நீ கடல் நான் நதி (பழைய paper கவிதைகள்)

நீ கடல் நான் நதி
உன்னைத் தேடி நான் வருவேன்.

நீ கடல் நான் நதி
உனைக் காணும் வரைத் துடித்திருப்பேன்.

நீ கடல் நான் நதி
உனைச் சேரவே என் ஒவ்வொரு பிறப்பும்.

நீ கடல் நான் நதி
உன்னைச் சேரும் வழி நானறிவேன்.

நீ கடல் நான் நதி
என் கடமைகள் முடித்து உனைச் சேர்வேன்.

நீ கடல் நான் நதி
உனைச் சேர்ந்து புதிதாய்ப் பிறப்பேன்.

நீ கடல் நான் நதி
யாருக்கு யார் பிறந்தோம்?

நீ கடல் நான் நதி
நான் உனைச் சேர வழிவிட்டொதுங்கும் ஊரு.

நீ கடல் நான் நதி
எனை யாரும் தடுத்தால் ஊரோடு அழிப்பேன்.

நீ கடல் நான் நதி
உனைச் சேராவிட்டால் என் சுயம் வேறு.

நீ கடல் நான் நதி
உன்னிடம் மட்டும் என்னை இழப்பேன்.

நீ ______ நான் ரவி
உன் மடியில் தான் சாவேன்.

6 thoughts on “நீ கடல் நான் நதி (பழைய paper கவிதைகள்)”

  1. கோடிட்ட இடத்தை சீக்கிரம் நிரப்பவும்.

    ஒரு சந்தேகம். அது கோடிட்ட இடமா இல்லை *****ஆ?

  2. கோடிட்ட இடத்தை சீக்கிரம் நிரப்பவும் 🙂

Comments are closed.