Tag: தமிழ் வலைப்பதிவுகள்

  • தமிழ் வலைப்பதிவுகள்

    எனக்குப் பிடித்த சில தமிழ் வலைப்பதிவுகள். நினைவுக்கு வரும் வரிசையில். 1. வளவு – தமிழ் மொழி, பண்பாடு குறித்த உரையாடல்களுக்கு. 2. வீணாய் போனவன் – அழகான, சுருக்கமான, மனதைத் தொடும் கவிதைகளுக்கு. 3. செவ்வாய்க்கிழமை கவிதைகள் – மனிதர்கள் தொடர் அருமை. 4. மயூரன் எழுதும் GNU / Linux குறிப்பேடு – கட்டற்ற மென்பொருள்கள், அவற்றின் மெய்யியல் அறிய. 5. தமிழ் சசி – இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த அலசல்கள். 6.…

  • புதிய தமிழ் வலைப்பதிவர்களுக்கான வேண்டுகோள்கள்

    பல புதிய தமிழ் வலைப்பதிவுகளைக் காண்கையில் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு பதிந்து வைக்கிறேன். இக்கருத்துக்களில் நான் செய்து திருத்திக் கொண்ட பிழைகளும் அடங்கும். இன்னும் நிறைய புதியவர்களைப் பார்க்கையில் கருத்துகள் மாறலாம். கூடலாம். தங்கள் வாசிப்புக்காக மட்டுமே எழுதுவோர், நிகழ் வாழ்க்கை நட்பு வட்டத்துக்கு மட்டும் எழுதுவோர் இவ்வேண்டுகோள்களைக் கண்டு கொள்ள வேண்டாம். ஆனால், முன் பின் அறிமுகமில்லா பலரும் தன் எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று எழுதுவோர் கவனிக்கலாம்.

  • தமிழ் வலைப்பதிவர்களுக்குப் 10 வேண்டுகோள்கள்

    தொடர்ந்து பல தமிழ் வலைப்பதிவுகளை வாசித்து வரும் வகையில் தமிழ் வலைப்பதிவர்களை நோக்கி சில வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறேன்.

  • சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப்பட்டது எப்படி?

    989 மடல்கள். இரண்டு மாத உழைப்பு, திட்டமிடல். நூற்றுக்கணக்கில் தொலைபேசி உரையாடல்கள். ஒவ்வொரு வாரமும் பட்டறை குறித்த திட்டமிடலுக்கான நேரடி சந்திப்புகள். அரங்கத்தை இறுதி செய்வது, குறுந்தகடு, நூல் அச்சிடல் வேலை என்று இவற்றுக்காக குறைந்தது 15 மனித உழைப்பு நாட்களாவது செலவு இடப்பட்டிருக்கும். இவற்றின் விளைவாகத் தான் பதிவர் பட்டறை சாத்தியமானது.

  • மாற்று! எப்படி மாற்று?

    மாற்று! தளத்தைப் பார்வையிட்ட நண்பர்கள் பலரும் கேட்ட கேள்வி, இத்தளம் எப்படி ஒரு மாற்றாக விளங்கும் என்பது தான். திரட்டிகள் என்ற அளவில் தமிழ்மணம், தேன்கூடு, TamilBlogs தளங்கள் இருப்பதும் பரிந்துரைத் தளங்களாக கில்லி, DesiPundit போன்ற தளங்கள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. மேம்போக்காகப் பார்க்கையில், மாற்று! இன்னுமொரு தமிழ்த் தளமாகத் தெரியலாம் என்றாலும், இதன் தோற்றம், செயல்பாடு, நிர்வாகம், ஒருங்கிணைப்பு, தள வடிவமைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் உண்டு. வாசகருக்கான நன்மைகள் * முழுக்கத் தமிழ் உள்ளடக்கம்…