Category: டெங்கு

 • நிலவேம்பு விற்பனை

  நிலவேம்பின் பக்க விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்தால், நிலவேம்புக் குடிநீர் என்பது மேலும் எட்டு வகையான மூலிகைகள் கலந்த நீர் என்கிறார்கள். ஆனால், கடைகளிலோ நிலவேம்புப் பொடி, பவுடர், குடிநீர் என்று வெவ்வேறு பெயர்களில் கடைகளில் விற்பனையாவதைக் கீழே காணலாம். வெறும் நிலவேம்புப் பொடியை வாங்கி மக்கள் கரைத்துக் குடித்தால் வரும் விளைவுகள் என்ன? எந்த வித தரக்கட்டுப்பாடும் ஒழுங்கு முறையும் இல்லாமல் இப்படி விற்பனையாகும் பொருள்களில் கலப்படம் இல்லை என்பதற்கு என்ன உறுதி? புரதம், மாவுச் சத்து,…

 • அரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது?

  சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி இவை எல்லாம் மருத்துவமே இல்லை, நவீன அறிவியல் மருத்துவம் தான் உண்மையான மருத்துவம் என்றால் பிறகு அரசு ஏன் இவற்றை தனி மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கின்றனது? AYUSH என்று தனி அமைச்சகம் வைத்திருக்கிறது? …இந்தியாவைப் பொருத்தவரை யுனானி, சித்தா, ஆயுர்வேதம் ஆகியன மதம், இனக்குழுப் பெருமை ஆகியவற்றோடும் தொடர்பு உடையது. எனவே, அரசியல் காரணங்களுக்காக ஒரு அரசு இவற்றில் தலையிட விரும்பாது. அது மட்டும் இன்றி, தனிப்பட்ட பல அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்…

 • டெங்கு தடுப்பூசி

  உலகின் 10 நாடுகளில் டெங்குக்குத் தடுப்பு மருந்து கொடுத்து வருகிறார்கள். ஆனால், இந்தியாவில் இதை அறிமுகப்படுத்த இன்னும் கூடுதல் சோதனைக்ள தேவை என்று சொல்லி இந்திய அரசு மருந்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் பாருங்கள், சித்த மருத்துவம் என்றால் எந்தச் சோதனையும் தேவையில்லை. நேராக மனிதர்களுக்குக் கொடுக்கலாம். சித்த மருத்துவத்தில் மனிதர்கள் தான் சோதனை எலிகள். //Globally the most advanced is a vaccine made by pharma giant Sanofi and recommended by…

 • நிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா? ஆய்வுக் கட்டுரை அலசல்

  தமிழக அரசின் கீழ் உள்ள கிங் மருந்தாய்வு நிறுவனமும் தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் டெங்குக்கு நிலவேம்பு மருந்தாகும் என்று எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று சமூக ஊடகங்களில் சுற்றி வருகிறது (அனைத்து இணைப்புகளும் மறுமொழியில்). PROTECTIVE EFFECT OF POLYHERBAL SIDDHA FORMULATION-NILAVEMBU KUDINEER AGAINST COMMON VIRAL FEVERS INCLUDING DENGUE – A CASE-CONTROL APPROACH இந்தக் கட்டுரையின் முடிவுகளை முன்வைத்தே டெங்குக்கு நிலவேம்பு தரலாம் என்று வாதிடுகிறார்கள். இந்தக் கட்டுரை சொல்வது…

 • டெங்கு சிகிச்சை

  டெங்குக்கு மருந்தே இல்லை என்கிறார்கள். பிறகு மருத்துவமனைக்கு அழைத்து என்ன தான் சிகிச்சை அளிப்பார்கள்? 1. காய்ச்சல் என்று வருபவர்களுக்கு முதலில் இரத்தப் பரிசோதனை செய்வார்கள். நோய் தாக்கிய ஒருவருக்கு டெங்கு இருக்கிறதா என்று தெரிய மூன்று நாட்கள் ஆகும். அது வரை உடல்வலி போக்க paracetamol தருவார்கள். தக்க நீராதாரம் உண்ண அறிவுறுத்துவார்கள். தீவிர டெங்கு தாக்குதல் வந்தால் என்னனென்ன அறிகுறிகள் இருக்கும் என்று எடுத்துச் சொல்லி, இந்த நிலை தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வர…

 • இயற்கை செயற்கை மாயை

  நவீன அறிவியல் மருத்துவத்துக்கு எதிரான மிகப் பெரிய பயம், பரப்புரை என்னவென்றால் அவர்கள் கொடுக்கும் * மாத்திரைகள், மருந்து, தடுப்பூசி ஆகியன செயற்கையான வேதிப் பொருட்கள். இதில் பக்க விளைவுகள் உண்டு. * மாறாக, சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு மருத்துவம் தருவது இயற்கையான உணவு, மூலிகைகள் மட்டுமே. இதனால் பக்க விளைவுகள் இல்லை. இந்த உலகில் உள்ள அனைத்துமே வேதிப் பொருட்களால் ஆனது. இதில் இயற்கை, செயற்கை ஏதும் இல்லை. உங்கள் உடலும் சரி, நீங்கள்…

 • நிலவேம்பின் டெங்கு எதிர்ப்புத்திறன்

  கேள்வி: தமிழக அரசின் கீழ் இயங்கும் கிங் மருந்தாய்வு நிறுவனமே நிலவேம்பின் வைரசு எதிர்ப்பு திறன் குறித்து ஆய்வு வெளியிட்டுள்ளதாமே? பதில்: ஆம். நிலவேம்பின் வைரசு எதிர்ப்பு மற்றும் பிற மருத்துவ குணங்கள் குறித்து கிங் மருந்தாய்வு நிறுவனம் மட்டுமன்றி உலகின் பல நிறுவனங்களும் ஆய்வு செய்து முதல் நிலை ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. இத்தகைய ஆய்வுகள் பெரும்பாலும் சோதனைத் தட்டில் மட்டுமே நிகழ்ந்த முதல் நிலை ஆய்வுகள். நிலவேம்பு டெங்குவைக் குணப்படுத்தும் என்று இன்னும் இறுதியான…

 • அரசு மருத்துவர்கள் தனியார் பணியாற்றலாமா?

  இலட்சக்கணக்கான +2 மாணவர்களுடன் போட்டியிட்டு மாநிலத்திலேயே சிறந்த மதிப்பெண்கள் பெற்று, 5.5 ஆண்டுகள் MBBS 3 ஆண்டுகள் ஊரகப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவர் பொறுப்பு 3 ஆண்டுகள் MS அல்லது MD. 2 ஆண்டுகள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு முடித்து மீண்டும் அரசு பணியாற்றும் மருத்துவர் மாதம் வீட்டுக்கு எடுத்துச் சென்ற சம்பளம் மாதம் 42,949 உரூபாய் மட்டுமே. (2014 நிலவரம்) இது அரசு பணியில் இதே ஆண்டுகள் பணியனுபவத்துடன்…

 • உளவியல் மருத்துவ பயங்கரவாதம்

  டெங்குக்கும் ஏமாற்று மருத்துவக் கும்பலுக்கு என்ன தொடர்பு? ஏன் இவர்களைப் போட்டு இந்த அடி அடிக்கிறீர்கள்? …போன நூற்றாண்டில் நம் மக்கள் மருத்துவர்கள் இல்லாமல் செத்தார்கள். இந்த நூற்றாண்டில் நவீன மருத்துவம் இருந்தாலும், அதனை நம்பாதே, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, எல்லா நோய்க்கும் செடியில் மருந்து இருக்கிறது என்று மூளைச்சலவை செய்யும் இந்த மோசடி ஏமாற்று மருத்துவக் கும்பலால் சாகிறார்கள். ஒரு தீவிரவாதி குண்டு வைத்தால் 100 பேர் தான் சாவார்கள். ஒரு ஊர்…

 • டெங்குக்கு நவீன மருத்துவம் மட்டுமே தீர்வு

  பொது நல அறிவிப்பு அரசு சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா, இயற்கை மற்றும் அனைத்து வகை இந்திய முறை மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக வரும் யாரையும் உள்நோயாளியாக அனுமதிக்காமல் நவீனமுறை மருத்துவமனைகளுக்கு (அலோபதி என்னும் ஆங்கில மருத்துவம்) அனுப்பி வைக்குமாறு அரசு அறிவித்துள்ளது. எனவே, இனிமேலும் டெங்கு காய்ச்சலுக்கு வீட்டிலேயே பப்பாளி, நிலவேம்பு முதலிய பாட்டி வைத்தியங்களை முயலாமல் தனியாரில் இதே இதர மருத்துவ முறைகளைப் பின்பற்றுவோரை நாடாமல் மாவட்ட அரசு மருத்துவமனைகளை நாடுங்கள். இந்த அறிவிப்பைப்…