Tag: சொற்கள்

  • எளிய தமிழ்

    தகுந்த இடங்களில் புதிய பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவதும் கற்றுக் கொள்வதும் தவிர்க்க இயலாதது. புல்லாங்குழல் என்று சொன்னால் கூடத் தான் குழந்தைக்குப் புரியாது. அதற்காக காலத்துக்கும், ஓட்டை போட்ட இசைக் கருவி / பீப்பீ என்றே அதற்குப் புரிகிற மாதிரி சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? நம்மில் பலரும் புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொள்வதை பள்ளிக்கூடக் காலத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். இது தான் பிரச்சினை. இந்தக் குறைவான சொற் தொகையைக் கொண்டு எப்படி உலகின் எல்லா கருத்துக்களையும்…

  • ஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது?

    ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் ஏன் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம்…