நேற்று பிரெஞ்சு திரைப்படம் அமேலி பார்த்தேன். அருமையா இருக்கு. அதில் வரும் நாயகி Audrey Tautou பார்வையற்ற ஒருவருக்கு உதவும் காட்சி கீழே:
8 thoughts on “பிரெஞ்சு அசின்”
Comments are closed.
தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு
நேற்று பிரெஞ்சு திரைப்படம் அமேலி பார்த்தேன். அருமையா இருக்கு. அதில் வரும் நாயகி Audrey Tautou பார்வையற்ற ஒருவருக்கு உதவும் காட்சி கீழே:
Comments are closed.
கஜினி படமே மெமண்டோ படத்தோட உல்டா தானே.
இந்த படத்தை பார்க்கனும்னு ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்.
சந்தோஷ் » கஜினி மெமன்டோவோட உல்ட்டான்னு நிறைய பேருக்குத் தெரியும். ஆனா, இப்படி சின்னச் சின்ன காட்சி கூட சுடுவாங்கன்னு எதிர்ப்பார்க்கலை..
மெமன்டோ படமும் கணினில இருக்கு..ஆனா, பத்து நிமிசத்துக்குப் பிறகு அதைப் பார்க்க மனசு வரலை. ரொம்ப பின்னவீனத்துவப் பாணில கதை சொல்லி இருக்காங்க 🙂
அமேலி திரைப்படம் டொரன்ட் தளங்கள்ல நிறைய கிடைக்குது..முயன்று பாருங்க
இப்பத்தான் இந்தப் படத்தைப் பார்க்கிறீங்களா. 🙂
சுடுவதைப்பற்றிப் பேசிட்டிருக்கிறதால இன்னுமிரண்டு படங்களப்பத்திச் சொல்றேன்.
கமலின் விருமாண்டி & நாகேஷ் குகுனூரின் 3 Deewarein.
சில மாதங்களுக்கு முந்தி நாகேஷ் குகுனூரின் படம் பார்க்கக்கிடைத்தது. நல்ல படம் சந்தர்ப்பம் கிடைச்சா விடாதீங்க. நஸ்ருதீர் ஷா, ஜாக்கி ஷ்ரொஃப், நாகேஷ் குகுனூர் & ஜூஹி சாவ்லா நடிச்சிருக்காங்க. ஜூஹி சிறைக்குள்ள நுழையிறது அப்படியே அச்சொட்டு ரோஹிணிதான். அதேமாதிரி சிறையின் வார்டன் வரும் சில இடங்களும்.
பார்த்திட்டுச் சொல்லுங்க. யாரு யார்க்கிட்ட காப்பியடிச்சதுன்னு.
-மதி
மதி – தமிழ் வலைப்பதிவுகள்ல ஒரே உலகப்பட விமர்சனங்களா படிச்சு வந்த தாழ்வு மனப்பான்மை 🙂 , மண்டை காய வைக்கும் தமிழ்த் திரைப்படங்கள் – இதன் காரணமா இப்ப தான் உலகத்திரைப்படங்கள் பக்கம் வந்திருக்கேன் !
3 Deewarein டொரன்ட் தளங்கள்ல கிடைக்குதான்னு பார்க்கிறேன். இங்க டிவிடி வாடகைக்கு கிடைக்கிறதில்ல. விருமாண்டி, 3 Deewarein – இதில எந்த படம் இரண்டாவதா வந்ததோ அது தானே copy? 🙂
அட டா…
என்னமா சுட்டிருக்கானுக!!! 😛
அட…ம்ம்ம்….!
இந்தி ‘கஜினி’ எப்படியோ?
(அமீர்கான் மேல கொஞ்சம் நம்பிக்கை இருக்கு…..பார்க்கலாம்)
/கமலின் விருமாண்டி & நாகேஷ் குகுனூரின் 3 Deewarein./
மதி, அப்படியா…. பார்த்திறலாம்..
//சுடுவதைப்பற்றிப் பேசிட்டிருக்கிறதால//
Sliding Door — > 12 B
[இந்த மாதிரி சுடுறதுகூட OKனுதான் தோணுது…;) ]
தென்றல் » இந்தி கஜினியில் இறுதிக் காட்சிகளை மட்டும் தான் மாற்றப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இந்த பார்வையற்றவருக்கு உதவும் காட்சி வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன். இந்திக் காரர்களும் முழுப் படங்கள், காட்சிகளைச் சுடுவதில் சளைத்தவர்கள் இல்லை. inspired by, based on என்று அறிவித்து விட்டு இதைச் செய்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும். sliding door – > 12 B போன்றவை வெளிப்படையாக அறியப்பட்டவை. அதைப் போன்ற பட்டியல்களுக்கு முடிவே இல்லை !! ஆனால், நாம் ரசித்துப் பார்க்கும் சின்னச் சின்னக் காட்சிகளைக் கூடச் சுட்டுத் தான் தந்திருக்கிறார்கள் என்கையில் ஏமாற்றமாக இருக்கிறது.
Audreyவோட கண்கள் ரொம்ப அழகா மொட்டு மொட்டா இருக்கும்.
இந்தப்படத்தோட லைட்டிங்க ரொம்ப அர்ப்புதமா இருக்கும்.
// விருமாண்டி, 3 Deewarein – இதில எந்த படம் இரண்டாவதா வந்ததோ அது தானே copy? :)//
ஆனா விருமாண்டி பாக்க ரஸோமான் மாதிரில்லங்க இருக்கு.