் – வணிகமல்லா, மேற்படிப் பயன்பாடு – 2.0
Comments
One response to “இதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள்… (கவிதை)”
ரவி
கவிதைக்குப் பொய் அழகு தான்!
ஆனால் அதற்காக நீங்கள் பொய் சொல்லலாமா?
நாற்காலி,கட்டில்,தொ.கா சரி!
கணினி/மடிக்கணினி; அதை ஏன் சொல்லாமல் மறைத்தீர்கள்? :-))
பதிவெழுதத் துணை செய்யும் அது பசிக்கும் அலாரம் வைக்கிறதாமே! நண்பன் சொன்னான்!
சரி, நேரமாச்சு!
சாப்பிட்டீர்களா?? 🙂
என்ன சமையல்???