பொது இடத்தில் முத்தமிடலாமா?

ஒழுங்கு மரியாதையாய்

– ஒரு முறை நான் கேட்ட –

உன் பத்தாம் வகுப்புப் புகைப்படத்தையே தந்திருக்கலாம்.

ஒரு நாளுக்கு ஒரு முறையோ பத்து முறையோ

கட்டிலுக்கு அடியில் உள்ள பெட்டியை திறந்து பார்ப்பதில்

ஒரு கஷ்டமும் இருந்திருக்காது எனக்கு.

படிய வாரிய கூந்தலுடன்

ரயிலேறும் வரை நிதானித்த அழகிய மௌனமும்

ஆரத்தழுவிய முத்தத்தில் கலைந்திருக்காது.


Comments

7 responses to “பொது இடத்தில் முத்தமிடலாமா?”

  1. மயூரேசன் Avatar
    மயூரேசன்

    கவிதையெல்லாம் பலமா இருக்குது…..
    பின்னணியில ஏதும் கதை இருக்குதோ????

  2. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    எல்லாம் autograph தான் மயூரேசன் 🙂 தொடர்ந்து வரும் !!

  3. mahatmamani Avatar
    mahatmamani

    தலைவா இந்த வார்தை எப்படி வருது எங்க ஊர் அல்வா மாதிரி

  4. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    எல்லா இடுகைகளையும் படித்துப் பார்த்து கருத்து சொல்லி ஊக்கப்படுத்துவதற்கு நன்றி, mahatmamani. நீங்க திருநெல்வேலியா? 🙂

  5. ம்ம்ம்… மயூரேசன் சொன்ன பிறகுதான், அது கவிதை என்று தெரிந்தது.. 😛

    அது சரி, கவிதைக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு என்று இன்னமும் விளங்கவில்லை… 🙁

  6. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    மணி, தன் படைப்பைத் தானே விளக்க வேண்டிய சோகம் மட்டும் எந்தப் படைப்பாளிக்கும் வரக்கூடாது 😉

  7. நன்றாக உள்ளது உங்கள் இணையம் தொடர வாழ்த்துகள்
    கவிஞர்வாலிதாசன்
    முகவை-1
    9894887705