பழைய Paper கவிதைகள் – இனி !

உன்னை எறும்பு கடிக்கும் தருணங்களில்,

சிரித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து

காரணம் கேட்பாய்.

மக்குப் பெண்ணே!

உனக்கே தெரிய வேண்டாமா?

You are so sweet!

எடுத்துக் காண்பிக்கும்

ஒவ்வொரு புகைப்படத்திலும்

உன் தோழிகள் பெயரைச் சொல்லும்

வெட்டி வேலையை விட்டு விடு.

நேரிலோ புகைப்படத்திலோ

நான்

உன்னை மட்டுமே பார்க்கிறேன்.

ஒரே பிள்ளையான உன்னை

ஒழுங்காகக் கூட வளர்க்காமல்

என்ன முறித்தனர் உன் பெற்றோர்?

பெண் வளர்க்கச் சொன்னால்

தேவதையை வளர்த்திருக்கிறார்கள் !

“என்னை மறந்துவிடு.

இனி பேசாதே.

இது நடக்காது.

பிரிவது தான் நல்லது..”

இன்னும் ஆயிரம் பொய் கூட சொல்.

ஓர் உண்மை சொல்கிறேன்.

“காதலித்துக் கொண்டே இருப்பேன்”.

Excuse me

வரலாமா

போர்வைக்குள்.

சொல்வது கேள்.

“முத்தம்” !

3 thoughts on “பழைய Paper கவிதைகள் – இனி !”

  1. ஏங்க இதெல்லாம் உஙளுக்கே ஓவரா தெரியலையா?

    இப்படியா? உயிரை உருக்கி எழுதறது. என்னத்தை பாராட்டறது? இன்னும் கவிதைகளோட பாதிப்புல இருந்தே மீளலையே.

  2. /சொல்வது கேள்.
    “முத்தம்” !/
    என்ன சொல்ல? நச்!

Comments are closed.