பழைய Paper கவிதைகள் – கனவு !

விழித்துக் கொண்டே இருக்கிறேன்,

கனவுகளில் நீ வரும்போது,

உறங்கிவிடக்கூடாது என்பதற்காக.

உன்னை

நல்ல குடும்பத்துப் பெண் என நினைத்திருந்தேன்.

எப்படி அனுமதிக்கின்றனர் உன் பெற்றோர்?

இப்படி இருட்டிய பின்னும்

கனவில் வர?

கும்மிருட்டு நிரம்ப பயம் எனக்கு.

உன் படுக்கையறை விளக்கை அணைக்காதே.

வருவதாய் இருக்கிறேன் இன்றிரவு,

உன் கனவில்.

உன் ஒன்றுவிட்ட சித்தப்பனுக்கெல்லாம்

பயந்து பயந்து

உன்னை சந்தித்தது போதும்.

கொஞ்சமாவது உறங்கிப் பழகு.

கனவில் வருகிறேன்.

8 thoughts on “பழைய Paper கவிதைகள் – கனவு !”

  1. முதல் கவிதை அழகா இருக்கு.
    கணிமை, விக்கி, வேர்ட்பிரஸ் கூட அப்பப்போ கவிதையும் எழுதுங்க! 😉

  2. அருட்பெருங்கோ – நிறைய பேர் கவிதை எழுதிச் சொல்லிக் கேட்டாங்க..ஆனா, ஏனோ ஒரு பெண்ணையும் காதலிக்காம காதல் கவிதை எழுத வர மாட்டேங்குது 🙁 அப்புறம், என் எல்லா காதல் கவிதைகளையும் படிச்சுப் பார்த்து பாராட்டியதற்கு நன்றி 🙂

  3. “விழித்துக் கொண்டே இருக்கிறேன்,
    கனவுகளில் நீ வரும்போது,
    உறங்கிவிடக்கூடாது என்பதற்காக. ”
    இவ்வரிகளை எல்லா காதலர்களும் சொல்வது உண்மை.
    அருமையாக இருக்கிறது

Comments are closed.