Tag: விக்சனரி

  • விக்சனரியின் முக்கியத்துவம்

    தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இணையத்தில் உள்ள பிற தமிழ் அகரமுதலிகளையும் விக்சனரியில் சேர்க்கும் முயற்சியில் இருக்கிறோம். இது குறித்து உதவுமாறு உத்தமம் மடற்குழுவில் கேட்டிருந்தோம். அதை ஒட்டி நிகழ்ந்த உரையாடலில் விக்சனரியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டி வந்ததால் இங்கு ஆவணப்படுத்தி வைக்கிறேன்.

  • தமிழ் விக்கிப்பீடியர்கள்

    2005 மார்ச் முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்கத் தொடங்கினேன். அதற்குப் பிறகு தமிழ் இணையத்தில் பல இடங்களில் சுற்றி வந்துவிட்டாலும், இன்று வரை 100% மன நிறைவு அளிக்கும் ஒரே திட்டம் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் மட்டும் தான். தணியாத தமிழார்வத்துக்கு களமாக இருப்பது ஒரு காரணம். இன்னொரு முக்கியக் காரணம், தன்னலமற்ற, ஒத்த கருத்துடைய, தோழமை உணர்வு மிகுந்த, பண்பில் சிறந்த, நேர்மையான நண்பர்களுடன் பணியாற்றுவதே தனி இன்பம் தான். இவர்களில் சிலர் தமிழ்…

  • விக்சனரி (பன்மொழி – தமிழ் இணைய அகரமுதலி)

    கட்டற்ற பன்மொழி – தமிழ் – பன்மொழி அகரமுதலி ஒன்றை உருவாக்கும் முயற்சியாக 2004 முதல் தமிழ் விக்சனரி தளம் செயல்படுகிறது. டிசம்பர் 2008 நிலவரப்படி ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான சொற்களுக்கு பொருள் சேர்த்துள்ளோம். ஒரு சொல் பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்பது முதலிய குறிப்புகள், ஒரு சொல்லை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள், பலுக்கல் ஒலிக்கோப்புகள், பொருத்தமான படங்கள், அச்சொல்லுக்கான பிற மொழி விக்சனரி இணைப்புகள் ஆகியவை தரப்படுகின்றன. நீங்கள் அறிய விரும்பும் சொல்லை Googleல் இருந்தே…