புதிர்: நான் எந்த கட்சிக்கு வாக்களித்தேன்?

நேற்று முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல். சிவகங்கை தொகுதி. நான் எந்த கட்சிக்கு வாக்களித்தேன் ? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் !

உதவிக் குறிப்புகள்:

* போட்டியிட்ட வேட்பாளர்கள் பட்டியல்

* காங்கிரசு கூட்டணிக்கோ, தேர்தல் வெற்றிக்குப் பின் அதனுடன் சேரக்கூடிய கட்சிக்கோ வாக்களிக்கக்கூடாது.

* நான் வாக்களித்த கட்சிக்கு வாக்களிப்பேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. வாக்களிப்பதற்கு ஒரு நாள் முன்பு கூட நினைக்கவிலை. இனி, வாழ்நாள் முழுதும் அந்தக் கட்சிக்குத் திரும்ப வாக்களிக்கும் எண்ணமும் இல்லை.

அது என்ன கட்சி?

துணுக்குகள்:

* மாமா ஊரில் உள்ள பெண்கள் அ.தி.மு.க விடம் மட்டும் காசு வாங்கிக் கொண்டார்களாம். தி.மு.க-வும் கொடுத்தது. ஆனால், இரண்டு கட்சிகளிடம் பெற்றுக் கொண்டு ஒருவருக்கு மட்டும் வாக்களிப்பது சரி இல்லை என்பதால் மறுத்து விட்டார்களாம் !!

* தலைக்கு 200 ரூபாய். ஏமாந்த தலை என்றால் 50 ரூபாய். மற்றவர்களுக்கு அதுவும் இல்லை. நிறைய இடங்களில் உள்ளூர் கட்சித் தலைவர்கள் ஒன்றுமே கொடுக்காமல் சுருட்டி இருக்கிறார்கள்.

* நகரத்தை விட ஊர்ப்புறத்தில் வாக்குப்பதிவு கூடுதலாகத் தென்பட்டது. அப்பா சொன்னார்: “வாக்கு போடாட்டி செத்துப் போயிட்டதா நினைச்சிடுவாங்கன்னு தான் கிழவன் கிழவி எல்லாம் மெனக்கெட்டு வந்து வாக்களிக்கிறாங்க” !

* பத்துக்கு ஒன்பது நண்பர்கள் “49-O” போடச்சொன்னார்கள். கடைசியில் அதைப் போடவும் அவர்கள் வாக்களிக்கச் செல்லவில்லை 🙁 49O பற்றிச் சொல்வது ஒரு புதுப் போக்கு மாதிரி ஆகிவிட்டது.

* அம்மா விசயகாந்துக்கு போட்டார்களாம். “படத்தில் எல்லாம் நல்லா நடிக்கிறான். ஏதாச்சும் நல்லது பண்ணுவான்” என்கிறார்கள் !!


Comments

18 responses to “புதிர்: நான் எந்த கட்சிக்கு வாக்களித்தேன்?”

  1. புதிய தமிழகம்??

    பிசேபி கூட்டணியில் இருப்பதால காங்கிரசு கூட சேர மாட்டாங்கன்னு நினைச்சு போட்டியா?

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      ஆகா, புதிய தமிழகம் பிசேபி கூட்டணியா? தெரிஞ்சிருந்தாலும் போட்டிருக்க யோசிச்சிருப்பேன். எப்படி இருந்தாலும், செயிக்கக்கூடிய எந்த தமிழ்நாட்டுக் கட்சியும் மத்தியில் ஆட்சியமைக்க கூடிய கட்சியுடன் தேர்தலுக்குப் பின் கூட்டு சேரத் தயங்காதுன்னே நினைக்கிறேன். பிசேபியைத் தவிர எந்தக் கட்சியும் காங்கிரசோடு சேராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

  2. என்னங்க ரவி, நீங்க சொன்னதை வைச்சு பார்க்கும் போது அதிமுக-விற்கு தான் போட்டிங்கன்னு தெரியுது. ஆனா நீங்க கண் காணாத தேசத்துல இல்ல இருக்கீங்கன்னு நினைச்சுட்டு இருக்கேன்.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      ஒரு கட்சிக்கு வாக்களிக்காம விட்டமேன்னு கவலைப்படலாம். ஏன்டா வாக்களிச்சோம்னு கவலைப்படுற மாதிரி ஆகக் கூடாது. கண்டிப்பா அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கல. அப்புறம், இந்தியா வந்து 6,7 மாசம் ஆச்சுங்க. கோவைல இருக்கேன்.

  3. சயந்தன் Avatar
    சயந்தன்

    நான் நினைக்கிறேன்.. நீங்க வாக்கு மெசினை off/ on செய்கிற பட்டனை அழுத்திட்டு வந்திருக்கிறீங்க.. அத அமத்தினாலும் திமுக பல்புதான் எரியுதா..

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      அடடா, முன்னமே இந்த யோசனையை சொல்லாம போனீங்களே சயந்தன் 🙂

  4. என்ன கொடுமை இது ரவி. அந்த கட்சிக்கா வாக்களிச்சீங்க… என்னமோ போங்க ;-))

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      ஆமாங்க அந்தக் கட்சிக்குத் தான் வாக்களித்தேன் 😉

  5. இரட்டை இலைக்கு ஜெ!

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      இல்ல, லக்கி ஒரு நாளும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டேன். ஈழப் பிரச்சினையில் கலைஞரைத் தண்டிப்பதற்காக செயலலிதாவுக்கு வாக்களியுங்கள் என்ற பரப்புரைக்கு மயங்கவில்லை.

  6. கா. சேது Avatar
    கா. சேது

    நீங்க ‘ஓ’ போட்டேன் என சொல்லியிருந்தால் வியப்புற்றிருக்க மாட்டேன். சரி அதென்ன ‘வெங்காயநாயம்’ ?

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      எனக்கென்னவோ, 49ஓ போடுன்னு சொல்றது அறிவுசீவித்தனமான ஒன்னு மாதிரி தோணுது. அது உடனடி தீர்வைத் தரும்னு நம்பிக்கை இல்லை.

      வெங்காயநாயகம் = சனநாயகம்

  7. கா. சேது Avatar
    கா. சேது

    திருத்தம்: வெங்காயநாயகம் ?

  8. கார்த்திக் Avatar
    கார்த்திக்

    சுயட்சைல நல்ல சின்னமா நமக்கு புடிச்ச சின்னமா பாத்து குத்தவேண்டியதுதாங்க

  9. கதிரவன் Avatar
    கதிரவன்

    ARIMAZHAM THIYAGI SUBRAMANIAN MUTHARAIYAR M

  10. nighal Avatar
    nighal

    how could I follow ur blog in my blogger account?reply me through comment option in my blog..

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      Nighal,

      1. Go to http://www.blogger.com/home
      2. Under the “Blogs I’m following” section, click on the Add button.
      3. Give my blog URL http://blog.ravidreams.net and follow the directions.

      Thanks for your interest in following my blog.

  11. Makkal Manadu Katchi ?