ஜட்டி காயப் போடுவது எப்படி?

ராத்திரி துவைச்சு வீட்டுக்குள்ளயே காயப் போட்ட எல்லா ஜட்டியும் காயல. drierக்கு உள்ள payment cardலயும் பணம் இல்ல. துவைச்சு காஞ்ச ஜட்டியும் ஒன்னும் இல்ல. ஜட்டி போடாம பள்ளிக்கூடம் போய் பல வருசம் ஆச்சு. ஆக, அன்னிக்கு காலைல தான் இந்த கேள்வி உதிச்சுச்சு.

உடனடியாக ஜட்டி காயப் போடுவது எப்படி?

ம்..பால் காய வைச்சுக்கிட்டே யோசிச்சப்ப தான் அந்த idea வந்துச்சு..பால் எல்லாம் காய வைக்கிற micro wave oven க்கு ஜட்டி காய வைக்கத் தெரியாதா? பாலுக்கு 2 நிமிசம். ஜட்டிக்கு 1 நிமிசம் போதும்னு நினைச்சு ஜட்டிய ஒரு தட்டுல வைச்சு ovenக்குள்ள அனுப்பியாச்சு.

living roomல வந்து பால ஆற வைச்சுக் குடிச்சுக்கிட்டு இருக்கையிலயே ஏதோ ஒரு வாசம்..ம்ம்..அடுப்புல ஒன்னும் வைக்கலயே?? பால் தான தீயும்..வேற என்ன தீயும்??

ஆஆ..ஜட்டீஈஈஈஈஈஈஈஈ..50 ரூபாய் VIP ஜட்டீ..

ஓடிப் போய ovenஅ திறந்தா ஒரே புகை மூட்டம்..குளிர்காலத்துக்கு வீடு எல்லாம் ஜன்னல் அடைச்சு வச்சிருந்தது.

புகையப் போக்க காத்து வேணுமே? சரின்னு ஜன்னல திறந்த காத்தோட்டமா இருக்கணுமேன்னு ஜட்டிய வெளிய பிடிச்சா, அடிச்ச காத்துக்கு ஜட்டி பத்திக்கிட்டு எரியுது.!!

ஜட்டி சுட்டதடா ! கை விட்டதடா !! 🙁

அப்புறம் தான் மண்டைல விளக்கு எரிஞ்சது. நெருப்ப அணைக்க தண்ணி கூட பயன்படும்னு..உடனே குழாய திறந்து ஜட்டியில் பற்றிய நெருப்பை அணைச்சாச்சு..

நல்ல வேளை வீட்டுல டச்சுப் பிள்ளைகள் இல்ல..இல்லாட்டி, என் மானம் மருவாதி எல்லாம் கப்பல் ஏறி இருக்கும்..சுத்தம், சுகாதாரம்னு கத்துற அந்த பிள்ளைகள்ட்ட பாட்டும் வாங்கி இருக்க முடியாது.

எரிச்சு முடிஞ்சதுக்கப்புறம், நல்ல ஜட்டி ஒன்னு மறைஞ்சு இருத்தது கண்ணுல தெரிஞ்சுச்சு. அத எடுத்துப் போட்டுக்கிட்டு, புகை போக எல்லா ஜன்னலயும் திறந்து வைச்சிட்டு, எரிஞ்ச ஜட்டிய குப்பை தொட்டில மறைச்சி வச்சிட்டு, college கிளம்பிப் போயாச்சு..இத என் colleague கிட்ட சொன்னப்ப ஏன் iron box பயன்படுத்தலன்னு கேட்டார்..ஹ்ம்..அத எப்படி மறந்தேன்??

இது ஒரு மானக்கேடான விசயம் தான். ஆனா, கேட்டவங்க எல்லாம் சிரிச்சாங்க..

எத்தனை நாளைக்கு தான் வடிவேலப் பார்த்தே சிரிக்கிறது..

ம்ம்..நான் எல்லாம் என்னத்த research பண்ணி என்னத்த கண்டுபிடிச்சு??

🙂 🙂


Comments

25 responses to “ஜட்டி காயப் போடுவது எப்படி?”

  1. து.சாரங்கன் Avatar
    து.சாரங்கன்

    //வீட்டுக்குள்ளயே காயப் போட்ட எல்லா ஜட்டியும் காயல//
    ஏன் ரூம் ஹிட்டர் மேல போட்டுருக்கலாமே!!

    // ஆனா, கேட்டவங்க எல்லாம் சிரிச்சாங்க..//
    நானும் சிரிச்செங்க

    //ம்ம்..நான் எல்லாம் என்னத்த research பண்ணி என்னத்த கண்டுபிடிச்சு??/
    ஜட்டிய மைக்ரோவெவ்ல போடக் கூடாதுன்னு கண்டுபிடிச்சிங்க

  2. heater மேல துண்டை காயப் போட்டிருந்தனே 🙂

    //ஜட்டிய மைக்ரோவெவ்ல போடக் கூடாதுன்னு கண்டுபிடிச்சிங்க//

    🙂

  3. 🙂

    எப்படி பதிவுகளின் வரிசையில் உங்க இந்தப் பதிவையும் சேர்த்துக்கறேன்.

  4. வடுவூர் குமார் Avatar
    வடுவூர் குமார்

    நல்லா சிரிச்சேன்.
    அடுப்பை மூட்டி ஏதாவது தட்டையான பாத்திர மூடி வைத்து அதில் கூட சுட வைக்கலாம்.:-)))
    மைக்ரோ வேவ்- ஏகத்துக்கு யோசிரிக்கீங்க போல!!

  5. அடுத்த முறை ஊருக்குப் போகையில விறகு அடுப்பு மூட்டி அதுக்கு மேல ஒரு கொடிக்கயிறு கட்டிக் காயப் போடலாம்னு இருக்கேன் 😉

  6. ஒரே சிரிப்புத்தான் போங்க

  7. இதை அன்னிக்கே வாசிச்சு.. சிரிச்சு… ஹையோ 🙂 இன்னிக்கு கில்லியில் பார்த்து மீண்டும் வந்தேன்.

  8. இப்படிக் கலக்கறீங்களே? திரட்டிகளில் உங்க பதிவு வந்தா எங்க கண்ணுல சுலபமா படும்ல? போன முறை யாருடைய பதிவிலிருந்தோ இங்கே வந்து சேர்ந்தேன்.. எப்படின்னு ஞாபகமில்லை.

  9. சேதுக்கரசி – அது எப்படிங்க இந்த மானக்கேடான விசயத்தை திரட்டில வேற விளம்பரப்படுத்துறது 🙂 இப்ப கில்லி காரங்க வேற என் ஜட்டியத் துவைச்சு காயப்போட்டாங்க 🙂

    என் பதிவு என்றில்லை யாருடைய பதிவை நீங்கள் விரும்பினாலும் உங்கள் கூகுள் ரீடரில் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். கூகுள் மெயில் போல் கூகுள் ரீடரும் பயன்படுத்த எளிமையானது. இல்ல, live bookmark செஞ்சுக்குங்க..இது குறித்து விவரம் வேணும்னா கேளுங்க சொல்லித் தர்றேன்.

    கூகுள் ரீடர் வழிகாட்டி – http://veyililmazai.blogspot.com/2007/03/40-google-reader.html

    சரி போதும், கொஞ்ச காலமா over ஆ கூகுள் ரீடர் கொ.ப.செ மாதிரி பேச ஆரம்பிச்சுட்டேன் 🙂

  10. சயந்தன் Avatar
    சயந்தன்

    இப்போதைக்கு இது ஒரு மொக்கையாகப் பலருக்குத் தெரியலாம். ஆனால் 50 வருடங்களுக்குப் பிறகு இது ஒரு வரலாற்றுக்குறிப்பு.. 😉

  11. //ஆனால் 50 வருடங்களுக்குப் பிறகு இது ஒரு வரலாற்றுக்குறிப்பு..// :)))

  12. //பொன்ஸ்
    //ஆனால் 50 வருடங்களுக்குப் பிறகு இது ஒரு வரலாற்றுக்குறிப்பு..// :)))//

    ரிப்பீட்டே.. இது சயந்தன் சொன்னதுக்கு :))

    சென்ஷி

  13. மயூரேசன் Avatar
    மயூரேசன்

    ரவி.. நீங்களுமா!!1 ஹா.. ஹா.. 🙂

    இரசித்து எழுதியுள்ளீர்கள்… நல்ல சிரிப்புத்தான் போங்க!

  14. Nagarathinam Avatar
    Nagarathinam

    அந்த நேரத்துக்குள் என்ன செய்வது என்று தெரியாமல் இப்படி நடப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதை மனம் திறந்து எழுதிய விதம் அருமை. எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்று யாராவது கேட்டார்களேயானால் இந்த பதிவை ஒரு மாடலாக அனுப்பி வைக்கலாம்.

  15. […] ஜட்டி விசயத்தில் எனக்கு முன் அனுபவம் இருக்கனால், ஜட்டிமேன்-னு கூட மூணு […]

  16. Idetrorce Avatar
    Idetrorce

    very interesting, but I don’t agree with you
    Idetrorce

  17. Aravindan Avatar
    Aravindan

    எழுதறதுக்கு எவ்ளோ விஷயம் இருக்குன்னு ஆச்சர்யமா இருக்கு ரவி! சூப்பர் பதிவு.

  18. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    Idetrorce – இதுல நீங்க agree பண்ண வேற என்ன இருக்கு 🙂

    அரவிந்தன் – ஆமா, seriosஆவும் சரி comedyஆவும் சரி, எப்பவுமே எழுத நிறைய விசயங்கள் இருக்கு…

  19. I liked this post. I would call this as post-modern blogging! Good one, liked it.

  20. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    ElementG, இது பின்நவீனத்துவப் பதிவா..!!! கேக்கவே மகிழ்ச்சியா இருக்கே !! நானும் இலக்கியவியாதி ஆகிட்டனா 😉

  21. ஜட்டி காயப் போடுவதில் இவ்வளவு பிரச்னை இருக்கிறதா – தெரியலயே இவ்வளவு நாளா

  22. ra.venkat Avatar
    ra.venkat

    It is a different news.

  23.  Avatar
    Anonymous

    நைனா சோக்கா கலாய்க்குர போ. நம்க்கும் இந்த மேரி நிர்ர்யா ஏக்ச்பெறியண்சே கீது ப்பா!!

    இன்னா நான் டைரெக்ட் ஆ தீ ல போட்டேன் நீ பொட்டில போட்டுகீர. இருந்தாலும் ஸ்மெல் தாங்கல நைனா!!

  24. ஆர்.சண்முகம் Avatar
    ஆர்.சண்முகம்

    //ஜட்டி சுட்டதடா ! கை விட்டதடா !! :(//

    ஆகா அருமையான வரிகள்….
    ஹா..ஹா…