கணினிக்குப் புதியவர்களுக்கு தெரியாத தளங்கள், மென்பொருள்கள்

1. உலாவி – சிறந்த உலாவல் அனுபவம், பாதுகாப்பு, பயன்பாட்டு எளிமை ஆகியவற்றுக்கு Firefox உலாவி பயன்படுத்துங்கள்.

2. Office மென்பொருள் – Open Office பயன்படுத்திப் பார்த்தவர்கள் எதற்கு MS officeஐ போய் வாங்க / திருட வேண்டும் என்று நினைக்கலாம்.

3. ஊடக இயக்கி – VLC media player . குப்பை என்று ஒரு கோப்பு நீட்சி கொடுத்தாலும் வாசித்துக் காட்டி விடும் அற்புத ஊடக இயக்கி.

4. குரல் அரட்டை – skype . குரல் அரட்டைக்கு மிகச் சிறந்த மென்பொருள்.

5. அரட்டை – yahoo, msn, gtalk என்று பல அரட்டைகளங்களிலும் இருப்பவரா? எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பார்க்க gaim பயன்படுத்துங்கள். IRC உரையாடலையும் இதில் மேற்கொள்ளலாம்.

6. மின்னஞ்சல் – gmail தவிர வேறொன்றும் பரிந்துரைப்பதில்லை நான். இதில் சில சமயம் புதியவர்களின் மடல்கள் எரிதப்பெட்டிக்குள் (spam folder) போய் விடுகிறது என்பது மட்டும் குறை.

7. இயக்குதளம் – பழங்காலத்து திறன் குறைந்த கணினியை வைத்து windows உடன் போராடுகிறீர்களா? ubuntu லினக்ஸ் இயக்குதளம் பயன்படுத்துங்கள். 2 GB அளவு மட்டுமே இடம் இருந்தால் கூடப் போதும். பாதுகாப்பு, வேகம், பயனெளிமை அதிகம். தவிர, உபுண்டு தமிழிலும் உண்டு !

8. தேடல், தகவல் – தேடுவதற்கு சிறந்தது கூகுள். தேடாமல் சில அடிப்படைத் தகவல்களை அறிய சிறந்தது விக்கிபீடியா. (விக்கிபீடியா தமிழிலும் இருக்கிறது!). ஆங்கிலச் சொற்களுக்கு Dictionary.com

9. பொழுதுபோக்கு – தமிழ்ப் பாடல்கள் கேட்க – ராகா, Music india online, MusicPlug . திருட்டுப் படம் பார்க்க – tamiltorrents 😉

பொதுவாக windows என்ற சின்ன வட்டத்துக்குள் உட்கார்ந்து பார்க்கும்போது கணினி நம்மை கட்டிப் போடுவது போல் இருக்கிறது. ஆனால், திறவூற்று மென்பொருள்களை பயன்படுத்திப் பார்க்கும்போது தான் கணினிப் பயன்பாட்டின் அருமை தெரிய வருகிறது. மேற்கண்டவற்றில், gaim, ubuntu, open office, firefox, vlc எல்லாமே திறவூற்றுக் கட்டற்ற மென்பொருள்கள்.


Comments

16 responses to “கணினிக்குப் புதியவர்களுக்கு தெரியாத தளங்கள், மென்பொருள்கள்”

  1. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நர்மதா – தமிழ்த் தட்டச்சு உதவிக்குப் பார்க்கவும் –

    1. கில்லியில் Voice on Wingsன் வழிகாட்டி

    2. தமிழ் விக்கிபீடியா வழிகாட்டி

    நான் கொடுத்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததில் மகிழ்ச்சி.

  2. romba thanks. tamilil type panradhu eppadinnu solla mudiuma?

  3. romba thanks. enakku nalla useful a irukku , tamilil type panradhu eppadinnu theriyalai, mudinthal sollikodungal.

  4. Anonymous Avatar
    Anonymous

    மிகவும் பயனுள்ள பதிவு.தொடர்ந்து எழுதவும். தெரியாத பல விடயங்களைத் தெரிய முடிந்தது. நன்றி.

    குட்டி

  5. திருக்குமரன் Avatar
    திருக்குமரன்

    பயனுள்ள பதிவு.நன்றி

  6. பயனுள்ள பதிவு நன்றி ரவி அவர்களே!

  7. kavin-erode Avatar
    kavin-erode

    very usefull

  8. நான் புதியவனே! உங்கள் பரிந்துரைகளை ஏற்றுப் பயன்படுத்திப் பார்க்க விரும்புகிறேன். நன்றி
    -தமிழநம்பி

  9. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    தமிழநம்பி, உங்களுக்கு இந்த இடுகை பயன்பட்டதில் மகிழ்ச்சி. உங்க வலைப்பதிவைப் படிக்கையிலேயே கேட்கணும்னு நினைச்சேன்..தமிழநம்பி தான் உங்க பேரா? தமிழ்நம்பி என்பதைப் பிழையா எழுதிட்டீங்களோன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்…

  10. “தமிழநம்பி” என்பதே என் பெயர். பெயரின் மூன்றாம் எழுத்து உயிர்மெய் எழுத்தே! -த.ந.

  11. அலிஃப் என்பதை தமிழ் 99 யில் எப்படி அடிப்பது??

  12. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    alif » ansfjf அல்லது ans+shift+fjf என்று எழுதிப் பாருங்கள். நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளுக்கு ஏற்ப இது மாறலாம்.

  13. தகவலுழவன் Avatar
    தகவலுழவன்

    ஓங்குக தமிழ்.
    நண்பரே நலமாயிருப்பிங்கன்னு நம்புகிறேன்.உங்கள் எழுத்துக்களால் தான், பலவற்றை உணர்ந்து செயல்படுகிறேன். குறிப்பாக தமிழ்99 விசைப்பலகை, firefox உலவி, விக்சனரிப் பதிவுகளில் மேலாண்மை..
    உபுண்டு மற்றும் தபுண்டு பற்றி எழுதுவீர்களா? சற்று விரிவாக எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் ‘அரிச்சுவடி’ என்பது உங்களுக்குத் தெரிந்ததே.நன்றி.வணக்கம்.~~~~

  14. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நன்றி தகவலுழவன். நீங்கள் என் வலைப்பதிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.

    தமிழ்99 குறித்த விவரங்களுக்கு http://tamil99.org பாருங்கள்.
    விக்சனரி குறித்த விரிவான உதவிக் குறிப்புகளை விக்சனரியிலேயே விரைவில் எழுதி முயல்கிறேன். firefox பற்றி என்ன எழுதுவது என்று புரியவில்லை 🙂 பயன்படுத்துவது மிகவும் எளிது. உபுண்டு / GNU/Linux ஒரு கடல். நானே இப்ப தான் நீந்தத் தொடங்கி இருக்கேன் 🙂 தபுண்டு ஒரு சிறிய செயலி. அதை உபுண்டுவில் நிறுவிக் கொண்டால் தமிழில் படிக்க, எழுத வசதிகளைச் செய்து தரும். அவ்வளவே.

  15. mohamed mohideen Avatar
    mohamed mohideen

    enakku romba romba santhosama irukku.Intha ravi annan tamil websaita parthathilirunthu. inimale nan thamillaeyae elutha tripannraen.nannri.

  16. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    mohideen, நீங்க தமிழில் எழுத முற்படுவது கண்டு மகிழ்ச்சி.