தொடுப்புகள் – August 24, 2008

1. தமிழில் கூகுள் செய்திகள் – தினத்தந்தி, மாலைமலர் போன்ற ஒருங்குறியில் இல்லாத தமிழ்த் தளங்களில் இருந்தும் செய்திகளைத் திரட்டித் தானியக்கமாகத் தொகுத்துத் தருகிறது. சில புதிய தமிழ்ச் செய்தித் தளங்களும் தென்படுகின்றன.

2. RSS Meme – வலையில் யார் எதை விரும்பிப் படித்துப் பகிர்கிறார்கள் என்று அறியலாம். இத்தளத்தின் This Week பகுதியில் உண்மையிலேயே நல்ல தொடுப்புகளைக் கண்டு கொள்ளலாம்.

3. Down For Everyone or Just me – ஏதாவது தளம் படுத்துவிட்டால் உங்களுக்கு மட்டும் தானா இல்லை எல்லாருக்குமா என்று அறியலாம்.

4. PhD Comics – ஐயோ பாவம் ஆராய்ச்சி மாணவர்கள் குறித்த துறை சார் நகைச்சுவைத் தளம் 🙂

5. xkcd – புகழ்பெற்ற வலை நகைச்சித்திரத் தளம். அண்மையில் வெளிவந்த கீழே உள்ள நகைச்சித்திரம் பெரிதும் பேசப்பட்டது. நம்ம நிறைய பேருக்குப் பொருந்துமோ?

கடமை அழைக்கிறது !
கடமை அழைக்கிறது !

6. டுவிட்டர் தேடல் – செய்திகள் நிகழ நிகழ சுருக்கமாக உடனுக்குடன் அறிய டுவிட்டர் தேடல் உதவும். இப்ப நிறைய தமிழ்ப் பதிவர்கள் கூட டுவிட்டரில் இருக்கிறார்கள்.

7. Flickr தளத்தில் நிறைய அழகான படங்கள் இருக்கும். ஆனால், முழு அளவு இல்லாமலோ தரவிறக்கவே முடியாமலோ இருக்கும். Flickrல் முழுப் படத்தையும் உருவுவதற்கு ஒரு குறுக்குவழி.

விளம்பரங்கள் 🙂

8. உளறல் – தமிழ் டுவிட்டர் போல் ஒரு முயற்சி.

கடைசியா ஒரு கேள்வி !

ஒரு தொடுப்பு இடுகையில் குறைந்தது / கூடுதல் எத்தனை தொடுப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும்?


Comments

9 responses to “தொடுப்புகள் – August 24, 2008”

  1. —ஒரு தொடுப்பு இடுகையில் குறைந்தது / கூடுதல் எத்தனை தொடுப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும்?—

    1 😉

    and frequency – daily 🙂

  2. phd comics நல்லா இருக்கு.

    ஒரு தொடுப்பு இடுகையில் குறைந்தது / கூடுதல் எத்தனை தொடுப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும்?
    நெறைய போட்டா படிக்காமல் போகிற வாய்ப்பு இருக்கு. ஒண்ணேலேந்து
    ஐந்தாறு வரை ஓகே.

  3. அருண் Avatar
    அருண்

    Hi ravi,

    please dont publish this comment. Please use http://twitterfeed.com/ for your blog post updates to appear automatically there.

  4. அனைத்து தொடுப்புகளும் உதவியாக இருந்தது ரவி!! என் எண்ணம் ஐந்து முதல் ஏழு திடுப்புகள். அதற்கு மேல் ஒரே நேரத்தில் பார்க்க எனக்கு பொருமை இல்லை 🙂

  5. மூன்று முதல் நான்கு வரை

  6. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    Balaji – ஒரு snapjudge தான் இருக்க முடியும் 🙂

    sathia, புருனோ, தனசேகர் – நன்றி. கூட்டிக் கழிச்சுப் பார்த்து, இனி ஐந்தைந்து தொடுப்புகளாக தரலாம் என்று நினைக்கிறேன் 🙂

    அருண் – Twitterfeed பத்தி தெரியும். ஆனா, எல்லா இடுகை பத்தியும் டுவிட்டரில் செய்தி தந்து தொல்லை பண்ண வேணாமேன்னு விட்டுட்டேன்.

  7. sureshkannan Avatar
    sureshkannan

    ரவி,

    ‘தொடுப்புகள்’ என்பதை விட வேறு ஏதாவது வார்த்தை நன்றாக இருக்குமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன். ஏனெனில் ‘தொடுப்பு’ என்கிற வார்த்தை பொதுவாக அடல்டரி, வைப்பாட்டி போன்றவற்றோடு தொடர்பான கொச்சையான வார்தை. 🙂

  8. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    sureshkannan,

    🙁

    முந்தைய இடுகையில் தொடுப்பு, சுட்டி, இணைப்பு போன்ற சொற்கள் குறித்து உரையாடினோம்.

  9. sureshkannan Avatar
    sureshkannan

    ரவி,

    இப்போதுதான் படித்தேன். நன்றி.