WordPress சிலேபியைச் சாப்பிடுவது எப்படி?

WordPress 2.2வுக்கு இற்றைப்படுத்திய பின் வலைப்பதிவில் இருந்த தமிழ் எழுத்துகள் எல்லாம் சிலேபி சிலேபியாகத் தெரிந்து பதற வைத்து விட்டன. இந்தப் பிரச்சினை, WordPressஐ இற்றைப்படுத்திய எல்லா தமிழ் வலைப்பதிவர்களுக்கும் வரவில்லை. அப்படி பிரச்சினை வருபவர்களுக்கான தீர்வு கீழே:

wp-config.php கோப்பில்

define(‘DB_CHARSET’, ‘utf8’);
define(‘DB_COLLATE’, ”);

என்ற வரிகளைக் கண்டுபிடித்துப் பின்வருமாறு மாற்றவும்

//define(‘DB_CHARSET’, ‘utf8’);
//define(‘DB_COLLATE’, ”);

இந்தத் தீர்வைச் சொல்லித் தந்து பதிவில் பாலை வார்த்த VoWக்கு நன்றி 🙂

தொடர்புடைய உரையாடல்: WordPress சிலேபி பிரச்சினைக்கான தீர்வுகள் – ரவி மன்றம்

20 thoughts on “WordPress சிலேபியைச் சாப்பிடுவது எப்படி?”

  1. கட்டற்ற அண்ணாக்களைக் கோவிச்சுக்கிறதும் அப்புறம் தீர்வு கண்டதும் மன்னிப்பு கேக்கிறதுமே பொழப்பா போச்சு. இதற்கு முன் இருந்த புலம்பல் இடுகையை மாற்றி உதவிக் குறிப்பாக மாற்றி வைத்திருக்கிறேன். புலம்பல் தொடர்புடைய மறுமொழிகளையும் அழித்து இருக்கிறேன். எல்லாம் வலைப்பதிவு வரலாற்றில் wordpress அண்ணாவின் சறுக்கலை யாரும் கவனிக்கக் கூடாதுன்னு தான் 😉

    bloggerல் மறுமொழி இட்டவரின் பெயரைத் தமிழில் காட்டவே பல வரி நிரல் எழுத வேண்டி இருந்தது. wordpressல் சும்மா இரண்டு // போட்டதில் எல்லாம் சரியாப் போச்சு..ஆக, இப்பவும் wordpress தான் ஜெயிச்சிருக்கு 😉

  2. // போட்டதற்கு பதிலாக அதனை அழித்துப் பாருங்கள். அதுவும் சரியாக இருக்கும். இருக்கலாம்.

  3. பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம்.

    ammaa = அம்மா விளம்பரம் நல்லா இருக்கு. (very creative advertisement. But I still use ‘ammaa’). 🙁 or 🙂

  4. அப்ப பிரைச்சனையை தீர்த்தாச்சு…நாமழும் மாற வேண்டியதுதான்!!!!!

  5. —But I still use ‘ammaa’). 🙁 or 🙂 —

    அதே அதே 🙂
    (தமிழ் கீ எக்ஸ்டென்சன் ரொம்ப நல்லாருக்கு 😀

  6. Pingback: மைய நீரோட்டம் » Blog Archive » வேர்ட்பிரஸ் 2.2 எடிட்டிங்
  7. Pingback: சொந்த வேர்ட்பிரஸ் வலைப்பதிவு உருவாக்க… : லிங்க்கர் | Linkr
  8. Pingback: Tamil in Wordpress
  9. தங்களின் கருத்துக்கு நன்றி. உங்களின் tips ஐ உபயோகப்படுத்தி இப்பொழுது எங்கள் இணைய தளம் தமிழில் தெரிகிறது.

    WordPress 2.6.3 உபயோகப்படுத்தினேன் முதலில். ஆனால் அதில் பின்வரும் சிக்கல்கள் வந்தன.

    1. Static front page ஆக வைக்கப்படும் பக்கம் மட்டும் தான் Page களில் தெரிகிறது. மற்ற Page எதை கிளிக் பண்ணினாலும் அவை தெரியவில்லை. Error 404 message வந்தது.

    2. பின்பு WordPress 2.5 Install பண்ணி, நீங்கள் சொன்னபடி,

    wp-config.php கோப்பில்

    define(’DB_CHARSET’, ‘utf8′);
    define(’DB_COLLATE’, ”);

    என்ற வரிகளைக் கண்டுபிடித்துப் பின்வருமாறு மாற்றினேன்.

    // define(’DB_CHARSET’, ‘utf8′);
    // define(’DB_COLLATE’, ”);

    வேறு எந்த வித Language file ம் Install பண்ணவில்லை. Page களுக்கும் post களுக்கும் permalink structureஐ /%postname%/ என்று மாற்றினேன்.

    இப்பொழுது URL ல் எல்லா post களுக்கும் page களுக்கும் link URL தமிழில் தெரிகிறது. IE 6.0+, Firefox 3.0+ மற்றும் Google Chrome 0.2 ஆகிய browser களில் தமிழ் தெளிவாக தெரிகிறது.

  10. I’m having similar problem while I’m trying to work in Kannada/bengali. I’m oon wordpress 2.7.1 and I’m sorry I don’t understand tamil.

    Care to explain a bit in English so that I can benefit ?

    Thanks in advance,
    /G

  11. Gautam,

    in your wp-config.php file

    find the lines

    define(’DB_CHARSET’, ‘utf8′);
    define(’DB_COLLATE’, ”);

    and change them as below:

    //define(’DB_CHARSET’, ‘utf8′);
    //define(’DB_COLLATE’, ”);

  12. நீங்கள் சொன்னபடி இரண்டு define வரிகளை மாற்றிய பிறகு தமிழ் சொற்கள் தெரிகின்றன. ஆனால் என்னுடைய பழைய ஆங்கில போஸ்ட்களில் உள்ள ” குறி ஒரு டயமன்ட் கட்டத்துக்குள் கேள்விகுறி ஆல் மாற்றப் பட்டுவிட்டது. இனி நான் தமிழில் எழுத முடியும். பழைய போஸ்ட்கலை எப்படி சரி செய்வது? உங்கள் உதவிக்கு நன்றி உடையவனாக இறுப்பேன்.

  13. நன்றி தலைவா.. போராட்டத்தின் பின்னர் உங்கள் வலையைக் கண்டேன்.. தமிழ் எனக்கும் வருது.. பரீட்சாத்த நடவடிக்கையில் இப்போது

  14. can anyone tell me how to add google transliteration in wordpress ?

    i tried but it’s not working in my wordpress blog

  15. Hi Guy,
    So how do you type in the post area? Using any tamil keyboard translators such as Tamil Keyman? What about the fonts? Do the user need to download and install the font used to type OR is there any UTF-8 Tamil fonts available?

Comments are closed.