புதிய paper கவிதைகள் – தேவதை

கேட்டது வரம்.
கிடைத்தது தேவதை.

இருக்கிற தேவதைக்காக
இல்லாத சாமிகளையும் கும்பிடலாம்.

தேவதையைக் காணவில்லை.
கண்டுபிடிக்க வருவோருக்குத்
தக்க தண்டனை வழங்கப்படும்.

என்ன கேட்பது?
ஏதாவது வரம் கேளேன்
என்று உருகும் தேவதையிடம்.

பி. கு: மார்கழிக் கோலம் போட தேவதை வருகிறாள்… 🙂 அவளுக்குக் காத்திருந்தது போலவே அவளுக்கான கவிதைகளுக்காகவும் காத்திருக்கிறேன்…


Comments

5 responses to “புதிய paper கவிதைகள் – தேவதை”

 1. ரவி ஒவ்வொரு பாராவும் தனி தனி கவிதையா?

  எதாவது வரம் கேளேன் – இது நன்றாக இருக்கிறது. நண்பர் ஒருவரின் கவிதை நினைவிற்கு வருகிறது. ஒருத்தி சாமியாடுகிறாள். என்ன வேண்டும் உனக்கு என அவனிடம் கேட்கிறாள். நீ தான் வேண்டும் என்பதை எப்படி சொல்வது என்று புரியாமல் திகைக்கிறான் அவன் என்கிற மாதிரி இருக்கும் கவிதை அது. ஆனந்த விகடனில் பிரசுரமானது என்று நினைக்கிறேன்.

 2. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  //ரவி ஒவ்வொரு பாராவும் தனி தனி கவிதையா?//

  ஆமா

  //எதாவது வரம் கேளேன் – இது நன்றாக இருக்கிறது.//

  நன்றிங்க. சாய்ராம் மறுமொழி போடுவாருன்னு நம்பி இடுகை போடலாம் போல 🙂

  //நண்பர் ஒருவரின் கவிதை நினைவிற்கு வருகிறது. ஆனந்த விகடனில் பிரசுரமானது என்று நினைக்கிறேன்.//

  ஓ..

  கவிதை தொடர்பாக ஒரு கேள்வி. புதிய paper கவிதைகள் என்று ஆங்கிலம் கலந்து தலைப்பு வைத்ததால் “இது ஒரு புதிய தரிசுக் கவிதை” என்று மின்மடலில் ஒருவர் கடிந்து கொண்டார். paper என்பதைத் தாள் என்று எழுதி இருக்க முடியும். எனினும், படைப்பிலக்கியத்தில் எந்த அளவு மொழி காப்பது இயல்பாக இருக்கும்? தாமரை, முத்துக்குமார் போன்றோர் வெகு இயல்பாக பாடல்களில் தமிழ்ச் சொற்களைத் தூவுகின்றனர். அதே வேளை, முழுக்க தமிழ் உரையாடல்களைக் கொண்டு சீமான் எடுத்த படம் நகைப்புக்குரியதானது. அல்லது, மொழி காப்பது படைப்பாளியின் வேலை இல்லையோ? புதிதாய் மொழியைக் கெடுக்காமல் மக்கள் பேசுவது மாதிரியே எழுதி விடலாமா?

 3. msathia Avatar
  msathia

  இது படைப்பிலக்கியமா அல்லது ‘திகைப்பிலக்கியமா’?
  படைப்பிலக்கியத்தில் மொழிவளர்ப்பு முக்கியமெனவும் திகைப்பிலக்கியத்தில் தேவையில்லை என்பதும் என் துணிபு.

  களவொழுக்கத்திலும் தமிழின் கற்பொழுக்கம் பற்றிக் கவலைப்படுவது.. பலே பலே ;-))

 4. இரவி,

  அனைத்து கவிதைகளுமே அருமை. குறிப்பாக
  //என்ன கேட்பது?
  ஏதாவது வரம் கேளேன்
  என்று உருகும் தேவதையிடம். //
  மிக அருமை

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   நன்றி பிரபாகரன் 🙂