தமிழார்வலருக்கு உதவி தேவை

நன்றி: நற்கீரன், மயூரேசன், மீ. கணேசன், மு. கார்த்திக், செ. இரா. செல்வக்குமார், கோபி, சுந்தர், சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007 ஆகிய 7 பேர் தந்தது + என் சிறு பங்களிப்பு : இந்திய ரூபாய் 28,750.

இந்திய ரூபாய் 25,000 செலவில் Intel centrino dual core கணினி ஒன்றும்,  LG Flat 18 அங்குல கணினித் திரை ஒன்றும் தமிழார்வல நண்பருக்கு அளித்திருக்கிறோம். மீதி பணமும் இணைய இணைப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக அவரிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

19 பிப்ரவரி 2010

****

தமிழார்வல நண்பர் ஒருவர் இளங்கலை தாவரவியல், நூலக அறிவியலில் பட்டயப்படிப்பு படித்திருக்கிறார்.  தற்போது உழைப்பதில் பெரும்பகுதி கைக்காசைச் செலவழித்து இணைய உலாவு மையத்துக்கு வந்தே தமிழ்ப் பணி ஆற்றுகிறார். நண்பர்கள் சேர்ந்து அவருக்கு முதற்கட்டமாக ஒரு இணைய இணைப்புடன் கூடிய கணினியும், scannerம் வாங்கித் தர விரும்புகிறோம். இதன் மூலம் அவரது தமிழ்ப் பணிகளைச் செலவின்றிச் செய்யலாம். கூடுதலாகப் பங்களிக்கலாம். கணினி மூலம் வருமானத்துக்கான பிற வழிகளையும் தேடலாம். இந்தக் கணினி, பிற கருவிகள் செலவுக்கு இந்திய ரூபாய் 30, 000 வரை ஆகலாம்.

உங்களில் எவரும் இயன்ற தொகையை நன்கொடையாகத் தர இயலுமானால் மிக உதவியாக இருக்கும்.

பணத்தை PayPal மூலமாகவோ காசோலை மூலமாகவோ அனுப்பலாம். அல்லது, எமது ICICI வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

உதவ விரும்புவோர் என்னுடைய எண் 99431 68304 க்கு அழைக்கலாம். ravidreams at gmail dot com க்கு எழுதலாம். அல்லது, இங்கே மறுமொழிகளில் தெரிவியுங்கள்.

நன்றி.


Comments

5 responses to “தமிழார்வலருக்கு உதவி தேவை”

 1. நான் உதவ விழைகிறேன். விபரங்களை தனிமடலுக்கு அனுப்பவும்.

  1. homeonesan Avatar
   homeonesan

   அன்பு இளவல் கார்த்திக்,
   சேலம் நண்பர்க்கு கணினி வாங்க முதலுதவியாக ரூ.2000/= நான் உவந்து அளிக்கிறேன்.என் அன்பளிப்பை செலுத்தும் வழிவகையைத் தெரிவியுங்கள்.

 2. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  நன்றி கார்த்திக். நானும் இன்னும் சில நண்பர்களும் எங்களால் இயன்ற தொகையைப் பகிர இருக்கிறோம்.

  வணக்கம் மீ.க., நீங்கள் உதவ முன்வந்திருப்பதில் மகிழ்கிறேன். உங்களை அழைத்து விவரங்களைத் தெரிவிக்கிறேன்.

 3. ரவி நல்ல முயற்சி.
  என்னால் முயன்ற ஒரு சிறுதொகையை அனுப்பிவைத்துள்ளேன். ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி.

 4. ரவி, உங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்கு விவரங்களை எனக்கு மடலில் அணுப்புங்கள். நான். ஒரு தொகையை அதில் செலுத்தி விடுகிறேன்.