அருட்பெருஞ்ஜோதி என்று எழுதுவதில் தொடங்கி இருக்க வேண்டும். ரஞ்ஜனி, ஆஞ்ஜநேயர் என்று ஞ்ச வரும் இடங்களில் ஞ்ஜ கொண்டு எழுதும் வழக்கம் பெருகி வருகிறது. இது தேவையற்ற கிரந்தச் சேர்ப்பு மட்டுமல்ல; உச்சரிக்கவே முடியாத ஒரு எழுத்துப் பிழையும் கூட.
ரஞ்சித் என்பதற்கு ரன்ஜித் என்பது நெருக்கமான ஒலியாக வரும். ஆனால், விஞ்ஞானி, அஞ்ஞாயிறு, அஞ்ஞானவாசம் போன்ற சொற்களின் ஒலிப்பைப் பார்த்தால் ரஞ்ஜனி என்ற சொல்லை என்னால் உச்சரிக்கவே முடியவில்லை. நெஞ்ஜு, மஞ்ஜம், தஞ்ஜாவூர் என்று எழுதிப் பார்த்தால் இதில் உள்ள அபத்தம் தெரியும். தயவு செய்து, ஞ்ஜ என்று எழுதாதீர்கள்.
Comments
One response to “ஞ்ஜ”
கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே என்று தொடங்கும் பாடலில் டி. எம். சௌந்தரராஜன் “ரஞ்ஜனியே ரட்சிப்பாய், கெஞ்சுகிறேன் அம்மா” என்று பாடுகிறார்.