WordPress X Blogger

1. WordPress ஒரு கட்டற்ற மென்பொருள். மற்ற அனைத்து நன்மைகளுக்கும் இந்த சிறப்பே அடிப்படை. WordPress.comல் இலவசமாக வலைப்பதிவுகளை உருவாக்கிக் கொள்ள இயல்வது போக, இம்மென்பொருளை பதிவிறக்கி நிறுவி நம் சொந்தத் தளத்தில் இருந்தும் வலைப்பதியலாம். WordPressன் புதிய பதிப்புகள் அடிக்கடி வெளியாவதால், அண்மைய வலைப்பதிவு நுட்பங்கள் உடனடியாகக் கிடைக்கும். WordPress உருவாக்கும் தன்னார்வலர் குழுவை அணுகி நமக்குத் தேவையான வசதிகளை பெற்றுக் கொள்ள இயலும்.

2. எண்ணற்ற அழகழகான WordPress வார்ப்புருக்கள், பயனுள்ள நீட்சிகள் கிடைக்கின்றன. இந்த நீட்சிகள் மூலம் பல சிறப்பான வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

3. ஓடை வசதியுடன் கூடிய பகுப்புகள், குறிச்சொற்கள் இரண்டுமே உள்ளன. பகுப்புகளை ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்கி வைக்கவும் முடியும்.

4. WordPress.comல் இணைந்திருக்கும் வலைப்பதிவுகளுக்கு மொழி வாரியாக வலைவாசல்கள். எடுத்துக்காட்டுக்கு, தமிழ் WordPress.com வலைப்பதிவுகளுக்கான வலைவாசலைப் பாருங்கள். தமிழ் WordPress.com தளத்தில் உள்ள ஒவ்வொரு குறிச்சொல்லுக்கும் ஒரு தனி முகப்புப் பக்கம், அதற்குத் தனி ஓடைகள் என்று வசதிகள் இருக்கின்றன.

5. மறுமொழி அளிப்பவர்களின் IP முகவரியைக் கண்காணிக்க இயலும். நமக்கு விருப்பமில்லாதவர்களின் IP முகவரி, பயனர் பெயரை எரிதமாகக் குறித்துத் தடை செய்யலாம். மிகச் சிறப்பான எரிதத் தடுப்பும் உண்டு.

6. சில வழுக்கள் காரணமாக பிளாகர் சில இடுகைகளை முழுங்கி விடக் கூடும். WordPressல் இப்படி நிகழ்வதில்லை.

7. WordPress Dashboardல் இருந்தே நாம் மறுமொழிகள் இட்ட இடங்களுக்கான இணைப்புகள், இன்றைய சிறந்த இடுகைகளுக்கான இணைப்புகள் முதலியவற்றைப் பெற இயலும்.

8. இடுகைகள் போக, தனிப் பக்கங்களாகவும் சேர்க்க இயலும்.

9. பதிவுக்கான வருகை விவரங்கள், ஓடைகளைப் பெறுபவர் குறித்த விவரங்களை WordPressஏ அளித்து விடுகிறது. தனியாக மெனக்கெட்டு, புள்ளிவிவரத் தளங்களில் போய் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

11. மறுமொழிகளை எளிதாகத் திருத்த இயலும். இது நான் அடிக்கடி பயன்படுத்தும் வசதி.

12. முத்தாய்ப்பாக, தமிழ் WordPress தளமும் வலைப்பதிவுகளும் தற்போது முழுமையாகத் தமிழிலேயே கிடைக்கின்றன.

WordPress பயனர்கள் அதிகம் விரும்பும் வசதிகள் குறித்து அறிய WordPress favourite features பார்க்கலாம். இன்னும் விரிவான விளக்கங்களுக்கு WordPress.com features பார்க்கவும்.

தனித்தளத்தில் WordPress நிறுவிப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குறையும் இருக்காது. ஆனால், WordPress.com தளத்தின் இலவசச் சேவை பயன்படுத்துபவர்களுக்கு சில கட்டுகள் இருக்கலாம். WordPress.comல் கூடுதல் சேமிப்பு இடம் போன்ற சில வசதிகள் பெற காசு கட்ட வேண்டி வரும்.


WordPress.com x WordPress.org
குறித்த விரிவான விளக்கங்களையும் பார்க்கவும்.

பெரும்பாலான தமிழ்ப் பதிவர்கள் பிளாகரைச் சுற்றி இயங்குவதால் பிளாகரில் ஏதேனும் வழு வந்தால் ஒட்டு மொத்தத் தமிழ்ப் பதிவுலகமும் பாதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, புது பிளாகருக்கு மாறிய போது வந்த ஜிலேபி எழுத்துப் பிரச்சினை.

சுற்றுச் சூழலாகட்டும், சமூகமாகட்டும் எங்குமே பல்வகைமை தேவைப்படுகிறது.

புதிதாக வலைப்பதிவுத் தொடங்குபவர்கள் WordPress.comல் முயலலாம். தனித்தளத்தில் இருந்து வலைப்பதிய விரும்புபவர்களும் பிளாகரில் ஏற்கனவே உள்ள இடுகைகளை இடம்பெயர்க்க இயலும்.

அருஞ்சொற்பொருள்

1. கட்டற்ற மென்பொருள் – free software
2. வார்ப்புரு – template
3. நீட்சி – plugin
4. குறிச்சொல் – tag
5. ஓடை – feed
6. வலைவாசல் – portal
7. திரட்டி – aggregator
8. எரிதம் – spam
9. பல்வகைமை – diversity


Comments

37 responses to “WordPress X Blogger”

  1. ரவி,
    விரிவான பதிவுக்கு நன்றி. வலைப்பதிவர் உதவிப்பக்கத்திலும் இந்தப்பதிவை உங்கள் அனுமதியோடு இணைத்து விடுகிறேன்.

    One small suggestion: அறிவியல் சொற்களை எழுதும்போது அடைப்புக்குறியில் வழக்கமாய் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை குறிப்பிடலாமே

  2. விக்கி, தாராளமாக வலைப்பதிவர் உதவிப் பக்கத்தில் தாருங்கள். இனி, இடுகையின் முடிவில் அருஞ்சொற்பொருள் போல தருகிறேன். அருகருகே அடைப்புக் குறிக்குள் தந்தால் கடைசி வரை நாம் அவற்றை ஆங்கிலச் சொற்களாகவே மனதில் பதிந்து கொள்வோம் என்பது என் புரிதல்.

  3. சயந்தன் Avatar
    சயந்தன்

    என்னாது .. புளொக்கரில குறிச்சொல் ஓடை வசதி கிடையாதா..ஓகே அவங்க கொடுக்கல.. ஆனா நாம போட்டிருக்கோமே.. புளொக்கரில எனது சகல குறிச்சொற்களுக்கும் ஓடை உள்ளது.

  4. சயந்தன், நீங்கள் deliciousல் போய் உங்கள் இடுகைகளை குறித்து வைத்துக் கொண்டு, பிறகு அதன் மூலம் சுற்றி வளைத்து மெனக்கெட்டு ஓடை வசதி ஏற்படுத்திக் கொள்வதால், இந்த வழக்கை WordPressக்கு ஆதரவாகத் தள்ளுபடி செய்கிறேன் 😉

  5. மயூரேசன் Avatar
    மயூரேசன்

    Yeah.. dude.. thats why I moved to WordPress!!! it’s roking!!!
    (sry for Enlish.. I”m from netcafe)

  6. No probs mayu 🙂

    கண் மறைக்கப்பட்டக் குதிரையாய் ஒன்றிலேயே உழன்று கொண்டிருக்கும்போது பிறவற்றின் அருமை தெரிவதில்லை.

    1. MSN, Yahoo search – > Google search
    2. Internet explorer -> Firefox
    3. Windows – > Ubuntu
    4. MS Office – > Open Office
    5. Blogger – > WordPress
    6. MSN, Yahoo mail -> Gmail
    7. anjal – > Tamil 99

    Open source, free software, Alternatives (read Google 😉 ) rocks !!!

  7. பொன்ஸ் Avatar
    பொன்ஸ்

    ஒரு கேள்வி.. இந்த வோர்ட்பிரஸ் பயன்படுத்தினால் வார்ப்புருவை மாற்ற முடியாதுன்னு சொன்னாங்களே? அது உண்மையா?

    அப்புறம், வோர்ட்பிரஸ் பயன்படுத்தினால், கூகிள் வாசிப்பக சுட்டிகளைப் பகிர முடியுமா? மகளிர் சக்தி மாதிரி?

  8. wordpress.com இலவச வலைப்பதிவில் ஒரு வார்ப்புருவைத் தொகுத்து மாற்ற முடியாது. ஆனால், விதம் விதமான வார்ப்புருக்கள் நிறையக் கிடைக்கின்றன.

    சொந்தத் தளத்தில் wordpress நிறுவி இருப்பவர்கள் வார்ப்புருவை தொகுக்க இயலும்.

    கூகுள் திரட்டி சுட்டி, மகளிர் சக்தி பெட்டி போல் எந்த ஓடையையும் பக்கப்பட்டையில் காட்டலாம். அதில் பிரச்சினையில்லை.

  9. பிளாக்கரில் இருந்து சொந்தமாக உங்கள் முகவரியில் வேர்ட்பிரஸ் தளத்தை நிறுவிச் செல்வதானால் எந்தப் பிரைச்சனையும் இல்லை! ஆனால் wordpress.comஇற்கு மாறுவதானால் கவனம்… பல சேவைகளை செயற்படுத்த முடியாது!!! ஏமாற்றம் தான் மிஞ்சும்..!!!

  10. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    மயூரேசன் – இலவச WordPress.comல் Java நிரல்கள், flash போன்ற embedகள் செய்ய இயலாது. வார்ப்புரு திருத்த இயலாது என்பது உண்மை தான். ஆனால், பிளாகரில் கிடைக்காத இன்ன பிற வசதிகளும் அதில் உண்டு தானே?. நிரலாக்கம், gadgetகளில் ஆர்வம் இல்லாத சாதாரணப் பயனருக்கு WordPress.com போதுமான சேவை என்றே தோன்றுகிறது.

  11. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    wordpress.comல் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், பிளாகரில் இல்லாத பல நிறைகளுக்காகவே wordpress.com வேகமாக வளர்ந்து வருகிறது.

    பிளாகர் 8 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருப்பது, கூகுள் என்ற பெரிய நிறுவனத்தின் ஆதரவு இவற்றுடன் ஒப்பிடுகையில் கடந்த 3 ஆண்டுகளாக மட்டுமே automattic என்ற சிறிய நிறுவனத்தின் ஆதரவில் இயங்கும் wordpress.com alexa உலகின் முதல் 100 தளங்களில் 36வது இடத்தில் இருப்பதே அதன், வீச்சுக்கு சாட்சி. பிளாகர் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. வருங்காலங்களில் WordPress.com இன்னும் வளரும், நீங்கள் சுட்டிக் காட்டி உள்ள குறைகளையும் நீக்கிக் கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

    தனித்தள பதிவில் WordPressஐ இற்றைப்படுத்துவது தலைவலி என்று நீங்கள் சொல்லத் தான் முதன் முதல் கேட்கிறேன். நீங்கள் எப்போது கடைசியாக அதைப் பயன்படுத்தினீர்களோ.. இப்போது, இற்றைப்படுத்தல், தரத்தில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. தானாக இற்றைப்படுத்தும் நீட்சிகளும் உண்டு. வருங்காலத்தில் இன்னும் இலகுவாக்கப்படலாம்.

    நம்முடைய தளப் பெயர் மிகுந்த பெறுமதி வாய்ந்தது. பிளாகரில் வைத்திருந்தால் அதை வெறும் பதிவு எழுதுவதற்காக மட்டும் பயன்படுத்த இயலும். இதுவே, wordpress என்றால் நீங்கள் நினைத்த மென்பொருள்கள், சேவைகளையும் நிறுவிப் பார்க்க இயலும்.

  12. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நீங்கள் மேலே குறிப்பிட்ட மூன்று பிளாகர் தளங்களிலும் வேறு மென்பொருள் நிறுவ முடியுமா? http://ravidreams.net/forum மாதிரி? முடியாது தானே? பிளாகர் வழங்கியில் இலவசம் கிடைக்கும். உரிமை கிடைக்காது 🙂

  13. //பிளாகர் வழங்கியில் இலவசம் கிடைக்கும். உரிமை கிடைக்காது//
    Seems to me like Linux(Wp) Vs Windows(Blogger)!

  14. //நீங்கள் மேலே குறிப்பிட்ட மூன்று பிளாகர் தளங்களிலும் வேறு மென்பொருள் நிறுவ முடியுமா? http://ravidreams.net/forum மாதிரி? //

    நிறுவலாம்
    http://www.nellaimedicos.org/ravi/

    🙂 🙂 🙂

    //முடியாது தானே? பிளாகர் வழங்கியில் இலவசம் கிடைக்கும். உரிமை கிடைக்காது//
    கிடைக்கும் 🙂 🙂

  15. ////பிளாகர் வழங்கியில் இலவசம் கிடைக்கும். உரிமை கிடைக்காது//
    Seems to me like Linux(Wp) Vs Windows(Blogger)!//

    இங்கே பார்த்தீர்களானால்

    காசு கேட்பது வோர்ட்பிரஸ்
    இலவசமாக தருவது ப்ளாக்கர்

    🙂 🙂

    நகைமுரன் 🙂

  16. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    புருனோ http://www.nellaimedicos.org/ravi/ ஒரு html பக்கம் போன்றே தோன்றுகிறது. அதில் ஏதாவது மென்பொருள் நிறுவினீர்களா?

    நான் குறிப்பிட்ட http://ravidreams.net/forum ல் bbpress மென்பொருள் நிறுவி இருக்கிறேன்.

    WordPress காசு கேட்கிறது என்பது தவறான வாதம். WordPress.org தரும் WordPress மென்பொருள் இலவசமே. அதை நம் சொந்த வழங்கியில் வைக்க வழங்கிச் சேவையாளர்களுக்கே காசு தருகிறோம். WordPressக்கு அல்ல.

    அதுவும், http://domesticatedonion.net/tamil/ போல் நுட்பம் தெரிந்தவர் என்றால் உங்கள் சொந்தக் கணினியையே வழங்கியாகப் பயன்படுத்தலாம். வழங்கிக்காக காசு செலவழிக்கத் தேவை இல்லை.

    ஒரு வழங்கிக்குச் செலவழிக்கும் காசு வலைப்பதிவுக்காக மட்டும் செலவழிப்பது இல்லை. அதில் எத்தனையோ நன்மைகள், உரிமைகள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    ஒரு வழங்கிக்கு கொடுக்கும் காசில் இன்னும் எத்தனையோ சொந்தத் தளங்களை இயக்கலாம். என்னுடைய http://ravidreams.net வழங்கியில் 2 பதிவுகள், ஒரு மன்றம் நிறுவி இருக்கிறேன். இது போக http://tamil99.org, http://ularal.com, இன்னும் ஒரு கூட்டு முயற்சித் தளம், ஒரு நண்பரின் தளமும் இயங்குகிறது. இன்னும் எத்தனை தளங்கள் வேண்டுமானாலும் இயக்கலாம். இது போக ஏகப்பட்ட GB கோப்புகளும் சேமித்து வைத்திருக்கிறேன். கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது ஒவ்வொரு தனி தளத்துக்கும் வழங்கிக்காகச் செய்யும் செலவு மிகக் குறைவே. ஆனால், அது தரும் உரிமை அளப்பரிது.

  17. Now

    Why I don’t like hosting wordpress blog in MY server

    1. Headaches like upgrading continously
    2. All technicalities like this
    http://www.mattcutts.com/blog/three-tips-to-protect-your-wordpress-installation/
    3. http://www.mattcutts.com/blog/security-update-upgrade-your-wordpress-to-233/
    4. http://www.mattcutts.com/blog/upgrading-wordpress/

    I upgraded my WordPress installation from 2.0.x to 2.1.x tonight, and I’m a little grumpy. Autosave is great and all, but does upgrading WordPress have to be so much of a hassle? The official way to upgrade is to unpack the latest zip over top of your current installation, which seems like a recipe for cruft to keep accumulating. Things like WP-Cache can get really confused in the middle of an upgrade, and then you’re stuck doing surgery. If a plugin like Akismet gets upgraded, then you end up picking and choosing which files to keep from your wp-content directory. Categories are no longer sorted alphabetically where I can quickly find a category, and I get a new bonus category called “Blogroll” which I’m sure cleans something up from a design standpoint but sits unwelcome among more logical category names. I upload images outside of WordPress, so the upload manager doesn’t matter much for me. I use the code view, so the changes in the visual editor don’t mean much either. Geez, I feel like the curmudgeon who had to walk 10 miles uphill in the snow to install WordPress. 🙂

    My biggest surprise was a small thing: the older version of WordPress had really nice “preview ↓” and “edit ↑” links so that as you’re writing a post, you can jump back and forth easily between the edit textarea and the preview iframe. The newer version of WordPress removes those handy links. Grrr!

    Now it’s great that WordPress is open source so that I can go back to (say) the 2.0.7 release from the release archives and find/add

    or

    back into the files, but it’s a bummer to have to go mucking around to do this. What’s the difference between edit-form-advanced.php or edit-page-form.php and why do I have to add code in two places? Bah.

    I have had enough of issues like this when I hosted my site with wordpress and it is FOR THIS HEADACHE ONLY that I have switched to blogger, which frees me from such trivia 🙂 🙂 🙂

  18. Comparing

    a blog on .blogspot.com and .wordpress.com I prefer .blogspot.com because

    1) I can edit my template
    2) I can add adsense
    3) I can add other scripts

    Some thing that is missing in Blogger is detailed stats, which can be made with tracking

  19. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    புருனோ,

    பிளாகரின் இலவச வழங்கியில் இருந்தால் பிற மென்பொருள்கள் நிறுவ இயலாது. நம் சொந்த வழங்கியில் ஒரு இடத்தில் மட்டும் பிளாகரை நிறுவிக் கொண்டால், பிற இடங்களில் வேறு மென்பொருள் நிறுவலாம். ஆனால், பிளாகர் இலவசம் என்ற வாதம் அடிபடும். எப்படியும் WP நிறுவ நம் சொந்த வழங்கிக்கு காசு தருவது போல், பிளாகருக்கும் தர வேண்டும் தானே?

    நீங்கள் சொல்லும் custom redirection வசதி WPயிலும் உண்டு VIP blogger என்ற பெயரில் உண்டு. ரொம்ப பெரிய பதிவர்களுக்கு மட்டும் கிடைக்கும் 🙂 நீங்கள் சொல்வது போல் எல்லாருக்கும் வந்தால் நன்றாக இருக்கும் தான். ஒப்புக் கொள்கிறேன்.

    “எனக்கு இன்னின்ன வசதிகள் வேண்டும். அது பிளாகரில் / WordPressல் இருப்பதால் அது எனக்குப் பிடிக்கும்” என்று உரையாடலைச் சுமுகமா முடிச்சுக்கிலாம்னு நினைக்கிறேன் 🙂 எது சிறந்தது எனு இரண்டையும் ஒப்பிடுவதே கூட தவறாக இருக்கலாம். WordPress ஒரு பதிவு மென்பொருள் மட்டும் அல்ல, CMS ஆகவும் பயன்படுகிறது.

  20. //பிளாகரின் இலவச வழங்கியில் இருந்தால் பிற மென்பொருள்கள் நிறுவ இயலாது.//
    We cannot install in the Blogger Server 🙂 🙂 (of course), but we can install other software in our server and use Custom Domain for a sub-domain

    // நம் சொந்த வழங்கியில் ஒரு இடத்தில் மட்டும் பிளாகரை நிறுவிக் கொண்டால், பிற இடங்களில் வேறு மென்பொருள் நிறுவலாம். //
    I don’t think that we can “install” blogger in our server. The blog stays in Blogger’s Server and appears as if it is from our domain

    //ஆனால், பிளாகர் இலவசம் என்ற வாதம் அடிபடும்.//
    No. Blogger till now is totally free

    // எப்படியும் WP நிறுவ நம் சொந்த வழங்கிக்கு காசு தருவது போல், பிளாகருக்கும் தர வேண்டும் தானே?//
    No. No need. That is why I say blogger is leap ahead

    You need to pay only Domain Registration charges (which you have to pay for WP also)

  21. //நீங்கள் சொல்லும் custom redirection வசதி WPயிலும் உண்டு VIP blogger என்ற பெயரில் உண்டு. ரொம்ப பெரிய
    பதிவர்களுக்கு மட்டும் கிடைக்கும் 🙂 //

    Others have to PAY for that, where as in Blogger it is free for EVERY ONE 🙂 🙂 🙂

    //நீங்கள் சொல்வது போல் எல்லாருக்கும் வந்தால் நன்றாக இருக்கும் தான். ஒப்புக் கொள்கிறேன்//

    That is what I am saying 🙂 🙂 🙂

  22. //“எனக்கு இன்னின்ன வசதிகள் வேண்டும். அது பிளாகரில் / WordPressல் இருப்பதால் அது எனக்குப் பிடிக்கும்” என்று உரையாடலைச் சுமுகமா முடிச்சுக்கிலாம்னு நினைக்கிறேன் 🙂 //

    Every one has their own preferences. But What I was trying to tell is that, Blogger has more features than you might think for and can replace most of the WP features, where as WP does not have few important features of Blogger 🙂 🙂

    //எது சிறந்தது எனு இரண்டையும் ஒப்பிடுவதே கூட தவறாக இருக்கலாம். //

    Hmmmmm….. 🙂 🙂 🙂

    //WordPress ஒரு பதிவு மென்பொருள் மட்டும் அல்ல, CMS ஆகவும் பயன்படுகிறது.//

    I never denied that.

    What I was telling (or trying to tell) is the fact that with Custom Domain feature of Blogger, you can have your Blog in your own name http://www.ravidreams.net without the hassles of upgrading WP installation each and every time 🙂 🙂 🙂

    That is why I told that unless WP gives Custom Domains and facility to edit templates, it can never be even compared to Blogger 🙂 🙂 🙂

  23. //“எனக்கு இன்னின்ன வசதிகள் வேண்டும். அது பிளாகரில் / WordPressல் இருப்பதால் அது எனக்குப் பிடிக்கும்” என்று உரையாடலைச் சுமுகமா முடிச்சுக்கிலாம்னு நினைக்கிறேன்//

    Agreed

    Since I Need
    1. Facility to Edit templates
    2. Facility to Add HTML and Java Codes
    3. Some one else to host my Blog
    4. Some one else to upgrade my blog codes
    5. All these features Totally Free

    I like Blogger

    If WP gives all these features FREE, i will like WP too 🙂 🙂 🙂

  24. For Completion Sake

    A blog at wordpress.com gives 3 and 4, but not 1 and 2 (and for 1 and 2 you need to pay money)

    A Self Hosted WP gives 1 and 2, but not 3 and 4 (3 is not a big problem – you can get web space for about Rs 100 a month, but 4 really is a nuisance and that is the single reason why WP is still a no-no for guys like me for details see comment no 20 here http://blog.ravidreams.net/wordpress-x-blogger/#comment-2138)

  25. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    //I don’t think that we can “install” blogger in our server. The blog stays in Blogger’s Server and appears as if it is from our domain//

    சரி, நிறுவுவது என்று இதைத் தான் சொல்ல வந்தேன்.

    //ஆனால், பிளாகர் இலவசம் என்ற வாதம் அடிபடும்//

    Bruno, if u don’t buy a server and just buy a domain name and stay with blogger server, you can’t install other software. if u wanna have the liberty to install software, u buy your own server. blogger doesn’t cost but to have the liberty u r paying for server which is the same w WP. but you are time and again telling WP costs 🙁

    regarding VIP blogging, it’s something that u can’t buy they have to invite u. even if u pay, u can only get a redirect from domain.com to domain.wordpress.com . u can’t get a domain.com w wordpress.com software.

    //Blogger has more features than you might think for and can replace most of the WP features//

    sorry, i feel this as an over statement. u r the only blogger i know who went back to blogger.com . i have many friends who after shifting to wordpress regretted staying w blogger for such a long time.

    //without the hassles of upgrading WP installation each and every time//

    i maintain 9 blogs for me and my team and never felt it hassle and so do lakhs of people who use WP. see the counter at http://wordpress.org/download/counter/

    compared 2 the features, possibilities WP has, upgrading is not an issue at all.

    all said, guess we told our points. let’s please conclude the argument 🙂

  26. //all said, guess we told our points. let’s please conclude the argument :)//

    Agreed 🙂 🙂

  27. நான் கூற வருவதை மீண்டும் தெளிவாக கூறுகிறேன்
    1. வோர்ட்பிரஸ் ஒரு நல்ல மென்பொருள்
    2. .வோர்ட்பிரசில் அடிப்படை சேவைகளுக்கு (உதாரணம் தமிழ் மண கருவிப்பட்டை சேர்ப்பது, அட்சென்ஸ் சேர்ப்பது) கூட பணம் அளிக்க வேண்டும். .blogspot.comல் அனைத்து, சேவைகளும் இலவசம்
    3. சொந்த டொமைன் பெயர் பதிந்து வைத்திருந்தீர்களென்றால் அந்த பெயரில் வலைத்தளம் அமைக்க மூன்று வழிகள் உள்ளன
    வழி 1 : ப்ளாக்கர் redirection – இது முற்றிலும் இலவசம்
    வழி 2 : வோர்ட்பிரஸ் redirection – இதற்கு காசு தர வேண்டும் (தமிழ் மண கருவிபட்டை சேர்ப்பதற்கும் காசு, redirectionக்கும் காசு)
    வழி 3 : சொந்த தள வோர்ட்பிரஸ் – இதற்கு வழங்கி வாடகை எடுக்க வேண்டும் . (காசு)
    அதை விட பெரிய பிரச்சனை – பாதுக்காப்பு குளறுபடி.
    எனவே தங்களின் பெயரில் வலைத்தளம் அமைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக காசு செலவழிக்காத, பாதுகாப்பு குளறுபடிகள் எதுவும் இல்லாத சேவை ப்ளாக்கர் தான்

  28. புருனோ அவர்கள் கூறுவதை அப்படியே வழி மொழிகிறேன்.

    SEO என்கிற வகையில் வேர்ட்ப்ரஸ் மிகச் சிறந்ததாக இருக்கிறது.

    ஆனால் வலைப்பதிவு மூலம் வருமானம் ஈட்டுவது என்பது வேர்ட்ப்ரசின் இலவசச் சேவை வாயிலாக இயலாது. அதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்தினால்தான் இயலும்.

    நாளை ஒரு வேளை வேர்ட்பிரசை, கூகிள் வாங்கினாலும் வாங்குமோ?

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      WordPressஐ கூகுளோ வேறு எந்த நிறுவனமோ வாங்குவதற்கான அறிகுறிகளைக் காணோம். WordPressஐ நடத்தும் Automattic நிறுவனம் தான் PollDaddy, Gravatar போன்ற நிறுவனங்களை வாங்கி வருகிறது. கூகுள் எந்த திறமூல / கட்டற்ற மென்பொருள் நிறுவனங்களையாவது வாங்கி உள்ளதா? அதனால் அதற்கு எந்த அளவு வருமானம் இருக்கும் என்று தெரியவில்லை.

  29. நன்றி ரவிசங்கர்!

    இரண்டு விசயங்கள்.

    1. விக்கி சொன்னது போல, ஆங்கில வார்த்தைகளை அருகிலேயே எழுதுவது ரொம்ப நல்லா இருக்கும். மொத்த பதிவையும் படிக்கிற வரைக்கும், நான் ‘டர்ஜ்’ ஆய்ட்டேன். இப்ப கடைசியா நீங்க கொடுத்திருக்கும் வார்த்தைகளை நான் திரும்ப திரும்ப ஸ்கொர்ல் பண்ணி பண்ணி.. மேட்ச் பண்ணனும். படிக்கிற விருப்பம் அதில் போய்டும்.

    அப்புறம், நீங்க நீட்சி, கட்டட்ற மென்பொருள்-ன்னு சொல்லுறது எல்லாம் சரிதான். ஆனா இந்த தொழில்நுட்ப வார்த்தைகள் எல்லாம், யாரால் உருவாக்கப்பட்டவை?

    கீபோர்டை – கை விசை தட்டச்சு பட்டடை-ன்னு தமிழ் பண்ணினாங்களே, அப்படி யாரோ.., ஆங்கிலத்தை அப்படியே, தமிழ் படுத்திய கொடுமைதான் இந்த ‘தமிழ் தொழில்நுட்ப’ வார்த்தைகள் எல்லாம்.

    தமிழில் எழுதுவதையும், படிப்பதையும்தான் நாம எல்லோரும் விரும்பறோம். ஆனா எல்லாத்தையும் தமிழ் ‘படுத்தறேன்’-ன்னு, மற்றவங்க எழுதற மாதிரி நீங்களும் எழுதாதீங்க. ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பதில் என்ன தவறு இருக்கு?

    அப்படியே, தமிழ்லதான் எழுதனும்னு நினைச்சாலும், அதை படிக்கிறவங்களுக்கு பழக்கப்படுத்தின பின்னாடிதான், முழுவீச்சில் தொடர முடியும்னு நினைக்கிறேன்.

    ஒரு தொழில்நுட்ப கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்கும் கஷ்டத்தை விட, அதை தமிழில் படிப்பது இன்னும் அதிக சிரமமாகிறது என்பது என்னோட எண்ணம் (மட்டுமே).

    2. WordPress vs Blogger -ன்னு சொல்லிட்டு WordPress-நல்லவைகளை மட்டுமே சொல்லியிருக்கீங்க. WP-ல் இல்லாதது Blogger-ல் இருக்கலாம் அல்லவா? அதையும் குறிப்பிட்டீங்கன்னா நல்லா இருக்கும். இரண்டிலும் உள்ள நல்லது கெட்டதை சொல்லலீன்னா, இது ஒரு சார்பு கட்டுரையா போக வாய்ப்பிருக்கு.

    உதாரணத்துக்கு, Blogger-ல் multiple blogs-ஐ ஒரே அக்கவுண்டில் இருந்து மிக மிக எளிமையா உருவாக்க முடியும். அது WP-ல் சாத்தியமா? WP MU தவிர்த்து!

    இன்னும் இன்னும்.. உங்களிடம் இருந்து இதுபோன்ற அருமையான கட்டுரைகளை எதிர் பார்க்கிறோம்.

  30. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    Hollywood Bala,

    முதலில், உங்கள் வலைப்பதிவில் தொடர்ந்து ஆங்கிலத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தி வருவதற்குப் பாராட்டுகிறேன்.

    நான் இக்கட்டுரையை WordPress சார்புடன் தான் எழுதி இருக்கிறேன் 🙂 புருனோ போன்றவர்கள் மறுமொழிகளில் பிளாகரின் சிறப்புகளை எடுத்துரைத்து உள்ளார்கள்.

    WordPress.com ல் ஒரே பயனர் கணக்கை வைத்து பல பதிவுகளை உருவாக்கி நிருவகிக்க முடியும். WordPress.orgல் இதைச் சில நீட்சிகள் கொண்டு செய்ய இயலும் என்றாலும் mu wordpress தான் சிறந்த வழி. பிளாகரில் உள்ள வசதி இதில் இருந்து மாறுபட்டதா? WordPress தான் எல்லா வகைகளிலும் பிளாகரை விட சிறந்தது என்று சொல்ல மாட்டேன். எனக்குத் தேவையான வசதிகள் WordPressல் சிறப்பாக உள்ளன. பிளாகர் சார்பாக பேசுவோரும் இதே போல் எண்ண இயலும்.

    கட்டற்ற மென்பொருள், நீட்சி போன்ற சொற்கள் 5 ஆண்டுகளாகவாவது இணையத்தில் புழக்கத்தில் உள்ளன. யார் உருவாக்கினார் என்று தெரியாவிட்டாலும் பொதுப் புழக்கத்துக்கு வந்து விட்டது. தமிழோ ஆங்கிலமோ எந்த ஒரு புதுச் சொல்லும் துவக்கத்தில் திகைப்பளிக்கவே செய்யும். எங்காவது யாராவது முதலில் எழுதத் தொடங்கினால் தானே பயன்பாட்டுக்கு வரும்?

    ஏன் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது?

  31. //எங்காவது யாராவது முதலில் எழுதத் தொடங்கினால் தானே பயன்பாட்டுக்கு வரும்?//

    ஹா.. ஹா..ஹா. ! நான் நினைச்சேன். இதை நிச்சயம் நீங்க சொல்லுவீங்கன்னு. உங்களோட ‘சுட்டி’யையும் (மகிழ்ச்சியா 🙂 ) படிச்சேன்.

    5-6 வருடங்களா இணையத்தில் புழக்கத்தில் இருப்பது உண்மையா இருக்கலாம். ஆனா ப்ளாகர்-ன்னு ஒன்னு தமிழில் எல்லாம் மக்கள் எழுதறாங்கன்னே எனக்கு 3-4 மாசமாதான் தெரியும் (சாஃப்ட்வேர் ஃபீல்டில் இருந்தவன்).

    அது மாதிரி, தினம் தினம் ஆயிரக்கணக்கில் மக்கள் புதிதாய் வர வாய்ப்பிருக்கு. அவங்களுக்கு நீங்க குறிப்பிட்ட தமிழ் வார்த்தைகள் மட்டுமல்ல.. ஆங்கில வார்த்தைகளை கூட கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லாம இருக்கலாம்.

    கட்டுரை.. தமிழில் இருப்பதை விட ‘எளிமை’யா இருக்கனும்ங்கறதுதான் என்னோட எண்ணம். இல்லைனா வழக்கறிங்கர்கள் எழுதிய சட்ட புத்தகம் மாதிரி யாருக்கும் புரியாமலே போய்விடும் அபாயம் இருக்கு.

    நம்ம பிரச்சனை, பேசும் தமிழும், எழுத்துத்தமிழும் வேறு வேறா இருக்கறதுதான்/இருப்பதுதான். வெகு சகஜமா அத்தனை மொழி வார்த்தைகளையும் கலந்து பேசும் நாம் (ஹலோ சித்தப்பு.. எப்டி இருக்கீங்க), பேனாவை கையில் பிடிச்சிட்டா மட்டும் வள்ளுவர் கணக்கா,

    ‘நலம்.. நலமறிய அவா. நிகழும் பிரதி ஆண்டு, தைத்திங்கள்..’-ன்னு எழுதுவோம்.

    வழ.. வழான்னு போகாம சுருக்கமா சொல்லனும்னா… எனக்கு ஒரு புதிய ஆங்கில வார்த்தை தெரியலைன்னா, உடனே அதை அகராதியில் கண்டுபிடிக்க முடியும். தமிழில் அது வசதி முழுக்க கிடையாது.

    எனவே நாம சொல்ல வந்ததை, தெரிந்த வார்த்தைகளோடு சொல்லலைன்னா யாருக்கும் பயன்படாத பக்கமா போகும் வாய்ப்புதான் அதிகம்.

    ஆனாலும் நீங்க ஓவரா.. திங்க் பண்ணுறீங்க.. தல! நிறைய கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளனும்னு மனசு நினைச்சாலும், ப்ரேக்டிகல்-ங்கற வார்த்தை (ஹா. ஹா.. மன்னிச்சிடுங்க) அதை தடுக்குது.

    நான்… ‘நம்ம’ ஸ்டைலிலேயே போய்க்கிறேன். 🙂 🙂 🙂

  32. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    //ஆனாலும் நீங்க ஓவரா.. திங்க் பண்ணுறீங்க.. தல! நிறைய கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளனும்னு மனசு நினைச்சாலும், ப்ரேக்டிகல்-ங்கற வார்த்தை (ஹா. ஹா.. மன்னிச்சிடுங்க) அதை தடுக்குது.
    //

    🙂 🙂 உங்கள் எல்லா கேள்விகளுக்கும் ஏற்கனவே வெவ்வேறு இடுகைகளில் பதில் எழுதி வைத்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் http://blog.ravidreams.net/archives/ பாருங்கள்.

    பேசுவது போல் எழுதலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எழுதும் போதாவது பிற மொழி கலக்காமல் எழுதுவோம் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை 🙂 எது சிறந்தது என்ற உரையாடல் முடிவில்லாதது தானே 🙂

    தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி.

  33. ரெண்டு ஏற்கனவே படிச்சிட்டேன். மணி காலை 4.00. தூங்கப்போகனும். கண்டிப்பா திரும்பி வந்து படிக்கிறேன். 🙂

    பாராட்டியதற்கு நன்றி சொல்லாமலே போய்ட்டேன். மன்னிக்கனும்!

    நன்றி..!!

  34. shankar Avatar
    shankar

    Any how I think blogger is the best & user friendly