Posts tagged as:

திருக்குறள் உரை

ஊக்கமுடைமை – திருக்குறள் உரை
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று. 591
ஒருத்தனுக்குப் பணம், திறமைன்னு எத்தனை தான் இருந்தாலும், ஊக்கம் இல்லைன்னா ஒன்னுமே இல்லாத மாதிரி தான்.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். 592
மனசுல இருக்க ஊக்கம் தான் சொத்து. பணம், காசு, பொருளுன்னு சேர்க்கிற சொத்து எல்லாம் நிலைக்காமப் போயிடும்.
ஊக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். 593
ஊக்கம் இருக்கவங்க, ஒரு வேளை தங்கள் சொத்தை இழந்தாலும், “ஐயோ போச்சே”ன்னு கலங்க [...]

{ 5 comments }

வினைத்திட்பம் – திருக்குறள் உரை
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. 661
நம்ம மனசு எவ்வளவு உறுதியா இருக்கோ, அவ்வளவு தான் நாம செய்யுற செயலும் உறுதியா இருக்கும். மன உறுதி தவிர்த்த மிச்ச எல்லாம் சும்மா.
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662
சிக்கல் வர்றதுக்கு முன்னாடியே அதைத் தவிர்க்கணும்; அதையும் மீறி சிக்கல் வந்தா மனசு தளராம இருக்கணும். செய்யுற செயல உறுதியா செய்யத் தெரிஞ்சவங்க எல்லாம் இந்த இரண்டு வழியைத் தான் பின்பற்றுறாங்க.
கடைக்கொட்கச் [...]

{ 0 comments }

செய்ந்நன்றி அறிதல் – திருக்குறள் உரை.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 101
நாம ஒருத்தருக்கு ஒரு உதவியும் செஞ்சிருக்காதப்ப, அவர் நமக்கு ஒரு உதவி செய்யுறாருன்னா, அதுக்கு பதிலா இந்த உலகத்தையும் வானத்தையும் கொடுத்தா கூட ஈடு ஆகாது.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 102
என்ன உதவிங்கிறத விட அது எப்ப கிடைக்கிறதுங்கிறது தான் முக்கியம். அதனால சரியான சமயத்தில கிடைக்கிற உதவி இந்த உலகத்தை விட பெரிசு.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் [...]

{ 0 comments }

மக்கட்பேறு – திருக்குறள் உரை
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. 61
நல்ல அறிவாளி குழந்தைகளைப் பெறுவதை விட வேற கொடுப்பினை எதுவும் இல்லை.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 62
பழி இல்லாத நல்ல பண்பு உள்ள குழந்தைகளைப் பெத்தா, ஒருவருக்கு ஏழு பிறவியிலும் கெட்டதே நடக்காது.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். 63
ஒருத்தங்களோட குழந்தைங்க தான் அவங்களுக்கு சொத்து மாதிரி. ஆனா, அது எந்த அளவு மதிப்பு உள்ளதுங்கிறத அந்தக் குழந்தைகளோட செயல்களை [...]

{ 0 comments }

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. 391
படிக்க வேண்டியதை குறை இல்லாம நல்லா படிக்கணும். படிச்ச பிறகு அதுல சொல்லி இருக்கிற படி செய்யணும்..
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392
எண், எழுத்து இரண்டும் நமக்கு கண்ணு மாதிரி.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். 393
படிப்பு இல்லாட்டி கண்ணு இருந்தும் குருடன் போல தான்.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். 394
மனசு மகிழ்ந்து சந்திச்சு, “இனி எப்ப திரும்பப் பார்ப்போம்”னு ஏங்கிப் [...]

{ 2 comments }

1.1.3. நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 21
இந்த உலகத்தில் பெரியவங்க எழுதுன எல்லா நூல்லயும், ஆசையை விட்ட, ஒழுக்கத்தில சிறந்த துறவிகளைப் பத்தி தான் உயர்வா எழுதி இருக்கும்.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. [...]

{ 5 comments }

1.1.2 வான்சிறப்பு
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11
உலகம் என்னிக்கும் உயிரோட இருக்க மழை தான் காரணம். அதனால, மழைய அமுதம்னே சொல்லலாம்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12
நல்ல சுவையான உணவைத் தர்ற பயிர்களை விளைவிக்க மழை உதவும். தாகத்தை தணிக்க தண்ணியாகவும் உதவுறதால, மழையே உணவாகவும் கூட இருக்கும்.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. 13
ரொம்ப நாள் மழை வராம ஏமாத்திடுச்சுன்னா, அப்புறம் உலகமே பசியால வாட [...]

{ 2 comments }

1.1 பாயிரவியல்
1.1.1 கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
அ தான் முதல் எழுத்து. அதுக்கு அப்புறம் தான் எல்லா எழுத்தும். அது மாதிரி முதல் கடவுள் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு அப்புறம் தான் உலகத்துல எல்லாமுமே.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
அறிவு பெறுவதற்காகத் தான் படிக்கிறோம். ஆனா, அறிவே உருவமானவர் கடவுள். அப்படிப்பட்டவரோட காலைத் தொட்டு வணங்காம இருந்தா, அப்புறம் நாமெல்லாம் படிச்சு என்ன பயன்?
மலர்மிசை ஏகினான் மாணடி [...]

{ 1 comment }

எளிய திருக்குறள் உரை:
1. கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
7. மக்கட்பேறு
11. செய்ந்நன்றி அறிதல்
40. கல்வி
60. ஊக்கமுடைமை
67. வினைத்திட்பம்
***
இப்படி ஒரு எளிய உரையை எழுதிப் பார்க்கத் தூண்டிய நண்பர் கார்த்திக்பாபுவுக்குகு நன்றி.

{ 6 comments }