மூன்றாவது இந்திய குடும்ப நல ஆய்வறிக்கையில் (2005-06) உள்ள இந்தப் படத்தைப் பாருங்கள்.
இந்தப் படம் மொத்த கருவுறுதல் விகிதத்தைக் காட்டுகிறது.
ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் பிறக்கும் குழந்தைகளின் சராசரி அளவே மொத்த கருவுறுதல் விகிதம்.
இந்த விகிதம் 2.1 என்று இருந்தால் அந்தச் சமூகத்தின் மக்கள் தொகை நிலையாக இருக்கும். 2.1க்கு குறைவாக இருந்தால் நாளடைவில் மக்கள் தொகை குறையத் தொடங்கும்.
இப்பொழுது நமது படத்திற்கு வருவோம்.
இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வது என்ன?
தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் இந்திய ஒன்றிய அரசின் அரசின் 11வது ஐந்தாண்டு திட்டத்தின் என்ன திட்டம் தீட்டியிருக்கிறார்கள் பார்க்கலாமா?
இந்த கோப்பின் 124ஆம் பக்கத்தை பாருங்கள்.
அதில் நான்கு செங்குத்து வரிசைகள் உள்ளன.
- வரிசை எண்
- மாநிலம்
- தற்சமயம் இருக்கும் மொத்த கருவுறுதல் விகிதம்
- இலக்கு
உங்களுக்குப் புரிவதற்காக நான் அதில் கூடுதலாக “இலக்கின் விளைவு” என்று ஒரு வரிசை சேர்த்துள்ளேன்
ANNEXURE 3.1.7 |
||||
Total Fertility Rate—India and Major States |
||||
வரிசை எண் |
மாநிலம் |
தற்போதைய நிலை |
இலக்கு |
இலக்கின் விளைவு |
இந்தியா முழுவதும் |
2.9 |
2.1 |
மக்கள் தொகை சம நிலையில் இருக்கும் |
|
1 |
ஆந்திர பிரதேசம் |
2.1 |
1.8 |
மக்கள் தொகை குறையும் |
2 |
அசாம் |
2.9 |
2.3 |
மக்கள் தொகை கூடும் |
3 |
பீகார் |
4.3 |
3.0 |
மக்கள் தொகை கூடும் |
4 |
சட்டிஸ்கர் |
3.3 |
2.4 |
மக்கள் தொகை கூடும் |
5 |
தில்லி |
2.1 |
1.8 |
மக்கள் தொகை குறையும் |
6 |
குஜராத் |
2.8 |
2.2 |
மக்கள் தொகை கூடும் |
7 |
ஹரியானா |
3.0 |
1.9 |
மக்கள் தொகை குறையும் |
8 |
இமாச்சல பிரதேசம் |
2.1 |
1.8 |
மக்கள் தொகை குறையும் |
9 |
ஜம்மு காஷ்மீர் |
2.4 |
2.0 |
மக்கள் தொகை குறையும் |
10 |
ஜார்கண்ட் |
3.5 |
2.5 |
மக்கள் தொகை கூடும் |
11 |
கர்நாடக |
2.3 |
1.8 |
மக்கள் தொகை குறையும் |
12 |
கேரளா |
1.7 |
1.7 |
மக்கள் தொகை குறையும் |
13 |
மத்திய பிரதேசம் |
3.7 |
2.6 |
மக்கள் தொகை கூடும் |
14 |
மகாராஷ்ட்ரா |
2.2 |
1.9 |
மக்கள் தொகை குறையும் |
15 |
ஒரிசா |
2.7 |
2.1 |
மக்கள் தொகை சம நிலையில் இருக்கும் |
16 |
பஞ்சாப் |
2.2 |
1.8 |
மக்கள் தொகை குறையும் |
17 |
ராஜஸ்தான் |
3.7 |
2.6 |
மக்கள் தொகை கூடும் |
18 |
தமிழ்நாடு |
1.8 |
1.7 |
மக்கள் தொகை குறையும் |
19 |
உத்திர பிரதேசம் |
4.4 |
3.0 |
மக்கள் தொகை கூடும் |
20 |
மேற்கு வங்காளம் |
2.2 |
1.8 |
மக்கள் தொகை குறையும் |
பிற மாநிலங்கள் குறித்த தகவல் இல்லை |
அதாவது, சில மாநிலங்களில் மக்கள் தொகையைக் கூட்ட திட்டம் தீட்டும் 11வது ஐந்தாண்டு திட்டம், சில மாநிலங்களில் மக்கள் தொகை குறைய திட்டம் தீட்டுகிறது. ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை அதே போலிருக்கும் படி திட்டம்.
அதாவது இந்திய ஒன்றிய அரசின் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம் என்ன?
இந்தியாவின் மக்கள் தொகை அப்படியே இருக்க வேண்டும்
சில மாநிலங்களின் மக்கள் தொகை கூட வேண்டும்
சில மாநிலங்களின் மக்கள் தொகை குறைய வேண்டும்
அப்படித்தானே !! இது நல்ல திட்டம் தானே !!! இதில் ஏதாவது ஐயம் உள்ளதா 🙂
இனி
எந்த மாநிலங்களின் மக்கள் தொகை கூடுகிறது என்றும் எந்த மாநிலங்களின் மக்கள் தொகை குறைகிறது என்றும் பார்க்கலாமா?
வரிசை எண் |
மாநிலம் |
பேசும் மொழி |
இலக்கு |
இலக்கின் விளைவு |
3 |
பீகார் |
இந்தி |
3.0 |
மக்கள் தொகை கூடும் |
19 |
உத்திர பிரதேசம் |
இந்தி |
3.0 |
மக்கள் தொகை கூடும் |
13 |
மத்திய பிரதேசம் |
இந்தி |
2.6 |
மக்கள் தொகை கூடும் |
17 |
இராச்சசுத்தான் |
இந்தி |
2.6 |
மக்கள் தொகை கூடும் |
10 |
சார்கண்ட் |
இந்தி |
2.5 |
மக்கள் தொகை கூடும் |
4 |
சட்டிஸ்கர் |
இந்தி |
2.4 |
மக்கள் தொகை கூடும் |
2 |
அசாம் |
அசாமி |
2.3 |
மக்கள் தொகை கூடும் |
6 |
குஜராத் |
இந்தி, குஜராத்தி |
2.2 |
மக்கள் தொகை கூடும் |
இந்தியா முழுவதும் |
2.1 |
மக்கள் தொகை சம நிலையில் இருக்கும் |
||
15 |
ஒடிசா |
ஒடியா |
2.1 |
மக்கள் தொகை சம நிலையில் இருக்கும் |
9 |
சம்மு காசுமீர் |
காசுமீரி |
2.0 |
மக்கள் தொகை குறையும் |
7 |
அரியானா |
பஞ்சாபி |
1.9 |
மக்கள் தொகை குறையும் |
14 |
மகாராஷ்ட்ரா |
மராத்தி |
1.9 |
மக்கள் தொகை குறையும் |
1 |
ஆந்திர பிரதேசம் |
தெலுங்கு |
1.8 |
மக்கள் தொகை குறையும் |
5 |
தில்லி |
இந்தி |
1.8 |
மக்கள் தொகை குறையும் |
8 |
இமாச்சல பிரதேசம் |
இந்தி |
1.8 |
மக்கள் தொகை குறையும் |
11 |
கர்நாடக |
கர்நாடகம் |
1.8 |
மக்கள் தொகை குறையும் |
16 |
பஞ்சாப் |
பஞ்சாபி |
1.8 |
மக்கள் தொகை குறையும் |
20 |
மேற்கு வங்காளம் |
வங்காளி |
1.8 |
மக்கள் தொகை குறையும் |
12 |
கேரளா |
மலையாளம் |
1.7 |
மக்கள் தொகை குறையும் |
18 |
தமிழ்நாடு |
தமிழ் |
1.7 |
மக்கள் தொகை குறையும் |
பிற மாநிலங்கள் குறித்த தகவல் இல்லை |
இந்திய ஒன்றிய அரசு போடும் ஒரு திட்டத்துக்கு ஏன் இப்படி இந்தி எதிர் பிற மொழிகள், வடக்கு எதிர் தெற்கு, ஆரியம் எதிர் திராவிடம் என்றெல்லாம் உள்நோக்கம் கற்பித்து இதனை ஒரு சதித்திட்டம் போல் பார்க்கிறீர்கள் என்கிறீர்களா?
இதே இந்தியாவின் மக்கள் தொகை நிலையாக இருக்க,
* இந்துக்கள் மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் பிற சமயத்தவர் மக்கள் தொகை குறைய வேண்டும்.
* உயர் சாதியினர் மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் பிற சாதியினர் மக்கள் தொகை குறைய வேண்டும்.
* பணக்காரர்கள் மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் ஏழைகள் மக்கள் தொகை குறைய வேண்டும்.
* வட தமிழக மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் தென் தமிழக மக்கள் தொகை குறைய வேண்டும்.
என்று திட்டம் போட்டால் உங்களால் ஏற்க முடியுமா?
இதே போல் இலங்கையின் மக்கள் தொகை நிலையாக இருக்க,
* சிங்களவர் மக்கள் தொகை கூட வேண்டும் ஆனால் தமிழர் மக்கள் தொகை குறைய வேண்டும்
என திட்டம் போட்டால் உங்களால் ஏற்க முடியுமா?
இலங்கையில் இரு இனங்கள் என்பதால் உறுத்துகிறது. இந்தியாவில் பல இனங்கள் என்பதால் நமக்கு உறைக்கவில்லை !
சரி, அப்படியே சில இனங்களின் மக்கள் தொகை மட்டும் குறைந்தால் என்ன இழப்பு என்கிறீர்களா?
* மக்கள் தொகை குறுக்கம் ஒரு வளர்ந்த நாட்டுச் சிக்கல். இச்சிக்கலை எதிர்கொள்ளும் நாடுகள் தத்தம் நாடுகளில் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள சலுகைகள் தருகின்றன. ஆனால், தமிழர் மக்கள் தொகை குறைவதால், அதனைக் கூட்டுவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக மாநில அரசுக்கு உரிமை உண்டா?
* வருங்காலத்தில் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் பல்வேறு இனங்களின்
அரசியல் உரிமைகள் மாற்றி அமைக்கப்படாது என்பதற்கு உறுதி உண்டா? மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையும் மாற்றப்படும் என்பதை அறிவீர்களா?
தற்போது இருக்கும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை வைத்தே தமிழக நலன்கள் சார்ந்த ஆற்று நீர் பகிர்வு, மீனவர் நலம், ஈழத்தமிழர் நலம் தொடர்பான சிக்கல்களில் ஒன்றும் சாதிக்க இயலவில்லை. ஒட்டு மொத்த தமிழகமும் ஒரே கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தாலும், நம்முடைய பங்கேற்பு இல்லாமலேயே நடுவண் அரசு அமைக்க முடியும் என்பதை 2014 தேர்தல் சுட்டுகிறது. இந்நிலையில், நமக்கான மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தாலோ இந்தி பேசும் மாநிலங்களின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்தாலோ என்ன மாதிரியான விளைவுகள் வரும்?
* தமிழ்நாட்டின் மக்கள் தொகை குறைவாலும் நல்ல அரசாட்சியாலும் கிடைக்கக்கூடிய பயன்கள், இந்தியாவின் எல்லா பகுதிகளில் இருந்தும் இங்கு குடியேறுபவர்களால் நீர்த்துப் போகும்.
* இந்தியாவின் மக்கள் தொகையைச் சம நிலையில் வைக்க, தேவையே இல்லாமல் தமிழகத்தின் மக்கள் தொகை மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாளைய சமூகத்தில் முதியோர் விகதம் கூடுதல், தனித்து விடப்பட்ட பெற்றோருக்கான சமூக பாதுகாப்பு, ஆண் – பெண் விகிதம், நகரமயமாக்கத்தின் விளைவுகள், உழைக்கும் இளைஞர்கள் குறைவு என்று எழும் பல்வேறு பிரச்சினைகளையும் தமிழக அரசு தான் எதிர்கொள்ள வேண்டும். இது தேவையில்லாத தலைவலி (சப்பானின் கதை).
* தமிழ்நாட்டில் பிற மொழியினர் மக்கள் தொகை கூட கூட, தமிழர் நிலம் தமிழர் கையை விட்டுப் போகும். நிலம் போனால் மொழி, பண்பாடு, தன்னாட்சி என்று வரிசையாக கை விட்டுப் போகும். நாமெல்லாரும் இந்தியர்கள் தாமே என்றால், இலங்கையின் தமிழர் பகுதிகளில் நடக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் விளைவுகளை ஒப்பிட்டுப் பாருங்கள். சம்மு காசுமீரில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது என்ற சட்டம் ஏன் என்று எண்ணிப் பாருங்கள். அரபியர்களின் நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு வாங்கித் தான் இசுரேல் என்ற நாடு பிறந்ததை அறிந்து கொள்ளுங்கள்.
* ஏற்கனவே 26% மட்டுமே உள்ள இந்தி பேசுவோரின் எண்ணிக்கையைத் திரித்து 45% என்று கூட்டிக் காட்டுகிறார்கள். இந்தப் பிழையான மக்கள் தொகை கொள்கை வரும் ஆண்டுகளில் இன்னும் அந்த எண்ணிக்கையைக் கூட்டி பல நிலைகளிலும் இந்தியைத் திணிப்பதற்கு உதவும்.
இந்திய ஒன்றிய அரசின் திட்டப்படி, இந்தி பேசும் மக்களின் தொகை கூடிக் கொண்டே போகும். மற்ற மொழிகளைப் பேசும் இனங்களின் தொகை குறைந்து கொண்டே போகும்.
இது குடும்பக் கட்டுப்பாடா?
இல்லை, இனக்கட்டுப்பாடா?
தொடர்புடைய கட்டுரை: The Impending South Indian Population Implosion
Comments
11 responses to “இனக் கட்டுப்பாடு”
மக்கள் தொகை கூடினால் என்ன குறைந்தால் என்ன என்று மெத்தனமாக இருப்பவர்கள் இலங்கையை உதாரணமாக எடுக்க வேண்டும். முன்பு யாழ்ப்பான மாவட்டத்திற்கு இருந்த நாடாளு மன்ற நாற்காலிகளின் தொகையை குறைத்துவிட்டார்கள் காரணம் பிரச்சனை காரணமாக தமிழர்கள் நாடுவிட்டு இடம் பெயர்ந்தமை மற்றும் இவ்வாறு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் தமிழர் நிறுத்திக்கொண்டமை. இதைவிட பல உதாரணங்கள் உள்ளது பொதுவில் பதிந்து புதைகுழிக்குள் போக விருப்பமில்லை 😉
நல்லா சொல்லுங்க மயூ 🙂
Dear Sir,
Unga judgement romba thappu. Yellamae ilakku tharpodhaiya nilaiyai vida kuraivu thaan. pala hindi paesum maanilangalil tamilnattai vida adhiga ilakku kurikka pattu irukiradhu…udharanathirkku
MP state current status – 3.7 ilakku – 2.6 – Hindi
UP state current status – 4.4 ilakku – 3.0 – Hindi
TN state current status – 1.8 ilakku – 1.7 – non-hindi
Assam state current – 2.9 ilakku – 2.3 – non-hindi
the difference in reduction rate is too high in hindi states while comparing to tamilnadu or assam. They are planning to reduce the population.
கிருபா,
ஒரு ஊரில் பத்து பெற்றோர் மட்டும் இருக்கிறார்கள். எல்லாரும் இரண்டு குழந்தைகள் பெற்றால் அடுத்த தலைமுறையிலும் பத்து பெற்றோர் வர வாய்ப்புண்டு (திருமணம் செய்யாதவர்கள், ஆண்- பெண் விகிதத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விடலாம்)
ஆளுக்கு ஒரு குழந்தை மட்டும் பெற்றால் அடுத்த தலைமுறையில் 5 பெற்றோர் தான் உருவாக முடியும். அவர்களும் ஆளுக்கு ஒரு குழந்தை பெற்றால் அதற்கடுத்த தலைமுறையில் 2 பெற்றோர் தான் இருப்பார்கள்.
எனவே தான் மக்கள் தொகை நிலையாக இருக்க கருவுறுதல் விகிதம் 2.1ஆவது இருக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான இலக்கை வைத்துள்ளார்கள்.
இந்தி பேசும் மாநிலங்களில் 3.7இல் இருந்து 2.6, 4.4இல் இருநு 3.0 என்று இலக்கு வைப்பதனால் அவர்களின் தற்போதைய மக்கள் தொகை குறையாது. வருங்காலத்தில் கன்னா பின்னாவென்று மக்கள் தொகை கூடாமல் இருக்கவே உதவும். 2.1 மேல் உள்ள எந்த இலகும் தற்போதைய மக்கள் தொகையில் இருந்து கூடுதலான மக்கள் தொகையை நோக்கியே செல்லும்.
ஆனால், இந்தி பேசாத பல மாநிலங்களில் இந்த விகிதம் ஏற்கனவே 2.1க்குக் கீழே போயிருக்கும் போது மேலும் அவர்களைக் குறைக்கச் சொல்வது சரியா?
இந்தி பேசாத மற்ற மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் திறம்பட நடைமுறைப்படுத்தியதற்கான பரிசாகவே இதனைப் பார்க்க முடியும். இந்தி பேசும் மாநிலங்கள் இவற்றைக் காலம் காலமாக முறையாக நடைமுறைப்படுத்ததால் தான் அவர்களின் வளர்ச்சி விகிதம் கடுமையாக குறைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
எல்லா இனங்களையும் சமமாகப் பார்க்கும் கூட்டரசு, எந்த இனத்தையும் 2.1க்குக் கீழ் போக விடக்கூடாது. அதைத் தான் எந்த ஒரு நாடும் செய்யும்.
சரியான திட்டமிடல் என்பது அனைத்து இனங்களுக்கான இலக்காக 2.1ஐ வைப்பதே.
உலகம், இந்தியா இரண்டுக்குமே சரியான வளர்ச்சி விகிதம் என்பது 2.1 தான் என்பதே மேலே விளக்கியுள்ளேன். நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், இந்தி பேசும் மாநிலங்களை நான்காவது gearல் இருந்து இரண்டாவது gearக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். நம்மைச் சும்மா கொஞ்சம் மெதுவாகத் தானே ஓட்டச் சொல்லி இருக்கிறார்கள் என்று. ஆனால், நாம் ஓட்டிக் கொண்டிருப்பது reverse gearல் 🙁 வேகமாக போனாலும் சரி மெதுவாக போனாலும் சரி, நாம் பின்னால் தான் போவோம். அவர்கள் முன்னால் தான் போவார்கள். எல்லா இனங்களுக்குமான neutral gear என்பது 2.1.
கிருபா,
ரவி சொல்வது சரிதான்.
எங்கும் எதிலும் அடக்குமுறை, மாநில அரசுக்கு கிடைக்கபெறாத சில கட்டுப்பாடு அதிகாரங்கள், வட இந்தியார் குடியேற்றம், ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ் விருப்பப் பாடம் மட்டுமே… கட்டாயப் பாடம் அல்ல.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது, மக்கள் தொகை கட்டுப்பாட்டுடன் இனக்கட்டுப்பாட்டையும், பொருளாதாரக் கட்டுப்பாட்டையும் கவனமாகச் செய்கிறார்கள்.
(குறிப்பு: கர்நாடகா ஆங்கிலப் பள்ளிகளில் கன்னடம் கட்டாயப்பாடமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதற்கு தலைகீழாக மாறி, தமிழ் எழுதப் படிக்க தெறியாத இளம்தழைமுறையினர் எண்ணிக்கை அதிகர்த்து வருகிறது)
I think they have currently kept minimum at 1.7 and reduced everything above… still if you only look at the reduction rate, it is higher for the already high ones and lower for the lower ones. I agree 2.1 is healthy
உலகம், இந்தியா இரண்டுக்குமே சரியான வளர்ச்சி விகிதம் என்பது 2.1 தான் என்பதே மேலே விளக்கியுள்ளேன். நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், இந்தி பேசும் மாநிலங்களை நான்காவது gearல் இருந்து இரண்டாவது gearக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். நம்மைச் சும்மா கொஞ்சம் மெதுவாகத் தானே ஓட்டச் சொல்லி இருக்கிறார்கள் என்று. ஆனால், நாம் ஓட்டிக் கொண்டிருப்பது reverse gearல் 🙁 வேகமாக போனாலும் சரி மெதுவாக போனாலும் சரி, நாம் பின்னால் தான் போவோம். அவர்கள் முன்னால் தான் போவார்கள். எல்லா இனங்களுக்குமான neutral gear என்பது 2.1.
நீங்கள் போட்ட இன்னொரு மறுமொழி எழுத்துரு குறிமுறை குழம்பிப் போய் உள்ளது. மீண்டும் ஒருங்குறி தமிழில் அல்லது ஆங்கிலத்திலாவது இட முடியுமா? நன்றி.
அன்பார்ந்த தோழருக்கு வணக்கம்!
உலகத்தமிழர்களின் தாயகமான தாய்த் தமிழ்நாட்டில், மிகை எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்கள் குடியேறி வருவதும், தமிழகத்தின் தொழில் – வணிகம் – கல்வி – வேலை வாய்ப்பில் அயலாரே ஆதிக்கம் செலுத்துவதையும் அம்பலப்படுத்தி, தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடர்ந்து குரல் கொடுத்தும் போராடியும் வருகின்றது.
பாலத்தீனத் தாயகத்தில் யூதர்கள் அதிகளவில் குடியேறுவதையும், தமிழீழத்தில் சிங்களர்கள் குடியேறுவதையும் கண்டிக்கும் பல அமைப்புகள், தமிழ்நாட்டில் பெரிய அளவில் நடைபெற்று வரும் அயலார் குடியேற்றத்தைக் கண்டிப்பதில்லை.
எனவே, இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான், வரும் செப்டம்பர் 28 அன்று சென்னை தியாகராயர் நகர் செ.தெ.நாயகம் பள்ளியில், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை, முழுநாள் இம்மாநாட்டை நடத்துகிறோம்.
இதில், அயலார் சிக்கல் குறித்து பல்வேறு அறிஞர்களும், களப்பணியாளர்களும், அயலார் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களும் கருத்துகளை முன்வைக்கின்றனர். மாலை நடைபெறும் நிறைவரங்கில், அயலார் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அறிவிக்கப்படும்.
இந்நிகழ்வில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்ளும் விதமாக, கீழ்க்கண்டவற்றை நீங்கள் செய்யலாம்.
1. அயலார் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களுடன் இருப்பின், அவர்களை இம்மாநாட்டிற்கு அழைத்து வந்து எமக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம்.
2. இம்மாநாடு குறித்து விளக்கி தங்கள் முகநூலில் ஆதரவான கருத்துகளை எழுதி பரப்பரை செய்யலாம்.
3. மாநாட்டிற்கான பரப்புரை, ஏற்பாட்டுச் செலவுகளில் பங்களிப்பு செலுத்தும் வகையில் நிதியுதவி செய்யலாம்.
தாங்கள் உதவி மிகச்சிறியதாக இருப்பினும், அது எமக்கு பேருதவியாக இருக்கும்.
தங்கள் ஆதரவிற்கு மீண்டுமொருமுறை நன்றி!
==================================
தொடர்புக்கு:
தோழர் அருணபாரதி – 7667077075
==================================
தலைமைச் செயற்கழு உறுப்பினர்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
==================================
இரவி, இது தவறான புரிதல். வெறும் 2.1 என்ற அளவை மட்டும் வைத்துக்கொண்டு இதைப்பார்த்தால் இப்படித்தான் புரியும். உண்மையில் நீங்கள் சொல்லுவதற்கு நேரிடையாகத்தான் இந்தக்கணக்கு வருகிறது. இங்கே பாருங்கள். https://twitter.com/msathia/status/586984167126081537