தமிழில் பெயர்ப் பலகைகள்

பொருளகம், தங்கும் விடுதி, பெரு அங்காடி, காலணியகம், இனிப்பகம், உணவகம், மின்னணுப் பொருளம், எழுது பொருளகம், கணினி பயிற்சி மையம்.. இப்படிச் சென்னையின் சில கடைகளில் புதிய தமிழ்ப் பெயர்ப் பலகைகள் தென்படுகின்றன. என்னடா, இது தமிழ்நாடு தானா இல்லை இலங்கை, சிங்கப்பூரா என்று குழப்பமாகப் போய் விட்டது 🙂

தமிழில் பெயர் எழுத வேண்டும் என்று முன்பே அரசு உத்தரவு இருந்தாலும், இப்போது செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அந்த உத்தரவைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறார்களாம். நல்ல மாற்றம்.

இருந்தும், பல கடைகளில் மாற்றத்தைக் காணோம். சில கடைகள் ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதி உள்ளன. இப்போது மாறியுள்ள சில கடைகளும் தற்காலிகப் பெயர்ப் பலகைகளை வைத்துள்ளன. சென்னைக்கு வெளியே இந்த நடவடிக்கைகளைக் காணவில்லை. மாநாட்டுக்குப் பிறகும் மாற்றம் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.


Comments

4 responses to “தமிழில் பெயர்ப் பலகைகள்”

  1. மாநாட்டுக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கிற மாதிரி தெரியல (நல்லது தான் 🙂 ). சென்னை மேயர் இதில் தீவிரமா இருக்கிறதாகவும், அவரே சில பகுதிகள்ல நேரடியா ஆய்வு செய்றாருன்னும் செய்திகள்ல வருது.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      இது மாநாடு தொடர்பாக செய்யப்படுவதாக உயர் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி ஒருவர் மூலம் அறிந்தேன். மேயரே ஆர்வமா இருந்தா இன்னும் நல்லது. மாற்றம் தொடர்வதை உறுதிப்படுத்தலாம்.

  2. அப்படியே ‘சன்’ ‘டீவி’, கலைஞர் ‘டீவி’, ‘ரெட் ஜயன்ட் மூவீஸ்’, ‘கிளவுட் நைன் மூவீஸ்’ இதுகளையும் தமிழில எழுதினா இன்னமும் விடியும்… 😉

    1. ஹா..ஹா.. அருமை நிமல் 😉