குருவி – திரை விமர்சனம்

குருவி – திரை விமர்சனம்

இன்று மதியம் நெதர்லாந்து almere நகரில் Cinescope திரையரங்கில் குருவி திரைப்படம் பார்த்தோம். ஈழத்து நண்பர் ஒருவரின் carல் 90 km பயணம். 15 ஐரோ நுழைவுச் சீட்டு. 100 முதல் 150 பேர் வந்திருப்பார்கள். 70% அரங்கு நிறைந்திருந்து.

என்னத்த சொல்ல?

* ஒவ்வொரு படத்திலும் கபடிப் போட்டி, ஓட்டப் பந்தயப் போட்டி போல் குருவியில் car பந்தயப் போட்டியல் கலந்து கொண்டு வெற்றி பெற்று விஜய் அறிமுகமாகிறார். (அஜித் உண்மையான car பந்தயக் காரர். அவரைக் கிண்டல் செய்து தான் இந்தக் காட்சி என்று சின்னக் குழந்தைக்கும் தெரியும்)

* பாடல்கள் கேட்கவே சுமார் தான். பொருந்தாத இடத்தில் அவற்றைப் புகுத்தியதால் திரையில் பார்க்கவும் மனம் ஒட்டவில்லை.

* ஆந்திர காட்சிகளில் ஏகப்பட்ட தெலுங்கு வசனம். நிச்சயம் தெலுங்கு புரியாத மக்களைக் கடுப்பேற்றும்.

* ஆந்திரப் பகுதியில் எடுத்ததாலோ என்னவோ தெலுங்குப் படம் போல ஏகப்பட்ட வன்முறை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பிற்பகுதி படம் முழுக்க தெலுங்கப் படமான சத்ரபதியில் இருந்து காட்சிக்குக் காட்சி சுட்டிருக்கிறார்கள். கோடாலி கொண்டு ஆட்களை வெட்டிக் கொண்டே இருக்கிறார். ஒரே காட்டுக் கத்தல். கில்லி படத்தையாவது ஒக்கடு படத்தை மீள எடுக்கிறேன் என்று சொல்லி எடுத்தார்கள். அது போல் சொல்லிச் சுட்டிருந்தாலாவது நாகரிகமாக இருந்திருக்கும்.

காட்டெருமை போன்ற எதிரியின் அடியாளைத் துவைப்பது எல்லாம் 80களில் வந்த ரஜினி படங்களை நினைவூட்டுகின்றது. சுமன், ஆஷிஷ் எல்லாம் சொத்தை எதிரிகள். ரகுவரனும் போய்ச் சேர்ந்து விட்டார். பிரகாஷ்ராஜையே எல்லா படங்களிலும் பார்க்க முடியாது. தமிழ்த் திரைக்கு நல்ல எதிரிகள் தேவை.

* விவேக் இடைவேளை வரை வருகிறார். நகைச்சுவை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. நிறைய இடங்களில் “கடி” தான்.

* இன்னும் எத்தனைப் படங்களில் தான் த்ரிஷாவை கிறுக்கி மாதிரியே காட்டுவார்கள்?

* விஜய், அதிரடி வசனம் பேசுங்க பரவால. ஆனா, காது கிழியுற ஆகிற அளவுக்கு படம் முடியுற வரைக்கும் பேசிக்கிட்டே இருக்காதீங்க.. தயவுசெஞ்சு !

* இந்தப் படத்துக்கும் Transporter (2002) படத்துக்கும் ஒற்றுமை இருப்பதா புரளி கிளம்ப அந்தப் படத்தையும் இரண்டு நாள் முன்ன பார்த்தேன். ஒரு ஒற்றுமையும் இல்லை. ஆனா, Mask of Zorro போல் ஒரு காட்சியில் கண்ணைக் கட்டிக் கொண்டு வருகிறார். துவக்கப் பந்தயப் போட்டி, நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பிடிக்காமல் பெண் ஓடுவது, மாப்பிள்ளை துரத்துவது எல்லாம் கில்லியை நினைவூட்டுகின்றன. துவக்க கடப்பா காட்சி தூள் படத் துவக்கக் காட்சியை நினைவூட்டுகின்றது.

* நான் கில்லியை மூன்று முறை திரையிலேயே பார்த்திருக்கிறேன். சச்சின் பல முறை பார்த்திருக்கிறேன். இன்று கூட விஜய் ரசிகரும் வந்திருந்தார். அவருக்கே குருவி பிடிக்கவில்லை. கில்லியில் இருந்த கால்வாசி வேகம், பொழுதுபோக்கு கூட குருவியில் இல்லை. இடைவேளையிலேயே எல்லாரும் நெளிய ஆரம்பித்து கைக்கடிகாரம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். படம் முடிந்த பிறகு “என்னடா காக்கா, குருவின்னு படம் எடுக்கிறீங்க” என்று யாரோ சொல்லிக் கொண்டிருந்தார். அவசரமாக படம் தயாரிக்கச் சொல்லி நெருக்கியதால் தான் இப்படிச் சொதப்பி விட்டார்கள் என்று சொல்லி மனதைத் தேற்றிக் கொண்டார்.

**

தரணியை நம்பிப் போனால் ஏமாற்றி விட்டார். குருவி பார்த்து யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இவ்வையகம். அடுத்து எந்தப் படத்தை நம்பிப் போய் தலையைக் கொடுக்கிறதுன்னு தெரியல. தலை வலிக்குது. ஏதாச்சும் நல்ல மெல்லிசைப் பாட்டா கேட்கணும்.

பி.கு – இணைய, அச்சு, காட்சி ஊடகங்கள் முதலிய எல்லாவற்றையும் முந்தி உலகிலேயே முதலாவதாக எழுதப்பட்ட குருவி திரை விமர்சனம் இதுவே 🙂 !!


Comments

37 responses to “குருவி – திரை விமர்சனம்”

  1. Balaji Avatar
    Balaji

    நன்றி

  2. இந்த கதைக்கும் Transporterக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா?
    (நான் இன்னும் குருவி பார்க்கவில்லை)

  3. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நிமல் – Transporter (2002) படத்துக்கும் இதுக்கும் ஒற்றுமை இருப்பதா சொல்லி ஒரு புரளி கிளம்ப அந்தப் படத்தையும் இரண்டு நாள் முன்ன பார்த்தேன். ஒரு ஒற்றுமையும் இல்லை.

  4. இங்கே ஒரு நண்பர் தொலைபேசி செய்து.. ஒரு நல்ல செய்தி. இங்கே குருவி வருகிறது. வருகின்றீர்களா என்றார். நான் விஜய் படமெல்லாம் பார்ப்பதில்லை என்றேன். இந்தியாவில் என்றால் நானும் பார்ப்பதில்லை… இங்கே என்பதால் போகிறேன் என்றார். இங்கே என்ன… எங்கே என்றாலும் விஜய் படத்தை நான் பார்ப்பதில்லை. ஒருவேளை உண்மையிலேயே அது நல்ல படமெல்லாம் தெரிந்து போகும். பிறகு பார்த்துக் கொண்டல் போயிற்று என்றேன். உங்கள் விமர்சனம் படித்த பிறகு விஜய் படத்தின் மீதான கருத்தில் மாற்றமில்லை என்று உறுதியாகியிருக்கிறது.

  5. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    பாலாஜி – நன்றி.

    இராகவன் – எனக்கும் விஜய் மேல் பெரிய எதிர்ப்பார்ப்பில்லை. தரணியை நம்பி ஏமாந்துட்டேன் 🙂

  6. இப்படித்தான் இருக்கும்னு எதிர்பார்த்ததுதானே 🙂

  7.  Avatar
    Anonymous

    படத்துல வேல செஞ்ச எல்லோருக்கும் முக்கால் ஊதியம்தான் கொடுத்தாராம் உதயநிதி. எல்லோரும் சேர்ந்து படம் ஊத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பணிபுரிந்தனரோ என்னவோ?

  8. அப்பாடா… உயர உயரப் பறந்தாலும் விஜய் குருவி கழுகாவாது. செத்து ஒழியட்டும் இந்த மசாலாப் பைத்தியத்தனம்.

  9. ரவி,
    விஜய் படத்தில வேற என்ன எதிர்பார்க்க முடியும்?
    (இந்தப் படமும் ‘போக்கிரி’ மாதிரி 175 ஓடும்……..!!???)

    விஜயோட படங்கள ‘வசீகரா’ எனக்கு பிடிக்கும்.
    (சினேகாவும், வடிவேலும்கூட அதுக்கு காரணமா இருக்குமோ? 😉 )

  10. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    கப்பி, இளா, anonymous – 🙂

    தென்றல் – பலரும் ஒட்டு மொத்தமாக ஒதுக்குகிற மாதிரி விஜய் படங்களை ஒதுக்குவதில்லை. சாதாரண ரசிகனுக்கு அவர் படங்களில் சில பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கவே செய்கின்றன. வசீகராவை நானும் சிரித்துப் பார்த்தேன். போக்கிரியின் தெலுங்குப் பதிப்பு நிறையவும் தமிழ்ப் பதிப்பு கொஞ்சமும் பிடித்திருந்தது. ஆனால், இதெல்லாம் பிடித்தவர்களுக்குக் கூட விரும்ப ஒன்றுமே இல்லாத மாதிரி தான் குருவி இருக்கிறது. கிட்டத்தட்ட “ஆதி” மாதிரி காட்டுக் கத்தல் என்று சொல்லலாம்.

  11. vetri Avatar
    vetri

    Hi please dont go for vijay movies.
    surely he will kill the people

  12. Enna Koduma Sir Ithu…

  13. Tamil Nenjam Avatar
    Tamil Nenjam

    மொத்தத்தில் குருவி — உயர உயரப் பறந்தாலும் பருந்தாகாது போலிருக்கிறதே?

    வரலாறு படைத்த ‘தல’ தான் இப்போ ரொம்ப ‘உயரத்துல’ இருக்கார் போல.

    ‘பில்லா’விலே பின்னியவரை ‘ஊர்க்குருவி’ யால ஒன்னுமே செய்ய முடியாது போலிருக்குது.

  14. இதை அனைவரும் பார்க்க வேண்டும்.
    http://www.youtube.com/watch?v=4u578uS3hsc

    நன்றி
    குருவி.

  15. ஆதவன் Avatar
    ஆதவன்

    படத்தில் உள்ள சில காட்சிகள் “சத்திரபதி” எனும் தெலுங்கு படத்தில் இருந்து சுடப்பட்டது…… சிறிதும் மாற்றம் இல்லாமல்……..
    மாடியில் இருந்து ரயிலுக்கு பாய்வது கூட “மகேஸ்பாபு”வின் படம் ஒன்றில் இருந்து சுடப்பட்டது…… இவ்வளவும் நான் பார்த்த 2 படங்களில் மட்டும் மற்ற காட்சிகள் எந்தப்படத்தில் இருந்து என்று தெரியவில்லை….. தெலுங்கு படத்தில் இருந்த காட்சிகள் சற்றே “ஓவர்” என்றாலும் ரசிக்கக்கூடியதாக இருந்தது…. ஆனால் “குருவி” படத்திலோ “என்ன கொடுமை சார்ர்ர்ர்ர் இது” ரகம்தான்…… தியட்டர் முழுக்க சிரிப்புச்சத்தம்தான் அதிகமாக கேட்டது…… ஒருவேளை வடிவேலு “ஹீரோ” வேடம் பூணத்தொடங்கிவிட்டதால் “காமிடியன்” இடத்தைப்பிடிக்க “விஜய்” முயற்சி செய்கிறாரோ தெரியவில்லை…. எப்படியோ தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய “காமிடியன்” வரவு

  16. ஆதவன் Avatar
    ஆதவன்

    மொத்ததில் குருவி பருந்தாகாது……

  17. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    வெற்றி, அன்பு, தமிழ்நெஞ்சம், குருவி – வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ஆதவன், நீங்கள் சொல்லும் காட்சி அத்தடு படத்தில் இடம்பெற்றிருக்கும். அதிலாவது கயிற்றைப் பிடித்துத் தான் மகேஷ் பாபு தாவுவார். தவிர, அவர் சின்ன வயதில் இருந்து அடிதடியில் ஈடுபடும் பயிற்சி பெற்ற கொலைகாரர் என்பதால் கொஞ்சம் நம்பும்படி இருக்கும். ரசிக்க முடிந்தது. குருவியிலோ நீங்கள் சொன்னது போல் திரையரங்கு முழுக்க சிரிப்பொலி தான்.

  18. உயர உயரப் பறந்தாலும் காக்கா, சீ குருவி பருந்தாகுமா???

    நல்ல காலம் நான் இங்க இருக்கின்ற விலை வாசியில 300 (???) கொடுத்து திரைப்படம் பார்க்கவில்லை. இணையத்தில் ஓட்ட வேண்டியதுதான். ஏன்தான் விஜய் இப்படி ஏமாற்றுகின்றாறோ தெரியவில்லை!

  19. Rajiv Avatar
    Rajiv

    Ajith padam maadiri mokkaya illa adoda evvalavo parava illaya ….
    ajith padam madiri irukunna sollunga theatre pakkam koda poga maaten

  20. dharma Avatar
    dharma

    what a story it is, ideats, we are expecting something different from our ilayadalapathi

  21. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    ராஜிவ் – ஒவ்வொரு படத்தையும் தனித்தனியா பார்ப்பது தான் நல்லா இருக்கும். இன்னொரு படத்தோட அதுவும் இன்னொரு நடிகர் படத்தோட ஒப்பிடுவது சரி இல்லை. விஜயின் முந்தைய பல படங்களை ஒரு தடவையாவது பார்க்க முடிஞ்சது. இந்தப் படத்தில அப்படித் தோணல. அவ்வளவு தான்.

  22. விஜய்க்கு தெலுங்கு படங்கள் மீதிருக்கும் மோகம், விஜயின் ஒவ்வொரு படத்திலும் தெரியுது. என்று தனியும் இந்த தெலுங்கு ரீமேக் மோகம்? இந்த முறை பலிகடா தரணி. திரிஷா உண்மையா நடிக்கிறாங்க நீங்க அத கிண்டலடிக்கறீங்க!

  23. Narayan Avatar
    Narayan

    என்ன தைரியத்துல இவங்கல்லாம் படம் எடுக்கறாங்க?
    அபத்தம் அபத்தம் அத்தனையும் அபத்தம்….
    சிம்பு படங்களுக்கும் இந்த படத்துக்கும் என்ன பெரிய வித்யாசம்?
    ஒரு நல்ல மீடியாவை இதுக்கு மேல அசிங்கப்படுத்த முடியாது….

  24.  Avatar
    Anonymous

    TOP SECRET REVEALED…

    I got a NEWS now from the producer stating that, if he spend 20 crore in 10 days he will get 500 crores (like namma THALAIVAR’s ARUNACHALAM) so he used the IDEA what THALAIVAR used in ARUNACHALAM (PRODUCING A FILM, SENTHIL AS HERO)

    Sameway to WASTE 20 crores in 10 days, the only way is to PRODUCE a FILM IN WHICH “ANNAN” ILAYA THALAPATHY IS HERO.

    PRODUCER WILL GET 500 CRORES in this week and the next movie will be with our THALA directed by GOWTHAM MENON.

  25. Nipunan Avatar
    Nipunan

    Hi Evry,
    Vijay,da veelai Nadikkirathu, tharanida Veelai Iyakkirathu, Unga Veelai Enna, Avangala Kindal Panratha?
    Mudincha Neenga Oru Padam Pannipparunga, Appathan Athila Ulla Kastangal Puriyum.
    Ella Nadikarkalum Avangalaala Mudinchatha Romba Nalla Kodukkathan Try panranga, Sila Neerankalla athu Saaththiyam Illama Porappo, Atha Perusa Eduththukkama, Aduththa Thadavaikku “Best of Luck” sollunga.
    English Padaththila Paancha maddum (Paairathu ennanga Parakkiraanga)atha Eethukkireenga, Thamilan Atha seirappo Kindal panreenga, English padaththila ulla Quality Tamil Padaththila illanna, Athukku kaaranam, athukku Theevaiyaana Technology illa, Athukku Selavu Seiyaa Yaar irukka? Ungalaala Mudiyuma?
    Avangalaala Mudinchatha Kodukkiraanga, Rasanai Ullavan Rasippan

    http://tamil.cinesouth.com/masala/hotnews/new/05052008-5.shtml

    Itha Ellorum Padinga, puriyum, Rasikan Evanenru?
    Nanri, Thavareethum Iruppin Mannikkavum
    Nipunan

  26. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    மயூரேசன், முரளி, narayan, anonymous – கருத்துக்கு நன்றி.

    நிபுணன், உங்கள் நன்னோக்கம் புரிகிறது. ஆனால், என்று காசு கொடுத்து திரைப்படத்தைப் பார்க்கிறோமோ அப்போதே அது ஒரு விற்பனைப் பொருளாகி விடுகிறது. நாம் எதிர்ப்பார்த்த பொழுதுபோக்குத் தரம் அதில் இல்லாத போது விமர்சிப்பதில் என்ன தவறு? நியாயமாகப் பார்த்தால் இப்படி கிண்டல் செய்வது கூட கொடுத்த காசு வீணா போச்சே என்று அவர்கள் வழக்கு போடவோ திட்டவோ இயலாமல் நம்மளைத் தேற்றிக் கொள்ளும் வழி தான். நன்றாக இருந்தால் பாராட்டுகளை ஏற்றுக் கொள்ளும் திரைத்துறையினர், ரசிகர்களைப் பாலூற்றி வழிபட விடும் நடிகர்கள் குறைகளையும் விமர்சனங்களையும் மட்டும் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்?

    ஏதோ அவர்களால் முடிந்த வழியில் எல்லாம் முயன்று தோற்றுப் போனார்கள் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவர்கள் படம்பிடிக்கும் முன்னர் பக்கத்து வீட்டில் இருக்கும் குடும்பத்தினரை அழைத்துக் கருத்து கேட்டிருந்தாலே கூட நல்ல மாற்றங்களைச் செய்திருக்க முடியும். ரசிகர்களை அடி முட்டாள்கள் என்று நினைத்து படம் எடுப்பது தவறு.

    நாங்கள் ஒன்னும் மசாலா பட எதிரி அல்ல. கில்லி, சச்சின் படங்களைப் பல முறை பார்த்திருக்கிறேன். ஒரு படம் அருமையாகக் கூட இருக்கத் தேவை இல்லை. ஆனால், ஏன்டா போனோம் என்று தலைவலி வர வைக்கும் படங்களை மன்னிக்க முடியாது. ஒரு நடிகர், இயக்குநர் மேல் உள்ள நம்பிக்கையில் தானே போகிறோம்? அதைக் காப்பாற்ற குறைந்தபட்ச முயற்சிகள் கூட எடுக்கவில்லை என்பது தான் ஏமாற்றம்

  27. ஆ.பிள்ளை Avatar
    ஆ.பிள்ளை

    விஜய் (மசாலாப்) படங்களை காத்திரமாக விமர்சிக்கின்ற ஒருவன்தான் நானும். சமீபத்தில் திரையரங்கில் குருவி படம் பார்க்க நண்பர்களோடு போயிருந்தேன்.

    முன்னைய விஜய் படங்களோடு ஒப்பிடாமல் Logic பற்றி கவலைப்படாமல் ஒரு குழந்தை போலப் பார்த்தால் நல்ல ஒரு பொழுதுபோக்குப் படம்.

    ஆங்கிலப் படங்களில் வரும் நம்பமுடியாத காட்சிகளை ஏற்றுக்கொள்ளும் எமது மனசு, ஏனோ தமிழ் படங்களை பார்க்கும் போது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எமது படங்களை அல்லது நடிகர்களை மேலும் தரமாக்கவேண்டுமென்ற அக்கறையா அல்லது குறிப்பிட்ட நபர்களின் மீதான எரிச்சலோ தெரியவில்லை எமது மனசுக்கே சிலநேரம் தெரிவதில்லை. தரமான படம் என்று எதைக்கருதுகின்றோம். இதே படத்தை கமல், விக்ரம், சூர்யா நடித்திருந்தால் எமது விமர்சனம் சிலவேளை positive ஆகக்கூட அமைந்திருக்கலாம்.

    பல படங்களின் வெற்றிப்பட ரகசியங்களின் கலவையாக வந்ததே கில்லி படத்தின் வெற்றியின் ஒரு ரகசியம். ஆனாலும் எல்லோராலும் அதனை இலாவகமாகக் கலக்க முடியாது. அதேமாதிரித்தான் தரணி குருவியிலும் கலவை கலந்திருக்கிறார். ஆனால் அது கில்லியின் சாயலில் தெரிவதை ரசிகனால் தவிர்க்கமுடியவில்லை. தரணி இதற்காக கொஞ்சம் உழைத்திருக்கலாம்.

    என்ன விடயமாகிலும் எல்லோரையும் திருப்திப்படுத்துவதென்பது கடினம்.

    விஜய் தொடர்ந்து மசாலாப் படங்களில் நடிப்பதாலேயே அவரது உழைப்பு, நடிப்பாற்றல் என்பன கூடியளவு விமர்சிக்கப்படுகின்றன. தொடர்ந்தும் மசாலாப் படங்களிலேயே நடித்து, விஜய் ரசிகர்களை அலுப்புத்தட்டாமல் வைத்திருப்பதென்பதும் ரொம்பவும் கடினமான ஒரு விடயம்தான்.

    ரசிகர்களின் ரசனையை மேம்படுத்த வேண்டிய தமது பொறுப்பை இயக்குனர்களும் நடிகர்களும் கொஞ்சமாவது கருத்திலெடுக்கவேண்டும். இல்லையேல் ஒரே வட்டத்திற்குள் தான் திரும்பத்திரும்ப சுற்ற வேண்டி இருக்கும்.

    ரசிகர்களின் விமர்சனங்கள் தான் நடிகனை மெருகூட்டும். விமர்சனங்களைக் பொறுமையாகக் கேட்டு வளரவேண்டியது நடிகனின் கையில்தான் இருக்கிறது.

    காய்க்கின்ற மரம்தானே கல்லடிபடும்.

  28. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    ஆ. பிள்ளை, மன்றத்தில் கருத்து தெரிவித்தவரும் நீங்கள் தானா? வருகைக்கு நன்றி.

    //விஜய் தொடர்ந்து மசாலாப் படங்களில் நடிப்பதாலேயே அவரது உழைப்பு, நடிப்பாற்றல் என்பன கூடியளவு விமர்சிக்கப்படுகின்றன//

    நானும் மசாலா பட விரும்பி தான். அவரது படங்கள் சிலவற்றையே விரும்பிப் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு படம் போல் எல்லா படத்திலும் over buildupஐப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. ஒரு வேளை நாம் அவரது இலக்கு ரசிகர்கள் இல்லையோ என்னவோ? நீங்கள் சொல்கிறது போல் குழந்தைகளுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிடிக்குமோ என்னவோ? ஆனால், குழந்தை ரசிகர்களைக் கருத்தில் கொண்டாவது வன்முறையைத் தவிர்த்திருக்கலாம். U / A என்று சான்றிதழ் போட்டாலும் மக்கள் சின்னப் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தான் வருகிறார்கள்.

    //ஆங்கிலப் படங்களில் வரும் நம்பமுடியாத காட்சிகளை ஏற்றுக்கொள்ளும் எமது மனசு, ஏனோ தமிழ் படங்களை பார்க்கும் போது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.//

    ஆங்கிலப் படங்களில் ஏதாவது ஒரு logic வைத்திருப்பார்கள். அவர் பயிற்சி பெற்ற படை வீரராகவோ பூச்சி கடித்ததால் சிறப்புத் திறமை வந்ததாகவோ காட்டுவார்கள். கதையில் விஜய்க்கு ஒரு பின்புலமும் இல்லாமல் தாவித் தாவிப் பறப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    //எமது படங்களை அல்லது நடிகர்களை மேலும் தரமாக்கவேண்டுமென்ற அக்கறையா அல்லது குறிப்பிட்ட நபர்களின் மீதான எரிச்சலோ தெரியவில்லை எமது மனசுக்கே சிலநேரம் தெரிவதில்லை. //

    இது நடிகர்களின் உடல்வாகு பொருத்தும் அமையும். குருவியில் வருவது போன்ற காட்சியில் மகேசுபாபு நடித்த போது அது மிகையாகத் தெரியவில்லை. விக்ரம் 10 பேரை அடிக்கும்போது ஏற்றுக் கொள்ள இயலும் போது அதையே தனுசு அடித்தால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

  29. sekar Avatar
    sekar

    kuruvi waste flim

  30. ஆ. பிள்ளை Avatar
    ஆ. பிள்ளை

    /*ஆ. பிள்ளை, மன்றத்தில் கருத்து தெரிவித்தவரும் நீங்கள் தானா?*/
    அதே பிள்ளை தான் நானும். குருவி விமர்சனங்களை search engine இல் தேடும் போது உங்களது வலைப்பக்கம் தட்டுப்பட்டது.

    /*over buildupஐப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை*/
    அது சிலருக்கு கைவந்த கலை. அதைச் சகிப்பதன்பது அதைவிட கஷ்டமான கலை.

    ஒரு வாசகன் ஒரு கதையையோ நாவலையோ வாசிக்கும் போது அவனது மனதுக்குள்ளேயே ஒரு திரைப்படம் ஓடுகின்றது. அவனது மனக் கண்ணால் பாத்திரங்களை பார்க்க முடிகின்றது(உதாரணமாக பொன்னியின் செல்வன் நாவலில் வரும் வந்தியத்தேவனின் பாத்திரம் மற்றும் பாத்திரத்தின் ஆற்றல்கள் பற்றிய மனக்கண்ணின் விம்பம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்). மனத்தினுள் தெரியும் பாத்திரங்களின் நடிப்பை ஒவ்வொரு வாசகனும் வித்தியாசமாகவே பார்க்கின்றான். அதே போல திரைப்படத்தைப்பார்க்கும் போதும் படத்தின் திரைக் கதையோடு எமது மனம் பயணிக்கும் போது எமது மனத்தினால் பிரசவிக்கப்படும் விம்பங்களுக்கும் நிஜப்பாத்திரங்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் தான் எமது விமர்சனங்களாக வெளிப்படுகின்றன. Over buildup என்பதும் ரசிகனின் மனத்தைப் பொறுத்தது.

    /*நீங்கள் சொல்கிறது போல் குழந்தைகளுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிடிக்குமோ என்னவோ?*/
    குழந்தைகளுக்கு பிடிக்கும் அல்லது உகந்த படம் என்று நான் சொல்லவரவில்லை. குழந்தைபோலத்தான் பார்க்கச் சொன்னேன்.

    /*குழந்தை ரசிகர்களைக் கருத்தில் கொண்டாவது வன்முறையைத் தவிர்த்திருக்கலாம்*/
    உண்மைதான். கார்ட்டுன்கள் கூட வன்முறையை குழந்தைகளிடத்தில் வளர்த்துவிடுகின்றன என்ற கருத்தும் ஏற்கனவே இருக்கிறது. குழந்தைகளிடத்தில் எவ்வாறு வன்முறையுணர்ச்சி உருவாகின்றது என்பது ஒரு ஆராய்ச்சிக்குரிய விடயமாகவே இற்றைவரை இருக்கிறது.

    /*ஆங்கிலப் படங்களில் ஏதாவது ஒரு logic வைத்திருப்பார்கள். அவர் பயிற்சி பெற்ற படை வீரராகவோ பூச்சி கடித்ததால் சிறப்புத் திறமை வந்ததாகவோ காட்டுவார்கள். கதையில் விஜய்க்கு ஒரு பின்புலமும் இல்லாமல் தாவித் தாவிப் பறப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.*/
    நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரம் தாவிப்பறக்கும் காட்சியினுடாக அந்தக் கதாபாத்திரத்தின் மனோ வேகத்தைப் பிரதிபலிப்பதற்காகக்கூட இயக்குனர் முயற்சித்திருக்கலாம். மேலும் Logic என்பது எல்லாநேரமும் எமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறுவதில்லை. சிறு வயதில் வீதியோர கட்டாக்காலி நாய் துரத்தும்போது துவிச்சக்கர வண்டியை ஒரு காலால் மட்டுமே வேகமாக உதைத்து ஓடவைத்து எனது துவிச்சக்கர வண்டியின் வேகத்திற்காய் என்னையே நான் வியந்ததுண்டு. என்னால் அவ்வளவு வேகமாக இரண்டு கால்களைப் பயன்படுத்திக்கூட மற்ற நேரங்களில் துவிச்சக்கர வண்டியை செலுத்த முடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆபத்து அருகில் வந்தபின்பு எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. எல்லாமே ஒரு கணப்பொழுதில் நடந்துவிடும். அவ்வாறு நோக்கும் போது அங்கு Logic பற்றி அதிகமாக பார்க்கத்தேவையில்லை என்று கூடக் கூறலாம்.

    இயக்குனர் அந்தக்காட்சியை கட்டிடத்திலிருந்து நேராக train இற்குக்கூட பாத்திரத்தைப் பாயவைத்திருக்கலாம். மாறாக பாலத்திற்குச் சென்று பின்னரே train இற்குள் ஏற வைக்கிறார். train இற்குள் ஏறுவது கூட நிஜத்தில் சாத்தியமானதல்ல என்பது வேறு விடயம். என்றாலும் உடனடியாக train இற்குள் ஏறவிடாமல் ஓடவைத்து வேகத்தை அதிகரித்தபின்பே train இற்குள் ஏறவைக்கிறார். train இன் வேகத்திற்கு ஒரு மனிதனால் ஓடமுடியும் என்பது சாத்தியமில்லாததுதான். ஆனாலும் வேகத்தை சமப்படுத்திய பின்பே train இனுள் ஏறமுடியும் என்ற விஞ்ஞான முடிவு அங்கு பேணப்பட்டுள்ளது.

    இயக்குனரும் நடிகரும் படக்குழுவினரும் மேலும் படத்தை மெருகூட்டியிருக்கலாம். அவர்களது தொடர்ந்து வரும் படங்களிலாவது மேலும் மெருகேறுவார்களென நம்புவோமாக.

  31. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    பிள்ளை, உங்கள் கருத்துகளுடன் முழுக்க உடன்படுகிறேன். விரிவான கருத்துக்கு நன்றி.

  32. prabagar Avatar
    prabagar

    குருவியைப் பற்றி உலகம் முழுதும் நெகட்டிவ் விமர்சனங்கள். பார்த்தவர்கள் அனைவரும் டரியலாகிப் போயிருக்கிறார்கள். ஆனால் குருவி அப்படி ஒன்றும் பார்க்கவே கூடாத ஒதுக்க வேண்டிய திரைப்படம் அல்ல. இத்திரைப்படத்தைக் கேவலம் என்று சொல்லி கேவலத்தையே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குருவி அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

    – படத்தின் நகைச்சுவை காட்சிகள். சின்னக் கலைவாணர் விவேக் மாங்கு மாங்குன்னு டபுள் மீனிங் டயலாக்கா பேசிட்டிருந்தாலும் சிரிப்பே வரல. ஆனா நம்ம இளைய தளபதி அசால்டா காமெடி பண்றாரு. தோளைக் குலுக்கி கண்ணடிச்சா காமெடி. திரிசாவை முறைச்சா காமெடி. அதைவிட சண்டை போடும்போது சட்டையைக் கழட்டிப் போட்டு கையை முறுக்கி காட்டுவாரு பாருங்க..அந்த ஒரு காமெடி சீனுக்காகவே படம் பாக்கலாம்

    – எதிர்பாராத திருப்பங்கள். விஜய் நாலாவது மாடியில இருப்பாரு. வில்லனோட அடியாளுங்க துரத்திட்டு வருவாங்க. பக்கத்து மேம்பாலத்து டிராக்ல தூரத்துல டிரெயினைக் காட்டுவாங்க. இளைய தளபதியோட முகத்தைக் காட்டுவாங்க. டிரெயினு..முகம்..முகம்..டிரெயினு. இப்ப நீங்க என்ன நினைப்பீங்க? இளைய தளபதி நேரா அந்த டிரெயின் மேல குதிப்பாருன்னு தானே? அங்க தான் ஒரு டிவிஸ்டு. நம்ம தலைவர் அந்த நாலாவது மாடியிலருந்து பாலத்துல குதிச்சு கைப்புடி சுவரைப் புடிச்சு தட்டுத்தடுமாறி டிராக்ல ஏறி ஓடற டிரெயின்ல ரன்னிங்க்ல ஏறுவாரு. இப்படி ஏகப்பட்ட டிவிஸ்டோ டிவிஸ்ட் இருக்க படம் இது.

    – செண்டிமெண்ட். பத்து வயசு பையன் வில்லனோட காலைப் பிடிச்சு விடறது, கண் தெரியாத இளம்பெண்ணின் சகோதரனை வில்லன் கொல்வது, மகன் வந்து காப்பாற்றுவான் என்று தந்தை சபதம் செய்வது என்று தமிழ்திரைப்படங்களில் இதுவரை பார்த்திராத செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படம்.

    – மெசேஜ். படத்துல சின்ன பசங்களுக்கு நிறைய புத்திமதி சொல்வாரு இளைய தளபதி. உதாரணமா பற்களை பலமா வச்சுக்கறதுக்கான அவசியத்தை சூசகமா சொல்லியிருக்காரு. ஆக்ஸிலரேட்டர் கட்டானாலும் வாயில ஒயரை கடிச்சிக்கிட்டு ரேஸ் ஜெயிக்கறாரு நம்ம தலைவரு. பற்கள் மட்டுமில்லாம நம்ம மனசும் பலமா இருந்தா எந்த மொக்க நாயும் ரேஸ்ல ஜெயிக்கலாம்ன்றது தான் மெசெஜு. இதுமாதிரி படம் முழுக்க மெசெஜ் தான்

    – இளைய தளபதியின் கெட்டப்புகள். குருவி விஜய் ‘மாஸ்க் ஆப் சாரோ’ ஆண்டனியோ பாண்டராஸே காலில் விழும் அளவுக்கு முகமூடி அணிந்து வரும் காட்சியில் அது விஜய் தானா என்று யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மச்சம், மீசை என்று மாறுவேடத்திற்கு மெனக்கெட்டிருந்த தமிழ் சினிமாவிற்கு நாலுநாள் தாடியே போதும் என்று ‘அழகிய தமிழ் மகனில்’ நிருபித்த இளைய தளபதி குருவியில் அதுகூட தேவையில்லை என்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தசாவதாரத்தில் பத்து கெட்டப் போடும் கமல்ஹாசன் விஜயிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.

    – பல்வேறு கலாச்சாரங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம். மலேசியா, தமிழ்நாடு, ஆந்திரா என்று பல்வேறு கலாச்சாரங்களையும் மக்களின் வாழ்வையும் நேர்மையாக பதிவு செய்துள்ள திரைப்படம்

    – நேட்டிவிட்டி. மலேசியாவில் இருக்கும் திரிசா ‘லா’ போட்டுத்தான் பேசுவார். ஆந்திரா கடப்பாவிலிருக்கும் வில்லன் ஆஷிஷ் வித்தியார்த்தி ‘லு’ போட்டு தெலுங்கில் தான் பேசுவார் (இவர் எப்போ தான் தமிழ் பேசி நடிப்பாரோ). அதே போல் வில்லனின் அடியாட்களும் தெலுங்கில் தான் பேசுவார்கள். இவ்வாறு யதார்த்தமாக நேட்டிவிட்டியுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் குருவி.

    – ரவுடிகள் ஒழிப்பு. தமிழ்நாட்டுலயும் ஆந்திராவுலயும் மட்டுமில்லாம மலேசியாவுக்கு போய் அங்கேயும் தனியாளா ரவுடிகளை அடிச்சு துவம்சம் பண்ண குருவியை விட்டா யார் இருக்கா?

    – இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு கோபம், வெறுப்பு, ரென்சன் எல்லாமே போயிடும். உங்களுக்கு ஒரு சென்ஸும் இருக்காது. ஏன்னா இது ஒரு மிகச்சிறந்த சென்ஸ்லெஸ் திரைப்படம்.

    – தன்னம்பிக்கை ஊட்டும் திரைப்படம். “குருவி மாதிரி ஒருத்தனே இந்த உலகத்துல இருக்கான். நமக்கென்ன”ன்னு ஓவ்வொருத்தருக்கும் தன்னம்பிக்கையை டன் கணக்கில் ஏற்றிவிடும் வெற்றித்திரைப்படம் குருவி.

    – தொழில்நுட்பம்/ மருத்துவம் கற்பிக்கும் திரைப்படம். வெப் காமிராவே விஜயைப் பார்த்து கன்பீஸ் ஆவதும், இண்டர்நெட்டு ஈமெயில் மூலமாக விஜய் வில்லன்களை போலீஸிடம் மாட்டிவிடுவதும், வெப்காமிரா டிராலியில் சுத்துவதும் பாமரர்க்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் அ-புனைவு திரைப்படம். ஒரு ஒயரை அசைத்தால் கோமாவிற்கு போவதும் அதே ஒயரை அசைத்தால் கோமாவிலிருந்து மீண்டு வருவதும் மருத்துவ அதிசயங்கள்.

    – கட்டமைக்கப்பட்ட பாரம்பரியங்களை உடைத்தெறியும் புரட்சித் திரைப்படம். மொத்த திரைப்படத்தையும் பார்த்தாலே உங்களுக்குத் தானாக புரியும்.

    – இரண்டு பேரரசு, இரண்டு பி.வாசு, இரண்டு ஸ்ரீகாந்த் தேவா, இரண்டு விஜய் இணைந்து படமெடுத்தால் எவ்வளவு சிறப்பாக வருமோ அதை விடவும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இது.

    – காமெடி, டிராஜடி, ரொமான்ஸ், டிராமா, ஆக்ஷன் என்று எந்த வகையிலும் பிரிக்க முடியாத திரைப்படம் இது. பார்ப்பவர்கள் இத்திரைப்படத்தை அவரவர்க்கு ஏற்றவாறு கொள்ளலாம். அப்படி அனைத்தும் கலந்த கலவை இத்திரைக்காவியம்.

    – இந்த படத்தை பார்த்துவிட்டால் வேறு எந்த படமாக இருந்தாலும் பிடித்துவிடும்.

    – எல்லாவற்றிற்கும் மேலாக இத்திரைப்படம் உங்கள் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்ட மிகச் சிறந்த மருந்து. இந்த படத்தை பார்த்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையில எதுவுமே கொடுமையா தெரியாது.

    இந்த திரைக்காவியத்தைப் பார்க்க இதைவிட காரணம் வேண்டுமா என்ன? கண்டிப்பா பாருங்க மக்களே. குருவி ‘நாமம்’ வாழ்க!! இளைய தளபதி புகழ் ஓங்குக!!

    நல்லாயிருங்க!!

  33. Karthikeyan Avatar
    Karthikeyan

    hi..friends..
    Vijay’oda dance parkum pothu avar evalo kasta pattu adi irukirar enbathu unga elorukum purium..athavittu ithu than chance vijaya pathi thapu thapu sollathiga…
    Naan oru vijay rasikana iruthalam padum konjum over build-up than..but cineam industry’la irukira elaroum enga “Ilaya Thalapathy” agakumnu ninachu ipdithan padathoda result negative ah varuthu…athula konjum varuthum…
    Vijay pathi mattum sollurigalay..yen ippo Bharath kuda “Chinna Thalapathy” pattam koduthu edukuraga…

    onnu mattum nalla therichukuga..cinema industry’la
    Super star-Avar Rajini Oruthar than..
    Ulaganayagan-Kamal Hasaan mattum than…similarly
    Ilayathapathy’na athu “Enga Vijay Mattum Than”..

    Thala’na Athuvum “Ajith Mattum than”..
    so inimay padatha mattum rasiga..oru thadava padum nalla illayena adutha thadavai kandipa nalla padum kodupar vijay…itha naan solla vaydiya avasiyum illa…yenna…
    ithu munnala Vijay padam epdi iruthathunu unga elarorukum therium….

    Rasanai Ulla..
    Vijay Rasigan…

  34. “அடுத்து எந்தப் படத்தை நம்பிப் போய் தலையைக் கொடுக்கிறதுன்னு தெரியல”

    Santosh Subramaniam parunga 🙂
    Genelia irukka 😉

  35. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    பிரபாகர், கார்த்திகேயன் – வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    Nytryk – பொம்மரில்லு ஏகப்பட்ட முறை ரசித்துப் பார்த்த பிறகு சந்தோஷ் சுப்பிரமணியத்தை 10 நிமிசம் கூட பார்க்கப் பிடிக்காமல் நிறுத்தி விட்டேன்.

  36. இப்போதான் அந்தக் குருவியைப் பார்த்தேன்.

    பிரபாகர் உங்க பின்னூட்டம்தான் சூப்பர்.

    என்னுடைய ஆதங்கம்(?) என்னன்னா…. இது தமிழக முதல்வரின் பேரனின் படமாமே…

    ஆனா ரெட் ஜெயண்ட் மூவீஸ்ன்னு ஆங்கிலத்தில் இருக்கு கம்பெனி பேரு. பாதி வசனம் தெலுங்கு.

    இதி ஏமிட்டிரா கொடவ????

  37. எங்கள் ஊரில் இந்தக் கதையெல்லாம் எடுபடாது.நம்ம தளபதி படம்னாலே பெஸ்டுதான் ஆத்திரப்படவேனாம்.

    பிறின்ஸ்