கூகுள் ஆட்சென்சு மூலம் விளம்பரங்கள் தந்ததில் இது வரை கற்றவை:
* கூகுள் தமிழ் வலைப்பதிவுளுக்கு விளம்பரம் தருவதில்லை. ஒரு ஆங்கில வலைப்பதிவைக் காட்டி ஒப்புதல் வாங்கி, அதே ஆட்சென்சு நிரலைத் தமிழ் வலைப்பதிவிலும் இட்டு விளம்பரங்கள் காட்டலாம்.
* வலைப்பதிவு முழுக்க தமிழ்ச் சொற்களே இருந்தால் பொருத்தமான விளம்பரங்கள் வருவதில்லை. இடுகையின் பெயர், முகவரி, குறிச்சொற்கள், உள்ளடக்கத்தில் பொருத்தமான ஆங்கிலச் சொற்களைத் தந்தால் விளம்பரங்களின் தரம் கூடுகிறது.
* தளப் பெயர் ரொம்ப முக்கியம். என் தளப் பெயரில் dreams இருப்பதால், வேறு பொருத்தமான சொற்கள் இல்லா இடங்களில் dreams தொடர்பான விளம்பரங்கள் காட்டிக் கொல்கிறது 🙁
* விளம்பரங்களை ஒழுங்குபடுத்த Adsense manager நீட்சி உதவுகிறது.
Comments
26 responses to “Google Adsense”
ரவி, ஒரு சந்தேகம். Google Adsense தளத்தில் தெரிந்தாலே பணம் கிடைக்குமா அல்லது யாரேனும் அதில் சொடுக்கினால் மட்டுந்தான் பணம் கிடைக்குமா?
பிரேம்குமார்,
சொடுக்கினால் தான் பணம். ஒரு சொடுக்குக்கு எவ்வளவு என்பது விளம்பரத்தைப் பொருத்து மாறும். ஒவ்வொரு 100 டாலர் சேரும்போதும் பணம் அனுப்பி வைப்பார்கள்.Sir
nan social network site ready panna pora sir
minimum evlo vist vantha profit sir
Adsense மட்டும் வைச்சு காசு வரணும்னா ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் ஆட்கள் வரணுங்க. அப்ப தான் மாதம் 5,000 INRஆவது கிடைக்கும். அதற்கு மேல வேணும்னா இலட்சக்கணக்கில் ஆட்கள் வரணும். வெறும் Adsense விளம்பர வருமானத்தை வைத்து இதனை ஒரு வெற்றிகரமான தொழிலாக நடத்த முடியாது என்றே நினைக்கிறேன்.
//ரவி, ஒரு சந்தேகம். Google Adsense தளத்தில் தெரிந்தாலே பணம் கிடைக்குமா அல்லது யாரேனும் அதில் சொடுக்கினால் மட்டுந்தான் பணம் கிடைக்குமா?//
இரண்டுமே உண்டு
பிரேம்குமார், மேலே துல்லியமற்ற தகவல் தந்ததற்கு வருந்துகிறேன். ஒவ்வொரு சொடுக்குக்கும் பணம், பிறகு ஒவ்வொரு 1000 முறை விளம்பரங்களைக் காட்டுவதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் என்று புரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால், கூகுள் தரும் விவரங்கள் சற்று குழப்புகிறது. புருனோ, மயூ போன்று ஆட்சென்சு அனுபவம் உள்ளவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
//ஒவ்வொரு சொடுக்குக்கும் பணம், பிறகு ஒவ்வொரு 1000 முறை விளம்பரங்களைக் காட்டுவதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் என்று புரிந்து கொண்டிருக்கிறேன். //
அப்படித்தான்
நன்றி ரவி & மரு.புருனோ 🙂
நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்
ரவி தமிழ் மூலம் தரும் தகவல்களுக்கு என் நன்றிகள்,
எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன,உங்கள் பதிலை எதிர்பார்த்து அருள்……..
1. நான் வோர்ட்ப்ரஸ் மூலம் பதிவுகளை செய்து அதை freeweb hosting மூலம் என் சொந்த டொமைன் பெயரில் வெளியிடுகிறேன் என்றால் எனக்கு கூகிள் அட்சென்ஸ் ஒப்புதல் கிடைக்குமா?
2. நான் மேல்சொன்ன அனைத்தும் இலவசமாகவே கிடைக்கும் (டொமைன் பெயர் தவிர ), அப்படி இருக்கும் போது வோர்ட்ப்ரஸ்-ல் freeweb hosting மூலம் வெளயிடும் என்னுடைய ப்லோக்-கிற்கு அட்சென்ஸ்-ஐ இணைக்க (வோர்ட்ப்ரஸ்-க்கு )ஏதும் கட்டணம் செலுத்த வேண்டுமா? (premium a/c மட்டும் தான் அட்சென்ஸ் இணைக்க முடியும் என்று கேள்விபட்டேன் அப்படியா?)
3. தற்போதுள்ள என் ஆரம்ப நிலையில் நான் எதற்கும் பணம் செலுத்துவதாக இல்லை (பின்னாளில் கண்டிப்பாக paid hosting plan-க்கு மாறுவேன்) இந்த நிலையில் எனக்கு ஆலோசனை தேவை.
1. தளத்தை இலவச வழங்கியில் வைத்திருப்பது பிரச்சினை இல்லை (அந்த இலவச வழங்கி ஏதேனும் காரணங்களுக்காக கூகுளின் தடைப்பட்டியலில் இல்லாத வரை). தளத்தின் உள்ளடக்கம், அதன் மொழி என்ன என்று பார்த்தே கூகுள் ஒப்புதல் அளிக்கும்.
2. ஆட்சென்சுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் பணம் கட்டத் தேவை இல்லை. உங்கள் தளத்தை WordPress.com போன்ற இலவச வழங்கிகளில் வைத்திருந்தால் சில வசதிகளைப் பெறுவதற்காக WordPressக்குத் தான் பணம் கட்ட வேண்டி இருக்கும்.
3. உங்கள் தளப் பெயர் என்ன, எந்த இலவச வழங்கியில் வைத்திருக்கிறீர்கள் என்றால் இன்னும் விரிவாகப் பேசலாம்.
பதில் அளித்தமைக்கு நன்றி ரவி,
அட்சென்ஸ்-க்கு பணம் கொடுக்க தேவைஇல்லை என்பதை அறிவேன்.முந்தய கேள்வி உங்களுக்கு புரியுமாறு நான் கூறவில்லை அதற்கு வருந்துகிறேன்.
வோர்ட்ப்ரஸ் tool மூலம் ப்லோக் உருவாக்கி (www000webhost.com) freeweb hosting மூலம் சொந்த டொமைன் பெயரில் வெளியிட்டால் என்னுடைய ப்லோக்-கிற்கு அட்சென்ஸ்-ஐ இணைக்கவோ அல்லது இதர வசதிகளை பெறவோ வோர்ட்ப்ரஸ்-க்கு ஏதும் கட்டணம் செலுத்த வேண்டுமா?
கூகுளின் தடைப்பட்டியலில் உள்ள இலவச வழங்கி சேவைகளின் பெயர்களை எவ்வாறு தெரிந்து கொள்வது?
உங்களுக்கு தெரிந்த இலவச வழங்கி சேவைகளின் பெயர்களை கூறவும்?
Joomla vs WP எது சிறந்தது?நேரமிருந்தால் விளக்கவும்(blog,comment இவற்றை தவிர)?
நன்றி……
ஆமா அருள். உங்கள் கேள்விகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது.
WordPress.org மென்பொருளைப் பயன்படுத்தித் தங்கள் சொந்த அல்லது இலவச வலை வழங்கியில் பயன்படுத்துவோர் எதற்காகவும் WordPressக்குப் பணம் கட்டத் தேவை இல்லை.
கூகுளின் தடைப்பட்டியலில் உள்ள வழங்கிகள் விவரம் தெரியவில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழங்கியின் பெயரை கூகுள் தேடலில் இட்டு அதைப் பற்றி எதிர்மறையான செய்தி எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்வது ஒரு வழி.
நான் எந்த இலவச வழங்கியையும் சோதித்துப் பார்த்தது இல்லை என்பதால் எதையும் பரிந்துரைக்க இயலவில்லை.
நானே எல்லா வசதிகளும் கூடிய Hostgator வழங்கி இடத்தை முதல் ஆண்டு மட்டும் இலவசமாக அளிக்கிறேன்.
http://ravidreams.com/free-wordpress-hosting/ பார்க்கவும். உங்களுக்குப் பயன்படுமா பாருங்கள்.
WordPressல் இல்லாத சில கூடுதல் வசதிகள் Joomlaவில் உண்டு. நான் ஒரு வாரம் முழுக்க உட்கார்ந்து Joomla பழகிப் பார்த்தேன். தலை சுற்றியது. பயன்படுத்த, பழக எளிமையாய் இல்லை.
//WordPressல் இல்லாத சில கூடுதல் வசதிகள் Joomlaவில் உண்டு. நான் ஒரு வாரம் முழுக்க உட்கார்ந்து Joomla பழகிப் பார்த்தேன். தலை சுற்றியது. பயன்படுத்த, பழக எளிமையாய் இல்லை.//
wordpress vs blogger விவாதத்தில் நான் ப்ளாகருக்கு ஆதரவாக வோர்ட்பிரசிற்கு எதிரா கூறிய கருத்துக்கள் Joomla vs wordpress விவாதம் வந்தால் வோர்ட்பிரசிற்கு ஆதரவாக ஜூம்லாவிற்கு எதிராக பயன்படுத்தலாம்
பதில் அளித்தமைக்கு நன்றி ரவி,
நீங்கள் அளித்த தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தது மிகவும் நன்றி.நான் வலை பதிவு தொடங்குவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று நினைகிறேன்.அப்பொழுது கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன்.
[…] சேர்ந்த 17 வயது மாணவர் சங்கர் கணேசு Adsense மூலமாக மட்டுமே ஒவ்வொரு மாதமும் 20,000+ […]
adsense now india kku blogs laam google approved kodukka villai …
im creater any one want adsense contact me
[email protected]
…
தற்போது யாருக்கும் சுலபமாக ..adsense account .கிடைப்பது இல்லை …இதனால் பல ப்ளாக் மற்றும் வெப்சைட் உரிமையாளர்கள் ..நல்ல விளம்பர வருமானத்தை பெற முடியாமல் போகின்றனர் ..இந்த குறையை போக்க ..வெறும் 400 செலவில் ..புதிய அட்சென்ஸ் accont ..நங்கள் உங்கள் பெயரில் உருவாக்கி ..தருகிறோம் ..இரண்டே நாளில் …account ஐ ..பெற்ற பிறகே ..பணம் செலுத்தினால் போதுமானது … வேண்டியவர்கள் ..தொடர்பு கொள்க .. [email protected] ..
Enaku Google adsense account create panni thara mudiyuma?
பெரிய நிறுவனங்களுக்கு தொழில்முறை ஆதரவு தர பின்வரும் கூகுள் கூட்டாளிகள் உள்ளனர் – http://www.google.co.in/adsense/start/partners/partners.html . மற்றபடி, உங்களிடம் ஏற்கனவே ஒரு கூகுள் கணக்கு இருந்தால் கூகுள் adsense கணக்கு உருவாக்குவது பெரிய சிரமம் இல்லை. கூகுளில் தேடியே கற்றுக் கொள்ளலாம். நன்றி.
Sir
minimu how many members visit vantha profit sir
google adsense venum sir
tamil99 ஒரு வணிக நோக்கமற்ற தளமல்லவா?. அதில் எப்படி வணிகத்தினைப் புகுத்துவீர்கள் ரவி?
செகதீசுரவன், tami99.org வணிக நோக்கமற்ற தளம் தான். adsense சோதனைக்காக சில நாட்கள் அதில் விளம்பரங்கள் இட்டிருந்தேன். அதில் பெரிதாக பணம் வந்த நினைவில்லை. கடந்த பல ஆண்டுகளாக அதில் விளம்பரங்கள் ஏதும் இல்லை. வணிக நோக்கமற்றது என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் தளப் பெயர் புதுப்பிப்பு, வழங்கிக்கு என்று செலவு உண்டு. இச்செலவுக்கு நன்கொடை பெற்றுக் கொள்கிறேன்.
இது குறித்துச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
வணிக நோக்கமற்ற தளத்தினை விளம்பரங்களை இணைக்கும் பொழுதிலும் அத்தளத்தின் நோக்கம் கேள்விக்குட்படும் அபாயம் இருப்பதையே தெளிவுப்படுத்திக் கொள்ள விரும்பினேன். பதிலுரைத்தமைக்கு நன்றி நண்பரே.
ஆம், செகதீசுவரன். இப்போது கூடுதல் தெளிவுடன் இருக்கிறேன். இந்த இடுகை எழுதியது 2009ல் 🙂
ஆங்கில ப்ளாக்கிற்கு வாங்கிய அட்சென்ஸ்யை தமிழ் தளத்திற்கு உபயோகிக்கலாமா?
கூகுளின் விதிமுறைகளின் படி கூடாது. ஆனால், பயன்படுத்தலாம். அவர்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை.