தமிழ் இன்று

இற்றை:

முதலில் விலையில்லாமல் வெளியிடப்பட்ட தமிழ் இன்று மின்னூல் 1000 தரவிறக்கங்கள் கண்டதை அடுத்து, இன்னும் 15 கட்டுரைகளைச் சேர்த்து புதிய மேம்படுத்திய மின்னூல் ஒன்றை விற்பனைக்கு விட்டுள்ளேன். தமிழ் நூல்களை மின்வடிவாக்கும் முயற்சியின் முதற்படி இந்நூல் வெளியீடு. உங்கள் ஆதரவைத் தேடுகிறேன். நன்றி.

பார்க்க: noolini.com

***

இந்த வலைப்பதிவில் உள்ள சில கட்டுரைகளைத் தொகுத்து தமிழ் இன்று என்ற பெயரில் என் முதல் மின்னூலை வெளியிட்டுள்ளேன்.

பொன்னியின் செல்வனையே கைப்பேசியில் படித்து முடித்தவர்களைத் தெரியும். அப்படிப்பட்டவர்களுக்குச் சம கால தமிழ் மின்னூல்கள் வாசிக்கக் கிடைப்பதில்லை. இந்தப் பின்னணியில், கையடக்கக் கருவிகளில் தமிழ் நூல் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கட்டற்ற நூல்களை உருவாக்க வேண்டும் என்ற நண்பர் சீனிவாசனின் Free Tamil Ebooks திட்டம் மிகவும் பிடித்திருந்தது. எனது வலைப்பதிவு இடுகைகளை கட்டற்ற உரிமத்தில் தர வேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்திருந்தாலும், இத்திட்டமே அதற்கான தூண்டுகோல். எனது கட்டுரைகளை மின்னூல் வடிவில் இட்டுப் பார்த்த போது பெற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இதே போல் இன்னும் பலரும் தங்கள் நூல்களை கட்டற்ற உரிமத்திலும் மின்னூல் வடிவத்திலும் தர முன்வருவது பெரும் புரட்சியாக இருக்ககும்.

நூலைப் பதிவிறக்க இங்கு செல்லுங்கள். பதிவிறக்கும் முன் நோட்டமிட, இங்கு செல்லுங்கள்.

பார்க்க: தமிழ் மின்னூல்களைப் படிப்பதற்கான வழிகாட்டி

நன்றி

* மின்னூல் உருவாக்கத்துக்கு Pressbooks.com உதவும் என்ற குறிப்பினைத் தந்துதவிய நண்பர் K. S. Nagarajanக்கு நன்றி.

* Free Tamil Ebooks என்ற திட்டத்தை முன்னெடுக்கும் சீனிவாசனுக்கு நன்றி. மின்னூல் உருவாக்கம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்ப ஐயங்களைத் தீர்த்து வைத்ததுடன், குறிப்பிட்ட தளத்தையும் நூலையும் சோதித்துப் பார்த்து வெளியிடுவதற்கும் முழு உதவி நல்கினார்.

என் @tamilravi Tweets கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது

உடல் மண்ணுக்கு. அறிவு உலகுக்கு 🙂

Creative Commons License
@tamilravi Tweets by Ravishankar Ayyakkannu is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.
Based on a work at https://twitter.com/tamilravi.
Permissions beyond the scope of this license may be available at http://blog.ravidreams.net/tamilravi-tweets.

மொழி வல்லாண்மை குறித்த பகிர் நூலகம்

மொழி வல்லாண்மை குறித்த சில முக்கியமான நூல்களைத் தமிழர்கள் ஒரு சில நூறு பேராவது படித்துத் தெளிவது அவசியம் என்னும் நோக்கில், தமிழார்வலர் ஒருவர் பின்வரும் நூல்களைக் கொடையளித்துள்ளார். ஒவ்வொருவரும் நூல்களைப் படித்து முடித்து திருப்பித் தந்தால், தொடர்ந்து பலர் படித்துப் பயன் பெறுவார்கள்.

நூல்கள் விவரம்:

* கோவையில் படிக்கக் கிடைப்பவை

நூல்களைப் பெற்றுக் கொள்ள 99431 68304 என்ற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது ravidreams at gmail dot com க்கு எழுதுங்கள்.

* பெங்களூரில் படிக்கக் கிடைப்பவை

நூல்களைப் பெற்றுக் கொள்ள balasundar at gmail dot com க்கு எழுதுங்கள்.

செப்டம்பர் 29, சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கொண்டாட்டம்

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவு அடைவதை ஒட்டி, செப்டம்பர் 29 அன்று சென்னையில் கொண்டாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அனைவரும் வருக.

உலகெங்கும் இருந்து இந்நிகழ்வுக்கு வரும் தமிழ் விக்கிப்பீடியர்களைக் காணவும், விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கக் கற்றுக் கொள்ளவும், தமிழ் இணையத்தின் அடுத்த கட்டம் குறித்து உரையாடவும் இது ஒரு நல்ல வாய்ப்பு.

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டங்கள் அழைப்பிதழ்

கல்லூரி மாணவியின் படிப்புக்கு உதவித் தொகை தேவை

குடும்ப நண்பர் ஒருவரின் மகள் கோவையில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலையில் இளங்கலை கணினி அறிவியல் இறுதியாண்டு பயின்று வருகிறார். அவரது கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தி படிப்பைத் தொடர ரூ. 10,000/- உதவித் தொகை தேவைப்படுகிறது.

மாணவியின் படிப்பு விவரங்கள்:

பத்தாம் வகுப்பில் 80% மதிப்பெண்கள்

+2வில் 93% மதிப்பெண்கள்

கல்லூரியில் முதல் நான்கு பருவத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் முதல் வகுப்பில் தேறியுள்ளார்.

உதவி செய்ய விரும்புவோர் மறுமொழியில் குறிப்பிடுங்கள். அல்லது, ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு மின்மடல் இடுங்கள். அல்லது, 99431 68304 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.

தங்களுக்குத் தேவையெனில் மாணவியின் படிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை அறியத்தருகிறேன். நீங்கள் நேரடியாக மாணவியின் வங்கிக் கணக்கிலேயே பணத்தைச் செலுத்தி விடலாம். உங்களால் இயன்ற சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை.

நன்றி.