பழைய Paper கவிதைகள் – பிரிவு !

சொல்லாமல் ஊருக்குப் போன நீ

சொல்லிக் கொண்டு

செத்தாவது போயிருக்கலாம்.

உகாண்டாவில் வெயில் அதிகம்.

கவுண்டம்பாளையத்தில் வழிப்பறி.

மூன்றாம் உலக நாடுகளில் வறுமை.

எதன் பொருட்டு பார்க்க வந்தேன் என வினவும் உன் அம்மாவிடம்

வேறு என்ன சொல்லச் சொல்கிறாய்?

மனசு வலிக்குதுன்னா?

விரட்ட விரட்டத் திரும்ப வரும்

உன் நாய்க்குட்டியை விட

வெட்கங் கெட்டதாயும்

உண்மையானதாகவும்..

உன் நினைவுகள் !

தாமதமாய் வரும் மழைக்கும் கூட

வலிக்குமோ என பச்சை காக்கும் புல்வெளி

என் நேசம்.

கதீஜா சுஜாதா எல்லாம்

__தா என்றே வாசிக்கிறேன்..

என்ன நினைவு இருக்கக்கூடும் உனக்கு?

ரவிசங்கர் ஓர் இசை மேதை

என்பது தவிர.

காதல் தோல்வியென்றால்

தாடி வளர்ப்பதில் எல்லாம்

உடன்பாடில்லை எனக்கு.

வேண்டுமானால் வளர்க்கலாம்,

மூளையை.

இன்றோ நாளையோ

“அவளோட உன்ன பார்த்தேன்..தொலைச்சுப்புடுவேன் (நாயே)!”

என்றுன்னப்பன் குரைக்கக்கூடும்.

தயாராய்த் தான் இருக்கிறேன்.

நீ

மான்குட்டிக்கும் முயல்குட்டிக்கும் பிறந்தவள்

என்றொருமுறை பிதற்றியதை

நினைத்துச் சிரிக்க.

யாரும் வரும் வரை

தனித்திருப்போம்

நானும் கடற்கரையும்.

உயிரோடு புதைப்பது பெருங்குற்றம்.

தண்டனை மட்டும் கிடையாது.

எந்த நாட்டுப் பெண்களுக்கும்.

கண்ணீர் கட்டி வைக்க

கடல் வெட்டி வைத்தேன்.

கப்பல் விட்டு

வேடிக்கை பார்க்கிறாய் நீ!

பசி தூக்கம் மறந்து

காதல் வளர்க்கிறேன்.

எதை வளர்க்க என்னை மறந்தாய்?

உன்னை குற்றம் சொல்லவும் கூடாது தான்.

ஒரு முறை நீ நினைத்ததற்கே

என் தூக்கம் போனது..

எத்தனை முறை உன்னை நினைத்து இருப்பேன்..

நீ செத்தும் போயிருக்கலாம் !

முதல் சந்தோஷமோ கடைசி துக்கமோ

முதலில் சொல்வேன் உன்னிடம்.

புதிதாய் பிறந்த பட்டாம்பூச்சியோ

மகனை இழந்த கண்ணீரோ

உனக்காய் வைத்திருப்பேன்..

எப்பொழுது வருவாய் நீ?

34 thoughts on “பழைய Paper கவிதைகள் – பிரிவு !”

 1. சென்ஷி – நன்றி 🙂

  மிதக்கும் வெளி – ம்?? என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலீங்க ..

 2. எல்லாம் நல்லாயிருக்கு.
  அதுசரி, அது யாரு அந்த _தா? 🙂

 3. கவிதைகள் நன்று. அனுபவிச்சு எழுதியிருக்கீங்க போல!

 4. கலை, நீங்க கொஞ்சம் காசு தந்தா autograph படமாவே எடுத்துக் காட்டிடுறேன் 😉

 5. //உன்னை குற்றம் சொல்லவும் கூடாது தான்.//

  அருமையான உணர்வுகள்
  அழகான பதிவுகள்..

 6. Senthil Ananth » நன்றி செந்தில் ஆன்ந்த்

 7. நண்பா கவிதைகள் மனதை தொடுகின்றன

 8. கவிஞர் ரவிசங்கர் அறிமுகம் இப்பொழுதுதான் கிடைத்தது 🙂
  அருமை.

 9. mahatmamani, அருட்பெருங்கோ, senthilkumar – நன்றி !

 10. hi ethil vantha kavithaigal nalla eruku nanum kavithai eluthanum athu eppadi sollunga enaku

  1. நன்றி சித்ரா. உண்மையிலேயே கவிதை எழுதுவது எப்படி என்று சொல்லித் தர எனக்குத் தெரியவில்லை. நிறைய வாசியுங்கள். நிறைய புது அனுபவங்கள், உணர்வுகளைப் பெறுங்கள். உதவலாம். நன்றி.

 11. ella kavidhaigalum romba nallaruku. i think ithu ellam kavidhai illa unga anubavam. anubavichi ezuthi irukeenga.romba nallaruku.

  1. நன்றி பவி. ஆமாம், அனுபவம் தான் 🙂

 12. உகாண்டாவில் வெயில் அதிகம்.

  கவுண்டம்பாளையத்தில் வழிப்பறி.

  மூன்றாம் உலக நாடுகளில் வறுமை.
  இது மாதிரி வரிகள் எண்கள்
  பாடப் புத்தகத்திலும் உள்ளது
  கண்டிப்பக்கம் குளிரோ கொடுமை
  காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை
  அருமையான வரிகள்

 13. enaku Tamil typing teriavilai.so, tomorrow i will try to type Tamil and send to you.please don’t waste your time by writing poems.your technical articles are very useful to me.thank you.

 14. கவிதைக‌ள் எனை சிந்திக்க‌ வைக்கின்ற‌து

 15. //உன்னை குற்றம் சொல்லவும் கூடாது தான்.

  ஒரு முறை நீ நினைத்ததற்கே

  என் தூக்கம் போனது..

  எத்தனை முறை உன்னை நினைத்து இருப்பேன்..

  நீ செத்தும் போயிருக்கலாம் !//

  அருமை….

 16. virata virata thirumba varum naaikutti pol aval viratiya piragum aval pinthaney sutri kondirukir(en)om nanbarey avalin ninaivugal mattum naikutti illai naa(N)mumthaney?????????????

 17. ரவிசங்கர் அறிமுகம் இப்பொழுதுதான் கிடைத்தது .
  கவிதைக‌ள் அழகான பதிவுகள்

 18. //சொல்லாமல் ஊருக்குப் போன நீ
  சொல்லிக் கொண்டு
  செத்தாவது போயிருக்கலாம்.//

  ரவி,
  தற்காலிகமான சிறு பிரிவு இவ்வளவு கோபத்தையா கொண்டிருக்கும்? கோபத்திலிருந்தே தெரிகிறது காதலின் ஆழம்!

  1. காதலி என்ன ஆனாள், எங்கிருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். ஆனால், ஒன்றும் தெரியாது பதறுவதின் வலி அதிகம். அதில் வரும் கோபம் தான் 🙂

 19. கண்ணீர் கட்டி வைக்க
  கடல் வெட்டி வைத்தேன்.
  கப்பல் விட்டு
  வேடிக்கை பார்க்கிறாய் நீ!// அருமையான வார்த்தையாடல் ………….

Comments are closed.