ஆனந்த விகடனும் தமிங்கிலமும்

செப்டம்பர் 17, 2008 இதழில் ஆனந்த விகடன் எழுதிய சரோசா திரைப்பட விமர்சனத்தை NHM Lister கொண்டு ஆய்ந்ததில்,

தனித்துவமான மொத்த சொற்கள்: 346

தனித்துவமான மொத்த ஆங்கிலச் சொற்கள்: 69

ஆங்கிலக் கலப்பு விழுக்காடு: 19.94% (ஐந்தில் ஒரு சொல்!)

கலந்துள்ள சொற்கள்:

Underplay, out, acting, action, english, innings, editing, episode, over, factory, group, climx, commitment, colorful, comedy, comedian, good night, cool, chemical, successful, car, cinema, serial, serious, second, treatment, dull, tanker, tragedy, damage, thrill, thriller, theory, theatre, plus, purse, photo, bomb, bottle, brother, buildup, BGM, balance, midnight, missing, mega, match, language, lorry, logic, like, licence, lighting, location, just, geaographical, jolly, score, scene, shot, share, humour

இவ்விழுக்காடு பெரும்பாலான வெகுமக்கள் ஊடகங்களுக்கும் பொருந்தலாம். ஆங்கிலம் + பிற மொழி + (உட்டாலக்கடி, டாலடிக்கிறார்) போன்ற சொற்களையும் நீக்கிப் பார்த்தால் எவ்வளவு விழுக்காடு தமிழ் மிஞ்சும்?


Comments

15 responses to “ஆனந்த விகடனும் தமிங்கிலமும்”

  1. செகண்ட் இன்னிங்ஸ்! – இதில் இன்னிங்ஸ்! என்பதை தமிழ் படுத்தாவிட்டாலும் கூட இரண்டாவது என்று சொல் கூடவா எழுதியவருக்கு தெரியவில்லை

    ஃபேக்டரியில் – என்பதற்கு பதில் தொழிற்சாலையில் என்றால் அனைவருக்கும் புரியுமே

    க.தே.க

  2. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    car, cinema, factory போன்ற சொற்கள் எல்லாம் பேச்சு வழக்கிலாவது இருக்கின்றன. geographical location என்றெல்லாம் எழுதுவது தான் ரொம்ப…

    second innings, credit card, என்றெல்லாம் வருவதில் ஆச்சர்யமில்லை. ஒரு புது பிறமொழிச் சொல் அதோடு சேர்ந்து வருகிற பிற தமிழ்ச் சொற்களையும் சேர்த்தே ஒதுக்குவதைக் காணலாம்.

  3. Ilamai , Pudhumai-ndra paerla romba naazh aachey indha koothai ivunga aarambichu..

  4. ஆனந்த விகடன் வந்து ஒரு வணிகப் பத்திரிகை. தமிழ்நாடு அரசு பள்ளிப் பாடப் புத்தகத்துலயே, அதுவும் தமிழ் பாடப் புத்தகமே ஒரு தமிங்கலப் புத்தகமா இருக்கே.? அதுவும் பியர்(beer), சிகரெட்(cigarette) இது மாதிரியான சொற்களத் தாங்கி.
    வேலியே பயிரை மேயும் போது, இது எம்மாத்திரம்? மேலதிக விபரங்களுக்கு, இந்த தொடுப்பை பாருங்க.

    http://maniyinpakkam.blogspot.com/2008/09/blog-post_6036.html

  5. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    துவக்கப்பள்ளி பாடநூல்களில் தேவையின்றி ஆங்கிலச் சொற்கள் இருந்ததாக வேறு ஏதோ பதிவில் படித்த நினைவு. அப்படி சிறு விழுக்காடேனும் எங்கேனும் இருந்தால் தவறு தான்.

    ஆனால் நீங்கள் குறை காண வேண்டும் என்ற நோக்கில் பொருந்தாத எடுத்துக்காட்டைத் தந்துள்ளீர்கள் எனத் தோன்றுகிறது.

    குறிப்பிட்ட நூற்பகுதி துணைப்பாடநூலில் வரும் ஒரு சிறுகதை. இதன் உள்ளடக்கத்துக்கோ மொழிநடைக்கோ பாடநூல் கழகம் எப்படி பொறுப்பாகும்? அவற்றைத் திருத்தும் உரிமை சிறுகதை எழுத்தாளருக்கு மட்டுமே உண்டு. ஆங்கிலச் சொல்லே இடம்பெறாத சிறுகதையைத் தான் பாடநூல் கழகம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் தற்கால சிறுகதை இலக்கியத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த இயலாது.

    மொழிநடைக்காக விமர்சிப்பது என்றால் தாராளமாக எல்லா எழுத்தாளர்களையும், ஆங்கிலத்துக்காக மட்டுமல்ல, வட மொழி உள்ளிட்ட பிற மொழிச் சொல் கலப்புக்காகவும் விமர்சிக்கலாம்.

    15 வயது நிரம்பிய பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் beer, cigarette என்ற சொல் உள்ள ஒரு கதையைப் படிப்பதால் கெட்டு விடுவார்கள் என்றால் பாட்டி வடை சுட்ட கதை தான் சொல்லித் தர வேண்டி இருக்கும்.

  6. //ஆனால் நீங்கள் குறை காண வேண்டும் என்ற நோக்கில் தவறான எடுத்துக்காட்டைத் தந்துள்ளீர்கள் எனத் தோன்றுகிறது.
    //
    குறை காணுவதால் எனக்கு ஆவது என்ன? தொடுப்பும் அளித்துள்ளேன். அதில் குறிப்பிட்ட சொற்கள் இருக்கிறதா? இல்லையா??

    //இதன் உள்ளடக்கத்துக்கோ மொழிநடைக்கோ பாடநூல் கழகம் எப்படி பொறுப்பாகும்?
    //

    சிறுகதையைத் தேர்ந்து எடுக்கும் உரிமை பாடநூல் கழகத்திற்கு உள்ளது என்பது தானே உண்மை.

    //beer, cigarette என்ற சொல் உள்ள ஒரு கதையைப் படிப்பதால் மாணவர்கள் கெட்டு விடுவார்கள் என்று நான் நம்பவில்லை. பள்ளி, கதையில் வராவிட்டாலும் பள்ளிக்கு வெளியே இடங்களிலும் கண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். 15 வயது நிரம்பிய பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் சமூகத்தின் இயல்பு நிலையை அறிந்து செயற்படக்கூடிய வயது தான். இல்லாவிட்டால், பாட்டி வடை சுட்ட கதை தான் சொல்லித் தர வேண்டி இருக்கும்.//

    வணிக ரீதியான வார இதழில் பிறமொழிச் சொற்கள் இவ்வளவு விகிதம் இருக்கிறதென்று ஆதங்கப்படும் நீங்கள் இப்படியொரு கருத்தை சொல்வது எனக்கு வியப்பாக உள்ளது.
    தமிழில் பிறமொழிச் சொற்கள் இல்லாத சிறுகதைகளே இல்லையா?
    வியப்பாக உள்ளது நண்பரே!

  7. இரவி,

    உமது மற்ற பதிவுகளையும் விவாதங்களையும் இப்போதுதான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. நீர் (எதிர் அணி போல்) போட்டு வாங்கும் ஆள் போலத் தெரிகிறது. திறமைசாலிதான்! வாழ்த்துக்களும், நன்றியும்!!

  8. TAMILRAJA Avatar
    TAMILRAJA

    எழுதும் பொது கவனமா இருக்கணும்னு தோணுது!
    ஆனந்தவிகடன் மட்டுமல்ல நிறைய தமிழ் பத்திரிகைகள் அப்படித்தானே தலைவா ?
    அருமையான முயற்ச்சி
    tamilraja
    http://www.tamilraja.tk

  9. வணிகரீதியான பத்திரிக்கை மக்களுக்கு பிடித்தமான வகையில்தான் எழுதும். மக்கள் பேசும்விதமாகத்தான் எழுதும். ஆங்கிலத் தாக்கம் அதிகமாக அதிகமாக இது இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

    இங்கு அமெரிக்காவில் என்னிடம் ஈழத்தமிழர்களும் சிங்கை, மலேசியத் தமிழர்களும் அடிக்கடி கேட்கும் கேள்வி – ஏன் தமிழக மக்கள் பேச்சில் இவ்வளவு ஆங்கிலம் பாவிக்கிறார்கள்? அந்த நாட்டிலிருந்து வரும் மெத்தப் படித்த நவநாகரீக மக்களின் தமிழ் மிகவும் இனிமை. ஆனால் அங்கும் அடுத்த தலைமுறையினரிடமும் இதே கதைதானாம்.

  10. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    //மக்களுக்கு பிடித்தமான வகையில்தான் எழுதும். மக்கள் பேசும்விதமாகத்தான் எழுதும்//

    இந்த அளவு தமிங்கில நடை பேசும், அந்நடை பிடித்த மக்கள் நகர்ப்புற உயர் நடுத்தட்டு, மேல்தட்டு வகுப்பினராகவே இருப்பர். அவர்கள் தமிழகத்தில் எத்தனை விழுக்காடு? சென்னைக்கு வெளியே விகடனின் இந்த நடை அனைத்து வகுப்பு மக்களின் பேச்சு வழக்கில் இருந்தும் அன்னியமாகவே இருக்கும்.

    மக்களுக்குப் பிடிப்பதால் தான் மூன்றாம் தர மசாலா படம் எடுக்கிறோம் என்பதும் மக்கள் பேசுவதைத் தான் எழுதுகிறோம் என்பதும் ஒரே வாதம் தான். மக்கள் நல்ல படங்களையும் ரசிக்கிறார்கள். மக்கள் தொலைக்காட்சியையும் புரிந்து கொள்கிறார்கள்.

    ஊடகங்களின் மூலம் பேச்சு வழக்கிற்கு வந்த, நிலைத்த சொற்கள் எத்தனையோ உள்ளன. அதற்கு தமிழீழம் நல்ல எடுத்துக்காட்டு.

    வணிக அடிப்படை செயல்பாடு என்பதற்காக எல்லாவற்றையும் நியாயப்படுத்த இயலாது. காசுக்கு பால் விற்றாலும் கலப்படம் இல்லாமல் தான் விற்க வேண்டும்.

  11. நல்ல புள்ளிவிவரம். இதை நீங்கள் ஆனந்த விகடனுக்கும் குமுதத்திற்கும் கூட மின்னஞ்சலில் அனுப்பிவைக்கலாம். ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் உருவாக்கி வளர்த்துவரும் இந்த சாக்கடை மொழியிலிருந்து விடிவுகாலம் இல்லை. புதிய பார்வை போன்ற அறிவுசீவிப் படம்காட்டும் பத்திரிகைகள் கூட திரைப்பட விமரிசனத்திற்கு இந்த நடையைப் பயன்படுத்துகின்றன. எனக்குத் தெரிந்த, பத்திரிகைகள் தவிர வேறு எதிலும் தமிழ் படிக்காத சிலருக்குக் கூட விகடனின் மிதமிஞ்சிய ஆங்கிலக் கலப்பும் அபத்தமான நடையும் எரிச்சலூட்டுகின்றன. மக்கள் ஆங்கிலம் கலந்து பேசுவது சகஜம்தான். பேச்சுத் தமிழுக்கு நெருக்கமாக எழுத முயலும் இந்த இதழ்கள் பேச்சுத் தமிழைப் பிரதிபலிக்க முயல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் தாம் உருவாக்கிய செயற்கையான மொழியில் பேசுவதுதான் cool என்பது போன்ற ஒரு கருத்தை உருவாக்கப் பார்க்கின்றன. இது ஒரு வகையான மொழித் திணிப்புதான்.

  12. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    சாத்தான்,

    நீண்ட நாள் கழித்து உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி.

    //இதை நீங்கள் ஆனந்த விகடனுக்கும் குமுதத்திற்கும் கூட மின்னஞ்சலில் அனுப்பிவைக்கலாம். //

    தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியுமா?

    //எனக்குத் தெரிந்த, பத்திரிகைகள் தவிர வேறு எதிலும் தமிழ் படிக்காத சிலருக்குக் கூட விகடனின் மிதமிஞ்சிய ஆங்கிலக் கலப்பும் அபத்தமான நடையும் எரிச்சலூட்டுகின்றன//

    நம்மைப் போன்றவர்கள் இக்கருத்தைச் சொன்னால் தான் மொழி வெறியர்கள் என்கிறார்கள். பொது மக்களே சொல்வது ஆறுதலாக இருக்கிறது.

  13. //தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியுமா?//

    இணையவழி எதிர்ப்புக் கடிதம் ஒன்றை எழுதி, பெயர்களைப் பதிவு செய்து அவர்களுக்கு அனுப்பலாம். ஓராயிரம் பேர் ஒப்புதல் தந்தாலும் போதும். அது நூறுபேராக இருந்தாலும் தவறில்லை. மேலும் இதெல்லாம் வரலாற்றுப் பதிவாகவும் இருக்கும். தமிழுக்கு வலிந்து தீமை இழைப்பவர்கள் யார். பொறுபற்ற முறையில் நடப்பவர்கள் யார் என்பதெல்லாம் பதிவாகும். திருத்திக்கொள்ள வாய்ப்பளிப்போம். நன்னம்பிக்கையோடு இவற்றை செய்வோம். என் ஒப்புதலை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இணையவழி எதிர்ப்பு மணு என்று நடுநிலைமையுடன், சிறிதளவு சான்றுகோள்களுடன் சுருக்கமாக வரையுங்கள். கட்டாய்ம் 100 பேர்களைத் திரட்ட இயலும். முயன்றால் 1000 பேரையும் மேலும் கூட திரட்ட இயலும். எண்ணங்களில் பத்ரி, வென்கட், பிரபுதுரை போன்ற பலரும் கூட இது பற்றி கவலை தெரிவித்து முன்னர் எழுதியதாக நினைவு. நல்வாழ்த்துகள்!

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      செல்வா,

      தமிழுக்கு வலிந்து தீமை இழைப்பவர்கள் யார் என்பதைப் பதியும் நோக்கத்துக்காகவேனும், http://www.petitiononline.com/ தளத்தில் எதிர்ப்புக் கடிதம் எழுதுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

      விகடன் விற்பனை குளறுபடி குறித்து எழுதிய வலைப்பதிவுக்கு தக்க எதிர்வினை கிடைத்திருப்பதைப் பார்க்கலாம்.

      காசுக்குப் பாதிப்பு வந்தால் மட்டும் தான் செவி மடுப்பர் என்றால், தமிழுணர்வு குறித்த விழிப்புணர்வைப் பரப்பி இத்தகைய நிறுவனங்களைப் புறக்கணிப்பதும், இவற்றுக்கு மாற்றான வலுவான ஊடக நிறுவனங்களைத் தமிழார்வலர்கள் கட்டி எழுப்புவதுமே தொலைநோக்கில் சரியானதாக இருக்கும்.

  14. வரலாறு.காம் வலைப்பக்கத்தில் உள்ள மின்னிதழ் 53 இன் தலையங்கம் (http://www.varalaaru.com/Default.asp?articleid=791),
    “இயன்றவரை இனிய தமிழில்” என்பதில் இருந்து:

    “தமிழைக் கொல்வதில் இன்று முன்னணியில் இருப்பது ஊடகங்கள்தான். இங்கு ஊடகங்கள் என்பது தொலைக்காட்சிகளையும் வானொலிகளையும் பத்திரிகைகளையும் சேர்த்துத்தான்.”

    “ஒரு மொழியை அழித்தால் அந்த இனம் தானாக அழியும் என்பது வரலாறு நமக்குக் கற்றுத்தந்த பாடம். இலங்கையில் சிங்களப்படைகள் செய்வது மட்டுமல்ல. தமிழகத்தில் ஊடகங்கள் செய்வதும் இனப்படுகொலைதான்.”