தொடுப்புகள் – 8 பெப்ரவரி 2008

* விண்டோஸ் எக்ஸ்ப்பி கணினியை வேகமாக்குவது எப்படி? – இதில் உள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி இப்ப என் கணினி 40% மடங்கு வேகமாகிடுச்சு !

* Matt cuts வழங்கும் ஜிமெயில் உதவிக் குறிப்புகள்

* புகழ்பெற்ற வலைப்பதிவராக ஆவது எப்படி?

cartoon from www.weblogcartoons.com

Cartoon by Dave Walker. Find more cartoons you can freely re-use on your blog at We Blog Cartoons.

* ReadBurner – பல மொழி கூகுள் பகிர்வுகளைத் திரட்டிக் காட்டும் தளம். இதைத் தான் ஓராண்டு முன்னரே மாற்று! என்ற பெயரில் தமிழுக்குச் செய்தோம். 

* Uncylopedia – கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியா படித்து மண்டை காய்ந்து இருப்பவர்கள் இந்த கொலைவெறிக் களஞ்சியத்தைப் படித்து வாய் விட்டுச் சிரிக்கலாம்.

* Freerice.com – GRE காலத்துக்குப் பிறகு ஆங்கிலச் சொற்தொகையைச் சோதித்துப் பார்த்து விளையாட உதவிய தளம்.

* FileHippo – இந்தத் தளத்தில் உள்ள சூடான பதிவிறக்கங்களைத் துழாவினால் சில உருப்படியான மென்பொருள்கள் கிடைக்கின்றன.

* Poverty – இந்தத் தள முகப்பில் நொடிக்கொரு முகம் தோன்றித் தோன்றி மறையும். முகங்கள் அழகா இருக்கே என்று யோசிக்கும் முன் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள். அம்முகங்கள் அண்மையில் பட்டினிக் கொடுமையால் இறந்தவர் முகங்கள் 🙁

* Pen Drive Linux – போகும் இடம் எல்லாம் லினக்ஸ் பென்குயினைக் கொண்டு செல்ல.

* உருப்படியான வலைப்பதிவு நுட்பக் குறிப்புகள் வழங்கும் ProBlogger

* Google Webmaster central – உங்கள் இணையத்தளத்தைக் கூகுள் பார்வையில் அறிய.

* NHM Converter – பல MB கோப்பையும் அசராமல் வழுவில்லாமல் குறியாக்கம் மாற்றித் தருகிறது. தமிழுக்கு ஒரு அருமையான இலவச மென்பொருள். முன்பு சுரதாவின் பொங்கு தமிழ் செயலியைச் சார்ந்து இருந்தேன்.

* µTorrent – ரொம்ப நாளா பிட்டொரன்ட் செயலி தான் பயன்படுத்தினேன். ஆனா, மியூடொரன்ட் சிறந்ததுங்கிறாங்க.

* கூகுள் திரட்டும் தமிழ்ப்பதிவுகளை கண்டுகொள்வது எப்படி 

சரி, இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி..

இணைப்பு, சுட்டி, தொடுப்பு – இந்த மூன்றில் link என்பதற்கு ஈடாக உங்களுக்குப் பிடித்த சொல் என்ன? முதலில் இணைப்பு, சுட்டி என்று சொல்லிக் கொண்டிருந்து இப்ப தொடுப்பு என்ற சொல் எனக்குப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. காரணம்: தொடுப்பு என்ற சொல் link என்பதற்கு ஈடாக இணையம், கணினி துறைகளுக்கு வெளியேயும் பயன்படுத்தலாம். பயன்படுகிறது. எனக்கும் அவனுக்கும் ஒரு தொடுப்பும் இல்லை என்று எங்கள் ஊரில் சொல்வதுண்டு.


Comments

7 responses to “தொடுப்புகள் – 8 பெப்ரவரி 2008”

  1. சுட்டி (சுருக் & நச்)

    தொடுப்பு – மீன், தூண்டில், தொடை என்று சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வருகிறது; பழக்கமானால் பிடித்து போகலாம்

    பதில் கேள்வி: பின்னூட்டம், மறுமொழி, பதில், கருத்து feedback என்பதற்கு எது பிடித்திருக்கிறது?

  2. […] இது தவிர ‘புகழ்பெற்ற வலைப்பதிவராக ஆவது எப்படி’ என்றும் அறியலாம். […]

  3. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    தொடப்புக்கும் மீன், தூண்டில், தொடக்கும் என்னங்க தொடர்பு? எனக்கு இது வரை இதெல்லாம் நினைவு வந்தது இல்லை..இனி வரும் ;

    பின்னூட்டம் – எனக்குத் தமிழ்ல பிடிக்காத சில சொற்கள்ல ஒன்னு 🙂

    கருத்து – comments பகுதில வர்ற எல்லாமே கருத்து இல்லை. கேள்விகள் வரலாம். pingbacks கூட வரும்.

    அதனால மறுமொழிக்கு தான் என் வாக்கு.

  4. சங்கர் கணேஷ் Avatar
    சங்கர் கணேஷ்

    வணக்கம். 🙂

    சுட்டி என்ற சொல்லே எனக்கும் பிடித்திருக்கிறது 😉

    பிறகு, uTorrentஏ சிறந்தது. இந்த இடுகை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம்:
    http://www.johntp.com/2006/04/19/how-to-increase-download-speeds-of-utorrent/

    மீண்டும் சந்திப்போம். 🙂

  5. என்னானாலும்.. தொடுப்பு தொடுப்பு என்று எழுதிப்பழகி விட்டது!!

  6. //முதலில் இணைப்பு, சுட்டி என்று சொல்லிக் கொண்டிருந்து இப்ப தொடுப்பு என்ற சொல் எனக்குப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. //

    //பின்னூட்டம் – எனக்குத் தமிழ்ல பிடிக்காத சில சொற்கள்ல ஒன்னு :)//

    //அதனால மறுமொழிக்கு தான் என் வாக்கு.//

    ஆமாமாம்.

  7. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    சங்கர் கணேஷ் – நீங்க uTorrent குறித்து கொடுத்த தொடுப்பு ஆராய்ச்சிக் கட்டுரை அளவுக்கு இருக்கு 😉 பொறுமையா படிச்சுப் பார்க்கிறேன். ஒரு வகைல உங்களைப் பார்த்து inspire ஆகி தான் நான் தொடுப்பு கொடுக்கத் தொடங்கினேன்ன்னு சொல்லலாம். நீங்கள் பல்வேறு இடங்களில் தரும் தொடுப்புகள் ரொம்பப் பயனுள்ளவையா இருக்கு.

    மயூ, காசி – நன்றி.

    பொதுவா சில கருத்துகள்: இணைப்பு = attachment, supplement, connection; சுட்டி = pointer, சுட்டித்தனம்னு பல பொருள்கள்ல பல இடங்கள்ல பயன்படுது. தொடுப்புக்கு எல்லா இடத்திலயும் ஒரே பொருள் தாங்கிறது எனக்குப் பிடிச்ச விசயம்.

    பின்னூட்டம் என்ற சொல் feedback என்பதின் நேரடி மொழிபெயர்ப்பாக இருப்பதோ பதிவுலகம் தவிர வேறு எங்கும் பயன்படுற மாதிரி தெரியலை. Feedback போன்று பல இடங்களிலும் வரும் சொற்களுக்கு பொதுவான ஒரு சொல்லை உருவாக்குவதோ ஏற்கனவே இருக்கும் சொல்லைப் பயன்படுத்துவதோ பொருத்தமாக இருக்கும்.